மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
யுகியும் நிலாவும் எழுந்தவுடன் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
மற்றவர்களைவிட யுக்தயன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். மற்றவர்கள் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியவன் தன் சோர்வை தன்னிடமே மறைத்து வைத்துக் கொண்டான்.
முயன்று அவர்களோடு நடந்தான் ஒரு வழியாக கிராமத்தை நெருங்கிவிட்டனர். தூரத்தில் இருந்தே இவர்களை பார்த்த மக்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.
கிராம மக்கள் அவர்களை நலம் விசாரித்தனர். அவர்களின் கையில் இருந்த உடமைகளை வாங்கி சென்றனர். பின் அவர்களை ஓய்வெடுக்க கூறி அனுப்பி வைத்தனர்.
அந்த இடத்தில் இருந்து கலைந்தவர்கள் ஏதோ சத்தத்தில் திரும்பி பார்க்க யுக்தயன் மயங்கி விழுந்து இருந்தான்.
முன்னாள் சென்ற நிலாவும் திரும்பி பார்க்க யுக்தயன் மயங்கி இருப்பதை பார்த்து வேகமாக அவன் அருகில் ஓடி வந்தாள்.
ருத்ரன் அவன் உடலை தொட்டுப்பார்க்க உடல் அனலாக கொதித்தது.
ருத்ரா, “காய்ச்சல் அடிக்குது நிலாமா மழையில நனைந்தது சேரல போல”
அவனை தூக்கிக் கொண்டு முன்பு நிலாவும் யுகியும் தங்கியிருந்த குடிலுக்குள் நுழைந்தான்.
குழலியும், முதலில் நிலாவிற்கு வைத்தியம் பார்த்த அந்த முதியவரும் சேர்ந்து பரிசோதித்தனர். மூலிகை சாரை அவனை குடிக்கச் செய்தனர். அரை மயக்கத்தில் தான் இருந்தான். மூலிகை சாரு பாதி கீழேயும், பாதி அவன் தொண்டையிலும் இறங்கியது.
மருத்துவர், “சாதாரண காய்ச்சல் தான் மகராசி நீ பயப்படாத. சரியான ஆகாரம் இல்லாததால பலவீனமா இருக்காரு.”
“அவரு கண் முழிச்சதும் இந்த சப்பாட குடு” என்று அழுது கொண்டிருந்த நிலாவிடம் கூறி அவர் அங்கிருந்து வெளியேறினார். அவர் பின் மற்றவர்களும் வெளியேறிவிட ருத்ரனும் குழலியும் மட்டும் அவர்களுடன் இருந்தனர்.
யுக்தயனை பார்த்து திட்டிக் கொண்டிருந்தாள்.
நிலா, “எத்தனை தடவ சொன்னேன் தெரியுமா அண்ணா ஈரத் துணியோட இருக்காதிங்க மாத்துங்கனு எப்போ என் பேச்சை கேட்டார் இப்போ கேட்க”
ருத்ரனும் குழலியும் அவளை சமாதானபடுத்தினர்.
சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் சிறிது நேரம் அவனை திட்டுவதுமாக இருந்தாள்.
இப்படியாக அவள் திட்டிக் கொண்டிருக்க
“ரொம்ப திட்டாத பொண்டாட்டி” என்ற யுக்தயனின் குரலில் அவன் புறம் திரும்பினர் மூவரும்.
அவன் அருகில் நெருங்கியவள் அவன் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப்பார்த்தாள். சூடு சற்று குறைந்து இருந்தது.
“முன்னாடியே சொல்லி இருக்கலாமே யுகி” என்று குறைபட்டுக் கொண்டான் ருத்ரன்
யுகி, “அதுதா இப்போ எனக்கு சரியாகிருச்சே”
குழலி, “ஆனா அண்ணே நிலா பயந்து போய்ட்டா நீங்க மயங்கவும்”
குழலியின் வார்த்தையை கேட்டவன் நிலாவின் புறம் திரும்பி “அப்படியா யாழு” என்று கேட்டு அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.
நிலா, “முதல கைய எடுங்க மாமா”
அவன் அவள் சொல்ல சொல்ல மறுத்துக் கொண்டே இருந்தான். அவர்களுக்கு தனிமை தர எண்ணி ருத்ரனும் குழலியும் வெளியே சென்றுவிட்டனர்.
அவனிடம் கைகளை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள் நிலா ஆனால் முயற்சி அனைத்தும் பூஜியத்தில் வந்தே முடிந்தது.
“யா.. ழு… “
அதுவரை அவனிடம் போராடிக் கொண்டிருந்தவள் அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
அவளைத் தான் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலா, “எ.. ன்ன மாமா”
யுகி, “போய் கதவ தாழ் போட்டுட்டு வா”
“எ.. து.. க்கு” உதடுகள் தந்தி அடித்தது.
யுகி, “சொல்றேன்ல செய். “
அவனது குரலுக்கு கட்டுண்டவள் போல் போய் தாழ் போட்டு விட்டு வந்தாள்.
கதவுக்கும் கட்டிலுக்கும் இடைய பத்து அடிக்கூட தூரம் இருக்காது. சிறிய குடில்தான் அது ஆனால் அதனை கடக்க முழுதாக ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
சரி அவள்தான் பொறுமையின் சிகரமாக செயல்பட்டால் இவனோ நான் தான் அப்பொறுமையே என்பது போல் ஆரஅமர
அவளை அங்குலம் அங்குலமாக கண்களால் பருகினான்.
நேற்று இரவே குகையில் அவளிடம் விளையாட்டாக எடுத்துக் கொண்ட நெருக்கம் அவனது உணர்வுகளில் விளையாட ஆரம்பித்தது. இடம் பொருள் உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக் கொள்ள பெரும்பாடுபட்டான். எண்ணத்தில் ஏதேதோ தோன்றி அழைக்கழித்தது. தன் எண்ணப் போக்கை போக்கவே அவள் மேல் சாய்ந்து கண்களை இறுக மூடி உறங்க முயற்ச்சித்தான் இறுதியில் வெற்றியும் கண்டான்.
இன்றோ மயங்கி இருந்தவன் கண் விழிக்கும் பொழுது முதலில் உணர்ந்தது தன் கைகளை இறுகப் பற்றியிருந்த தன் மனைவியின் கரங்களின் மென்மையே. வாய் தான் அவனை திட்டிக் கொண்டிருந்தது கைகளோ அதற்கு நேர்மாறாக அதீத காதலுடனும் பயத்துடனும் அவனது கைகளை பற்றி இருந்தது.
மென்கரத்தின் தீண்டல் அவனை நேற்றைய இரவிற்கு அழைத்துச் செல்ல கண்கள் தாபத்தில் நிறைந்தது. அதன் வெளிப்பாடே தற்போது நிகழ்வதெல்லாம்.
அருகில் நெருங்கியவளின் கைகளை பற்றி இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்.
அவனின் பாசமிகு மனைவியோ ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு இருப்பவன் தான் விழுந்ததில் பாரம் தாங்கமுடியாமல் கஷ்டப்படுவானோ என்றே எண்ணி அவனிடம் இருந்து விலகினாள்.
அதில் எரிச்சல் உற்றவனோ
“ஏன்டி… ” என்றான் பற்களை கடித்து அழுத்தமாக.
நிலா, “அது…. உங்களுக்கு உடம்பு சரியில்லை மாமா “
யுகி, “அது…. ஒன்னும் இல்ல நீ பக்கத்துல இருந்த நா சரியாகிருவேன்” என்று அவளை இழுத்து இதழ்களின் வழியே காய்ச்சலுக்கான மருந்தை எடுத்துக் கொண்டான். அவளும் விரும்பியே அவனுள் தொலைய அடுத்த நிலை செல்லச் சொல்லி கெஞ்சிய மனதை அடக்க வழியறியாது அவள் முகம் நோக்கினான்.
அவளின் கன்னச் சிவப்பும் தன் தோள்களில் பதிந்திருந்த கைகளின் இறுக்கமும் அவளது சம்மதத்தை உறுதிபடுத்த அவளை முழுவதுமாக தன்னவளாக ஆக்கிக் கொண்டான்.
இப்படியாக அங்கிருந்த ஒரு வாரமும் இவர்களின் கூடலிலும் ஊர் மக்களின் கவனிப்பிலும் யுக்தயன் நன்றாக உடல் தேறி வந்தான்.
எல்லாம் நன்றாக சென்றால் எப்படி? விதி என்று ஒருவன் இருக்கிறானே அவனை மறந்துவிட்டோமே. ஆனால் விதி இவர்களை மறக்கவில்லையே அது சிறப்பாக சில பல காரியங்களை செய்துவிட்டிருந்தது இந்த ஒரு வார காலத்தில்.
அதை அறியாத யுக்தயனோ மேலும் அதன் பங்கை அதிகப்படுத்தும் விதமாக அவனும் அறிந்தும் அறியாமலும் தன் வாயால் ஒரு பிரச்சனையை இழுத்துவிட்டுக் கொண்டான்.
அன்று அவர்கள் கிராமத்தைவிட்டு கிளம்ப வேண்டிய கடைசி நாள் குடிலுக்குள் யுக்தயனின் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த நிலா கிளம்புவதற்கு மனம் இன்றி தவித்தாள். குறுகிய காலத்திலே இங்கிருப்போர்களுடன் ஒன்றிப் போய்விட்டனர் இருவரும். யுக்தயனும் அவளது மனநிலையில் தான் இருந்தான். அப்பொழுதுதான் நிலா அக்கேள்வியை கேட்டாள்
நிலா, “மாமா… “
யுகி, “ம்… “
நிலா, “உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்னு நினச்சுட்டே இருப்பே ஆனா மறந்து போயிடுறேன் இன்னைக்கு எப்படியாவது கேட்டுடனும்.”
யுகி, “கேளு…”
நிலா, “எதுக்கு முன்னெல்லாம் ருத்ரா அண்ணா கூட பேசக்கூடாதுனு சொன்னீங்க “
“அது… எனக்கு நீ அவங்கூட பேசுறது புடிக்கல” என்று தன்னுடைய பொசசிவ்னஸ் பற்றி தெளிவாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்ல
அதை மிகச்சரியாக தவறாக புரிந்து கொண்டாள் நிலா
நிலா ,”அப்போ என்ன சந்தேகப்பட்டீங்க…. அண்ணா அவரு அவர் கூடப் போய் என்ன சேர்த்துவச்சு…” என்று அதற்கு மேல் பேசமுடியாமல் அழுதாள்.
யுக்தயனோ தன்னிலையை புரிய வைக்க முயல அவளோ அதனை காது கொடுத்து கேட்பதாக இல்லை.
தொடரும்.