மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 18

ருத்ரன் குழலி கூற்றுக்கு இணங்கி நிலாவும் அமைதிகாத்தாள்.

யானை கூட்டம் அங்கிருந்து கிளம்பியதும் இவர்களும் புதருக்குள் இருந்து வெளி வந்தனர்.

அவர்களை ஒரு பெரிய கீழ்புறம் அதிக கிளைகள் அற்ற நெடுமரத்தின் அருகே அழைத்துச் சென்றான் ருத்ரன்.

அதன் உச்சியை நிமிர்ந்து பார்த்தனர் மேலே ஒரு வீடு மரத்தால் செய்யப்பட்டிருந்தது.

நிலா, “அண்ணா இத எப்போ ஏற்பாடு பண்ணுனீங்க”

ருத்ரா, “தெரியலடாமா நா மொத மொத மலை உச்சி பயணத்தை ஆரம்பிச்சப்போ அப்பா இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தாரு,  ஓய்வுக்காக இந்த வீட்டை எங்க முன்னோர்கள் கட்டி இருப்பாங்கனு சொன்னாரு.”

“சேரி மெதுவா இது மேல ஏறுங்க குழலி முதல நீ ஏறு “

குழலி, “சரி மாமா “

குழலியும் மரத்தில் ஆங்காங்கே செதுக்கப்பட்டிருந்த இடைவெளியில் கால்களை வைத்து மேல் ஏறினாள்.

நிலா மிகவும் பயந்தாள் மேலே ஏறுவதற்கு

நிலா, “மாமா இது எவ்ளோ உயரமா இருக்கு அதோட கால் சறுக்கிட்ட என்ன பண்றது ” என்று யுக்தயனை பார்த்துக் கேட்டாள்.

அதற்கு ருத்ரனோ “அப்படி எல்லாம் ஆகதுமா மரத்தோட தடிமன பாரு எவ்ளோ கட்டையா இருக்கு அது மட்டும் இல்லாம செதுக்கள் எல்லாம் உன்னோட கால் வைக்குற அளவு தான் இருக்கு பயப்பிடாம ஏறுடாமா”

நிலா, “ம்ஹீம் பயமா இருக்கு “

யுகி, “யாழு நீ ஏறு உனக்கு பின்னாடியே நானும் ஏறுறேன் உனக்கு பயம் இருக்காது அப்படியே உங்கால் சறுக்குனாலும் நா புடுச்சுக்கிறேன்”

நிலா, “இல்ல மாமா நா சறிக்கிட்ட நீங்களும் சேர்ந்து விழுந்திடுவீங்க”

யுக்தயனுக்கு ஒரு யோசனை வரவும் ருத்ரனிடம் உடமைகளை கொடுத்துவிட்டு மேலே ஏறி தான் சொல்வது போல் செய்ய சொன்னான்.

ருத்ரா, “எப்படி என்னால உங்க இரண்டு பேரையும் கீழ விட்டு மேல போக முடியும்.  நீ வேண மேல போ யுகி நா கீழ இருக்குறே “

யுகி, “ஒன்னும் ஆகாது ருத்ரா இப்போதைக்கு எந்த மிருகமும் வரலையே அதோட இன்னும் கொஞ்சம் விடியனும் அதுக்குள்ள நீ சீக்கிரம் மேல போய் நா சொல்ற மாதிரி செய் “

ருத்ரனும் நிலமையை புரிந்து கொண்டு மேலே ஏறினான்.  அவனது வேகம் அசாதாரணமாக இருந்தது. புயல் போல்  மேலேறிவிட்டான்.

மேலே சென்ற குழலி வீட்டை சுற்றி பார்வை செலுத்தினாள் நால்வர் என்ன அதற்கும் மேலும் ஆட்கள் தங்குவதற்கு வசதியாகவே இருந்தது என்ன சற்று தூசியாக இருந்தது அவ்வளவே. 

பாம்பு மற்றும் வேறு எந்த பூச்சி இனங்களும் உள்ளே நுழைய முடியாதபடி கட்டமைத்து இருந்தனர். 

அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  இவ்வளவு உயரத்தில் காட்டின் நடுவே ஒரு வீட்டை கட்டுவதும் அதனுள் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் என அவர்கள் முன்னோரின் திறமை அவளை ஆச்சரியமூட்டியது.

மேலே வந்த ருத்ரன் யுகி குறிப்பிட்டிருந்த கயிரை எடுத்து மரத்தில் பொருத்தி கீழே எறிந்தான்.

மலை ஏறுபவர்கள் பயன்படுத்தும் ரோப் அது யுகி காட்டு பயணம் மேற்கொள்ள போகிறோம் என முன்னேற்பாடாக அன்று வாங்கிய பொருட்களில் இதுவும் அடக்கம்.

ரோப் தரை வந்ததும் அதனை இறுக பற்றிக் கொண்டு மேலே ஏற கூறினான்

நிலாவும் அதனை பற்றியபடி மேலே ஏறினாள் அவளை தொடர்ந்து யுகியும் மேலே ஏறினான்.

மேலே ஏறியதும் ரோப்பை மேலே தூக்கிவிட்டு நிலாவை ஒரு புறம் அமர வைத்து கைகளை சோதித்தான்.  ரோப் அழுத்தியதில் சற்று காயமாகி இருந்தது.

யுகி, “சாரி யாழு உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல “

நிலா, “இல்ல மாமா நாந்தா உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறேன். நா உங்க கூட வராம இருந்து இருந்த இவ்வளவு சிரமம் இருந்து இருக்காதுல.”

“அப்படி எல்லாம் இல்லடி” என்று கூறியவன் நிலாவின் காயத்திற்கு தன்னிடம் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த மருந்தை எடுத்து மருந்திட்டான்.

பின் குழலியும் நிலாவும் சேர்ந்து தங்களிடம் இருந்த துணியால் வீட்டின் தூசியை சுத்தப்படுத்தினர்.
சற்று சிரமமாகவே இருந்தது துணியால் சுத்தம் செய்வது.

ஆனால் வேறு வழி இல்லாததால் முயன்று செய்தனர். 
ஒருபுறம் சுத்தம் செய்ததும் ருத்ரனை ஓய்வு எடுக்க கூறினர்.  அவனும் சற்று நேரம் தூங்கினான்.

பெண்கள் இருவரும் ஒருபுறம் சுத்தம் செய்ய யுகி தன்னிடம் உள்ள கேமராவை மரவீட்டின் வெளிபுறம் சுற்றி பொருத்தினான். 

தன்னிடம் இருந்த தொலைதூர கேமராவின் மூலம் அருவியை ஜீம் செய்தான்.  அவர்கள் இருப்பது அருவியில் இருந்து சற்று தள்ளி என்பதால் ஜீம் செய்ய வேண்டிய கட்டாயம்.

கேமராவை பொருத்தி முடித்தவன் பெண்களுடன் சேர்ந்து தானும் சுத்தம் செய்தான்.

யுகி, “போதும் குழலிமா இன்னும் இரண்டு நாள் தா இங்க தங்க போறோம் அப்புறம் கிளம்பிடனும்.”

குழலி, “இரண்டு நாளுள உங்க வேலை முடுஞ்சுருமா அண்ணே”

யுகி, “இல்லடா அப்படி இல்லா ஒரு நாள் முழுவதும் அருவிக்கரைல என்ன நடக்குதுனு மட்டும் தான படம் புடிக்க போறோம் அதனால இப்போ இருந்து நாளைக்கு இந்த நேரம் வரை இருந்தா போதும். “

குழலி, “ஓ….. “

யுகி, “சரிடா ஏற்கனவே மதியம் நெருங்கிருச்சு நேத்து ராத்திரி சாப்பிட்டது. அதனால இப்போதைக்கு பழங்களை மட்டும் வெட்டி சாப்பிடலாம். “

“சரி மாமா” ” சரி அண்ணே” என்று கூறிய இருவரும் பையில் இருந்த பழங்களை எடுத்து கழுவி துண்டுகளாக வெட்டினர்.

பின் ருத்ரனை எழுப்பி அவனுக்கும் கொடுத்து உண்டனர்.

நிலா, “மாமா…  மரத்து மேல வீடு கட்டி இருக்குறதால மிருகம் எதுவும் இங்க வராதுல”

யுகி, “அப்படி சொல்ல முடியாது யாழு”

ருத்ரா, “யானைகள்கிட்ட இருந்து பாதுகாப்பா இருக்கத்தான்  இப்படி மேல கட்டி இருக்காங்க. ஆனாலும் மதம் பிடித்த யானைகிட்ட இருந்து தப்பிக்க முடியாது.  நாம இருக்குறது தெரிஞ்சுருச்சுனா நம்மல  தாக்குறதுக்காக மரத்தையே கீழ சாய்க்குற அளவுக்கு அதுகிட்ட சக்தி இருக்கும்.”

“ஐயோ கும்கி படம் மாதிரியா மாமா” என்று கூறிய நிலா யுகியின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“பயப்படாத யாழு நாம சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்” என்று கூறி அவளை அணைத்துக் கொண்டான் யுக்தயன்.

நிலா, “சிங்கம் புலி எல்லாம் மரம் ஏறாது இல்ல. “

ருத்ரன், “சிங்கம் புலி மரம் ஏறும் நிலாமா”

நிலா, “ஐய்யோ “

யுக்தயன், “பயப்படாத அதுக்கு இறை தேவப்பட்டா மட்டுமே பெரும்பாலும் அதுங்களோட எடையின் காரணமா அதிக மரம் ஏறுறத விரும்பது. “

குழலி, “அப்படியே ஏறி வந்தாலும் பயப்படாத நிலா அதுங்கள மயக்கமடைய வைக்க மூலிகை திரவம் கொண்டு வந்துருக்கேன்.  எங்க ஆளுங்க வேட்டைக்கு போகும் போது கொடுத்துவிடுவோம்.  இங்க தேவைபடுமேனு எடுத்துட்டு வந்துருக்கேன். “

“ரொம்ப நல்லா காரியம் பண்ணுன குழலி ”  “அழகா இருக்குற இந்த காட்டுல இவ்ளோ ஆபத்து இருக்கே மாமா” என்று குழலியிடம் ஆரம்பித்தவள் யுக்தயனிடம் வந்து தன் வார்த்தையை முடித்தாள்.

யுகி, “சரியாதான் சொல்லி இருக்காங்க போல அழகான இடத்துல  ஆபத்து இருக்கும்னு “

தொடரும்…..