மீட்டதா வீணை தருகின்ற ராகம் – 9

                    தன் மனதிடம் ஆம் என பதிலுரைத்தவள். அவனிடம் பதில் வார்த்தை உரைக்காமல் அவனது முகத்தை ஆழ்ந்து நோக்கிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

அவளது பார்வையின் அர்த்தம் இவனுக்கு புரியவில்லை. இரண்டு நாட்கள் ஓய்விற்கு பின் மீண்டும் தன் பணியை துவங்க புறப்பட்டான் யுக்தயன்.

மீண்டும் காப்பகத்திற்குள் செல்ல பயம் இருந்தாலும் அவனை தனியே அனுப்பி வைத்துவிட்டு அவன் வரும்வரை பதைபதைக்கும் மனதுடன் இருப்பது தன்னால் இயலாது என்பதை புரிந்து கொண்டு அவனுடன் செல்வதென முடிவெடுத்தாள்.

தயாராகி தன் அருகில் வந்து நின்ற மனைவியை கண்டு ஆச்சரியப்பட்டான் யுக்தயன்.

யுகி, “நீயும் வரியா என்ன..”

நிலா, “ஆமா ஏங்கேக்குறீங்க “

யுகி, “இல்ல நீ வரமாட்டேனு நினைச்சேன்”

நிலா, “வர கூடாதுனுதா நினச்சேன் .. உங்க அனுப்பி வச்சுட்டு நீங்க எப்படி இருக்கீங்களோனு இங்க என்னால பயந்துட்டே இருக்க முடியாது”

அவனது நெஞ்சில் சில்லென்ற தென்றலை வீசச் செய்தது அவளது வார்த்தைகள்.  அவளையும் அழைத்து கொண்டு சென்றான்.

இப்படியாக மூன்று மாதங்கள் ஓடிவிட்டது.  கடந்து சென்ற நாட்கள் யுக்தயனுக்கும் யாழ்நிலாவிற்கும் நிறைய அனுபவங்களை கொடுத்தது. 

ஆரம்பத்தில் சற்று பயந்த நிலா அடுத்து வந்த நாட்களில் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். யுக்தயனுக்கு முன்பே இவள் கிளம்பிவிடுவாள்.

இருவருக்கும் இடையே உள்ள உறவும் நல்ல முறையில் சென்றது.  நிலா அவனிடம் தன் காதலை சொல்வதா வேண்டாமா என்று மூன்று மாதங்களாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.  தீர்ப்பு வந்தபாடில்லை.

சிறு சிறு சண்டைகள், சமாதானமாக பல நிமிடங்கள் நீளும் முத்தங்கள், தோல் உரசல்கள், ஓரப்பார்வைகள் அனைத்தையும் விட ஒருவருக்கொருவரான அருகாமை என வாழ்க்கை நன்றாகவே சென்றது.

யுகி, “யாழு கிளம்பிட்டையா “

நிலா, “என்ன அவசரம் தனியாள எடுத்துவச்சுட்டு இருக்கேல கொஞ்சமாச்சும் ஹெல்ப் பண்றீங்களா”

இப்பொழுதெல்லாம் அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள்

யுகி, “என்ன ஹெல்ப் பொண்டாட்டி” என்று பினிருந்து அணைக்க

நிலா, “ஐயோ விடுங்க உங்கள ஹெல்ப் பண்ணதா சொன்னே கட்டிபிடிக்க இல்ல..”

யுகி, “பொண்ணுங்க வெளிப்படையா சொல்ல மாட்டாங்களா நாங்கதா புரிஞ்சு நடந்துக்கணுமா”

நிலா, “நிறைய எக்ஸ்பீரியன்ஸோ”

“ஏய் நா ராமன்டி “என்று கூறி கொண்டே அவளது கழுத்து வளைவில் முத்தம் பதித்தான்.

அதில் சிலிர்த்தவள் “பாருடா ஃபாரின்ல இருந்து இருக்கிங்க ஒரு கேர்ள் ஃப்ரண்ட் கூடவா இல்ல”

யுகி, “அது என்னடி ஃபாரின்ல இருந்த கேர்ள் ஃப்ரண்ட் இருக்கனும்னு அவசியமா என்ன “

நிலா, “நிஜமாவா நம்ப முடியலையே “

யுகி, “சரி உண்மை சொல்லவா பொய் சொல்லவா “

நிலா, “நடந்தத சொன்ன போதும் அது உண்மையா பொய்யா நா யோசிச்சுகிறேன். “

யுகி, “ம்…  நிறைய பிரபோஸ் வந்து இருக்கு “

நிலா, “பிரபோஸ்னா எந்த மாதிரி லவ்வா…  இல்ல.. “

“இல்ல… ” அவனும் சேர்ந்து வார்த்தையை இழுத்து கேட்டான்.

நிலா, “இல்ல..  லிவ்.. விங்.. ரி.. லேசன்ஷிப்பா “

அவளை தன்புறம் திருப்பி தன் வாயில் கை வைத்து அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

யுகி, “அடி… பாவி…  என்ன மாதிரிடி கேக்குற..  உன்னப்போயி அப்பாவினு நினச்சேனே.. “

நிலா, “சரி..  சரி..  பேச்ச மாத்தாதிங்க “

“அது…  ல.. லிவ்விங்…”  என்று உள் சென்ற குரலில் சொல்லிவிட்டு மெதுவாக அவளை விட்டு விலகி ஓடினான்.

ஓடியவனிடம் “அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க… ” என்று ஒற்றை புருவத்தை தூக்கி வினவினாள்.

திரும்பி அவளை பார்த்தவனின் மனதில் வளைந்த புருவத்தில் முத்தமிட தோன்ற அதனை அடக்கியவன் “அது..  நாட் இன்ரஸ்டட் னு சொன்னேன்” என்றான்.

நிலா, “சே.. இவ்ளோ தானா நா வேற என்னமோ நினச்சு பயந்துட்டேன். எதுக்கு இவ்ளோ படங்காட்டுறீங்க “

யுகி, “சும்மா உன்ன வெறுப்பேத்துனேன் பொண்டாட்டி.  நா ரொம்ப நல்ல பையன்பா “

நிலா, “உங்கள யாரு நல்ல பையனா இருக்க சொன்னது…. “

“ஏய் என்ன சொன்ன “என்று கேட்டுகொண்டே அவளை நெருங்கினான்.

அதற்குள் வெளியிலிருந்து “சார்… ” என்ற அழைப்பு வர உன்ன வந்து கவனிச்சுக்கிறேன்.

அவன் வெளியே சென்ற பின் கண்ணாடி முன் சென்று நின்றவள் ‘நிலா என்னாச்சுடி அவர்கிட்ட இப்படி எல்லா பேசுற ‘என்று கேட்டு வெட்கப்பட்டாள்.

கண்ணாடிக்குள் இருந்த அவளது உருவமோ (மனசாட்சி)

மனசாட்சி, ‘ஏய்.  சீ…  என்ன பண்ற…. வெக்கம்னு மட்டும் சொல்லிறாத…’

அதனை பார்த்து கொணட்டியவள் நிலா, ‘இப்போ எதுக்கு வந்தியா’ என்றாள்

மனசாட்சி, ‘பின்ன நானும் பாக்குறேன் மூனு மாசமா அவன் கிட்ட ஏதாவது பேச வேண்டியது அப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு எங்கிட்ட பொலம்ப வேண்டியது ‘

நிலா, ‘என்னை என்ன பண்ண சொல்ற என்னோட காதல சொல்ல நினைக்கும் போது பேச்சே வர மாட்டிங்குது.’

மனசாட்சி, ‘பேச்சு உனக்கு … என்ற நக்கலடித்து விட்டு மனச்சாச்சி ஏங்கிட்டையே மனசாட்சி இல்லாம பொய் சொல்ற லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேச தெரியுது.  லவ்வ சொல்ல தெரியலா.. ‘

நிலா, ‘அது…  எனக்கு…. ‘

என்று ஏதோ சொல்ல வந்தவள்
“யாழு…  “என்ற யுக்தயனது அழைப்பில் வெளியே ஓடினாள்.

கண்ணாடிக்குள் இருந்த அவளது மனசாட்சியோ ‘பதில் சொல்லிட்டு போடி..  அடியே…. அடுத்து எங்கிட்ட வந்து பொலம்பு அப்போ இருக்கு.. ‘ என்று கூறி மறைந்தது.

நிலா, “என்னங்க மாமா… “

யுகி, “ஆ…  யாழு இவங்க சின்னரசு “

நிலா, “வணக்கம்ங்க..” அவரும் அவளுக்கு வணக்கம் வைத்தார்.

யுகி, “இவரு இங்க தா செக்யூரிட்டியா இருக்காரு “

நிலா, “ம். .. பாத்துருக்கேன்.”

யுகி, “இவரு இங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மலை இருக்கு அதுக்கு அந்த பக்கம் இருக்குற ஒரு காட்டுவாசிகள் கூட்டத்த சேர்ந்தவரு “

நிலா, “ஓ…”

யுகி, “நாம இங்க டாக்குமண்ட்ரிகாக பண்றத பாத்துட்டு அவரோட கிராமத்த படம் புடிக்க ஒத்துக்கிட்டாரு அவரு நம்மள கூட்டி போக வந்துருக்காரு நாம இப்போ அங்கதா கிளம்புறோம். “

அவர் புறம் திரும்பியவன் “ஐயா உங்களுக்கு தேவையானத எல்லாம் எடுத்து வைங்க நாங்க இப்போ வந்துடுறோம்.”

சின்னரசு “சரிங்க சார்… “

யுகி, “சார் வேண்டா பேர் சொல்லியே கூப்பிடுங்க”

சின்னரசு, “ஐயோ பேர் சொல்லல வேணும்னா தம்பினு கூப்பிடுறேன்.”

யுகி, “சரிங்க “

…….

யுகி, “யாழு சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துக்க

நிலா, “எல்லாம் ரெடிங்க கிளம்பலாம். “

மூவரும் காட்டு பாதையை நோக்கி சென்றனர்.  ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு ஏரி ஒன்று தென்பட்டது. அதன் அருகே இரண்டு மூன்று படகுகள் இருந்தது. அதனை கவனித்த யுக்தயன்

“ஐயா இங்க ஆளுங்க இருக்காங்களா “

சின்னரசு “ஆமாபா அதோ கம்பத்தோட கட்டி இருக்குல அது இங்க இருக்குற இரண்டு குடும்பத்த சேர்ந்தது.  மத்த இரண்டும் அவங்க இல்லாத நேரத்தில எங்களுக்கு தேவபடும்னு எங்க ருத்ரா தம்பிதா ஏற்பாடு பண்ணுச்சு. “

யுகி, “ருத்ரா யாரு.. “

சின்னரசு, “எங்க கூட்டத்தோட தலைவரு மகன் எங்க எல்லாருக்கும் எங்க ருத்ரா தம்பினா உயிரு அவரு எது சொன்னாலும் கேப்போம்”.
“படகுல ஏறிக்கங்க இங்க இருந்து 3 கி.மீ பயணம் பண்ணுனாதா அடுத்த கரை வரும்.”

ஒரு மணிநேர நடைபயணத்தில் வெகுவாக சோர்ந்துவிட்டாள் நிலா. அதனால் முதல் ஆளாக படகில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

அவளை பார்த்து சிரித்தவன் “ரொம்ப வலிக்குதா யாழு”

நிலா, “ம்..  ஆமாங்க”

யுகி, “சரி படகுல தான போக போறோம் ஷூவ கலட்டிடு” என்று கூறி கொண்டே அவனும் எறி அமர்ந்தான்.

நிலா, “ம்…   “

சின்னரசு, “தம்பி இங்கையே இருங்க அதோ இருக்குல குடுசை அங்க போய் படகோட்டிய கூட்டிட்டு வந்துடுறேன். பயப்பட வேண்டியது இல்ல இங்க மிருகம் எதுவும் வராது. “

யுகி, “சரி ஐயா “

ஷுவை கலட்டியவளின் கால்களை எடுத்து தன் மடிமீது வைத்தான் . பதறி கால்களை எடுத்தவளை நிமிர்ந்து முறைத்து பார்க்க

நிலா, “ஏங்கால..  போய் “

யுகி, “உனக்கு ஏதும் சொரியாசிஸ் இருக்க “

நிலா, “இல்ல.. “

யுகி, “அப்புறம் என்ன “என்று அதட்டியவன் தன் வேலையை தொடர்ந்தான்.

தனது பேக்கை திறந்த வலிக்கான ஆயில்மெண்டை எடுத்து பாதங்களில் தடவினான்.

யுகி, “கொஞ்ச நேரத்தில சரியாகிரும் “

நிலா, “ம்… “

படகோட்டியுடன் வந்தார் சின்னரசு.

பின் நால்வரும் படகில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

நிலா, “ஏங்க நீங்க என்ன வீடியோ எதுவும் எடுக்காம இருக்கிங்க”

யுகி, “எடுத்துட்டுதா இருக்கேன் “

நிலா, “எங்க”

இதோ என்று தன் சடட்டையில் பொறுத்தி இருந்த கேமராவை காட்டினான்.

அதிர்ந்து பார்த்தவளின் அருகில் நெருங்கியவன்  “பயப்படாத எடிட் பண்ணும் போது உன்னோட முகத்த கட் பண்ணிருவேன். “

பின் அமைதியாக படகு பயணம் தொடர்ந்தது.  சுற்றி தெரிந்த தண்ணீரை சிறிது தூரம் வரை ரசித்தவள் படகு உள்ளே செல்ல செல்ல பயம் கொண்டவள் யுக்தயனை நெருங்கி அமர்ந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

அவனும் அவளின் தோளை சுற்றி வளைத்து அணைத்து கொண்டவன் தட்டி கொடுக்க கலைப்பில் இருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள்.

அவளை தட்டி கொடுத்து கொண்டே மற்ற இருவரிடம் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க அவர்களின் பதிலோ கடைசியில் ருத்ரனிடம் வந்து முடிந்தது.

தூக்க கலக்கத்தில் முன்னோக்கி சரிந்து கொண்டே இருந்தாள் யாழ்நிலா.

தோளில் இருந்து சரிந்தவளை மடியில் தாங்கி கொண்டான் யுக்தயன்.

தொடரும்…..