மதுவின் மாறன் 21 & 22
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
வேணிக்கும் மஹாவிற்கும் திருமணமாகி விடுப்பில் இருந்த நாட்களது.
அச்சமயம் வாணியுடன் வேலை பார்த்திருந்த ஒரு தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இரண்டு நாட்கள் அவளுடன் மருத்துவமனையில் தங்கியிருந்து வாணி தான் அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
மாறன் மாலை போட்டு முப்பது நாட்களுக்கு மேல் ஆகியிருந்த சமயமது.
இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது இடையில் வந்த காரில் மோதி கை காலில் அடியுடன் மயக்க நிலையில் அனுமதிக்கப் பட்டிருந்தான் மாறன். வாணி தன் தோழிக்காக அவளுடன் இருந்த அதே மருத்துவமனையில் தான் மாறனும் இருந்தான்.
ஏற்கனவே விரதத்தில் இருப்பதால் உடலில் தெம்பு இல்லாத காரணத்தாலும் அடிபட்ட இடத்தில் அதிக இரத்தப் போக்கு இருந்த காரணத்தினாலும் அவனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூற, அவனது இரத்தம், அரிய இரத்த வகை ஆதலால் இரத்த வங்கிக்கு ஃபோன் செய்து செவிலியர் கூறிட்டிருந்த நேரம், அதை கேட்ட வாணி, தனக்கும் அந்த வகை இரத்தம் தான் எனக் கூறி இரத்த தானம் செய்ய முன் வந்தாள்.
அதற்குள் மாறனின் கைபையை துழாவி அவனின் கடை வேலையாளுக்கு அழைப்பு விடுத்து செய்தியை கூறி மருத்துவமனை வர செய்து விட்டனர் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள். மாறனின் அப்பாவும் இச்செய்தி அறிந்து சென்னையிலிருந்து கிளம்பி இருந்தார்.
அடிபட்டு மயக்கத்தில் இருந்த மாறன், பல நாட்கள் வைத்திருந்த தாடியுடன் இருக்க, வாணி அவனின் முகத்தை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
வாணி மாறனின் அருகிலிருந்த கட்டிலில் படுத்து இரத்தம் கொடுத்துக் கொண்டு கண் மூடி படுத்திருந்தாள்.
அச்சமயம் நினைவு வந்து மாறன் முழிக்க, அருகில் கட்டிலில் தனக்கு இரத்தம் அளிக்கும் வாணியை தான் பார்த்தான் மாறன்.
“அப்பவும் மூடின உன் கண்ணுல இருந்து தண்ணீர் வந்துட்டு இருந்துச்சு. நீ மனசுல எதையோ நினைச்சு அழுதுட்டு இருக்கனு தோணுச்சு. எவ்ளோ நல்ல குணமுள்ள பொண்ணுனு தோணுச்சு. ஆனா என்ன கவலையோ இப்படி மனசுக்குள்ளயே வச்சு அழுதுட்டு இருக்கேனு தோணுச்சு. அப்ப யாரோ உள்ள வரது போல இருக்கவும் நான் கண்ணை மூடிட்டேன்”
“ஏன் கண்ணை மூடினீங்க??”
“அது என்னமோ ஒரு மாதிரி குற்றயுணர்வு மதும்மா. இவ்ளோ நல்ல பொண்ணு அப்படி சொல்லிட்டோமே. அழகுல உருவத்துல என்ன இருக்கு. வாழ்க்கைக்கு நல்ல குணநலன் தானே முக்கியம். இது புரியாம அப்படி பேசிட்டோமே அந்த பொண்ண .. எப்படி அந்த பொண்ணை நேருக்கு நேரா பார்ப்பேங்கிற குற்றயுணர்வு” என்றவன் கூற,
“சரி நான் ஏன் இரண்டு நேரமும் அப்படி அழுதேனு நீங்க என் கிட்ட கேட்கவேயில்லையே!! உங்களுக்கு ஏன்னு தெரியுமா?? அதெப்படி உங்களுக்கு தெரிஞ்சிது” என கேள்விகளாய் அவள் கேட்க,
“ஹ்ம்ம் என் மதுகுட்டி எந்த நேரத்துல என்ன யோசிக்கும்னு தான் உன்கிட்ட பேசின கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிட்டே!! அப்புறம் ஏன் உன்கிட்ட அத கேட்டு தெரிஞ்சிகிடனும்” என்றவன்,
“நீ ரொம்பவே ஃபேமிலி ஓரியண்டட் பொண்ணு. வீட்டுல வெளியவே விடாம வேற வளர்த்துட்டாங்க. சோ கண்டிப்பா உன் அழுகைலாம் அப்பா அம்மாவ பிரிஞ்சி இருக்குற உன் நிலையை நினைச்சி தான் இருந்திருக்கும். அவங்க இருந்திருந்த இந்த இடத்துல இப்படி தனியா வந்திருப்பேனா .. கூடவே இருந்திருப்பாங்களேனு நினைச்சிருப்ப” என்றவன் கூறியதும்,
தன் கண்ணை உருட்டி அதிர்ச்சியை வெளிபடுத்தியவள், “வாவ் செம்மங்க!! என்னைய இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கீங்களா??” என பூரித்து மகிழ,
“இப்ப தான் என் மது அவளோட ஃபார்ம்க்கு வந்திருக்கா” என அவளின் ரியாக்ஷன் பார்த்து கூறி சிரிக்க,
“இல்ல இல்ல நான் கோபமா இருக்கேன்” என கூறியவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
“எனக்கு அப்ப உன்ன ரொம்ப பிடிச்சிது மது. மேரேஜ் செய்யனும்னுலாம் தோணலை. ஆனா உன்ன அடுத்து பார்க்கும் போது தேங்க்ஸ் அன்ட் சாரி கேட்கனும்னு அந்த மடிவாலா கோவிலுக்கு போகும் போதெல்லாம் நினைப்பேன்”
“அப்ப எப்படி மாமாகிட்ட உடனே கட்டிகொடுங்கனு கேட்டேனுலாம் தெரியலை. ஆனா அடுத்து எஃப் பில உன்னைய ஃபாலோ செஞ்சதுல உன்னோட நேச்சர், பிடித்தம், ஒரு விஷயத்தை நீ பார்க்கும் விதம், உன் வளர்ப்புனு எல்லாம் உன்னை ரொம்பவே பிடிக்க வச்சிட்டு. எவ்ளோ வருஷம்னாலும் காத்திருந்து உன்னை தான் கல்யாணம் செய்துக்கனும்னு முடிவு செஞ்சேன்”
“கல்யாணத்துக்கு அப்புறம் எனக்காக நீ செய்ற எதுலயுமே எனக்கு உன்னோட அன்பு மட்டும் தான் தெரிஞ்சிது. என்னைய கொஞ்சமா ஹர்ட் பண்ணிட்டேனு தெரிஞ்சாலும் போதும்னு சண்டைய நிறுத்திட்டு என்னைய ஹர்ட் செஞ்சத நினைச்சி நீ ஃபீல் ஆகி கஷ்டபடுத்திட்டேனானு என்னைய சமாதானம் செய்றதுலாம் அவ்ளோ பிடிக்கும். இது தான் உண்மையான காதல்னு எனக்கு புரிய வச்சவ நீ!! நம்ம ஒருத்தரை மனசார நேசிக்கும் போது காதலால் பார்க்கும் போது அவங்களோட ஒவ்வொரு செய்கையையும் ரசிப்போம்னு உணர வச்சது நீ!! நமக்கு பிடிக்காத செயல் செஞ்சாங்கனா கூட வெறுக்க தோணாது அதை மாற்ற முயற்சி செய்ய தோணும் இல்லனா அப்படியே ஏத்துகிட்டு வாழ தோணும்னு புரிய வச்சவ நீ!! மொத்தத்துல இது தான் காதலுக்கான அர்த்தம் காதலான வாழ்க்கைனு ஒவ்வொரு நாளும் எனக்கு உணர்த்திட்டு இருக்க மதும்மா.” என்றான் மனம் நிறைந்த காதலை குரலில் தேக்கி.
அவள் வெறுமையாய் அவன் முகம் நோக்க, “லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.
“நான் தூங்க போறேன்” எனக் கூறி கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள் மது.
சிறிது நேரம் சோபாவில் அமர்ந்திருந்தவன் அவள் உறங்கி விட்டதை உறுதி செய்துக் கொண்டு அவளருகில் சென்று அவளிடையில் கை போட்டு கொண்டு படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலை அவன் விழித்த நேரம், “என்னைய அப்பாகிட்ட கொண்டு போய் விடுங்க” எனும் கோரிக்கையுடன் நின்றிருந்தாள் மது.
“சரி கொஞ்சம் இரும்மா. நான் கிளம்பினதும் இரண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்றான்.
“இல்ல நான் கொஞ்ச நாள் அப்பா கூட இருந்துட்டு வரேன்” என்றவள் கூற,
கட்டிலில் அமர்ந்திருந்தவன் ரிஃப்ரெஷ் ஆக எழுந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.
“நானும் உன் கூடவே அங்கேயே இருக்கேன். எத்தனை நாள் இருக்கியோ அத்தனை நாளும் இருக்கேன்” என்றான்.
“எனக்கு கொஞ்ச நாளுக்கு உங்களை விட்டு இருக்கனும். நீங்க எனக்கு வேண்டாம். நான் அப்பாகிட்ட போறேன்” என கண்களை துடைத்து கொண்டே உடைந்த குரலில் அவள் கூற,
எப்பொழுதும் அவளது குழந்தைத்தனத்தை ரசிக்கும் பாவனையில் தான் இப்பவும் பார்த்திருந்தான் அவளை.
அவள் மேலும், “என்னைய டிஸ்டர்ப் செய்யாம இருங்க போதும். நான் கொஞ்ச நாள்ல சரி ஆகிட்டு வந்துடுவேன். எனக்கு இப்ப உங்களை பார்க்கும் போதெல்லாம் உங்க பழைய காதல் தான் ஞாபகம் வருது. உங்களை ஏதாவது சொல்லி ஹர்ட் செஞ்சிடுவேனோனு பயமா இருக்கு. நான் கொஞ்ச நாள் தள்ளியிருந்தா தான் சரியா இருக்கும். ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்” என்றவள் திக்கி திணறி அழுது சொல்லி முடித்தாள்.
அவளது முகத்தையே அமைதியாய் பார்த்திருந்தவன், “சரி” என்று ஒற்றை வார்த்தை கூறிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்துக் கொண்டான்.
அவளுக்கு மேலும் அழுகை வந்து கண்ணை மறைத்தது.
இவ்வளவு நேரம் அவன் ஏதும் சொல்லாமல் தன்னை தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என எண்ணியிருந்தவள், அவன் தற்போது இவ்வாறு ஏதும் சொல்லாமல் ஒத்து கொண்டதே, “தன்னை அவன் தடுக்கவில்லை. தான் போவதில் அவனுக்கு வருத்தமில்லை” என ஏதேதோ கற்பனை செய்து அழ செய்தது அவளை.
அவன் பாத்ரூமிலிருந்து வெளி வர, அவள் அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தான். கண்கள் கலங்கி மனம் வெகுவாய் கனத்திருந்தது அவனுக்கு.
“பேசாம கூட இருடி. ஆனா கூடவே இருடி” என அவளிடம் கூற மனம் வெகுவாய் தவித்தது அவனுக்கு.
ஆனால் இது தனக்கு தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாய் ஏற்றுக் கொண்டான் மாறன்.
மாறனின் தாய் தந்தையிடம் ஏதேதோ காரணம் கூறி மது சமாளித்தாலும் அவர்கள் அவள் செல்வதற்கான காரணத்தை ஏற்கவேயில்லை. ஆயினும் அவள் போக விரும்புவதை தடுக்கும் எண்ணமும் இல்லை அவள் கூறுவதை நம்புவதாய் காண்பித்து வழி அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி ஊடலை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வது தான் சுமூகமான தீர்வாய் அமையும் என அறிந்திருந்தவர்கள் இருவரிடமும் பெரியதாய் ஏதும் தோண்டாமல் அவர்கள் போக்கில் விட்டனர்.
மதுவின் தாய் தந்தைக்குமே மிகுந்த ஆச்சரியமாய் இருந்தாலும் வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த பெண்ணை சந்தோஷமாய் பார்த்துக்கிட்டு அனுப்பி வைப்போம் என எண்ணிக் கொண்டு ஏதும் கேட்கவில்லை.
அன்று அவளின் தாய் தந்தை திருவண்ணாமலை செல்வதாய் உரைத்து இவளை வீட்டில் தனித்திருக்க விட்டு சென்றிருந்த நேரம் தான் மது அந்த இளையராஜா பாடலை பார்த்து விட்டு, “அன்னிக்கு எவ்ளோ ஹேப்பியா பார்த்துட்டு இருந்த பாட்டு. இன்னிக்கு அப்படியே சோகமா பார்க்க வச்சிருச்சே காலம்” என்று அழுதுக் கொண்டிருந்தாள்.
மது மாறனை பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
அத்தியாயம் 22
மது மாறனை பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
அன்று மது வீட்டிலிருந்த அனைவரும் திருவண்ணாமலை சென்றிருக்க, மது வீட்டில் தனித்திருந்தாள்.
யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க, இவள் சென்று கதவை திறக்க, அங்கு மாறன் நின்றிருந்தான்.
இவளை தலை முதல் கால் வரை அவளின் சுகத்தை அறியயெண்ணி அவன் பார்த்திருக்க,
அவனின் முகத்தை மட்டுமே அவள் பார்த்திருந்தாள்.
வாராவாரம் தாடியில் ஏதேனும் டிசைன் செய்து வைப்பவன், தற்போது ஒரு வாரம் வளர்ந்த முழு தாடியுடன் நின்றிருந்தான்.
மதுவின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, அவனிடம் அக்கண்ணீரை காண்பிக்க மனமில்லாதவள் சட்டென்று உள் சென்று மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள்.
அவனை உள்ளே வரச் சொல்லியும் அழைக்கவில்லை அவள்.
அவள் கையில் ரிமோட் எடுத்து தொலைகாட்சியில் எதையோ மாற்றி கொண்டிருக்க, மாறன் அவளெதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவளின் கண்ணெல்லாம் தொலைகாட்சியில் இருக்க, அவனின் கண்ணெல்லாம் அவள் மீதிருந்தது.
அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஒரு வாரமாய் அவன் அவளை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் அதுவே அவளை பெரும் துயராய் ஆட்கொண்டது.
“தான் இல்லாமலும் மாறனால் வாழ முடியும். தனது இல்லாமையை அவன் வெறுமையாய் உணரவில்லை. அவனது அன்றாட நிகழ்வு அவளில்லாமல் எவ்வித பாதிப்புமில்லாமல் தான் போய் கொண்டிருந்தது. அவன் தன் மீது வைத்த காதலே பொய்” என இன்னும் என்னவெல்லாம் நினைத்து மருக அழுக முடியுமோ அத்தனையையும் கற்பனை செய்து தன்னை வருத்தி அவன் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டு என அனைத்தையும் இந்த ஒரு வாரத்தில் செய்திருந்தாள் மது.
இப்பொழுது அவளுக்கு மாறனின் முன் காதல் பெரிய விஷயமாய் தெரியவில்லை.
தன் மீதான அவனின் காதல் கேள்விகுறியானதாய் எண்ணியதிலிருந்து,
“அவனில்லாமல் அவன் காதல் இல்லாமல் தான் எவ்வாறு வாழ்வேன்” என்ற எண்ணமே மனதில் வலியை விளைவித்து நொடி நேரமும் அவனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்க செய்தது.
தற்போது அவனை பார்த்ததும், “என் மேல பாசம் காதல்லாம் இல்லாதவரு, எதுக்கு என்னை பார்க்க வந்தாராம்??” என்ற கோபமே அவளை ஆட்டுவிக்க, அவனிடம் பேசாது போய் அமர்ந்துக் கொண்டாள் வாணி.
இந்த ஒரு வாரம் அவளில்லாது அவன் பட்டபாடு அவன் மட்டுமே அறிவான்.
உன் நெனப்பு
நெஞ்சு குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
கண்ணே கண்ணே
காலம் தோரும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்
அவளின் சூழ்நிலைக்கேற்றார் போல் தொலைகாட்சியில் வாணிக்கு வெகுவாய் பிடித்த இப்பாடல் ஒலிக்க, அப்பாடலின் வரியில் கண்ணில் நீர் வழிய அழுதிருந்தாள் வாணி.
இதற்கு மேல் பொறுக்க மாட்டாது அவள் மெத்தையின் அருகில் சென்று அவளை நோக்கி மண்டியிட்டவன், “அழாதடா செல்லகுட்டி” என்றுரைத்து அவள் கண்களை துடைத்தான். அவனின் மனமும் ரணமாய் வலிக்க தான் செய்தது.
நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுரே அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்
பெண்ணே பெண்ணே
வாழ்க்கை நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்
என்று அப்பாடல் முடிய மாறன் கண்ணிலும் நீர் கோர்க்க தரையில் அமர்ந்து மதுவின் மடியில் தலையை புதைத்திருந்தான் மாறன்.
அவனின் தலையை கோத அவள் கைகள் பரபரக்க, தனது கையை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.
“என் மேல தான தப்பு மது. என் மேல தான கோபம் உனக்கு. அப்புறம் ஏன் எனக்கு தண்டை தரேனு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கிட்ட” என தன் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்து மாறன் கேட்க,
அப்பொழுது தான் அவனின் நீர் நிரம்பிய விழிகளை பார்த்தவளின் மனம் அவன் மேலுள்ள கோபம் ஆற்றாமை அனைத்தையும் மறந்து அவனுக்காய் அவனின் அழுகையை எண்ணி வலிக்க தொடங்க,
“நான் ஒன்னும் உங்களுக்கு தண்டனைய கொடுக்க விட்டுட்டு வரல. உங்களை தண்டிச்சிட கூடாது ஹர்ட் செஞ்சிட கூடாதுனு தான் வந்தேன்” என தொண்டை அழுகையில் விக்க திக்கி திணறி கூற,
அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான். தானாய் அவளின் கை அவன் தலையை கோதியது.
அவனின் கண்ணீரை கண்ட பிறகும் மனதை இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை அவளால்.
“ஐ மிஸ்டு யூ சோ மச்” முகத்தை நிமிர்த்தாது அவள் மடியில் புதைத்து கொண்டே அவன் கூற,
அவள் பதில் கூறாது அமைதியாய் இருந்தாள். கை மட்டும் தலையை கோதி கொண்டிருந்தது.
“வா நம்ம வீட்டுக்கு போலாம். இதுக்கு மேல உன்னை விட்டுட்டு இருக்க முடியாது” எனக் கூறி அவன் அவள் கை பற்ற,
“அதெல்லாம் வர முடியாது” என்றாள் கண்களை துடைத்து கொண்டே.
“ஏன் என் மேல இருக்க கோபம் இன்னும் போகலையா மது” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு அவன் கேட்க,
“முதல்ல நீங்க மேல எழுந்து சோஃபால உட்காருங்க” என்று அவனை எழும்ப செய்தாள்.
“அதெல்லாம் முடியாது” என அவள் மடியில் கை வைத்து கொண்டவன்,
“ஏன் வர முடியாது. நான் என்ன செஞ்சா என் மேல இருக்க கோபம் போகும்” எனக் கேட்டான்.
“இத்தனை நாளா இல்லாத அக்கறை இப்ப மட்டும் என்னவாம்? எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலைல. நான் எப்படி இருக்கேன் ஏது இருக்கேனு தெரிஞ்சிக்கனும்னு கூட தோணலைல” மீண்டும் கண்களில் புதிதாய் கண்ணீர் உற்பத்தி ஆகி அவளின் வேதனையை அவனுக்கு காண்பிக்க,
அவன் மெலிதாய் இதழ் விரித்து சிரித்தான்.
“நான் அழுதுட்டு இருக்கேன். உங்களுக்கு சிரிப்பா இருக்கா??” என அவன் மண்டையில் கையில் தோளில் என சரமாரியாய் இவள் அடிக்க,
வாய் விட்டு சத்தமாய் சிரித்தவன், அவள் அடியை தடுத்து கைகளை பற்றிக் கொண்டான்.
“என் செல்ல மதுகுட்டி” அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,
“நீயும் என்னை மிஸ் செஞ்சிருக்கியே. அதனால் வந்த சிரிப்பு அது. நீ என்னை வெறுத்துட்டியோனு எவ்ளோ பயந்தேன் தெரியுமா” என்றவன் கூற,
“அப்படி மிஸ் செய்ற ஆளு தான் இத்தனை நாள் பாக்காம பேசாம இருந்தீங்களா?? இப்ப கூட நீங்களா ஒன்னும் வந்தா மாதிரி தெரியலை. அம்மா அப்பா இல்ல அத்தை மாமா ஏதாவது சொல்லி உங்களை அனுப்பி வச்சிருப்பாங்க. அதான் அப்பா அம்மா ப்ளான் செஞ்சி என்னைய வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க போல” என முகத்தை திருப்பி கொண்டாள்.
“என் மேல என் காதல் மேல என்னவொரு நம்பிக்கை உனக்கு” என வலி நிறைந்த குரலில் விரக்தியாய் கூறியவன், முன்பு அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்துக் கொண்டான்.
“அங்க நம்ம ரூம் முழுக்க உன் வாசம் தான்டி. நீயில்லாம அந்த ரூம்ல ஒரு நாளுங்கிறதே ஒரு யுகமா போச்சு. அங்க இருக்க ஒவ்வொரு பொருளும் உன்னுடனான ஒவ்வொரு நிகழ்வை தான் எனக்கு நினைவுபடுத்துச்சிடி. இதுக்கு மேல நீ இல்லாம இருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருந்துச்சு. காதல் நரக சுகம்னு எழுதினானே கவிஞன் அது எவ்ளோ உண்மைனு அப்ப புரிஞ்சிது. இத்தனை நாள் காதலோட சுகத்தை மட்டுமே உணர்த்திட்டு என்னைய உணர வச்சிட்டு இருந்தவ, காதலின் அந்த நரக வலியையும் உணர வச்சிட்டடி. நீ என்ன வெறுத்திட்டியோனு நினைக்கும் போதெல்லாம் மனசு அவ்ளோ ரணமா வலிச்சிதுடி. கண்டிப்பா லவ் ப்ரேக் அப் அப்பலாம் நான் இவ்ளோ ஃபீல் செய்யலை.”
“காதலின் அடி ஆழ உணர்வு எல்லாத்தையுமே நான் உன்கிட்ட மட்டும் தான் ஃபீல் செஞ்சேன் செஞ்சிட்டு இருக்கேன் மது”
அவன் கூறுவதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இரு மனநிலையில் கேட்டிருந்தாள் மது.
“நான் மறுநாளே உன்னைய பார்க்க இங்க வந்தேன்”
அவன் கூறியதும் வியப்பின் விளிம்பிற்கே சென்றாள் மது.
“என்னது இங்க வீட்டுக்கு வந்தீங்களா?”
“ஆமா நீயில்லாம ஒரு நாளே தாக்கு பிடிக்க முடியலை. மறுநாளே வந்தேன். வீடு பூட்டியிருந்துச்சி. உனக்கு ஃபோன் செஞ்சா நீ கோபத்துல ஃபோன் எடுக்காம இருந்துடுவனு நினைச்சி மாமாக்கு ஃபோன் செஞ்சேன்” என்றவன் கூற,
“அப்பா என்ன சொன்னாங்க? ஏன் நீங்க வந்ததை யாரும் எனக்கு சொல்லலை” என கேள்விகளால் அவள் அவனை துளைக்க,
“நீயும் அத்தையும் கோயிலுக்கு போயிருக்கீங்கனு சொல்லி மாமா என்னைய தனியா மீட் பண்ணனும்னு அவங்க வேலை விஷயமா போயிருந்த இடத்துக்கு பக்கத்தில இருந்த ஹோட்டலுக்கு வர சொன்னாங்க” என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் அவள் நெஞ்சம் பதற,
அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,
“அப்பா என்ன சொன்னாங்கப்பா?? எதுவும் உங்களை திட்டிட்டாங்களா??” இவளின் தந்தை திட்டி அவனின் மனதை நோக செய்துவிட்டாரோ என்றொரு பதற்றம் இருந்தது அவள் குரலில்.
அன்று அந்த ஹோட்டலில் எதிரெதிராய் வாணியின் தந்தை செல்வமும் மாறனும் அமர்ந்திருக்க,
தன்னிடம் வந்து பேசவே பயந்து தயங்கி பேசும் ஆண் பிள்ளைகளை பார்த்திருந்தவருக்கு, தன்னை பார்த்த மாத்திரத்தில் தன்னிடமே தைரியமாய் பெண் கேட்ட வெற்றியின் அன்றைய நாள் நிகழ்வு தான் செல்வத்தின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மாறன் மனதிலோ, “மது என்ன சொல்லி வச்சிருப்பா?? நமக்கு வார்னிங் கொடுக்க கூப்டிருப்பாரோ” என பல வகை எண்ணங்கள் சூழ்ந்திருந்தது.
தொண்டையை செருமிய செல்வம் பேச தொடங்கினார்.
“என் பொண்ணு ஸ்கூல் படிக்கும் போதும் சரி, காலேஜ் படிக்கும் போது சரி அவ என்கிட்ட எதையுமே சொல்லாம இருந்ததில்லை. ஏன் அவ பெங்களூரில வேலைக்கு போகும் போதுமே, எனக்கு அவ பசங்க கிட்ட பேசுறது பிடிக்காதுனு தெரிஞ்சாலுமே என் கிட்ட அதையும் சொல்லி திட்டு வாங்கிப்பா…. அவ ஏஜ் அடெண்ட் பண்ணது கூட என்கிட்ட தான் முதல்ல சொன்னா… என் பொண்ணு என் கிட்ட எதையும் மறைக்க மாட்டா… சொல்லாம இருக்க மாட்டானு பெருமிதமா என் நண்பர்கள் கிட்டலாம் சொல்லிருக்கேன். இப்ப அதைவிட பெருமையா உணர்றேன் மாப்பிள்ள”
என்று செல்வம் கூறியதும்,
“இப்ப இவர் என்ன சொல்ல வர்றாரு” என்கின்ற குழப்ப மனநிலையிலேயே அவரின் பேச்சை கவனித்தான் மாறன்.
“அப்படி எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கிற பொண்ணு, வீட்டுக்கு வந்துட்டு ஒரு வார்த்தை உங்களை குறையா சொல்லலை. நான் உங்களை என்னிக்குமே குறைவா நினைச்சிட கூடாதுங்கிறதுல அவ ரொம்பவே தீர்க்கமா இருக்கானு புரிஞ்சிது. கல்யாணம் முடிஞ்சி அப்பா புராணமே பாடி அவ வாழ்க்கைல பிரச்சனைய உண்டு பண்ணிக்குவாளோனு நாங்கலாம் ரொம்பவே பயந்தோம். ஆனா இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு” என்றவர் மனம் நெகிழ்ந்து கூற,
“என்ன மாமா நீங்க? அவ என்கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருக்கா… நீங்க மனசு நிறைவா இருக்குனு சந்தோஷப்பட்டுட்டு இருக்கீங்க” என்றவன் ஆதங்கத்தை கேட்க,
“உங்களோட பழைய லவ் தெரிஞ்சி தான் அவ சண்டை போட்டிருப்பானு புரிஞ்சிடுச்சு மாப்பிள்ளை” என்றவர் கூற,
“அதெப்படி அவ சொல்லாம உங்களுக்கு தெரிஞ்சிது. நான் உங்க கிட்ட இதை ஹாஸ்பிட்டல்ல வச்சே சொல்லிட்டேனே… கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணும் போதும் அவளுக்கு தெரிய வேண்டிய நேரத்துல தெரியட்டும்னு சொல்லிட்டீங்க… இப்ப பாருங்க அவ என்னைய விட்டே போய்ட்டா” என அவன் கவலையாய் கூற,
“அது காதலே இல்லனு நீங்க சொல்லும் போது எனக்கு புரிஞ்சிது. அதனால தான் நீங்க திரும்ப வந்து மதுவ கேட்கும் போது நான் கட்டிக் கொடுத்தேன்”
“இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க வீட்டுக்கு பக்கம் வராதீங்க. இந்த பிரிவு உங்க இரண்டு பேருக்குமே புரிதலை கொண்டு வரும்” என்றவர் கூறிய நொடி,
“மாமாஆஆஆ” என அலறி இருந்தான் மாறன்.
“என்னது ஒரு வாரமா… “
“மாமா ஒரு நாளே முடியலை மாமா… அவளை என் கூட அனுப்பி வச்சிடுங்களேன் ப்ளீஸ்… இனி அவளே நான் போறேனு சொன்னாலும் கண்டிப்பா நான் அனுப்பி வைக்க மாட்டேன்”. “ஒரு வாரம் அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்” என்ற மனதின் பதற்றத்தை குரலில் தேக்கி செல்வத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் மாறன்.
“இது உங்க நல்லதுகாகவும் தான் நான் சொல்றேன் மாப்பிள்ளை” என்றவர் இது தான் முடிவு என்பது போல் எழுந்து சென்று விட்டார்.
இன்று…
நேத்து கால் செஞ்சி, “வந்து கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை. நீங்க இல்லாம ரொம்ப கஷ்டபடுறா. எங்ககிட்டயும் மனம் விட்டு பேச மாட்டேங்கிறா… நீங்க கூட்டிட்டு போங்கனு” சொன்னார் என்று மாறன் நடந்தவைகளை சொல்லி முடிக்க,
“அப்பாஆஆ என்னைய இவ்ளோ கவனிச்சிட்டு இருந்தீங்களாஆஆ” என மனதிற்குள் எண்ணி வியந்து போனாள் வாணி.
“சரி அதுக்காகலாம் நான் உடனே கிளம்பி வர முடியாது” என அவள் மீண்டும் முன் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று அமர,
“நீ வரலைனா தூக்கிட்டு போய்டுவேன்டி!! ஓவரா பண்ணிட்டு இருக்க” என மாறன் எழுந்து நின்று கத்த,
“தூக்கிடுவீங்களா?? தூக்கிடுவீங்களா?? எங்க தூக்குங்க பார்ப்போம்… கடிச்சி வச்சிடுவேன்” என அவனருகில் சென்று அவனை நிமிர்ந்து பார்த்து இவள் கோபமாய் கூற,
தன் உயரத்திற்கு அவளை தூக்கியிருந்தான்.
“உன் மாம்ஸ் பாவம்ல!! உன் கண்ணப்பா பாவம்ல!! வந்துடுடா மதுகுட்டி” என அவள் நெற்றி முட்டி கண்ணை சுருக்கி அவன் கூற,
மெலிதாய் சிரித்து அவன் கன்னத்தில் முத்தமிடுவது போல் சென்று, நன்றாய் கடித்து வைத்து, “வர முடியாது போடா” எனக் கூறி அவன் கையிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள்.