பித்தம் கொண்டேன் பேரெழிலே -டீசர்

ஹாய் பித்தம் கொண்டேன் பேரெழிலே கதையிலிருந்து சின்ன டீசர்

மீராக்கா!நீயே தீர்ப்பு சொல்லு!அந்த கார்டூன் தினமும் போட்டதையே போட்றான்! அதுக்கு நான் பாக்கற டிஸ்கவரிய பாத்தா எவ்ளோ விஷயம் தெரிஞ்சுக்கலாம்!சொன்னா கேக்க மாட்றா”என்று அர்ஜுன் கூறைபட,

“போடா எனக்கு டோரா தான் வேணும் அக்கா நீ சொல்லு அவனுக்கு”என்று அர்பிதா அழ,

“அடேய் இருங்கடா ஒரு நிமிஷம் இரண்டு பேத்துக்கும் சமமா ஒரு தீர்ப்பை சொல்லுறேன் தா அர்ஜுனா நீ இப்ப போய் வீட்டு பாடத்தை எழுதிட்டு வா அதுவரைக்கும் அர்பி புள்ள டோரா பாக்கும் நீ வந்ததும் அது பாடம் எழுத போன மேல நீயி அது என்ன?…ஆ டிஸுகவரி பாரு சரியா இப்ப சமமா தீர்ப்பு கொடுத்தாச்சு!தீர்ப்பு கொடுத்த தலைவிக்கு கும்பிடு வச்சிட்டு போய் வேலைய பாருங்க”என்று மீரா சண்டையை முடித்துவைக்க,

“எதே கும்பிடா அதெல்லாம் முடியாது!”என்று அர்ஜுன் கூற,

“ஆமா கும்புடெல்லாம் வைக்க முடியாது”என்று அர்பிதாவும் ஒத்து ஊத இருவரும் கைகோர்த்துக் கொண்டு ஓடி விட்டனர்.

“அடப்பாவிகளா!இத்தன நேரம் போட்ட சண்டையென்ன இப்ப கைகோத்துக்கிட்டு ஓட்றத பாரு! இருக்கட்டும் மறுபடியும் பஞ்சாயத்து பண்ண எங்கிட்டாதானே வருவீங்க அப்ப பாத்துக்கறேன் உங்களை”என்றாள் மோவாயில் கைவைத்தபடி.

இத்தனை நேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா கலகலவென சிரிக்க,”அக்கா!என்னை கேலி செஞ்சு சிரிக்கறீங்களா!போங்க உங்க பேச்சு டூ!”என்று மீரா முகத்தை தூக்கி வைக்க,

“பின்னே என்ன அதுங்கள பத்தி தெரிஞ்சும் நீயும் விடாம பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல வர”என்று மேலும் சிரித்தவள் மீராவின் கன்னத்தை கிள்ளி,

“என்ன திடிர்னு காத்து இந்த பக்கம் வீசுது”என்று கேலியாகக் கேட்க,

“ஒன்னுமில்யே நா சும்மா உங்களைப் பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன்”என்று வாய் கூறினாலும் அவளின் வேல்விழிகள் தன் மன்னவன் எங்கே என்று தேடி அங்குமிங்கும் சுழன்றது.

“ஏய் ஃபிராடு எங்கிட்டியேவா!உங்காளு இன்னும் வரல “என்றதும் அவளின் பூ முகம் வாடிப் போனது.

“அவருக்கு ஏதோ திடீர் வேலையாம் அதான் இன்னிக்கி ராத்திரி கிளம்பி நாளை காலைல வருவாரு!”என்று கூற ஐயோ நாளை வரை காத்திருக்க வேண்டுமே என்று அவளின் தளிர் உள்ளம் தவியாய் தவித்தது.

“அம்மா!ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க!அவங்க அக்காவை தானே உங்களுக்கு பிடிக்காது அது இவ மேல எதுக்கு இவ்ளோ கோபம் இவ ரொம்ப நல்ல பொண்ணுமா கொஞ்சம் அதட்டி பேசினா கூட அழுதிடுவா அவ்ளோ சாஃப்ட்!”என்று அவன் மேலும் கூற,

“கிரி!நீ என்னத்தை சொன்னாலும் எனக்கு அந்த வீட்டு பொண்ணை பிடிக்கல!அவளை விட ஆயிரம் மடங்கு ஒசத்தியா அம்மா உனக்கு பாக்கறேன்டா சொல்லறத கேளு அவ வேணாம்”என்று உறுதியாகக் கூற,

“அம்மா எனக்கு கல்யாணம்னா அது அவ கூட மட்டும் தான் அவ வேணாம்னா எனக்கு கல்யாணமே வேணாம் “என்று அவன் அவனின் பிடிவாதத்திலேயே நிற்க அவனின் தமையனோ தாயின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதா இல்லை தனயனின் காதலை வாழ வைப்பதா என்று இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தான்.

“மதனி!ப்ளீஸ் நீங்கதான் அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்கனும்!அவங்க வறட்டு பிடிவாதத்தையே பிடிச்சிட்டு தொங்கறாங்களே தவிர என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டங்கறாங்க!”என்று அவன் வருந்த,

“அது… தம்பி அத்தை நிறைய பாத்தவங்க அனுபவம் இருக்கறவங்க!அவங்க வார்த்தைய மீறி எதுக்குங்க தம்பி இந்த பிடிவாதம்?அதுமட்டுமில்லாம உங்களை நம்ப மீ…”என்று பேசியபடி அவள் பார்வை கிரியின் பின்னே செல்ல அங்கே கைகூப்பியபடி வேண்டாம் என்று தலையசைத்தாள் மீரா.

“மீரா!இப்பவும் எதுவும் கெட்டுடல நான் தம்பி கூட பேசுறேன்”என்று பவி கூற விரக்தியாக சிரித்த மீரா,

“என்னன்னு அக்கா பேசுவிங்க படிச்சு நாகரீகமா இருக்கற நீங்க விருப்பற பொண்ணை விட்டுட்டு பத்தாம் க்ளாஸை கூட தாண்டாத இந்த பட்டிக்காட்டு பொண்ணை கட்டிக்க சொல்ல போறீங்களா!…இதை இத்தோட விட்ருங்க கா மீரா என்னைக்குமே கண்ணனோட காதலி மட்டும் தான்”என்றவள் தளும்பும் கண்ணீர் கன்னத்தில் வழியும் முன்பு அங்கிருந்து விரைந்தோடி விட்டாள்.