நீள்வதேனடி நின் கதங்கள்…

என்னடி முறைக்கிற நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகனும் அது தான் உன்னைடைய விதி என்றவனை முறைத்து விட்டு நீ இழுத்த இழுப்புக்கு வர வேற எவளையாவது பாரு இந்த ஷ்ராவனி அதுக்கு சரி பட்டு வரமாட்டாள் என்றாள் பெண்ணவள்.

பெண்ணவளின் கோபம் நிறைந்த முகத்தை ரசித்தவன் அவளது மெல்லிடையில் கை வைத்து அவளை தன் புறம் இழுத்தவன் பேபி நான் இழுத்த இழுப்புக்கு உன்னை வர வைப்பேன்டி என்றவனின் கன்னம் பழுத்தது அவள் கொடுத்த அறையில்..

பொறுக்கி இன்னொரு முறை என் மேல கை வச்ச செருப்பு பிஞ்சுரும்டா நாயே என்றவள் கோபமாக சென்று விட ஓய் ஷ்ராவனி நில்லும்மா என்றான் தஷகிரிவன். என்ன கோபம் பட்டு போயிட்டா உன்னை விட்ருவேனா நான் ராவணன் உன்னை சிறை mஎடுக்காமல் விடவே மாட்டேன் நீ ஏழு கடல் ஏழு மலை தான்டி போனாலும் என் கிட்ட இருந்து தப்பவே முடியாது பேபி என்றவன் சிரித்திட அவனை முறைத்துக் கொண்டு கடந்து சென்றாள் ஷ்ராவனி.

என்ன ஷ்ராவனி சொல்லுற இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லப் போறியா அவனை தான் உனக்கு பிடிக்கலைனு சொன்ன அப்பறம் ஏன்டி என்ற தோழி திவ்யாவிடம் என் அண்ணிக்காக இந்த கல்யாணம் பண்ணிப்பேன்டி என்றாள் ஷ்ராவனி. அப்படி என்னடி உன் அண்ணி மேல பாசம் என்ற திவ்யாவிடம் அவங்க அண்ணி இல்லடி அம்மா என்றவள் தோழியிடம் தன் திருமண பத்திரிக்கையை நீட்டினாள்.

மணமகன் என்ற இடத்தில் தஷகிரிவன் என்று அவளது வில்லனின் பெயரும் மணமகள் என்ற இடத்தில் ஷ்ராவனி என்று அவளது பெயரும் இருக்க இந்த கல்யாணம் நடக்கவே கூடாது கடவுளே என்று இறைவனை நொந்து கொண்டாள்.

இது வெறும் டீசர் தான் மக்களே. சீக்கிரமே கதையோட வரேன்……