நிறம் மாறும் வானம் – 8
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
நிறம் 8
இந்தியாவின் வடமுனையான காஷ்மீரின் பனிபடர்ந்த மலைக்காட்டுக்குள் ஏதோ ஒரு இடம். அங்கு ஒரு மரவீடு. வெளியில் ஆயுதமேந்திய பத்து பேர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வெளியில் பரவியிருந்த நிலவொளியில் அவர்களது ஆயுதம் எத்தனை அப்பாவி உயிர்களைக் குடித்தபிறகும் தன் தாகம் ஆடங்கவில்லை என்ற ஆவலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.
வீட்டின் உள்ளே தலைவன் போன்றவன் நடுவீட்டில் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஏதிரே இருந்த மேசையில் உள்ள மடிக்கணினி டார்க் வெப்பில் ஏதோ தொடர்பில் இருந்தது. கணினி அருகே துப்பாக்கியும் , மதுக்கோப்பையும் இருந்தது. அவனது இரவு உணவை ஒரு சௌந்தர்முடைய வாலிபன் ஏதிரே வைத்துக் கொண்டிருந்தான்.
பேசி முடித்தவுடன் கணினியை மூடியவனின் முகம் பெருமிதம் கலந்த ஆணவத்தால் மலர்ந்திருந்தது. அவனது மொழியில் “பார்த்தியா..சின்ன பையா..இந்த வருட தீபாவளி இந்தியாவால மறக்கவே முடியாது. சிவப்பு தீபாவளிக்கு எல்லாம் ரெடி. இந்தியா தீபாவளில பெரிய அளவுல அதிர்ந்து போயிரும். நம்ம யாருனு அப்ப புரிஞ்சுக்குவாங்க.” என்று கூறிவிட்டு , மனதார சிரிக்கத் தொடங்கினான். எதிரே இருந்த வாலிபனும் நிம்மதியாகச் சிரித்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளியில் காவலுக்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் மயங்கிச் சரியத் தொடங்கினர்.
“ரொம்ப சரியா சொன்னீங்க தலைவரே. ஆனா ஒரு சின்ன வித்தியாசம். இந்தியா துக்கத்துல இல்ல சந்தோஷத்துல அதிரும். ஆனா..”
தலைவனின் முகம் குரூரத்தை தத்தெடுத்தது. “என்ன பேசற சோட்டாபாய்.?” கையில் துப்பாக்கியை எடுக்கப் போகும் சமயம் எதிரே இருந்த வாலிபனின் கையிலிருந்த தட்டு தலைவனின் தலையில் அடிக்கப்பட்டு கீழே நங்கென்ற சத்ததுடன் விழுந்தது. அதற்குள் தலைவனின் துப்பாக்கி வாலிபன் கையில் எடுத்து ஒரு தோட்டாவை தலைவனின் காலிலும் பாய்ச்சியிருந்தான்.
“ உங்க தேவைக்காக எவ்ளோ அப்பாவிங்க உயிரைத்தான் எடுப்பீங்கடா? சரி இந்தியா உங்க எதிரி. வேற மத நாடு. ஆனா உங்க மதத்தை சேர்ந்த ஆளுங்க உங்க பேச்சை கேட்கல அப்படிங்கறதுக்காக என்ன கொடுமை எல்லாம் பன்னுவீங்கடா. ? உங்களுக்கு கொல்றதுக்கு ஒரு காரணம் தேவை. அவ்வளவுதான். யூ பிளடி சோசியோ பாத்ஸ்.” ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கைகால் வயிறு மார்பு என தோட்டாக்கள் தலைவனின் உடலைத் துளைத்து சிவப்பு நிற உதிரம் வெளியேறியது.
காவல் காத்தவர்களில் ஒருவன் மட்டும் உணவை சரியாக உண்ணாததால் அரை மயக்கத்திலும் வீட்டினுள் ஓடிவந்தான். விஷம் அவனது உடலில் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.
வந்தவன் தனது தலைவன் இறந்துகிடப்பதையும் அவன் எதிரே உணவு சமைப்பவன் நிற்பதையும் பார்த்து “துரோகி” எனக் கத்திக் கொண்டே துப்பாக்கியை சுட்டான். அந்த வாலிபன் விலகுவதற்குள் குண்டு அவனது இடது பக்க வயிற்றை பதம் பார்த்தது. சிறிது தடுமாறினாலும் தன் துப்பாக்கியினாலும் வாலிபன் அந்த தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றான். பிறகு தனது பேண்ட் பாக்கெட்டெலிருந்து எதையோ எடுத்து அழுத்தினான். பின்பு அந்த தீவிரவாதிகளின் முக்கிய விவரங்கள் அடங்கிய மடிக்கணினியை எடுத்து ஒரு பேக்கினுள் வைத்தான்.
இவை அனைத்தையும் ஒரு கையால தனது உதிரம் கசியும் காயத்தை இலேசாக அழுத்திப் பிடித்தவாறு செய்தான். இன்னும் சில பொருட்களை எடுத்து அந்த பேக்கினுள் திணித்தவன் அந்த பனிபொழியும் இரவில் வீட்டின் வாசற்படிக்கு மெதுவாக வந்தான். குளிர் உயிர்வரை ஊடுருவி உடலை விரைக்கச் செய்தது.
கண்கள் மெல்ல சொருக ஆரம்பித்தன. இரத்தக்கசிவு சிறிதாக நிற்கத் தொடங்கியது. அவன் முகத்தில் ஒருபுன்னகை கீற்று படிந்திருந்தது. அவனுடைய பேக் முதுகில் மாட்டப்பட்டிருந்தது. படிக்கட்டில் அப்படியே அமர்ந்தான். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் மருத்துவ உதவியுடன் கூடிய ஹெலிகாப்டரிலிருந்து வீரர்கள் இருவர் குதித்து தாங்கள் அழைத்து செல்ல வேண்டிய நபரை தேட, அவன் வீட்டின் வாசலில் இருப்பது தெரிந்தது.
“சப்ஜெக்ட் பவுண்ட் வித் புல்லட் வுண்ட்.” என்ற தகவலை அனுப்பி விட்டு அவனது பேக்கை ஒருவன் கழற்றி தான் மாட்டிக்கொண்டான். பின்பு இருவரும் அவளை ஸ்டெரிச்சரில் கட்டி வைக்க அது மேலே இழுக்கப்பட்டது. வீரர்களும் மேலே கயிற்றில் ஏறிச் சென்றனர்.
ஹெலிகாப்டரில் டாக்டர் முதலுதவி செய்வதற்காக டாக்டர் லேசாக அவனது பக்கவாட்டு சட்டையைக் கத்தரித்தார்.
உடனே அருகிலிருந்த சோல்ஜரிடம் “பேசண்ட் மேல் தான. ஆன இது ஒரு பொண்ணு. “
வீரனும் ஆச்சரிய மடைந்தான். “இவங்கள தான் நாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும். ஜெனரல் அங்க இருப்பார். அவர்தான் இதுக்கு பதில் சொல்லனும். நீங்க டீரிட்மெண்ட் பாருங்க. அதற்குப்பிறகு யாரும் பேசவில்லை. காற்றில் ஓசை எழுப்பியவாறு ஹெலிகாப்டர் ஆர்மி பேசை அடைந்தது.