நிறம் மாறும் வானம் – 6

நிறம் 6


மும்பை நகரத்தை வெளிச்ச வெள்ளத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. சூரஜ் கண்விழித்தான். தூய்மையான அறை. அருகில் அவன் அம்மா கண்மூடி உறங்கிக் கொண்டிருந்தார். அவன் மனதில் நிம்மதி தோன்றியது. ‘எப்படியோ அந்த நரகத்தில் இருந்து வந்துட்டோம்.’ நினைத்துக் கொண்டே தனது அம்மாவை அழைத்தான்.


அவனது குரல் கேட்ட தாயும் விழித்தார். விழித்தவுடன் “சூரஜ் அவசரமா பிஸ்னஸ் விஷயமா வெளியே போறேனு மெசேஜ் பன்னிட்டு நீ போயிட்ட. அப்புறம் ஏன் டா இப்படி பன்ன? நீ கிடைச்சப்ப என் உயிரே எங்கிட்ட இல்ல. நீ இப்படி பன்னுவனு நான் நினைச்சு பார்க்கல. ஏதோ குடிப்பழக்கம் இருக்குனா பரவாயில்லை. டிரக்ஸ் எல்லா எடுத்துப்பியா டா?”


சூரஜ் தற்போது மிகவும் குழம்பிப் போனான். “ அம்மா நான் சொல்றதக் கேளுங்க. நான் டிரக்ஸ் எல்லா எடுக்கலமா..”


இவர்கள் பேசும் அரவம் கேட்ட செவிலிப்பெண் அறைக்குள் வந்து அமைதியாக இருக்கும்படி இருவரிடமும் கூறிவிட்டு இரவுப் பணியில் உள்ள டாக்டரை அழைத்து வரச் சென்றாள்.
செவிலிப்பெண் கூறியபின் இருவரும் அமைதியாகினர். சூரஜ்க்கு மிகுந்த மனக்குழப்பம். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.


டாக்டர் வந்து அவனைப் பரிசோதித்தார். எல்லாம் சரியாக இருக்க சூரஜிடம் “ இந்த டிரக் ஓவர் டோஸ் ஆகக்கூடாது. அதுவும் மல்டிபில் டிரக்ஸ் எடுத்தா உங்க உயிருக்கே ஆபத்தா முடியும். தண்ணீ , சாப்பாடு எதுவும் சாப்பிடல. நல்லா ரெஸ்ட் எடுங்க.”

சூரஜ் யோசித்தபடியே உறங்கிப் போனான். காலையில் கண்விழிக்க தாமதமாகிவிட்டது. போலிசார் அவனைத் தேடி வந்தனர். அவனை எச்சரித்துவிட்டு இதற்கு அப்பறம் இப்படி நடந்துனா கண்டிப்பா கேஸ் ஃபைல் செய்வோம் என்று கூற,
சூரஜ் அவர்களிடம் பேச முயன்றான்.

“ என்னை யாரோ கடத்தி வச்சுருந்தாங்க. அவங்கள யாருனு கண்டுபிடிங்க.? “ அவர்களிடம் கதறினான்.


“உங்கள யாரும் கடத்தல. நீங்க எடுத்துகிட்ட டிரக்னால வந்த ஹாலுசினேஷன் தான் அது. நீங்களே வெளியூர் போறேனு சொல்லிட்டு போய் தங்கிட்டு டிரக்ஸ் எடுத்துட்டு டாட்டூ போட்டுட்டு ஆட்டுரத்தத்தை நீங்களே உங்க மேல கொட்டிட்டு பப்ளிக்கா அப்படி ஒரு சீன் கிரியேட் பன்னீருக்கீங்க. டிரக்ஸ் யூச், பப்ளிக் நீயுசென்ஸ் கேஸ்ல உள்ள போகாமா இருக்கீங்கனு சந்தோஷப்படுங்க. ஏதோ பெரிய இடம் அதனால சும்மா விடறோம்.”

காவல்துறையினர் தங்களது கடமை முடிய சென்றுவிட்டனர்.
மருத்துவமனை விட்டு செல்லும் வழியில் காவலர்கள் தங்களுக்குள் ,

“பார்த்தியா. டிரக்ஸ் எடுத்துட்டு கண்டபடி ஒளரிட்டு இருக்கறத. டாட்டூ போட்ட பில் கார்ல, அவன் தங்குன ஹோட்டல் கூட விசாரிச்சாச்சு. ஆட்டு ரத்தம் போய் மார்கெட்ல வாங்கிட்டு தன்மேலேயே கொட்டிட்டு எவ்ளோ கதை சொல்ரான். அவன் விழுந்து கிடந்த கோலத்தைப் குழந்தைங்க பார்த்தா என்ன ஆகுறது. எல்லா பணம் இருக்க திமிரு.”

காவலர்கள் இவனைத் திட்டியபடியே சென்றனர்.

மாறும்…