சிந்தையில் பதிந்த சித்திரமே – 17 precap

“உயிர் உள்ள வரை என்னைக் காதலிப்பேன்னு சொன்னியே நயனிகா… உன் காதலுக்கு ஆயுள் இவ்வளவு தானா?” அவனிடமிருந்து அடுத்தக் கேள்வி கூர்மையுடன் வந்து விழுந்தது.

தாழ்த்திய இமையை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “என் உயிர் உள்ளவரை உங்களைக் காதலிப்பேன்னு தான் சொன்னேன். என் உயிர் இருக்கும் போது எவனோ ஒருவனுக்கு மனைவி ஆவேன்னு சொல்லலையே? இன்னொருத்தனை கட்டிக்கிட்டு வாழுன்னு நீங்க சொன்ன பிறகு இந்த உயிர் எதுக்கு?” என்று சொன்னவளுக்குப் பதில் சொல்லும் திராணியற்று போவது இப்போது அவனின் முறை ஆகிற்று.

“என் காதலுக்கு ஆயுள் அதிகம் தான். அதனால் தான் இறந்தால் உங்க நினைவுகளோட மட்டுமே இறந்து போகணும்னு நினைச்சேன். அடுத்தவன் முன்னாடி சும்மா பெயருக்கு கூட நிற்க என்னால் முடியலை…” என்றாள் மெல்ல.

பதிவு நாளை வரும்…

இந்தக் கதையின் பதிவுகள் திங்கள், புதன், வெள்ளி மட்டுமே.