காற்று 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
வாயை பிளந்த படி நிற்கும் அர்ச்சனாவை பார்க்க சிரிப்பு தான் வந்தது சாகரனுக்கு.
‘ அசிஸ்டெண்ட்டா இல்ல, ஹஸ்பண்ட்டாக வந்தேன்…’ என்று அவன் சொல்லி விட்டு நிழலி பக்கத்தில் நல்ல பையனை போல நின்று கொண்டான்.
அவளுக்கு தான், அந்த வாக்கியத்தை ஜீரணிக்க நாழியானது ‘ இவர் என்ன சொல்றார்? ஹஸ்பண்டா னா, இது மேமுக்கு தெரியுமா? இல்ல தெரிஞ்சு தான் இவ்வளவு தெனாவெட்டா சொல்றாரா? இல்ல அவங்களுக்கு தெரியாமா சொல்றாரா? இத மேம் கிட்ட கேட்கலாமா? ‘ நல்லா இருந்தவளை குழம்பிய குட்டையாக்கி விட்டவனை முறைத்து விட்டு அவன் முன்னும் நிழலியின் பக்கத்திலும் வந்து நின்றாள்.
“மேம், இ… இவ… இவரு …?” என திக்க,
“இவன் என் பெஸ்ட் பிரண்ட சாகரன்” என்றாள் நிழலி.
‘பிரண்டா? ஏதோ பியான்சி போல சொல்லிட்டு போனான். ஒ… ஒரு வேள ஒன் சைடு லவ்வா, ஒன் சைடு லவ்வுக்கு தான் இவ்வளவு பில்டப்பா?’ எண்ணியவள், அவனை கேலியாகப் பார்க்க, அவளை கண்டவன் புருவம் சுருக்கி ‘ ஒரு வேள உண்மை தெரிந்திடுத்தோ…! பயப்புல போட்டுக் கொடுத்திடுமோ…” அவளை பார்த்து இளித்தான்.
‘சொல்ட்டா …!’ கண்களால் நிழலியை காட்டிக் கேட்டாள். “சொல்லு…!” என்று அமர்த்தலாகத் தோளைக் குலுக்கினான்.
“மேம்… இவரு …!” என அவள் ஆரம்பிக்க, அதற்குள் அவன் முந்திக் கொண்டு,
” ஆங்… நிழலி, நானும் அர்ச்சுவும் சேர்ந்தே அசிஸ்டெண்ட்டா இருக்கோம். என் கூட அவ ஒர்க் பண்றதுனால எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை…!” அசட்டையாக தோளை குலுக்கினான்.
மீண்டும் வாயை பிளந்தாள் அர்ச்சனா …”நீ இன்னும் கிளம்பலையா சாகரா? நான் சொன்னத செய் , உன்னை நான் அசிஸ்டெண்ட்டா சேர்த்துகறேன்…” மீண்டும் அதே பல்லவியைப் பாட, அவள் கைகளைப் பற்றி, “ப்ளீஸ் நிழலி, நான் உன் பிரண்ட் தானே … என்னை உன் அசிஸ்டெண்ட்டா ஏத்துக்க மாட்டீயா? இது என் லைப் டீ, இப்படி அலட்சியம் செய்யாத, ப்ளீஸ். நான் என் தோப்பனார் கிட்ட சொல்லிண்டு தான் வந்திருக்கேன். ப்ளீஸ் பிலீவ் மீ… இந்த ஜீவனுக்கு உன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு? நீ தானே பார்த்துக்கணும் என்னை, எப்பயும்…” என்று மனதில் இருந்ததை அப்படி கூறினான். அவனது இந்தச் செயலால் அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை. யோசனையாக, அவனை பார்த்திருந்தாள்.
‘என்ன இவன் வேலை கேக்குறான்னா? இல்ல ப்ரொபோஸ் பண்றானா? ஒன்னும் புரியலயே, மேமும் அமைதியாக இருக்காங்க’ குழம்பினாள்.
” சரி, ஆசிஸ்டெண்ட்டா இருந்துக்கோ. ஆனால் இது போல எல்லா சிட்டுவேசனுக்கும் ஒத்துப்பேன் நினைக்காத சாகரா. திஸ் இஸ் லாஸ்ட் …!” என்று எச்சரித்தாள்.
‘இது லாஸ்ட் ஆ..
ஃபரஸ்டானு நான் தான் முடிவு பண்ணனும் பட்டர்பண் …! முன்னாடி உன் காதலுக்காக விலகி இருந்தேன். இப்போ என் காதலுக்காக உன்னை நெருங்குறேன், இனி எப்பயும் உன்னை விடவே மாட்டேன், நம்ம கதைக்கு தி எண்ட் போட்டாலும்…’ தனக்குள்ளே உறதி மொழி எடுத்துக் கொண்டான்.
“தேங்கஸ் நிழலி” என்றான்.
“மேம், அதெப்படி ஒரே வாள்ல ரெண்டு கத்தி இருக்க முடியும்? எப்படி நாங்க ரெண்டு பெரும் உங்க கிட்ட அசிஸ்டெண்டா இருக்க முடியும்?”
“ஏன் மா, ஒரே வாள்ல
பெரிய கத்தி, சின்ன கத்தியை போல நான் சீனியராவும் நீ ஜூனியராவும் இருந்துட்டு போலாமே”
“நான் தானே சீனியர், நீங்க ஜூனியர்… என்ன மாத்தி சொல்றீங்க…?”
“இங்க பாருமா, ஏஜ்ல நான்தான் சீனியர் நீ ஜூனியர். எனக்கு தான் எஸ்பிரின்ஸ் அதிகம் ” இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்ய, ‘என்னமோ பண்ணுங்க’ என்று நிழலி எழுந்து சென்று விட்டாள். அவள் சென்றதை உறுதி செய்தவன்,” ஏய் அர்ச்சனை டிக்கெட்…!” என்று அவளை அழைத்தான்.
“வாட் என் பெயர் அர்ச்சனா?” என்றாள்.
“சரி இருக்கட்டும், இங்க பாரு நான் அவள லவ் பண்றேன். என் லவ்வா மேரேஜ் வரைக்கும் கொண்டு போகணும் நினைக்கறேன். அது அவ மனசை மாத்தினால் தான் உண்டு. அதுக்கு நான் அவ கூட இருக்கணும்.ஒரு சிஸ்டர்ரா இந்த அண்ணனோட பீலிங்ஸ் புரிஞ்சுகோ மா… எனக்கு வேற வழியில்ல, ஐ வாண்டு டூ சேஞ்ச் ஹேர் . சோ ப்ளீஸ் ஹெல்ப் மீ” அவன் உண்மையை சொல்ல, அதில் பொய் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை,
“சரி ” என அவள் ஒத்துக்கொள்ள,இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்..
அந்தப் பெருமானை நோக்கி, தீபா ஆராதனை காட்டிய வரதராஜன் வெளியே
வந்து மந்திரங்களை முணங்கியவாறே ஒவ்வொருக்கும் காண்பித்தார் . உடன் சேதுராமனும் தீர்த்தத்தை கொடுத்து கொண்டே வந்தார். பெருமானை சேவித்தவர்கள் சென்றுவிட இருவர் மட்டுமே இருந்தனர் .
“நேக்கு இதுல உடன்பாடே இல்ல வரதா, அஞ்சு வருசத்துக்கு
அப்றம் தான் வக்கீலாவானாம், அப்றம் தான் கேஸ பார்ப்பானாம். இப்பவே அவனுக்கு வாயசாயிடுத்து இன்னும் அஞ்சு வருஷம்ன்னா நினைச்சி பாருமோய், என் பொண்ணு நிலமைய…!” பொண்ணை பெத்தவராக சேதுராமன் பேச,
“என் புள்ள மேல நம்பிக்கை வையுமோய், நான் வைக்காதனால தான் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவச்சேன். ஆனால் என் புள்ள என் நம்பிக்கை காப்பாத்திட்டான். காப்பாத்தினதும் இல்லாம கடைப்பிடிக்கறான். நான் சொன்னேன் ஒரே காரணத்துக்காக, உம்ம பொண்ணை கட்டிக்கறேன் சொல்லிட்டான். இதுக்கு மேல என்ன வேணும்மோய் உனக்கு, புள்ளையா அவன் கடமைய சரியா செய்யும் போது பெத்தவாளா அவன் ஆசையையும் நிறைவேத்தி வைக்கணுமோய்… அவன் வக்கீலானா, உனக்கும் பெருமை தானே சேதுராமா, வக்கீல் மாமனார், சொல்லுவா உன்னை பார்த்து…” என்றதும் அவருக்கு
வாயெல்லாம் பல்லானது.
“என்னமோ டா வராத, என் பொண்ணு உன் குடும்பத்துல சந்தோஷமா இருந்தால் போதும்”
“லட்சுமிய எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி பார்த்துப்போம் சேது, அவ எங்க வீடு மகாலட்சுமி. நீ கவலை படாதமோய்…” என்றார்.
இவர்கள் இருவரும் ஒரு எண்ணத்தில் இருக்க, சாகரனோ வேறு எண்ணத்தில் இருந்தான். தன் மகனின் ஆசை அறிந்து
நிறைவேற்ற துடிக்கும் வரதராஜனுக்கு அவனது காதல் ஆசை தெரிந்தால் நிறைவேற்றுவாரா…?
மாலை வேளையில், மணிமான் மெல்ல மறையத் தொடங்க, சாகரனின் ஆஸ்தான இடமான குளத்தில் அமர்ந்திருந்தான். சாரதியும் வேலை முடித்தவன், அந்தப் பெருமாளை சேவிஞ்சுண்டு, அவனை நோக்கி வந்தவன் பக்கத்தில், அமர்ந்து” சொல்லும் வக்கீல் சாகார, இன்னைக்கு என்ன நடந்தது?” என ஆர்வமாக கேட்டான்.
அவனை பாராமல் பெருமூச்சு விட்டவன், நடந்ததை அப்படியே கூற, குளத்தை காண வந்தவர்கள் அனைவரும் சாரதியை வினோதமாக பார்த்து விட்டு சென்றனர்.
“அத்திதிதி…, என் கதையை கேட்டு நோக்கு சிரிப்பா இருக்குல…?” இயலாமையுடன் சொன்னவனை பார்க்க பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
“பின்ன இருக்காதா அம்பி, ஸ்கூல் பையனை போல, அப்பாவ அழைச்சுண்டு வர சொல்லிருக்கான்னா, அந்தப் பொண்ணு எவ்வளவு தெளிவா இருக்கு…? ஆமா, ஏன் மாமாவுக்கு அந்தப் பொண்ணை பிடிக்கலயாம் விவரம் கேட்டியா?”
“ம்ம்… கேட்டேன்” என்று அந்த உப்பு சப்பில்லாத காரணத்தை கூறினான். சாரதி, அதை புருவச் சுருக்குடன் கேட்டிருந்தான்.
“இது ஒரு காராணம்னு மாமாவுக்கு அவளை பிடிக்கலையா? நம்பர மாதிரி இல்லையே சாகரா …!”
“எனக்கும் தெரியும் அத்தி, ஆனால் இதுவும் ஒரு காரணமா இருக்கலாம் . என்னை அவசரமாக கேனடா அனுப்பினது, லட்சுமியை கல்யாணம் பண்ணிக்க சொல்றதும் கல்யாணத்தை தள்ளி போட்டத்துக்கு எல்லாத்துக்குமே காரணம் இருக்கலாம் அத்தி. ஆனால் என்ன காரணம் சொன்னாலும் நான் நிழலியோட தான் வாழ்வேன்…” தீர்க்கமாகவும் தெளிவாகவும் சொல்லும் சாகரனை கலக்கமாக பார்த்த, சாரதி, ” உன் தோப்பனாரே எதிர்க்கலாம் முடிவு பண்ணிட்டீயா? “
“கண்டிப்பா அத்தி, என் வாழ்க்கைக்காக யாரையும் எதிர்ப்பேன்… ஏற்கெனவே இவா பேச்சை கேட்டு தான் என் நிழலியை விட்டு இத்தனை வருசம் பிரிஞ்சு இருந்துட்டேன், இனியும் முடியாது அத்தி. போராடலாம் முடிவு பண்ணிண்டேன்…”
“இதெல்லாம் நடக்கும் நோக்கு நம்பிக்கை இருக்கா சாகரா, உன் தோப்பனார எதிர்த்து உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”
“எனக்கு நிழலியோட சம்மதம் இருந்தால் போதும் அத்தி, மத்தவா சம்மதம் முக்கியம் இல்ல, இப்ப எனக்கு நிழலி மனசை மாத்தி, என்னை காதலிக்க வைக்கணும், என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல வைக்கனும் போதும்…”
“அப்போ உன் பெத்தவா? இத்தனை நாள் வளர்த்த அவாளுக்கு இதான் மரியாதையா சாகரா ?”
“பின்ன என்ன பண்ண சொல்றேள். இத்தனை வருடம் வளரத்தானு ஒரே காரணத்துக்காக, என் வாழ்க்கைய அவா இஷ்டப்படி கழிக்க சொல்றேளா?அப்போ என் வாழ்க்கை முழுக்க மத்தவா முடிவுகள் மட்டுமே இருக்கும்… என் விருப்பம், என் முடிவுகள் எதுவும் இருக்காது, ஒரு கோழையா வாழ சொல்றேளா என்னை? முடியாது அத்தி நான் எதிர்த்து கல்யாணம் செய்வேன்.. இல்லையா கல்யாணமே செய்துக்க மாட்டேன்…” என மூச்சு வாங்க பேசினான். அவன் சொல்வதும் அவனுக்கு சரியென பட, ” நான் உனக்கு துணையா இருக்கேன் சாகரா எப்பையும், நடக்கறத பார்ப்போம்…” என்று நம்பிக்கை கொடுத்தான்..
கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள், அந்தக் கடிதத்தை சந்தேகிக்காமல் இருக்கவும் முடிவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அக்கடிதம் அவளது கல்லூரி பேராசிரியர் தான் எழுதிக் குடுத்து அனுப்பி வைத்தது .
அதில் குறிப்பிட்ட, விஷயம் மிகவும் முக்கியமானது, அதை நம்பலாமா? வேணாமா? என்றே எண்ணிருந்தாள். அது உண்மை என்றாலும் ‘எதற்கு அவர் நம்மிடம் குடுக்கச் சொல்லி அனுப்ப வேண்டும்..?’ பல கேள்விகளை உள்ளுக்குள் தொடுக்க, கிருஷ்ணன் வந்தார்.
“என்னமா கூப்பிட்டிருந்த?”
“மாமா, இதை படிங்க…”என்று தன் கையிலிருந்த கடிதத்தை, நீட்ட, அவரும் வாங்கிப் படித்தார்.
“என்னமா இது? யார் குடுத்தா?”
“இந்த லெட்டர், சத்திய மூர்த்தி சார் தான் குடுத்து அனுப்பிருக்கார். ஆனால்,
இந்தக் லெட்டரை என்
எங்கிட்ட கொடுக்க சொல்லனும்? இதுல இருக்க விஷயம் உண்மையா ? பொய்யானு குழப்பமா இருக்கு மாமா …! என்ன பண்ண எனக்கே தெரியல ? ஆனா, இந்த லெட்டரை, என்னால அலட்சிய படுத்த முடியல, சே சம் திங் மாமா, என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்றாள் இருமனமாக,
“இப்ப என்ன இது உண்மையா ? பொய்யா தெரியணும் அதானே …! நீ கவலையே படாத, நம்மாட்களை வைத்து பார்க்கச் சொல்றேன். அது உண்மையா இருக்கும் பட்சத்துல அடுத்து என்ன பண்ணலாம் பார்க்கலாம்…” என்றார்.
“சரி மாமா…!” என்றாள்.
வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் உறங்கச் சென்றனர். குளியலறையில் இருந்து வெளிய வந்த நிழலி, அதிதியை பார்க்க, அவளோ புலனத்தின் வழியே வீடியோ காலில் யாருடனோ பேசிட்டு கொண்டு இருந்தாள்.
“அதிதி, இந்த நேரத்துல யார்கிட்ட பேசிட்டு இருக்கா? ” என தன் கழுத்தை துடைத்து கொண்டே கேட்டாள்.
“என் பிரண்டு கிட்ட,…?” என்றாள்.
“பிரண்டா, யாரு? ஏன் இந்த நேரத்தில பேசணும்?”
“ஹீ இஸ் சோ பிசி, இப்போ தான் ஃபிரீயாம். அதான் இந்த டைம்ல பேசுறேன்” அவளை பாராமல் திரையை பார்த்து கூறினாள் அதிதி.
“ஹீ யா? உஹு இஸ் ஹீ…?” அதிதியின் பின் புறமாக அமர்ந்தவள் யாரென பார்க்க, திரையில் சாகரன் தான்.
“ஹேய், இது எப்போல இருந்து நடக்குது? “
“டுடே ஆன்வார்ட்ஸ் பேபி …!” என்றாள்.
“ஓ…”
“எஸ் பேபி, நானும் ஃபயர்பேபியும் பிரண்ட்ஸ்… இனி நாங்க இந்த டைம்ல பேசிக்க போறோம், இட்ஸ் அவர் டைம்…” என்றான் திரையின் வழியே, அதற்கு அதிதி ” ஆம்” என்று தலையசைத்தாள்.
“வாட், அவர் டைம்மா, என்ன அதிதி, இந்த டைம் நீ என் கூட தானே ஸ்பெண்ட் பண்ணுவ? இப்போ என்ன இவன் கூடனு சொல்லுற திஸ் இஸ் நாட் பேர் பேபி…”என்று பொய் கோபம் கொண்டாள்.
“பேபி, பாவம் சாகரன். அவனுக்கு பிரண்ட்டே இல்லையாம், சாகரனோட ஹாட் கார்ன், ரொம்ப வேலை குடுக்குதாம். பேச கூட டைம் குடுக்க மாட்டிக்கிதாம், பாவம் ல அதான் நான் இந்த டைம்ம குடுத்தேன்… நாம் நெக்ஸ்ட் ஒன் ஹார்ல பேசலாம்…” என்று அழகாய் மொழிந்தாள்.
“அதென்ன ஹார்ட் கார்ன், யாரது ?” எனக் கேட்க, அவனோ சொல்லாத என்று சைகை செய்தும் காணாது அவனை மாட்டிவிட்டாள்.
“சாகரனோட பாஸ்…” என்றாள். நிழலி அவனை முறைக்க, “ஈஈ” என சமாளித்தான்.
“ஏர் பேபி, பிரிண்டஸ் நாங்க நெறய பேசுவோம், நீ போய் உன் வேலை பாரு…!” அவளை அனுப்ப முயல, இருவரையும் பார்த்து முறைத்து விட்டு, லேப்டாப்பை எடுத்து அமர்ந்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். தன் வேலையில் ஒரு கண்ணும், இருவர் மேல் ஒரு கண்ணையும் வைத்தவள், அவர்கள் பேசுவதையும் கேட்டுக்கு கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.
அதிதியும் இன்று நடந்ததை ஒண்ணுவிடமால் அவனிடம் சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு கண்கள் சொருக, அவன் நிழயிடம் போனை குடுக்கச் சொன்னான், அவளும் குடுத்து விட்டு படுத்துக் கொண்டாள்
” தூங்காம என்ன பண்ற?”
“அந்தக் கேஸைப் பத்தி தான்பார்த்துட்டு இருக்கேன்…! “
“அப்போ நீ அந்தக் கேஸ் எடுக்க போறீயா?”
“ம்ம்ம்.. உண்மையா இருக்கும் பட்சத்துல எடுத்து தானே ஆகணும். அது நம்ம சார் சொன்ன கேஸ்… அப்படியே விட மனசு இல்ல…” என்றாள்.
“சரி, ஓகே ரொம்ப நேரம் கண் முழிக்காத, அதிதிக்கு துக்கம் வருது போல, நீயும் போய் தூங்கு.” என்றான்.
“ம்ம்… சரி, ஆனா, நீ தூங்காத, அந்த லெட்டர் உனக்கு வாட்ஸ்அப் அனுப்புறேன்… அந்த ஏரியா பத்தின மொத்த விவரமும் எனக்கு மார்னிங் வேணும் புரியுதா?”
“வாட், மார்னிங் வேணுமா? இதெல்லாம் கொடுமை, ஐ சே…!”
“என்ன கொடுமை, நீ தானே அசிஸ்டெண்ட்டா வரணும் அடம்பண்ண, அப்போ இதெல்லாம் பணித்தான் ஆகனும்…” என்று கட்டளையிட்டாள்.
அதிதியோ, “ஓ, அப்போ சாகரனோட, ஹாட் கார்ன் நீ தானா?” என்று சொல்லி சிரிக்க, “ஏதே” என இருவரையும் முறைக்க, அதிதி போர்வையை போர்த்தி கொண்டு படுத்துக் கொள்ள,, அவனோ, “குட் நைட்” என்று வீடியோவை அணைத்து விட்டு சென்றான்.
இருவரும் செயலை கண்டு சிரித்து கொண்டாள்.
காற்று வீசும்..