காற்று 7

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

எனக்கென்ன
எழுதிய
சொல்ல டீ
நீ…!
அதை
பிழையென
மாற்றித்
தந்தாலும்
பிழையதை
மாற்றிக்(வைத்து)
கொள்வேனடீ
என்னோடு…!

நாள் முழுதும் இ(றை)லக்கை(யை) தேடி அலைந்து  களைத்து போன பட்சிகள் கூட்டை வந்தடைய, ஒளித் தரும்  ஒற்றையாழியனும் ஒளி மங்கி மறைய போகும் மாலை வேளையது …!

தாய் சேயென இரு பட்டாம்பூச்சிகளும் சேர்ந்து அம்மாலை வேளையில் புல்வெளியை அலங்கரித்திருந்தனர்
அதிதியோடு விளையாடிக் கொண்டிருந்தாள் அந்த வளர்ந்த குழந்தை நிழலி.

“ஏர் பேபி …! நில்லு ஃபயர் பேபியை ஓட வைக்காத ..!” மூச்சு வாங்க அவள் பின்னால் ஓடினாள் அதிதி. ” ஓ… பயர் பேபி ஃபயாரா ஃபாஸ்ட்டா ஓடி வர வேணாமா? காமான் கேர்ள், ரன் பாஸ்ட் கேட்ச் மீ…!” அவள் முன்னே ஓடினாள் நிழலி.

“நோ, ஐ கான்ட்…! உனக்கு மனசாட்சி  இல்லையா? ஒரு சின்ன பிள்ளைய இப்படி ஓட வைக்கறீயே…! யூ நோ, பேசாம ஹமாம் சோப் விளம்பரத்துக்கு போயிடு நீயெல்லாம்”  என்று புல்தரையில் அமர்ந்து விட்டாள்.

“ஏன் டீ?”

“பின்ன,  அதுல வர மம்மி மாதிரி ஓடுங்கற பிடிங்கற, போ பேபி” என்றாள் சலிப்புடன்.

“அடிப்பாவி…!  அப்படியா இருக்கு நான் சொல்றது?” முகத்தை கோனலாக்கினாள்.

“எஸ் பேபி, ஏன் அந்தம்மா, அந்த பொண்ணை ஓட சொல்லனும்? அப்றம் ஏன் குளிக்கச் சொல்லனும்?  ஃபன்னியா இல்ல”

“ஆக்சுவலி, அந்த ஆட்ல வர மெசேஜ்க்கும் சோப்க்கும் சம்பந்தமே இல்ல பேபி… ஆனாலும்  அவங்க குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு மெசேஜ் கொடுக்கனும் கொடுக்கறாங்க.
அது மட்டுமில்ல ஒரு தாய் தான், தன் மகளுக்கு கரேஜ்(தைரியம்) சொல்லித்தருவாங்க… சோ,  நானும் உனக்கு தைரியத்தை சொல்லித்தரேன்.. ஏன் உன்னை ஓட சொல்றேன் தினமும்?
இப்போ உனக்கு, ஒரு பிரச்சனை வருது, அந்தப் பிரச்சனைய உன்னால ஹாண்டில் பண்ண முடியலன்னா, பர்ஸ்ட்  திங்க ஓடனும் அங்க நிக்கவே கூடாது… உன்னால் எவ்வளவு முடியதோ அவ்வளவு ஓடனும்.

பிரச்சனைன்னா, இங்க, உன்னை யாராவது டீஸ், பேட் டச்,  கிட்னாப்  எக்ஸ்ட்ரா, இந்த மாதிரி  பண்ண வந்தால் நீ ஒடனும்,  சேஃப்பான  ப்ளேஸ்க்கு போகணும்… ” என சொன்னவளை இடைமறித்தவள், ” இப்போ தான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தேன் பேபி .. நீயும் அதே ப்லேடு வேலைய பார்க்காத…!” அவள் சுதாரிக்க முன்னே ஓடி விட்டாள் குட்டி நிழலி.

“அடியே, நான் என்ன ப்லேடு வேலையா பார்க்கறேன்…?” கத்த,  ” ஆமா, பே…!” உள்ள ஓடி விட, அவளோ முகத்தை சுழித்தாள்.

இருவரது சம்பாஷனையை கேட்டு சிரித்துக் கொண்டே வந்தார் கிருஷ்ணன்…
“பாத்திங்களா மாமா, நான் ப்லேடு வேலைப் பார்க்கறேனா… எப்படி கிண்டல் பண்ணிட்டு போறாள் பாருங்க …!”  புகார் செய்தாள்.

“ஹாஹா… அப்போ உன் அம்மா,  உன்னை என்கிட்ட புகார்  செய்தாள். இப்போ நீ?  ஆள் தான் மாறிட்டே இருக்கு பண்ற வேலைகள்  எல்லாம் ஒன்னு தான்” என்றார் ,

இருவரும் கதிரையில் அமர்ந்தனர்,  ” சங்கர், என்னைப் பார்க்க ஆபிஸ்க்கு வந்தார். நானில்லை என்றதும் போயிட்டார்… அப்றம் அந்த கண்டெக்ட்ரோட ரெண்டு கையை எடுத்தாச்சி, அவன் பொண்டாட்டிக்கு பக்கத்திலே வேலையும் வாங்கி கொடுத்தச்சு… ஒகே தானே?”எனவும்

“பார்த்தேன் மாமா… ஏதோ  ஏரியா
தகராறுனு  மாத்தி போட்டிருந்தாங்க பேப்பர்ல…!”

“நீ சொன்னதுனால தான் கையோடு போச்சு, இல்லேன்னா உயிர் போயிருக்கும்…” என்றார் கோபத்தில் ” மாமா, நீங்க ஒரு எம்.டீ… ரௌடி இல்ல… போதும் மாமா, இனி இது போல காரியங்கள்ல இறங்காதீங்க, முக்கியமா எனக்காக, தென்றல் அத்தை, வாசு , நான்  எல்லாருமே பாதிக்க படுவோம்.. எனக்காக பண்ண போய் நீங்க  எதுலயும் மாட்டிக்க வேணாம்… ப்ளீஸ்” எனக் கெஞ்சவும் “சரிடா நீ சொல்லிட்டேல.  இனி செய்ய மாட்டேன். ஆனால் நம்ம குடும்பத்துக்கு ஒண்ணுனா  நிச்சயம் நான் பிராமிஸ மீறிடுவேன்…” என எச்சரித்தார். அவரை கட்டிக் கொண்டாள்.

“அப்றம் இன்னைக்கு என்னாச்சி, சாகரன் வீட்டுக்குப் போனீயே!”

அவளும் அங்கு நடந்ததை சொல்ல, ” அது தான் என் நிழலி, எந்த இடத்துல அவமானப் படுத்தப்பட்டீயோ,, அந்த இடத்துல உன்னை உயர்த்தப் பட வைக்கறது தான்டா உன் ஸ்பெஷலே. லவ் யூ குட்டி மா ” என்று உச்சி நுகர்ந்தார்.

“தேங்கஸ் மாமா, எல்லாம் நீங்களும் அப்பாவும் சொல்லிக் கொடுத்தது தான்.. துவண்டு போன நேரத்துல என்னை மாத்தினது நீங்க தானே …! இதெல்லாம் உங்களை தான் சேரும்… நீங்க  எனக்கு இன்னொரு பிரண்ட அண்ட் அப்பாவும் கூட…!” என்றாள்.

“ஆனால், உன்னை மீட்ட எங்களுக்கு  உன் சிரிப்பை மீட்க முடியல… ஆனா,
  இப்போ இப்போ கொஞ்சம் உன் முகத்துல பார்க்கறேன்… இட் மெ பீ சாகரனா கூட இருக்கலாம் எனிவே ஹாப்பியா இரு… ” என்று அவள் தலையை  அழுத்தி விட்டுப் போனார்.

‘உண்மையா ?’ என்பது போல யோசித்தவளுக்கு அவனது அக்கறையான கோபம் வந்து போனது.

இங்கோ அவனோ காளமேகப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள குளத்தில் கல்லெறிந்த வண்ணம் இருந்தான். அவனையே வெறித்து அமர்ந்திருந்தான் அவனது அத்தி.

“என் வயசென்ன?  இவன் வயசென்ன?  சின்ன பையனோட எல்லாம் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறதே விதியோட விளையாட்டா போச்சி, இவன் வந்ததுல இருந்து என் ஆம்படையாள்  கூட சரியா கொஞ்சி பேசிக் கூட முடியல, ஒரு மைத்துனன வச்சிண்டு நான் படுற பாடு இருக்கே நாராயணா!! இவண்ட இருந்து விமோச்சனம் குடுப்பா…!” கோயில் விமானத்தை பார்த்து  கும்பிட்டான்.

“ஏன் அத்தி? எப்படி நிழலிய, வீட்ல இருக்கவா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்…?”

“நேக்கு எப்படிசாகரா தெரியும், நானே இடையில் வந்தவன் தானே…?என்கிட்ட கேட்டா?”

“உங்க பொண்டாட்டிக்கு தெரிந்திருக்குமோன்னோ, கேட்டுச் சொல்லுங்கோ…!”எனக் கட்டளை போட்டான்.

“ஏன் சார்வால்  நீங்க கேக்கறது? அதெல்லாம் செய்திடாத, என்னை மாட்டி விட்டு,  மவனே நீ குளிர்காயனும். நன்னா இருக்குமோய் உன் எண்ணம்” என அலுத்துகொண்டான்.

“என்ன அத்தி இப்படி பேசுறேள்?  எனக்கு உம்ம விட்டா யாருக்கு இருக்கா சொல்லும் ?”முகத்தை  
பாவமாக வைக்க,

“இருக்கா, உன் தோப்பனார் இருக்கா, உன் அம்மா இருக்கா, உன் அண்ணன் இருக்கா, அக்கா இரண்டு பேர் இருக்கா, மன்னியும் வேற இருக்கா, அவா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க, சும்மா சும்மா அத்தி அத்தி ஒண்ணாங்கிளாஸ் பையன் போல பின்னாடி சுத்தி என்னை அடிவாங்க வைக்கலாம் பார்க்காத அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டான் இந்த சாரதி,  தெரிஞ்சுக்கோ…! ” தன் வீக்னஸையும் வீராப்பாக சொன்னான்.

“சரி அத விடுங்கோ, எப்படி நிழலிய கரெட் பண்றது அதை சொல்லுங்கோ…!” அவன் சொன்னத்தை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவன் போல மேலும் அவனை கூட்டு சேர்க்கறதிலே குறியாக இருந்தான்.

“அதானே, அங்க புத்தினு ஒன்னு இருந்தால் தானே தெளியிறதுக்கு… இவனை என்ன செய்றது நாராயணா?” டேய் சாகரா, இந்தக் காதல் , கல்யாணம் நம்மாத்துக்கு ஒத்து வராது. பேசாம நீ சந்தான லட்சுமிய கட்டிண்டு வாழுடா அம்பி. அது தான் நல்லதுடா உனக்கும் நம்ம குடும்பத்துல இருக்கறவாளுக்கும் …!” சாரதி முடிக்க,

சாகரனுக்கு கோபம் பலியாக வந்தது கல்லை வேகமாக குளத்தில் எறிந்தவன் அங்குமிங்கும் நடந்தான்.

‘ஆத்தி, விட்டா நம்மலையே தூக்கி போட்டிருவான் போல, பீ கேர்புள் சாரதி!” தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

“இந்த லோகத்துல பிடிச்சவாளோட, பிடிச்ச வாழ்கையை வாழ கூட உரிமை இல்லையா…?  மனுசாளா பொறந்துட்டு  தன் விருப்படி வாழலேன்னா  எதுக்கு இந்த வாழ்க்கை…?” என்று பெரிய பெரிய வசனங்களைப் பேசினான் சாகரன்.

“இதை ஏன்டா அம்பி, என்கிட்ட கேக்கற? உன்  தோப்பனார் கிட்ட கேளு”

“கேப்பேன் அத்தி, கண்டிப்பா கேப்பேன்.
ஆனால் அதுக்கு முன்னாடி நிழலியோட மனசை மாத்தனும், நான் அவக்கூடயே இருந்தால் தான் முடியும் அதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ” மீண்டும் அவனிடமே வந்தான்.

“அவா கூடயே இருக்கனும்ன்னா நீ அவாளுக்கு அசிஸ்டெண்ட்டா இருக்கணும்…”என்று முணங்கினான்.

“என்ன அத்தி சொன்னேள்?” என நெருங்கி வந்து கேட்டான்.
“அவா கூடயே இருக்கனும்ன்னா நீ அவாளுக்கு அசிஸ்டெண்ட்டா
இருக்கணும் சொன்னேன்” என்றான் கடுப்பில்,

“ஓ…. அத்தி! தேங்கி யூ சோ மச்” கன்னத்தில் முத்தம் வைத்தான். ” ஐய்யா…!” கன்னத்தை துடைத்து கொண்டான்.

“கிரேட் ஐடியா அத்தி! நாளைக்கே இதை இம்பிளிமெண்ட் பண்றேன்” என்று அவன் குதித்து கொண்டே செல்ல, ”  ஏதே…!” தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

மறுநாள் வரை காத்திருந்தவன், வெள்ளை சட்டையும் கருப்பு கால்சட்டையும்  அணிந்து டிப்டாப்பாக தயாரானவன் தன் தாயார் காலில் விழுந்து வணங்கி விட்டுச் சென்றான்.

நீதி மன்றத்தில், அவள் முன்னே நின்று அவளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தான்.

“யோவ் ஐயங்கார், என்ன இது? ஒயிட் சேர்ட் பிளாக் பேண்ட் எதுக்கு ?

“நானும் லாயர் ஆகலாம் முடிவு பண்ணிட்டேன்… ” என்றான் கைகளை தன்னிரு கால்சட்டைப்பையில் வைத்துக் கொண்டு.

“ரியலி…!!” விழிகள் தெரித்துவிழுமளவு விரித்து கேட்டாள்.”எஸ்… நானும், கிரேட் அட்வகேட் திரு. சாகரன்னு மத்தவங்க சொல்லும் படி ஒரு பெரிய வக்கீலா வரப் போறேன்” என்று கௌரவம் படம் சிவாஜியை போல உடல் பாவனையில் சொல்ல,

உதட்டை பிதுக்கியவள், “யார் கிட்ட அசிஸ்டெண்ட்டா
சேர போற? எதுவும் ஐடியா இருக்கா? நான் வேணா ரெக்கமெண்ட் பண்ணட்டுமா? “ஆர்வமாக கேட்டாள்.

“நோ பேபி, அதுக்கெல்லாம் வேலையே இல்ல…”என்றான். ” பின்ன ஆல்ரேடி  சேர்ந்துட்டீயா? யாரு அந்த லாயர்…?”

“உப்.. மூச்சு விடேன் டீ, ஒன்னு ஒன்னா கேட்டா பதில் சொல்ல மாட்டேனா? அடிகிட்டே போற, இந்தா இதை குடி” என அவள் கையில் திணிக்க, அவளும் ஒரு மிடறு குடித்தவள், அவன் சொன்ன பதிலைக் கேட்டு வெளியே துப்பி விட்டாள்.

“ஹேய் என்ன சொல்லிட்டேன் இப்போ  உனக்கு புரையேறுது” என்று அவள் தலையை தட்டினான். அவன் கையை தட்டிவிட்டவள், “கம் அகெய்ன், என்ன சொன்ன நீ திரும்ப சொல்லு”  என்றாள்.

“நான்,  உன்கிட்ட அசிஸ்டெண்ட்டா
ஒர்க் பண்ணலாம் இருக்கேன்”

“வாட்? யோவ் ஐயங்கார் என்ன விளையாடுறீயா?”

“விளையாடுறேனா,  ஐ ம் சீரியஸ் பேபி. நான் உன்கிட்ட இன்டென்ஷிப் பண்ணலாம்  முடிவு பண்ணிட்டேன்… ப்ளீஸ் என்னை அக்ஸப்ட் பண்ணிக்கோபேபி! “என்றான்.

“எதுக்கு இந்த திடீர் முடிவு?” என இன்னமும் அவனை நம்பாமல் கேட்டாள்.

“உன்னை பார்த்ததும் எனக்கும் லாயர் ஆகனும் ஆசை வந்துடுத்து. உனக்கு தான் தெரியுமே எனக்கு லாயார் ஆகத்தான் பிடிக்கும். சோ, முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

“ஓ… “

“ம்ம்… இன்னைலிருந்து ஜாயின் பண்ணிக்கவா, இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் என் அம்மா சொன்னா …!” என்றவனை வெட்டவா ? குத்தவா ? என்பது போல பார்த்தவள்,

“சாகரா, நான் உனக்கு எக்ஸ்பிரின்ஸான லாயர் கிட்ட ரெக்கமெண்ட் பண்றேன். வேணும்ன்னா கார்த்திக் சார் கிட்ட பேசுறேன், அவர் கிட்ட இன்டென்ஷிப் பண்னேன்… ” சிறு பிள்ளைக்கு கூறுவது போல கூறினாள்.

” முடியாது” என்பது போல இட வலப் பக்கமாய் தலையை ஆட்டினான்.

“நான் உனக்கு ஒரு நல்ல லாயரா ரெக்கமெண்ட் பண்றேன் சாகரா …!”எனக் கெஞ்சினாள். ” அப்போ நீ நல்ல லாயர் இல்லையா பேபி?” என நமட்டுச் சிரிப்புடன் கேட்டு வைத்தான்.

“ஐயங்காரர்ர்ர்ர்” பல்லைக் கடித்தாள்.

“இங்க பாரு டீ, எனக்கு உன் கிட்ட அசிஸ்டெண்ட்டா
இருக்கத் தான் பிடிக்கும். சோ, ஒழுங்கா என்னை  அசிஸ்டெண்ட்டா எதுக்கற டாட்” என்றான்.

“முட்டாளா ஐயங்கார் நீ, வயசு என்ன ஆகரது,  இப்போ  நீ இன்டென்ஷிப் பண்ணி, லாயர் ஆகி, கேஸ பார்க்கறதுக்குள்ள  பாதி  கிழவனாயிடுவ, கேனடால, நீ இன்ஜினீயர் வேலை தானே பார்த்த மாமா கிட்ட சொல்லி உனக்கு அங்க  வேலை வாங்கித் தரென் அந்த வேலைய பாரு சாகரா” என்றவளை முறைத்தவன்,

“எங்க, நான் உனக்கு போட்டியா வந்திடுவேனோ, பொறாமை டீ உனக்கு..!!”

“ம்கூம்க்கும்” நொடித்துக் கொண்டாள்.

” நீ  மட்டும் என்னை அசிஸ்டெண்ட்டா
ஏத்துக்கல வாசல்ல உட்கார்ந்து  போராட்டம் பண்ணுவேன், உண்ணா விரதம் இருப்பேன் “என்று மிரட்டினான்.

“ஐயோ!!! ஐயங்கார் ஏற்கெனவே என்கிட்ட ஒருத்தி அசிஸ்டெண்ட்டா
வேலை பார்க்கறா, நீ வேற லாயரை பாறேன்” எனவும் யோசனை செய்தவன்,

“அந்த பொண்ண,  ஒரு நல்ல லாயர் கிட்ட ரெக்கமெண்ட் பண்ணிடு சிம்பிள்” என்று தோளை குலுக்கியவன், அவளது முறைப்பை அசட்டை செய்து நாற்காலில் சகவாசமாக, விசலடித்த படி அமர்ந்தான். அவளும் தலையில் கைவைத்த படி உட்கார்ந்து விட்டாள்.

“நானே கேஸ் இல்லாம காத்து வாங்கறேன், இதுல நீ வேறயாடா, ப்ளீஸ் புரிஞ்சுகோ சாகரா…!”

“சேர்ந்து காத்து வாங்குவோம் பேபி, இப்போ என்ன ?” எனவும் அவனை வெறித்தவள் “சரி, நீ, எனக்கு அசிஸ்டெண்ட்டா
ஜாயின் பண்ண போறது உன் தோப்பனாருக்கு தெரியுமா?”  இதுவரைக்கும் அமர்த்தலாக அமர்ந்திருந்தவன் தோப்பனார் என்றதும் நேராக அமர்ந்தான்.

“சொல்லு சாகரா, தெரியுமா அவங்களுக்கு?”

“அ… அது வந்து…!” அவளை பாராமல் திணறினான்.

” உன் தோப்பனாரோட வா சாகரா, இல்லை அவரோட கையெழுத்தோட வா, அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்கறேன்” என்றவளை விழிப்பிதுங்க பார்த்தான், நமட்டுச் சிரிப்புடன் அவனை பார்த்து அமரத்தலாக அமர்ந்தாள்.

காற்று  வீசும்