காற்று 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கணக்க
கணக்க
என்னுள்
காதலடீ
வழியெங்கும்
சுமக்கையில்.
சுவாசமென்னை
விட்டு
விட்டுச்
செல்கிறதடீ
வந்து
என்னோடு
கலந்து
விட டீ
என்னுயிரானவளே…!
கல்யாணக் கலை கொண்டிருந்த வீடு கலையற்று கிடக்க, நடக்க இருந்த நிச்சயம் நின்றுவிட்டது. உற்றார் உறவினர்கள் பே(ஏ)சி விட்டுச் சென்றனர். அவமானமாக, சங்கரும் வினோதினியும் முகப்புக் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
சற்று முன் தான் ஆதர்ஷனுக்கும் இதழினிக்கும் நிச்சயம் நடக்க இருந்தது… ஆனால், இதழினிக்கு வந்த கடிதத்தால் இதழினியும் அவளது குடும்பமும் ஆதர்ஷனை வேண்டாம் என்று மறுத்து விட்டுச் சென்றனர்.
அந்தக் கடிதத்தில், ஆதர்ஷனின் மருத்துவ அறிக்கை இருந்தது. அதை பிரிச்சு படித்த இதழினியின் தந்தை ஆடித்தான் போனார்.
“என்னங்க இது? உங்க பையனுக்கு குழந்தை பெத்துக்க தகுதி இல்லைனு போட்டிருக்கு…” என்று அறிக்கையை காட்டி கேட்க, மூவரும் முழித்தனர்.
“அதெல்லாம் பொய் சம்மந்தி. யாரோ என் மகனுக்கு எதிராக பொய்யான அறிக்கைய அனுப்பி வச்சிருக்காங்க, இதெல்லாம் உண்மை இல்ல…” அவரிடம் வினோதினி கெஞ்ச, சங்கர் அமைதியாக நின்றார்.
“மாமா, எனக்கு வேண்டாதவங்க தான் யாரோ இப்படி பண்ணிருக்கணும்.. மத்தப்படி என்னால குழந்தை பெத்துக்க முடியும்…” ஆதர்ஷனும் எடுத்து சொல்ல, அறிக்கையில் பரிந்துரையாளர் கீழிருந்த மருத்துவரின் பெயரை கண்டதும் அவரை அலைபேசியில் அழைத்து உண்மையை கேட்க,
அவனுக்கு முன்னே நடந்த, வெக்சிடோமி (குடும்பக் கட்டுபாடு) ஆப்ரேஷனிலிருந்து அவனுக்கு நடந்த விபத்தும் பின் அதனால் அவன் முற்றிலுமாக இழந்த ஆண்மை அனைத்தையும் கூறி முடிக்க, மீண்டும் அவருக்கு அதிர்ச்சி.
“ஏன், நீங்க குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிங்க சொல்லுங்க ஆதர்ஷன்?”
“இல்ல… இல்ல.. அவ… அவங்க.. பொ.. பொய்… சொல்றாங்க. நான் அந்த ஆப்ரேஷன் எல்லாம் ப..
பண்ணிக்கல” வார்த்தை திக்க, அவன் முகத்தில் அவர் சொன்னதெல்லாம் உண்மை எனக் காட்டியது.
“இந்த டாக்டர் என் பிரண்ட் தான். அவர் பொய் சொல்ல மாட்டார்.” என்றதும் முகம் கறுத்து போனது அவனுக்கு.
“சோ, இதெல்லாம் உண்மையை அப்படி தானே? எல்லாத்தையும் மறைச்சிட்டு என் பொண்ணை கல்யாணம் பண்ண திட்டம் போட்டு இருக்கீங்க மூணு பேரும்?”மூவரையும் பார்த்து கேட்டார்.
“இல்ல சம்மந்தி திட்டம் போடல, எப்படியாவது என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் தான். கல்யாணத்துக்கு அப்றம் எல்லாம் சரியாகிடும் நம்பி தான் நாங்க சொல்லல” என்று சொல்லி வினோதினி தலை குனிய,
“என்ன சரியாகிடும், கல்யாணமானதுக்கு அப்றம் உங்க புள்ளைக்கு ஆண்மை வந்திடுமா? அது எப்படி வரும்?” என நக்கல் கலந்து கேட்க,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மூவரின் முகமும் வெளிறி போனது, “என் பொண்ண ஒரு ஆண்மை இல்லாதவனுக்கு கொடுத்து அவ வாழ்க்கைய நான் அழிக்க மாட்டேன்? ஒரு ஆம்பளைக்கு தான் என் பொண்ண கொடுப்பேன் தவிர, ***** கொடுக்க மாட்டேன்” என்று அவர் மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அவர் சொன்ன வார்த்தை, மேலும் அவனை வெறியாக்க, வேகமாக, அறைக்கு விரைந்தவன் தன் கோபத்தை உயிரற்ற பொருட்களிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
‘இதற்கெல்லாம் காரணம் நிழலியும் அவளது மாமா கிருஷ்ணனும் தான்’ என்று அவர்கள் மேல் கொலவெறி வந்தது.
ஆதர்ஷனிடம், நிழலி கருவுற்றதை சொல்லும் போதும் அவன் காட்டிய உதாசீனமும், மற்றவர்கள் முன் அவளை அவமானம் படுத்திதெல்லாம் இன்றவன் அனுபவிக்கிறான் அதுவும் அவளை விட அதிகமாகவே அனுபவிக்கிறான்.
“நிழலிலிலி….!” என பைத்தியக்காரனை போல கத்தினான்.
“உன்னால இந்த ஜென்மத்துல எந்த பொண்ணையும் தொடவே முடியாது. தொட என்ன, கிட்ட நெருங்க கூட முடியாது. பேசாம, நீ சாமியாரா போ?” என்றவள் யோசிப்பது போல பாவனை, “பச்… போலி சாமியாருக்கு கூட நீ லாய்க்கு இல்லைப்பா…! வேணும்ன்னா குழந்தை வச்சிருக்கற சிங்கிள் மதரா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ…! இருந்தாலும் அவங்களுமே மனசு வச்சா தான் உனக்கு கல்யாணம். குழந்தைக்கு இனிஷியல் கேட்டு யாராவது விளம்பரம் கொடுத்தால், மறக்காமல் அப்ரோஜ் பண்ணு, அப்போவது உனக்கு ஒரு லைஃப்
கிடைக்குதான்னு பார்ப்போம்…” என அவள் கேலி செய்த வார்த்தைகள் செவியில் மட்டுமல்ல ஒவ்வொரு பாகத்திலும் ஒலிப்பதுபோல இருந்தன.
அதைவிட , அவளை ஒன்னும் செய்ய முடியாது கையறுநிலையில் இருப்பது தான், தன் ஆண்மைக்கே இழுக்காக எண்ணினான்.
“என்னங்க எல்லாம் கூடுற நேரத்துல இப்படி ஆயிருச்சு? நம்ம பையனுக்கு கல்யாணமே நடக்காதாங்க?” வினோதினி அழுக,
“நீ பெத்த உத்தமபுத்திரனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது. ஒரு பொண்ணை காதல்ன்ற பேருல ஏமாத்தி புள்ளைய குடுத்து, அது என் குழந்தை இல்லைனு சொன்னானே, அந்தப் பாவம் தான் ஆட்டி வைக்குது. அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிருந்தா, அவனும் நல்லா இருந்திருப்பான், சொத்தும் கிடைச்சிருக்கும். பேராசைப் பட்டீங்கள ஆத்தாளும் மகனும் அனுபவிங்க”அவரும் உள்ளே சென்று விட, காலம் கடந்து பின் மகனை எண்ணி கண்ணீர் வடித்தார் அந்த உத்தமபுத்திரரின் தாய்.
‘அடிப்பாவி’ என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாலும் அவளது தைரியம் , திமிரை எண்ணி வியந்தான்.
“வெக்சிடோமி(குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன்) பண்ணது மட்டும் தான், நான் அவனுக்கு கொடுத்த தண்டனை. மே பீ அதை கொஞ்ச நாள்ல ஆப்ரேஷன் பண்ணி ரீமூவ் பண்ணிருக்கலாம், மூதேவி உயிருக்கு பயந்து பண்ணல . சரி அப்பையாவது ஒழுங்கா இருந்தானா? குடிச்சு கார் ஓட்டி, ஆக்சிடேன்ட் பண்ணி அவனோட லைப் அவனே ஸ்பாயில் பண்ணிக்கிட்டான். இதுல மை பார்ட் ஹாஃப் தான்…” பாவம் போல முகத்தை வைத்து சொல்ல,
அவன் சிரித்து விட்டான்.
“மார்டன் காளியே…!” என்று கும்பிடு போட இப்போது சிரிப்பது அவள் முறையானது… பின் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவன் பின் பக்கமாக சென்று தலைக்கு குளித்து கொண்டிருந்தான் …கண்ணம்மா , சங்கரன் வெண்ணிலா மூவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர். குளித்து வேட்டியை மட்டும் அணிந்தவன், பூஜை அறைக்குள் சென்று கடவுளை வணங்கி விட்டு வந்தவனை தடுத்த கண்ணம்மா, அவனை அமர வைத்து தலையை துவட்டி விட்டார்.
“நோக்கு என்ன ஆச்சுடா கண்ணா, இந்த நேரத்துல ஏன் குளிச்சுட்டு வந்த?” அவன் தலையில் உள்ள ஈரத்தை உலர்த்தியவாறே, கேட்ட தாயை கட்டிக் கொண்டவன், “பெண் பாவத்த போக்க என்ன பரிகாரம் செய்யணும்மா?” சம்மந்தம் இல்லாமல் கேட்டு வைத்தான்.
“ஏன்டா கண்ணா கேக்கற? யாருக்கு பரிகாரம் செய்யணும்?” மீண்டும் கேள்விகளை அடுக்க, ” மா, சொல்லும்மா”
“பைரவரை நல்லா சேவிஞ்சுண்டு விளக்கு போட்டுட்டு, பாதிக்கப் பட்ட பெண்ணோட வயசுல இருக்க பொண்ணுக்கு சேலை பூ வளையல் வாங்கி கொடுக்கணும் கண்ணா, அப்படி பண்ணா, சாபம், பாவம் எல்லாம் நீங்கும் பெரியவா சொல்லுவா! “என்றார்.
சற்று யோசித்தவனின் மனசாட்சி” ஓ, சார் பரிகாரம் செஞ்சா மட்டும் எல்லாம் மாறிடுமா? அவ வாழ்க்கை
பழைய படி மாறிடுமா என்ன? ஒரு குழந்தைய வச்சுண்டு, அவ தனியா கஷ்டப்பட காரணம் நீ தான் . தகுந்த நேரத்தில நீ சொல்லாத உண்மை இன்னைக்கு உன்னையே குத்திக் கொல்ல, தினமும் உன்னை
சாகடிக்க ஆயுதமாக நிக்குது. பரிகாரம் எல்லாம் யாரை திருப்தி பண்ண? உன்னையா? என்னையா?” எனக் கேட்க பதலில்லாமல் எழுந்த அறைக்கு விரைந்தான்.
“என்னாச்சு இவனுக்கு காத்தால நல்லா தானே இருந்தான்…”சங்கரன் புலம்பவும் சாரதி வரவும் சரியாக இருக்க, ” சாரதி, கண்ணனுக்கு என்னாச்சு ? நீங்களும் அவனும் தானே சேர்ந்து போனேள். அவன் ஏதேதோ கேள்வி கேட்டுண்டு இருக்கான்… எங்களுக்கு விசித்திரமா இருக்கு அவன் பண்றது “
“அத்திம்பேர், பிரண்ட பார்க்கப் போறேன் நீங்க முன்னாடி போங்கோ சொன்னான். யாரை பார்த்தான் நேக்கு தெரியாது.இருங்கோ கேக்குறேன்” என்று சாரதி அவனது அறைக்கு சென்றான்.
மெத்தையில் கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு சுவரை வெறித்து அமர்ந்திருந்தான்.
” சாகரா, நோக்கு என்னாச்சி? அந்தப் பொண்ணோட எதுவும் பிரச்சனையா? மறுபடியும் ரெண்டு பேரும் சண்டை போட்டேளா?”
“இல்லை”என்று தலையை அசைத்தவன் உண்மையை அனைத்தையும் கூறினான்.
“சாகரா… ! ” வாயடைத்து போனான் சாரதி .”அவளை இப்படி பார்க்க மனசு பாரமாக இருக்கு. இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணம் நினைக்கும் போது மனசாட்சி கொல்லுது அத்தி! ” கண்ணீர் வடித்தான்.
” அப்போ நோக்கு அவன் கெட்டவன் தெரியுமா சாகரா?” மௌனத்தை மட்டும் பதிலளிக்க, ” நீ மட்டும் உண்மைய சொல்லிருந்தால், அந்தப் பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காது சாகரா…!” எனவும்.
“தெரியும் அத்தி , ஆனா அந்த இடத்துல ஆதாரம் இல்லாமல் எதையும் அவகிட்ட சொல்ல முடியல என்னால. காதல், அவ, கண்ணை மறஞ்சுண்டு இருந்தது. அப்படி நல்லவன் போல நடிச்சு அவளை ஏமாத்திருக்கான் பாவி! அன்னைக்கு மட்டும் அவளை தனியா விட்டுட்டு போகாம இருந்திருந்தால் கண்டிப்பா இந்நேரம் நல்லா இருந்திருப்பா அத்தி! “
“இப்போ பேசி, புலம்பி ஒரு ப்ரோஜனம் இல்லை சாகரா ! முடிஞ்சத நினைச்சு வருத்தப்படுறதுனால எதுவும் மாறிடாது. அதுனால் அதை நினைச்சு வருத்தப்படாம, அடுத்து என்ன பண்ணலாம் யோசி சாகரா!” தோழனாய் அறிவுரை சொல்ல, ” அத்தி, நிழலி எனக்கு கிடைப்பாளா? ” எனக் கேட்டு குண்டை தூக்கிப் போட, ” சாகரா, இப்பையும் அந்தப் பொண்ண காதலிக்கறீயா?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என்னால அவளை மறக்க முடியல அத்தி , எனக்கு நிழலி கூட வாழனும்” எனச் சிறு குழந்தையாய் கேட்பவனிடம் ‘ என்னத்த சொல்ல ‘ என்பது போல பார்த்தவன் ” நாம ப்யூர் பிராமின்ஸ் அவா, நான் பிராமின்ஸ் எப்படி சாகரா? மாமா வை நினைச்சி பார்த்தீயா?
அதை விடு, அந்தப் பொண்ணு உன்னை
ஏத்துக்குமா? இதெல்லாம் நடக்கற காரியமா? “
“பள்ளி பருவத்துல இருந்து காதலிக்கறேன் அத்தி, அவளை மறக்க சொல்றேளா? என்னால முடியாது. கண்ண மூடினா அவளோடு வாழ்ற வாழ்க்கை தான் கனவா வருது, தூக்கம் இல்லாமல் பாதி ராத்திரி அவளை நினைச்சிண்டே கழிச்சிண்டு இருக்கேன். முடியல அத்தி, விமோசனம் வேணும் எனக்கு…!” என்று அழுக,
பொம்மையைக் கேட்டு அழுகும் குழந்தையை கூட சமாதானம் செய்திடலாம் … காதலைக் கேட்டு அழுகும் இந்தக் குழந்தையிடம் என்ன சொல்ல, உண்மையைச் சொல்லி மேலும் ரணத்தைக் கொடுக்கவா? இல்லை பொய்யென்னும் தற்காலிக சமாதானம் போதுமா, விவரமறியா குழந்தை இல்லையே இவன், இருந்தும் அவளை கேட்டு அடம்பிடிக்கும் இவனை என்ன சொல்ல… ? சமாதானம் செய்ய வார்த்தைகளின்றி தவித்து போனான் சாரதி.
“எனக்கு கொஞ்சம் தனிமை வேணும் அத்தி!” எனக் கேட்கவும் சாரதி வெளியே சென்று அனைவரிடமும் பொய்யுரைத்து சமாளித்தான்.
இங்கோ கிருஷ்ணனின் அருகே அமர்ந்த நிழலி, தன் தாயின் செயலில் கண்ட மாற்றத்தை முறுவலுடன் பார்த்திருந்தாள்.
“அக்கா, ரொம்ப ஹாப்பியா இருக்க போல, வித்தியாசமா தெரியிற நீ, யாராவது நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாங்களா? ” சரியாக தமக்கையின் முகப்பாவங்களை கணித்து கேட்டார்.
“சூப்பர் மாமா, செம கெஸ்ஸிங். இன்னைக்கு என் பிரண்ட் சாகரன் வந்திருந்தான்.. ரெண்டு பேரும் ஏதோ பேசிட்டு இருந்தாங்க… ஏதோ பெரிய திட்டம் எல்லாம் போட்டிருக்காங்க போல மாமா…!”பானுமதியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு நிழலி சொல்ல,
“அப்படியக்கா…!” கிருஷ்ணனும் கேலியாக கேட்டு வைக்க, இருவரையும் பார்த்து முறைத்து வைத்தார்.
“ஆனா, என்கிட்ட எந்த திட்டமும் செல்லு படியாகாதுனு உங்களுக்கு தெரியும் தானே மா, அதை உங்க பாட்னர் கிட்ட க்ளியரா சொல்லிடுங்க, பாவம் ரொம்ப மெனக்கெட போறான்…” மீண்டும் நக்கலாக சொல்ல, அவரோ வாயை விடுவேன் வார்த்தையை விடுவேன் என்று அமர்ந்திருந்தார். இருவரும் சிரித்து கொண்டனர்.
“இதுக்கு தான் அத்த, அப்பவே உன் பொண்ணை நான் கட்டிக்கிறேன் சொன்னேன். கேட்டியா நீ? இப்ப பாரு ரெண்டும் உன்னைய கிண்டல் பண்ணுதுங்க…” அவருக்கு துணையாக வந்தான் வாசுதேவ்.
“என்னடா பண்ண சொல்ற ? கொஞ்சம் முன்னாடி பொறந்து இருக்கக் கூடாதா? இவளை உனக்கே கட்டி கொடுத்திருப்பேன்… இந்த கேலி பேச்சை எல்லாம் கேட்டுருப்பேனா மருமகனே…!”
“இப்பையும் ஒன்னும் கெட்டு போகல அத்த, அவளை நானே கட்டிக்கிறேன்…நீ ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு”
“ஹலோ மிஸ்டர் வாசுதேவ். பெர்மிஷன் அங்க கேட்டு அவங்களையா கல்யாணம் பண்ணிக்க போறீங்க? பெர்மிஷன் என் கிட்ட கேட்கணும் என்னை கட்டிக்க…” எனவும்.
“சரி சொல்லு கட்டிக்கிறீயா?”
“ஒ கட்டிக்கிறேனே…! ” என்று அவனை செல்லமாக அணைத்தாள். ” ஏ.. பக்கி இந்தக் கட்டிக்கிறது இல்ல… கல்யாணம் பண்ணிக்கிறது…” அவள் அணைப்பில் இருந்தே கூற, அவனது கேசத்தை கலைத்தவள், “அதுக்கு நீ இன்னும் வளரனும் தம்பி” என்றாள்.
“போ டீ” கேசத்தை மீண்டும் சரி செய்தான்.
“ஏர்பேபி…!”என கத்திக் கொண்டே அதிதி வர, அவள் பின்னே மிருதுளாவும் வந்தாள்.
“ஏர்பேபி, இந்த மிரு மேல நீ கேஸ் போட்டே ஆகணும் . என்னை வச்சு வீடியோ எடுத்து இனஸ்டால போட்டு லைக்ஸ் வாங்கறா? இவளை என்னான்னு கேளு…!” என்று மாட்டி விட்டாள்.
“ஷ்ஷபா, உன் முகத்துக்கு லைக்குஸ் வரலனு ஃபயர் பேபி ஃபேஸ் யூஸ். பண்றீயா டீ நீ,
சீனிமால ஜான்ஸ் கிடைக்க என்னென்ன தான் செய்வீங்களோ…!”என்று தலையில் அடித்துக் கொண்டான் வாசு.
“உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன். வீடியோ எடு, ஆனால் பப்ளிக்கா போடாதனு. உன் பியூசருக்கு நல்லது இல்ல மிருமா”
“அவ, எங்க அவளையா வீடியோ எடுத்து போடுறா? என்னல டான்ஸ் ஆட சொல்லி வீடியோ எடுத்து போடுறா, அதான் இப்போ ட்ரெண்டாம்… பாரு என்ன என்ன பண்ணி வச்சிருக்கான்னு… ” என்றவளை அனைவரும் பார்க்க,
சமீபத்தில் வந்த பரம சுந்தரி பாட்டுக்கு, ஆடும் நடிகையை போல அதிதியை அலங்கரித்திருந்தாள், அவளை பார்த்து
அனைவரும் சிரித்தனர்.
“என்ன சிரிக்கற நீ, அவ மேல கேஸ் போடு பேபி…!”
“கேஸ்ஸா போடலாமே, ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவாகுமே பேபி…” மகளிடம் வக்கீலாக பேசினாள் நிழலி.
“என் சேவிங்க்ஸ் எல்லாம் தரேன்… இவளை ஜெயில்ல போடு…!”
“அப்போ நானும் என் சேவிங்க்ஸ் கொடுக்கறேன். அவளை விட அதிகமாகவே தரேன் எனக்கு முன் ஜாமீன் எடுத்துவை அக்கா…!” என்றாள் அதிதியை கேலியாக பார்த்து.
அதிதி, நிழலியை பார்க்க, அவளோ உதட்டை வளைத்து மிருதுளா பக்கம் சாய்ந்தாள்.
அவளை நெருங்கி முத்தம் கொடுத்து “இது போதுமா இன்னும் வேணுமா பேபி?” முத்தம் கொடுத்து பேரம் பேசினாள் குட்டி.
“அப்போ நானும் கொடுப்பேன்” மிருதுளாவும் முத்தம் கொடுக்க…” இருவரும் போட்டி போட்டு கொஞ்சுவதில் நெகிழ்ந்தாள் நிழலி.
பிறந்த வீட்டு உறவுகளோடு நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லாமல் இருப்பவளை புகுந்த வீட்டில் அனைத்தையும் பறித்து சிறை அடைப்பது சரியா?
மறுநாள் தன் காரில் தான் திருமோகூருக்கு வந்தாள். சாகரன் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்க வந்தவளை வரவேற்க சாரதியும் சாகரானும் வாயிலில் நின்றனர். வந்தவளோ உள்ளே வர மறுத்தாள். தன் உடலை இறுக்கிக் கொண்டு நின்றவளைக் கண்டு புரியாது விழித்தனர் இருவரும். அனைவரும் அவளை உள்ளே அழைக்க, உள்ளே வர மறுத்து நின்றாள். கண்ணம்மா தயங்கிவாறு அவளைப் பார்க்க, வரதராஜனோ நிழலியைக் கண்டு அதிர்ந்தார்.
காற்று வீசும்,