காற்று 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மாசற்ற
உன்னை
கலங்கம்
என்பேனா
இடருகளால்
கலங்கிப்
போனாலும்
என்றும்
நீயென்
தாராவணியே(காற்றே)!
நிழலியின் முகத்தை மினி ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போலிருந்த அதிதியின் குட்டி வதனத்தில் கோபமென்னும் முகமூடியை அணிந்து நின்றிருந்தாள் அக்குட்டி தேவதை.
அவனுக்கு ஆச்சர்யமும் குழப்பமும் பாட்னி ஜூவாலஜி போல ஒரு சேர இருந்தன.
ப்ரின்சிப்பால் அழைத்ததால் தான் நிழலி பள்ளிக்கு விரைந்தாள். இருவரும் அவர் முன் நின்றனர்.
‘இந்த முறை என்ன பண்ணி வச்சிருக்காளோ…!’ உள்ளே பதற்றம் எழுந்தாலும் தன் மகள் தவறு செய்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் விறைப்பாக நின்றாள் நிழலி. அதே போல, தான் செய்ததில் தவறில்லை என்பது போலவும் தனக்கு எதிரே இருந்தவனை பொலக்கும் எண்ணத்தில் தான் நின்றிருந்தாள் சின்ன நிழலி.
“மிஸ். நிழலி இங்க கொஞ்சம் பாருங்க…” என்று தன் பக்கம் இருப்பவனின் கையிலிருந்த கட்டை காண்பித்தார். இருவரும் அவனையும் அவனது கட்டையும் தான் பார்த்தனர்.
“ஷார்ப் பண்ண பென்சில வச்சு, இவன் கைய குத்தி கிழிச்சிருக்காள் உங்க பொண்ணு” அதிதியைப் பார்த்தவாறே கூறினார்.
நிழலி, இப்போ அதிதியைப் பார்க்க, அவளோ பார்வையை மாற்றாமல் கோபமாகத் தான் நின்றிருந்தாள்.
மீண்டும் நிழலி, அவனைப் பார்க்க, பயத்தையும் வலியையும் ஒரு சேர முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.
சாகரனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது அதிதியைப் பார்க்க, ” மேம் … இதுல அதிதி மேல தப்பு இருக்கிறது போல எனக்கு தெரியல, இவர் என்ன பண்ணார்? ” நேராகவே கேட்டாள்.
“எஸ் அதிதி இஸ் சோ கரேஜ். நான், அவ இப்படி பண்ணுவானு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. சச்ச பிரேவ் கேர்ள் லைக் யூ…”என்றவர் அதிதியைப் பாராட்டி விட்டு நடந்ததை கூறினார்.
தினமும் அதிதியும் அவளது தோழி பவினாவும் பள்ளி பேருந்தில் தான் செல்வார்கள். அதிதியைப் பானுமதி ஏற்றி விடுவார். பவினாவை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாட்டி வந்து ஏற்றி விட்டுச் செல்வார்.
பாட்டிக்கு அவ்வளவாக நிதானம் தெரியாது பஸ் வரும் வரைக் காத்திருந்து, பஸ் வந்ததும் அனுப்ப, அவளுக்கு படி எட்டாததால் கண்டக்டர் தான் தூக்கி விடுவார். ஆனால் கண்டக்டரோ பவினாவை தூக்கிறேன் என்ற பெயரில் அவளது உறுப்புகளை தொட்டு தடவித்தான் உள்ளே அனுப்புவான். கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் பவினாவை தனது சபலத்தால் தொட்டு சுய இன்பம் கொள்ளும் அந்த வெறி பிடித்த நாய்,
அதிதியை ஒரு தடவை அவ்வாறு தழுவி தூக்க, அவளுக்கு பிடிக்க வில்லை. மறுநாள் அதே போல தூக்க அருகே வர, விரல் நீட்டி எச்சரித்தவள். தன்னால் முடிந்தவரை மரத்தில் ஏறுவது போல தானே ஏறிக் கொண்டாள். பவினாவால் அது முடியாது என்பதாலும் பாட்டியால் தூக்கி விட இயலாததால் எதுவும் பேசாது உள்ளே சென்றாள்.
அதே போல தான் ஒன்னும் அறியாத குழந்தைகளிடம் இவ்வாறு நடந்துக் கொள்வான். ஆனால் அதிதியை அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. அவனை நெருங்க விடமாட்டாள்.
நிழலி, தன் மகளுக்கு, உலக நடப்புகளையும் அதிலுள்ள நல்லதையும் கெட்டதையும் தான் கதைப் போல சொல்லிக் கொடுப்பாள். அவர்களிடம் எப்படி தப்பிக்க என்றும் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவாள். அதை பவினாவிடம் இவள் சொல்ல, அவளுக்கும் ஓரளவு தெரிந்திருந்தது.
” உங்க அம்மா கிட்ட சொல்லி அவன் மேல கேஸ் போட சொல்லுவோமா?” பவினா கேட்க, ” கேஸ் போட்டா, அவனுக்கு பனிஷ்மெண்ட் கிடைக்காது நாம தான் அவனுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கனும்” என்று அந்தச் சிறு குருத்து பெரிய மனுஷியாய் பேசியது.
“என்ன பண்ண போற ?” பவினா பயந்து போய் கேட்டாள். தனது பென்சிலை ஷார்ப் செய்தாள். இன்டர்வலில் குழந்தைகள் ரெஸ்ட்ரூம் செல்ல, வரிசையாக நிற்க வைத்திருந்தனர்.
கையில் கத்தி போல பென்சிலை வைத்திருந்தாள். அவளுக்கு தெரியும் இன்டர்வலில் கூட, அவன் வந்து குழந்தைகளை கொஞ்சுவது போல தொட்டுச் செல்வான். மற்றவர்கள் கண்ணுக்கு அது பாசமான செயளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அது அறவே பிடிக்க வில்லை ..
இன்றும் அதே போல பவினாவை கொஞ்ச வர, பவினா இரண்டடி பின்னே சென்றாள். அவன் தன் கைகளை தூக்கி தொட வர .அவன் கைகளை தன் வலது கரத்தால் பிடித்து தனது இடது கரத்தால பென்சிலை வைத்து ஆத்திரம் தீரும் வரை குத்தினாள் அதிதி.
“ஆஆ.. ஆஆ…” கத்த அதிதியின் ஆசிரியர் வந்து அவளை தடுத்தார். “அதிதி என்ன பண்ற …?”
“மிஸ், இவன் பவினாவை பேட் டச் பண்றான். பவினா மட்டும் இல்ல பஸ்ல வர எல்லாரையும் தூக்கறேன் சொல்லி பேட் டச் பண்றான்…” என்று கத்தி கோபமாக சொல்ல, ஆசிரியர் அதிர்ந்து விட்டார்.
பின் விஷயம் ப்ரின்சிபால் வரைக்கும் செல்ல, அவரோ பள்ளிப் பேருந்தில் வரும் மாணவர்களிடம் விசாரிக்க, உண்மை என்றானது. அதிதியின் இச்செயலை பாராட்டியும் அவளது கோபத்தையும் எடுத்து சொல்லவே நிழலியை அழைத்து இருந்தார்.
“மேம், ஒன் நிமிட்” என்றவள், பக்கத்தில் நின்றவனை ஓங்கி ஒரு அறை விட்டாள்.
“உன் தேவைக்கு வீட்டில் பொண்டாட்டினு ஒருத்திய கட்டிட்டு வந்திருப்பேள… உன் சபலத்த தீர்த்துக்க குழந்தைங்க தான் கிடைச்சாங்களா?மேம் இவனை வேலை விட்டு மட்டும் அனுப்பக் கூடாது போலீஸ கூப்பிடுங்க, இல்லேனா நான் கால் பண்றேன். இவனுக்கு தண்டனைக் கிடைக்காம இவனை வெளிய அனுப்பக் கூடாது” என்று காளியாக உருமாறி இருந்தாள் நிழலி.
“நிழலி காம்டவுன்… மேம் நீங்க போலீஸ்க்கு போன் பண்ணுங்க…” சாகரன் சொல்ல, அவரோ தயங்கினார்.
“சார் போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஸ்கூல் பேரு தான் கெடும் மீடியால ஒன்னுக்கு ரெண்டா போட்டு காட்டுவான். எதுக்கு சார்? ப்ளீஸ் சார் , நாங்க தான் அவனை வேலை விட்டு நிறுத்திட்டோமே…! இதோட பிரச்சனைய முடிஞ்சுக்கலாம் ” என்றவர் கெஞ்ச, சாகரனுக்கு கோபம் வர,
“நன்னாருக்கு உங்க நியாயம்? பேரு கெட்டு போயிடும்னு சொல்லி தப்ப மறைப்பேளா? உண்மை தெரிய வந்ததால நீங்க ஆக்ஷன் எடுத்தீங்க இதுவே தெரியாம போயிருந்தால், சப்போஸ், இவனால அந்த குழந்தைக்கு ஏதாவது ஆயிருந்தால், என்ன பண்ணிருப்பேள் ? இதே போல தான் மூடி மறைச்சிருப்பேளா? ” சாகரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை அவரால்.
“சாகரா, லீவ் இட். இத தான் டீல் பண்ணிக்கிறேன்… நான் என் பொண்ணை கூட்டிட்டு போறேன்” என்று அவர் பதிலை எதிர்பாராது மகளிடம் வந்தவள், “அதிதி, வா போலாம் …” என்றழைக்க,
நகராமல் அவனை முறைத்த வண்ணமே நின்றவளை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்.
“நிழலி விடு என்ன? ஐ வண்ட் டூ கில் கிம் …!” அவளது கையிலிருந்து திமிர, “கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போக போறீயா?”
“நான் ஏன் ஜெயிலுக்கு போகணும்? நீ தான் இருக்கேல, ஆண்ட் ipc section 100 படி நான் கொல பண்ணா கேஸ்
நிற்காது, என்னை வெளிய விட்டுருவாங்க…” என்று சரியாக சொல்ல,
“குழந்தைங்களை தூங்க வைக்க, பெட் டைம் ஸ்டோரிஸா, பேரிடெய்ல் ஸ்டோரிஸ் தான் சொல்லுவா. ஆனா, நீ மட்டும் தான் சட்டத்தையும் செக்ஷனையும் சொல்லி தூங்க வைப்ப போல, மேடமுக்கு என்னமா கோபம் வருது அப்படியே பேபி நிழலியைப் பேக் டூ இயர்ஸ் போய் பார்த்த பீல் ” அதிதயைப் பார்த்த நொடியில் உணர்ந்ததைக் கூற, நிழலி புன்னகைத்தாள்.
“ஹாய் பேபி நிழலி, ஐ ‘ ம் சாகரன். வில் யூ ப்ளீஸ் அக்ஸப்ட் மை பிரண்ட்ஷிப்?” என்று கையை நீட்ட, “ஹு இஸ் திஸ்?” நிழலியிடம் கேட்டாள்.
” ஹீ இஸ் மை பிரண்ட்” என்றாள்.
” நீயூ பிரண்டா? நான் பார்த்ததே இல்ல…” மீண்டும் கேள்விகளை அடுக்க,” பச் என்னுடைய ஓல்ட் பிரண்ட்… கேள்வி கேட்டு சாக அடிக்காத டீ…” என்றாள் சலிப்பாக,
“மிஸ் அதிதி, என்னை டவுட் படாதீங்க. நான் நிழலிக்கு ஒரு குட் பிரண்ட். சோ உங்களுக்கும் நான் குட் பிரண்டா தான் இருப்பேன்… ப்ளீஸ்” என கைகளை மீண்டும் நீட்டி” பிரண்டஸ்?” எனவும் அவள் நிழலியைப் பார்க்க, அவள் தலையை அசைத்த பின்னரே, அவன் கரத்தில் தன் பிஞ்சு கையை வைத்தாள்.
“தேங்கியூ சோ மச்…” அவள் கையில் டைரி மில்க்கை வைத்தான். ” தேங்கஸ்” என்றவள் அவனை பார்த்து அழகாய் சிரித்தாள்.
காரில் பின் சீட்டில் அதிதி அமர்ந்திருக்க, முன் பக்கம் நிழலி அமர, காரை சாகரன் தான் ஓட்டி வந்தான். காரை ஓட்டினாலும் அவனது பார்வை நிழலி அமர்ந்திருந்த பக்கமும் இருந்தது.
அவளோ யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். வீடும் வர, இருவரது கையை பற்றி அதிதி வந்தாள். மூவருமாக சேர்ந்து வருவதை பார்த்து பானுமதியின் கண்களெனோ பனித்தது.
“வணக்கம் ஆண்ட்டி, எப்படி இருக்கேள்?” சாகரன் அருகே வர, ஆறுவருடம் கழித்து அவனை பார்க்க சற்றென்று யாரென கணிக்க முடியவில்லை அவரால்.”என்ன ஆண்ட்டி என்னை தெரியலையா? நான் தான் சாகரன்” என்றதும் விழிகள் விரிய, சந்தோஷத்தில் அவர், “சாகரா, நான் நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்க? இத்தனை நாளா எங்க போயிருந்த நீ?” ரொம்ப நாள் கழித்து பார்க்கும் மகனை பார்ப்பது போல வாஞ்சையாக கேட்டார்.
“கேனடா போயிருந்தேன் ஆண்டடி, நேத்து தான் வந்தேன்” என்றான். “சரி நீங்க பேசிட்டு இருங்க, நாங்க ரெபிரஷ் ஆயிட்டு வாறோம். அம்மா அவனுக்கு ஏதாவது குடிக்க குடுங்க…” சொல்லி விட்டு அதிதியுடன் மாறியேறினாள்.
அவள் செல்வதை பார்த்து விட்டு, அவனுக்கு பழச்சாறு சொல்லியவர், அவனை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு வந்தார். ” என்ன ஆண்ட்டி முக்கியமான விஷயம் எதுவும் பேசணுமா?” எனக் கேட்க,
“ஆமாம் பா” என்றவர் நிழலி பத்தின உண்மை அனைத்தையும் கூற அதிர்ந்தான். அவர் ஏதோ அவனிடம் கேட்க, அவனும் அவர் கையை பற்றி நம்பிக்கை தரும் விதமாக சொல்ல, முதலில் அதிர்ந்தவர், பின் அவன் கூறியதை ஒத்துக்கொண்டார். இருவரும் பேசுவதை சந்தேகமாக பார்த்து கொண்டே அருகில் வந்தாள்.
அவள் வந்ததும் பானுமதி உள்ளே சென்று விட்டார். “என்ன, என்னை பத்தின எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டீயா?” என்று அருகில் அமர்ந்தாள்.
” ம்ம்…நிழலி, இதுல உன் தப்பு எதுவுமில்லை. நீ ஏன் தண்டனை அனுபவிக்கனும்? ஆண்ட்டி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? பெத்தவான்னா, பொண்ணுக்கு நல்லது பண்ணனும் நினைக்க தானே செய்வா…!அதை தானே ஆண்ட்டியும் சொல்றாங்க”
“அவங்க ஆசைக்காக, நான் கல்யாணம் பண்ணி கஷ்டப்படனுமா? அதிதியை யாரு தன்னோட பொண்ணா ஏத்துப்பா? தான் பொண்ணா பார்த்துப்பேன் எந்த ஆண் முன் வருவான்? அதிதி மட்டும் போதும் சொல்ற ஒருத்தன் இருப்பான் நினைக்கற. நான் செஞ்ச தப்பால, என் பொண்ணு சேர்ந்து தண்டனை அனுபவிக்கனும் எந்த அவசியம் இல்ல. அவளுக்கு நான் மட்டும் போதும் எனக்கு அவ மட்டும் போதும். தப்பு செஞ்சா, தண்டனை கிடைக்கும் சொல்லுவாங்க, ஆனால் எனக்கு வரம் தான் கிடைச்சிருக்கு. நான் இவங்க ஆசைக்காக அந்த வரத்தை இழக்க விரும்பல… ப்ளீஸ் இனி நீயும் அதே டாபிக்கோட என் கிட்ட பேசனும் நினைக்காத” என்றாள் முடிவாக, அவனும் அமைதியாகி விட்டான் .
பின் தன்னை சரி செய்து கொண்டவள், ” ம்ம்… உன்னை பத்தி சொல்லு, மேரேஜ் ஆயிடுச்சா ?” எனக் கேட்க, முறுவலுடன்,”ஸ்டில் சிங்கிள்” என்றான்.
அவனை ஆச்சர்யமாக பார்த்தவள், ” ஸ்டில் சிங்கிள்? ஏன்டா, ஏன் கல்யாணம் பண்ணிக்கல நீ? மிஸ்டர் வரதராஜன், இன்னுமா உனக்கு வரன் பார்க்கல ?” எனக் கேட்டதில் வாய் விட்டு சிரித்தவன், “லவ் பெயிலியர்?”
என்றான்.
“வாட் உனக்கா?!” ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள். “ஏன் ஏன் எனக்கெல்லாம் லவ் பெயிலியர் இருக்கக் கூடாதா? கேனடா போனாலும் நானும் மனுஷன் தான் மா!” எனக் காலரை தூக்கிக் கொள்ள, “எருமைக்கு சரியான பெருமை தான்!” என்று அலுத்து கொண்டாள்.
“யூ மீன் மீ பஃப்லோ!” தன் நெஞ்சை தொட்டு கேட்க, ஆம் என்று தலையை அசைத்தாள். அதை அசட்டைச் செய்தான்.
“வெள்ளைக்காரிய எதுவும் லவ் பண்ணிட்டு செட்டாகலைனு லவ் பெயிலியர்னு சொல்லிட்டு இருக்கியா?” கேலியாக கேட்டவளை செல்லமாக முறைத்தவன், ” வெள்ளைக்காரி இல்லை என் பட்டர்பண்ணை..!” என்றான் ரசனையோடு. ” அவளுக்கு சில கமிட்மெண்ட்ஸ், சோ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காள் அவளோடு சேர்ந்து அவா, கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிக்க ஹெல்ப் பண்ணிட்டு, அப்படியே கொஞ்சம் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணலாம் இருக்கேன்…” என்றான்.
“கிரேட் யா, கங்கிராட்ஸ். பட் இட்ஸ் டூ லேட் வயசு என்னாகுது, இத முன்னாடியே செஞ்சிருந்தால் தான் என்ன?இந்நேரம் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்திருப்பீங்க! வயசு போகுதுல
சாகரா…” தன் நண்பனுக்காக அக்கறை கொள்ள, அதில் நெகிழ்ந்தவன், ” அவா எந்த வயசுல கிடைத்தாலும் சந்தோசம் தான் நேக்கு. நான் செஞ்ச தப்புக்கு எனக்கு கிடைச்ச தண்டனை இந்த பிரிவு. என் தப்பை சரி செஞ்சிட்டு அவாளோடு சேர்ந்து வாழ்வேன்னு நம்பிக்கை இருக்கு” என்றவனை விழி அகற்றாது பார்த்தவளின் மனது தன்னை காதலித்து ஏமாத்தியவனோடு ஒப்பிட்டு பார்த்தது. ‘ ச்ச, சாகரனோட சாக்கடைய ஒப்பிடுறேனே… சாகரன் ஜெம். ஆனா, அவன், ஆம்பலையே இல்ல.’ தனக்குள்ளே சொல்லி மனத்திற்கு ஒரு குட்டு வைத்தாள்.
“ஓ.கே, நிழலி டைம் ஆச்சு, நாளைக்கு
பார்க்கலாம்…”என்றவன் கிளம்ப, நாளை என்றதும் முகம் மாறி போனதை அவன் குறித்துக் கொள்ளாமல் போனான்.” ஓகே பாய்” என்றாள்.
சிறிது தூரம் சென்றவன், மீண்டும் அவள் அருகில் வந்து அமர்ந்து, ” நான் இதை சொல்றேன் தப்பா எடுத்துக்காத, பாஸ்ட் ஐஸ் பாஸ்ட்னு நினைச்சி இன்னொரு வாழ்க்கைய தேர்ந்தெடுக்கறதுல தப்பு இல்லயே, எல்லா ஆண்களும் ஏமாத்தறவா இல்ல… உன்னை நேசிக்கிறவா , கண்டிப்பா அதிதியை, ஏத்துப்பா” என்று தன் மனதில் உள்ளதை புரிய வைக்க அஸ்திவாரம் போட்டான். அவளோ கேலியாக, ” ஓ…!”
அவளை முறைத்தவன், ” ஸாரி, அதை விடு! நான் நோக்கு துணை வேணும், ஒரு பொண்ணால தனியா வாழ முடியாது பிளா பிளா எல்லாம் சொல்ல மாட்டேன். உனக்குள்ள இருக்க, அன்பு , பாசம் , காதல், சுகத்துக்கத்தை எல்லாம் உனக்குள்ளே தேக்கி வைக்காத, இங்க அதெல்லாம் கிடைக்காம சில ஆண்கள் சிங்குளா சுத்துறாங்க, அவங்கள்ல ஒருத்தருக்கு உன்னால நல்ல வாழ்க்கை கிடைக்கலாம் இல்லையா? கடைசி வரை கூட வரும் காதலுக்காக காத்திருக்கும் ஆண்கள் சங்கம் நிறையா இருக்கு, நானும் அதுல மெம்பர் என்று சொல்லிக் கொண்டு…” தன் காலரை சரியே செய்ய,
“ம்ம்… அதே போல கடைசி வரைக்கும் உள்ளங்கையில் தாங்கற புருஷன் கிடைக்கனும் காத்துட்டு இருக்கற பெண்கள் சங்கத்துல ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு… காதலே வேணாம் இருக்க என்னைப் போல பொண்ணுங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம் …ம்ம்” என்றாள் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதத்தில்.
‘ச்ச… இவ தான் வோர்ல்ட் டாப் மோஸ்ட் பிடிவாதக்காரினு நோக்கு தெரியாதா சாகரா? இவளை விட்டு தான் பிடிக்கணும். இவள விட்டு பிடிச்சி, எப்போ கல்யாணம் பண்ணி…???? ‘ பெருமூச்சை இழுத்து விட்டவன்’ ஸ்ரெயிட்டா நோக்கு ஆறுபதாம் கல்யாணம் தான்டா சாகரா…!’ என்றெண்ணியவன், ” அதுக்கில்ல நிழலி, இப்போ ஆதர்ஷன எடுத்துக்கோ, அவன் இந்நேரம் சந்தோசமா பொண்டாட்டி குழந்தைனு வாழ்ந்திட்டு இருப்பான். நீ ஏன் தனியா இருக்கணும்…?”
“வாட்!! என்னை இப்படி ஆக்கிட்டு அவன் மட்டும் சந்தோசமா இருந்திடுவானா? தப்பு பண்ணாத நானே, தண்டனையா நினைச்சு என் வாழ்க்கைய வாழும் போது, அவன் மட்டும் பொண்டாட்டி புள்ளைன்னு சந்தோசமா வாழ்வானா? நெவர், இந்த நிழலிய என்ன நினைச்ச நீ? என்னைய கெடுதுட்ட, நீ தான் என்னை கல்யாணம் பண்ணனும் போய் அவன் முன்னாடி
நின்னு கெஞ்சுற ஆளுனு நினைச்சியா? இல்ல அவன
இன்னொருத்தி கிட்ட கொடுத்துட்டு அவனையே நினைச்சு வாழ்ந்துடுறேன்னு சொல்ற ஆளுனு நினைச்சியா?” என்று வில்லத்தனமாய் சிரித்தவளைக் கலக்கத்தோடு பார்த்தான் சாகரன்.
அங்கே ஆதர்ஷனோ, ” நிழலிலிலி…. ” எனக் கத்தி தலையைப் பிய்த்து கொண்டவன், சிதறிய பொருட்களுடன் பைத்தியகாரன் போல அமர்ந்திருந்தான்.
காற்று வீசும்