காற்று 16

நீதிமன்றத்திலிருந்து, அர்ச்சனா,  நிழலி , சாகரன் மூவரும் காரில் பயணித்தனர். தனது மிதியுந்தியை,  மகிழுந்து ஓட்டுனரிடம்  கொடுத்தவன், மகிழுந்தை ஓட்டி வந்தான். அவ்வப்போது கண்ணாடி வழியே நிழலியை, பார்க்காமலும் இல்லை.

என்ன தான் ஆதர்ஷனுக்கு பதில் அடி கொடுத்தாலும், அவன் கேட்ட  கேள்விகளுக்கு எல்லாம் உடல் கூசிப் போனாள் நிழலி. மானமுள்ள எந்தப் பெண்ணுக்கும் அக்கேள்விகளுக்கு உடல் கூசித் தான் போகும்

தனித்து இருக்கும் மடவரின் வளர்ச்சி கண் பிடிக்காமல் சிலர் தாக்கும் ஆயுதம் அவள் நடத்தை. எளிதில்  பேசி விட்டு செல்லும் அவர்களுக்கு எவ்வாறு தெரியும்  தனித்து வாழும் ஒவ்வொரு பெண்ணும் அக்னி  பாதையில் நடக்கிறாள் என்று. அவரவர்  இவ்வுலகில் வாழ உரிமை இருப்பதென்பதை மறந்து அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து வாழ்கிறார்கள். அதிலும் தனித்து வாழும் பெண்களுக்கு காவல்காரர்கள் போல சிலர் அவர்களை  சிறை வைக்கவும் தவரவில்லை.

“என்ன அக்கறை ! என்ன அக்கறை !” என்ற ரீதிலே பேசி அவளை முடக்கச் செய்வார்கள் . மூலையில் அமர்த்த எண்ணுவார்கள். அதையும் மீறி வெளியே வரும் பெண்ணை,  தாக்கும் ஆயுதம் நடத்தை. ஆஆஆண்கள் தனித்து இருந்தாலும்  அவனை கண்டு கொள்ளாத  சமூகம், பெண் என்று வரும்  போது மட்டும் அவளது ஒவ்வொரு அசைவையும் ஜூம் செய்து  நோட்டம் விட்டு அதற்கு  இவர்களாகவே விளக்கமும் கொடுத்து பெயரை சூட்டி விடுவார்கள்.

ஆண்கள் ‘தனியார்’  போலவும் பெண்கள் ‘பொது உடைமை’ போலவும் பாதுகாப்பின்றி சேதாரம் செய்து விட்டு  போகிறார்கள். இதில் ஆண் , பெண் பேதமின்றி  சேதாரங்களை விழைவித்து போவார்கள்.

நரம்பில்லா நாக்கும் குத்தாட்டம் போட்டு விட்டுச் செல்லும் தனித்து வாழும் ஒவ்வொரு  பெண்ணின் வாழ்க்கையிலும். அதையெல்லாம்  கடந்து தனது வாழ்க்கையில் வெற்றி பெரும்  பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சகிப்பு தன்மையோடு சிலரும் , பேசும் நாக்கை தன் நாக்கால்  கூறு போட்டும்  பதலடி கொடுத்தும் சிலர்,  கடந்து தான் வருகிறார்கள் இடர்களை தாண்டியும்.

அலுவலகத்தில் காரை நிறுத்தினான். அர்ச்சனா இறங்கிக் கொள்ள, நிழலி இறங்க வில்லை .

“மேம், வாங்க ! ” என்று அழைத்த போது தான்  சீட்டில் சாயந்தவள் விழித்திறந்தாள். ” நான் வரல அச்சு, வீட்டுக்கு போறேன். ஆஃபிஸ்ல எந்த வேலையும்  இல்லேல ,நீங்க, ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க !” என்று மீண்டும் சீட்டில் கண் மூடி சாய்ந்தாள்.

அவளும் தயங்கியவாறே சாகரனை பார்க்க, காரை விட்டு இறங்கியவன் , அர்ச்சனாவிடம், ” நீ  கிளம்பு அச்சு நான் பார்த்துகிறேன் ” என்றான். அர்ச்சனாவும் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை உள்ளே வைத்து விட்டு அலுவலகத்தை பூட்டு விட்டுச் சென்றாள். தன் வண்டியை கொண்டு வந்த ஓட்டுனரிடம் சாவியை வாங்கிக் கொண்டவன் காத்திருக்குமாறு சொல்லி விட்டு அவள் அமர்ந்த பக்கமாக ஏறினான், கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டு விழித்திறந்து பார்க்க, அருகே சாகரனை கண்டு விழித்தாள்.

“சாகரா , உன்னை தான் கிளம்ப சொல்லிட்டேனே ! ஏன் போகாம இருக்க ?”

“நீ  போன்னு சொன்னதும் நான் போக , இப்ப நான் உன் அசிஸ்டெண்ட் இல்ல,  பிரண்ட்.  உன்னை இந்த  நிலமையில விட்டு நான் எப்படி நிம்மதியா வீட்டுக்கு போவேன் டி, அர்ச்சனா இருந்தனால தானே, நீ அழல.  இப்போ அழு நான் இருக்கேன்   மனசில இருக்கறத கொட்டி அழுதிடு ப்ளீஸ், உள்ள வச்சு புலுங்காத டி  ! ” எனவும்

அர்ச்சனா இருந்ததால், இத்தனை தூரம்  தன்னை கட்டுப் படுத்திக்கு கொண்டு வந்தவள்,  நாடியதோ தந்தையின்
மடி தான் ,ஆனால் அது கிடைக்காமல் போகவே தனிமைக்காக காத்திருந்தாள். ‘கத்தி அழ வேண்டும் தன் உணர்வுகளை தன்னிடம் மட்டுமே காட்ட  வேண்டும்’  என்று எண்ணியவள், வீட்டிற்குச் சென்று அறையில் அடைந்துக் கொள்ள, மனம் வேண்ட, உணர்வுகளை , வலிகளை பகிர ஒரு துணையை மனம் எதிர்பார்க்க, அது நானென்றவளின் எண்ணத்திற்கு முரணாக, துணை தேடிய மனத்திற்கு துணையாக ,வலிக்கு மருந்தாக, மடி தேடிய மகவிற்கு தன் மார்ப்பை கொடுத்தான் சாகரன். அவனது அகண்ட நெஞ்சில் ஒரு ஓரத்தில் ஒடுங்கி, அழுது கரைய ஆரம்பித்தாள் நிழலி.

அவனது இறுகிய அணைப்பில் ‘நானிருக்கிறேன்’ என்று உரைப்பது போலவே இருந்தது.

“ஆதர்ஷ், கிட்ட அப்படி பேசிட்டு வந்தாலும்,  அவன் கேட்க கேள்வி ஒவ்வொன்னும் எனக்கு கூசி போச்சு சாகரா ! அப்படி என்ன நாங்க தப்பு பண்ணிட்டோம் எங்க நடத்தைய வைத்தே  அடக்க நினைக்கறாங்க ?ஏன் ஓரு பொண்ணால தனித்து வாழ முடியாதா ? இல்ல  வாழக் கூடாதா? ஆணுக்கு கீழ, அவங்க கட்டவிரலுக்கு கீழ தான் இருக்கணுமா?

முடியல டா, எவ்வளவு தான் டா நாங்களும் தாங்குவோம். எங்களுக்கு மட்டும்  வித விதமாக  பேரு வச்சு கூப்பிடுறதும்  தனியா தானே இருக்கா, என்ன  வேணாம் பண்ணலாம் என்ன வேணாம் பேசலாம் நினைக்கற மெண்டாலிட்டி எப்போ தான் மாறும்.  தனியா ஒரு பொண்ணு இருந்தால், அவ தப்பா, தான் இருப்பா, தப்பா தான் வாழ்வானு யார் எழுதி வச்சது?  ஒரு ஆணும் பெண்ணும்  சேர்ந்து தானே தப்பு பண்றாங்க, ஆனா, பலி(ழி) மட்டும் பெண்ணையே சாருது ஏன் ?

இந்த விஷயம் வீட்ல சொன்னா, அம்மாவோட பதில், ‘ இதுக்கு தானே உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்  சொல்லுவாங்க’ ஆனால் மத்தவங்க  பேச்சுக்காவும் பார்வைக்காவும் எங்க வாழ்க்கைய விருப்பம் இல்லமா வாழ முடியுமா? இல்ல இன்னொருத்தன் கையிலே  குடுத்துட்டு அவனுக்கு  அடிமையா வாழணுமா?   பெண்ணோட ஆசைகளையும் உணர்வுகளையும்  காட்ட,  நிறைவேத்திக்க இன்னொருத்தன் பெர்மிஷன் கேட்டு தான் எல்லாத்தையும் வெளிப்படுத்தனுமா?  ஏன் சாகரா இந்த உலகம்,  இப்படி இருக்கு ?”

“இந்த உலகம் எப்படியோ ! நேக்கு அது தெரியாது. ஆனால் என் நிழலி, யாருக்கும் அடிமை இல்ல, அவா காத்து போல,  யாருக்கும் கட்டுப்படாதவ, இந்தக் கண்ணீர, உன் அன்பு வேண்டினவங்களுக்காக சிந்தலாம். ஆனா,  பல் இல்லாத பாம்பு சீறினதுக்கு சிந்தற பார்த்தியா,  அது தான் பார்க்க கொடுமையா இருக்கு ! நீ தான் சொன்னீயே அடிப்பட்ட நாய்  வந்து கத்திட்டு போகுது விடுனு,  அந்த நாய் குறைச்சத்துக்கெல்லாம்  இவ்வளவு பேசி, நீ ஃபீல் பண்ணுமா? ” என்று அவளது கண்ணீரை துடைக்க, குழந்தை போல் அவனுக்குள் வாகாய் பொருந்தியவள், அவன் முகத்தை பார்த்தாள். அவனும் தொடர்ந்தான்,” ம்ம்… நீ நல்லா இருக்கனும் மனசார நினைக்கறவங்க, உன்னை தவறா புரிஞ்சுட்டு பேசினா , நீ ஒரு ஃபிப்டி பெர்சண்டேஜ் ஃபீல் பண்ணலாம் , ஆனால் நீ அழியனும் உன்னை அழிக்கணும் நினைக்கறவன் வார்த்தைக்கு ரெஸ்பெக்ட் குடுத்து பீல் பண்ற? அவரவர் இடத்தில இருந்து பார்த்தான் தான் அந்த வலி புரியும் நீ சொல்லலாம். ஆனால் ஆஃப்ட்ரால்  ஒண்ணுக்கும் ஒத்தவாத  உடைஞ்சு போனா, பிளாஸ்டிக் குத்துனத்துக்கு இவ்வளவு பெர்போர்மன்ஸ் தேவையா? இதெல்லாம் தேவை இல்லாத  பீல் பேபி ! ” அவளது கண்ணீரை சுண்டி விட்டான்.

அவள் அவனையே பார்த்திருக்க, அவனுக்கோ, அவள் அதிதியின் ஒரஜினலை போலவே தெரிந்தாள். அவள் நெற்றியில் இதழைப் பதித்து  “அதிதிய போல அப்பப்ப நடந்துக்காம நிழலிய போல நடந்துக்க டி !” அவள் கன்னம் கிள்ள, அதில் உணர்வு பெற்று அவனிடமிருந்து  தன்னை பிரித்து கொண்டு அமர்ந்தவள், தான் இருந்த நிலையை எவ்வாறு எடுத்துக் கொள்வானோ என்று பயந்து அவன் முகம் பார்க்க, ‘நான் எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை ‘ என்பது போல சிரித்தான்.

அதில் ஒரு நிமிடம் தன்னை தொலைத்தவள், மீட்டுக் கொண்டு கண் மூடி  தன்னை சமன் செய்து” ஐ ம் ஆல்ரைட் சாகரா ! வீட்டுக்கு போய் கொஞ்சம் தூங்கி எழுந்தால் சரியாகிடுவேன்! ” என்றாள் அவனை பாராமல்.

“தேட்ஸ் குட் ! நல்ல ரெஸ்ட்  எடு பேபி ! நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கு, அதை பார்க்காம, தேவையில்லாததுக்கு  பீல்  பண்ணி உன் நேரத்தை வீணடிக்காதே டி, அப்போ அப்போ நோக்கும் அதிதிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாம போகுது டி !” என குறும்போடு சொல்ல , அவளோ விழிகளை சுருக்கி அவனை முறைத்தவள் இதழையும் சுளிக்க, அதை சிறையெடுக்க மனம் வேண்டினாலும்,அதற்கான நேரம் இது இல்லை என்றெண்ணியவன், அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, “டேக் கேர் டி !” என்று வண்டியை விட்டு இறங்க, அவனை, ஏக்கத்தோடு பார்த்தவள், சுதாரித்து, தன் தலையை உலுக்கிக்  கொண்டாள்.

அவளை புரிந்து கொண்டவனல்லவா அவன், அதற்கும் சிறு முறுவலுடன் “நான் நைட் கால் பண்றேன் நிழலி,  சாப்ட்டு ரெஸ்ட் எடு !”என்றவன் செல்லவும் ஓட்டுனர் ஏறி அமரவும் சரியாக இருந்தது.
வரும் வழியெல்லாம் ஆதர்ஷனை  மறந்து மனம் சாகரனை  எண்ணியது. வீட்டிற்கு வந்தவளின் நினைவெல்லாம் சாகரனின் முதல் சந்திப்பு தான் .

அவனும் தன் அறையில் புத்தகத்தில வைத்து காக்கும் மயிலறகை போல அவளது பதின் வயது புகைப்படத்தை வைத்து காத்து வந்தவன், எடுத்து வருடினான். அவனது நினைவு, நிழலியின் முதல் சந்திப்பில் போய் நின்றது.

பாவாடை தாவணியில் ரெட்டை ஜடையிட்டு, அவனை பார்த்து ” யோவ் ஐயங்கார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?” எனக் கேட்டு  நிற்கும் நிழலியின் பிள்ளை முகமே நினைவில் வந்ததது.

காற்று  வீசும்