காற்று 15

ஆழியின் கூட்டுக்குள் மறைந்த மன்னனுக்கு, 
விடிந்ததென பட்சிகள் தம்பட்டமடிக்க, இதோ எழுந்து விட்டேனென தன் செங்கதிர் கைகளை உயர்த்தி  முறுக்கி விடியலை விரித்தான்.

அதிகாலை வேளையிலே எழுந்து ஸ்தானம்  செய்து பல மந்திரங்களை ஓதி,  கோவிலுக்கு சென்று வந்தவன், வேலைக்கு செல்ல, காலை உணவிற்காக காத்திருந்தான் சாகரன்.

தன் குடும்பத்திடம் ,இதுனால் வரைக்கும் நிழலியிடம் வேலை செய்வதை அறவே மறைத்து வந்தான். அவர்களும், அவன் கார்த்திக்சாரிடம் தான் வேலை செய்கிறான் என்று  எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஊரில்லாதவரை தப்பித்தான்.

வாயில் பாடலொன்றை விசில் செய்த படியே காலை உணவிற்காக  காத்திருந்தான். சுடச்சுட இட்லி சாம்பாரென, சட்னி  இட்லிபொடி ,  வடையென அவிழ்க மேசை முழுவதும் மகனுக்காக நிரப்பி இருந்தார் கண்ணம்மா .

அவனும் எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட, அவனது வதனத்தையே விழியகற்றாமல் கண்டார். அதை  சாப்பிட்டவாறே கண்டவன், ” என்ன கண்ணம்மா, உன் புள்ளையாண்டாள   கண்ணாலே முழுங்கறீயே வாட்ஸ் இஸ் தி மேட்டர் ?” என்றான்.

“ச்ச, ஒண்ணில்லடா அம்பி. இன்னைக்கு உன் முகத்தை பார்க்கறச்ச ஒரு  தேஐஸ் தெரியிறதே ! ரொம்ப சந்தோஷமா இருக்கற என்புள்ளைய பார்த்தால் அப்படியே சாட்சாத் அந்தப் பெருமாள் போலவே இருக்கு டா  ! என்னாலே, உன் முகத்துல இருந்து கண்ண அகத்த முடியலடா அம்பி, என் புள்ளையாண்டா என்ன ஒரு அழகு !” என வழித்து நெற்றி முறுக்கினார்.

“போதும் போதும் ! உன் மகனை ரசிச்சது விஷயத்துக்கு  வா கண்ணம்மா !” என்றான். ‘அவர் என்ன விஷயம்? ‘ என்பது போலவே பார்த்தார்.

” என்ன அப்படி பார்க்கற ? உன் மகனை  வர்ணிக்கறீயே எதுவும் விஷயம் இல்லாமையா ரசிப்ப  ! என்ன விஷயம்னு கேட்டேன் ?” என்றான்.

“அட போ கண்ணா !  காரணத்தோடவா பெத்த புள்ளைய, பெத்தவா  ரசிப்பா ?” எனக் கேட்டவர், மீண்டும் அவனிடமே ” இருந்தாலும் கண்ணா ! காலகாலத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிண்டேனா  நன்னா இருக்கும் ” என்றதும் அவரை ஏறெடுத்தான் .

“என்ன பார்க்கற கண்ணா ! மத்த பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம்  பண்ணி குழந்தை குட்டினு பார்த்துண்டேன். மீதி இருக்கறது நீ மட்டும் தான் உன்னையும் அப்படியே பார்த்துட்டேன்னா, வர காலத்த நிம்மதியா கழிப்பேன் டா கண்ணா ! யோசி டா ! ” என்று கெஞ்சினார்.

“மா, எண்ணி ஒன்ற வருசத்துகுள்ள நீ ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்.  என் புள்ளைய மடியமர்த்தி சோறு ஊட்டுவ ! இந்தக் கண்ணன்  உனக்கு வாக்கு தரேன் ” என்றவன் கையை அழும்பி விட்டு செல்ல, ‘என்ன சொல்ல வரான் புரியலையே ! ‘  என யோசித்தவாறு நிற்க, அவரை கொஞ்சி விட்டு தன் உடமையை எடுத்து கொண்டு புறப்பட்டான்.

வெளியே புதிதாக வந்த கருப்பு இயந்திர புரவி அவனுக்காக காத்திருந்தது. அதை தொட்டுத் தடவியவனுக்கு நேற்றைய நினைவுகள் முந்திக் கொண்டு வந்தன.

மாலையில் நிழலியை அவள் வீட்டிலே இறக்கி விட்டான். ” உள்ள வா சாகரா ! ” அவளழைக்க, 
” டைம் ஆச்சு நிழலி, இன்னொரு நாள் வரேன் ” என்று மறுக்க. அதற்குள் தோட்டத்தில், பானுமதியுடன் இருந்த அதிதி ஓடி வந்தாள்.

“புது பைக் வாங்கிருக்கீயா சாகா? சொல்லவே இல்ல. ப்ரெண்டுன்னா  எல்லாத்தையும் சொல்லணும் தானே ! நீ ஏன் சொல்லல ? ” என இடையில் கைவைத்து அவனை  முறைக்க, அவள் கேட்ட தோரணை, அவனுக்கு தனது கல்லூரித் தோழி நிழலியையே ஞாபகம் படுத்தியது .

“அதிதி குட்டி ! உங்க மம்மி பேபி,  இப்ப தான் இந்த பைக்கை வாங்கி கொடுத்து சப்ரைஸ் பண்ணின்னாங்க, நானும் உடனே என் அதிதி பேபி கிட்ட காட்டணும்  இங்க தான் ஃபர்ஸ்ட் வந்திருக்கேன்,  வீட்டுக்கு கூட போகல, வேணும்னா உன் பேபிகிட்டயே கேளு ட்ருவா இல்லையானு ! ” என நிழலியை  மாட்டி விட்டு, மேலும்   அதிதியை பாசத்தால் தன் பக்கம் இழுத்தான். அவளும் ‘உண்மையா? ‘ என்பது போல தன் தாயை பார்க்க  ‘ ஆம் ‘ என்று தலையாட்டியவள், வாயில் கைவைக்காத குறையாக வியந்து, மனதிற்குள் அவனை வசைப்பாடினாள்.

“அடப்பாவி என்னமா பேசி என் மகள மடக்கறான் ! என் பொண்ணு அவனைத் தான் நம்புறா ! நான் உண்மைய சொன்னால்,  என்னைய அந்நிய சக்தினு சொல்லுவான்.  இருடா ! ஒரு நாள், நீ என் கையில் வசமா  மாட்டுவ , அன்னைக்கு உன்னைய, இவ கிட்ட
போட்டு கொடுக்கறேன்  டா ! ” எனக் வாய்க்குள் கறுவிக் கொண்டாள் .

” நீ நினைச்சது எதுவும் நடக்காது பேபி ! ” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல,  இதழை சுளித்து கொண்டாள். அதில் முறுவலித்தவன், அதிதியிடம், ” ஒரு ரவுண்ட் போலாமா பேபி ! ” எனக் கேட்கவும், கைகளை தூக்கி  துள்ளிக் குதித்தாள். அவளை தூக்கி முன்னே அமர வைத்தவன், வெளியே சென்றான்.  நிழலியோ, அன்னை இருப்பதால் உள்ளே சென்று விட்டாள்.

நிர்மலமான நிழலியின் முகத்தில் இப்போதெல்லாம் உணர்ச்சியின் சாயல் தென்பட அதெற்கெல்லாம்
காரணம் சாகரன் தான் என்று அவருக்கு தெரியாததா?  மனதார, அவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டார் பானுமதி.

அதிதியின் அதீத கூச்சலோடு, அவர்கள்  உள்ளே  வர,  பானுமதி, அவனை உள்ளே அழைத்தார்.  நேரமானதாகக் கூறி, அவனும் சென்று விட்டான்.

நேராக இல்லம் வந்தவன், குளியலை போட்டு  விட்டு வெளியே வர, அவனது குடும்பம் அவனை சூழ்ந்து கொண்டன.

“மா, யாரோ முதல் கேஸ் முடிஞ்சதும் பைக்  வாங்கிக்கிறேன் சொன்னவாள, நீ பார்த்தீயா ? ” என சங்கரன் கேட்க, ” ம்ம் இதோ பார்த்துண்டே இருக்கேன் டா சங்கரா !” என்றார்  அவரும் பதிலுக்கு.

“பார்த்துண்டே இருந்தால் போதுமா  ?எப்படி பைக் வந்தது கேளுங்கோ !” சாரதி அவர்களை ஏற்றி விட, திரும்பி சாரதியை முறைத்தவன், மிதியுந்து வாங்கி வந்த  கதையை கேட்க, ஆர்வமாக இருக்கும் தனது குடும்பத்தை கண்டு இதழ் மடக்கி சிரித்தான்.

“என்ன சிரிப்பு கொழுந்தனாரே விஷயத்தை சொல்லுங்கோ, பைக் வேணாம் ஒரே மூச்சு  நின்னேள். இப்போ என்ன பைக்கோடு வந்திருக்கேள் எங்களாண்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே !” தாடையில் கை வைத்து வினவ,

“நேக்குமே பைக் வாங்க போற விஷயமே தெரியாது மன்னி ! ” என்றவனை நால்வரும் புரியாமல் பார்த்தனர். ” ஓ , அப்ப பொட்டிக்கடையில  மிட்டாய பார்த்தும் வாங்க மனசு வந்தது மாதிரி பைக் ஷோ ரூம் பார்த்ததும் பைக் வாங்கி வந்திட்டீயா சாகரா ?” சாரதி கேட்க, மற்றவர்கள் சிரித்தனர்.  சாகரன், மீண்டும் அவனை  முறைத்து விட்டு அனைத்தையும் கூறினான்.

ஆனால் பைக் வாங்கி தந்தது கார்த்திக் சார் என்று சொல்லி வைத்தான். ” ஐயோ !” என பதறிய கண்ணம்மா கை காயத்தை ஆராய்ந்தார்.

“பெரிய காயம் எல்லாம் இல்ல மா ! சின்ன காயம் தான் டி.டி போடுண்டேன் ! சார்  தான் கூட்டிண்டு போனார் ” என்று அவரை சமாதானம் செய்தான்.

“சரி சாகரா ,நீ வண்டி ஒட்டி நாளானது,  கொஞ்ச மெதுவா போ !” என்று தோளை அழுத்தி விட்டு போனான். அந்தக் கூட்டம் கலைந்தது.

சாரதியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றான்.  அர்ச்சனத் தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைய, சாரதி, ” எதுக்கு சாகரா அர்ச்சன தட்டு ?”

“என்ன அத்தி,  புது பைக் வாங்கி இருக்கேன் பூஜை போட வேண்டாமா? “

“ஆமா, உன் சொந்தக் காசுல வாங்கினது போல  பூஜை போடணும்ங்கற !”

” அத்தி, அவா காசா இருந்தா என்ன ? என் காசா இருந்தா என்ன? எல்லாமே  ஒண்ணு தானே !”

“நீயே நினைச்சுண்டு இரு சாகரா ! அவா அப்படி எப்போ நினைக்க வைக்கறது ?”

“இப்பதான் பிராசஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கேன் அத்தி ! சீக்கிரமாவே அவள,  நானு அவளும் ஒண்ணு நினைக்க வைக்கறேன் ” என்று சூளுரை எடுத்துக் கொண்டான்.

“சரிதான் , அங்கே அனுமதி கிடைத்தாலும் இங்க உனக்கு என்ன கிடைக்கப் போகுதோ ! பெருமாளுக்கே வெளிச்சம் ” என்று மேலே பார்த்து புலம்ப ,

“மசமசன்னு பேசாம வாங்கோ !” என்று  உள்ளே இருவரும் பெருமாளை நோக்கி சேவிக்கச் சென்றனர் .அங்கிருக்கும் சில ஐயங்கார்கள் நலம் விசாரிக்க, அவனும் அவர்களிடம் பேசி அர்ச்சனையை முடித்து  விட்டு வெளியே வர, சேது ராமனின் குடும்பத்தையே கண்டு பயந்தவன் ஜாகா வா எண்ணுவதற்குள்  சேது பார்த்து விட்டு இருவரையும் அழைத்தார் .

“என்ன சாகரா, பார்த்துண்டு பார்க்காத மாதிரியே போற !”

“ஐயோ ! இல்ல மாமா தக்ஷிணாமூர்த்திய சேவிச்சுண்டு வரலாம் இருந்தேன்” என்றவன் அவர் பக்கத்தில் இருக்கும் அவரது மனைவி, பர்வதத்திடம் “எப்படி இருக்கேள் மாமி ?” என்று  நலம் விசாரித்தான்.

“நன்னா இருக்கேன் டா அம்பி, நீ ஊர்ல இருந்து வந்ததா அண்ணா சொன்னார். என்னால தான்  உன்ன பார்க்க வர முடியலே டா  ! நன்னா இருக்கியோனோ ? “

“நன்னா இருக்கேன் மாமி ! ” என்றான்.

“ஹீரோ கணக்கா இருக்கடா அம்பி !”என்று முகம் வழித்தார். ” லட்ஷமி மா,  இவர் தான் சாகரன் உன் வருங்காலம், வணங்கிக்கோ ” என்றார் சேது.

அவளும், வணக்கம் வைத்து உதடு ஒட்டாத சிரிப்பை உதிர்க்க ,அவனுக்கு தான் பல்ப் எரிந்தது. மேலும் அவன் எதுவும் பேச வில்லை சேதுராமன் தான் மகளின் புகழ் பாட, சாகரனுக்கு சாரதிக்கும் ‘ஓய் பிளாட் செம் பிளாட்’ என்ற கதையானது. பின் வேலை இருக்கென்று  சொல்லிக் கொண்டு தப்பித்து விட்டனர் இருவரும்.

“என்னடா சாகரா ! இந்த அறு அறுக்கறாரு. இவருக்கு மட்டும் நீ மருமகனா போனா, எண்ணி ரெண்டே மாசம் காது  ஜவ் போச்சு வந்து நின்னுடுவ ! அப்ப மனுசனா இவரு ?” எனக் காதை குடைந்தான்.

“தேங்க காட் அப்படி எதுவும் நடக்காது அத்தி ! அந்த விஷயத்துலே கடவுள் என்னை காப்பாத்திண்டார் ” என்றான்.
“என்ன சாகரா சொல்ற ?”

“ஆமா, அத்தி அந்தப் பொண்ணு
சந்தானத்து  இந்தக் கல்யாணத்துலே  இஷ்டம் இல்லை ” என்றான். ” எப்படி சொல்றே சாகரா?”

“கல்யாணம் பண்ணிக்க போறவானு சொன்னதும் ஒரு வெட்கம், படபடப்பு இல்லை,  சாதாரணமா தான் இருந்தாள். அதிலே புரிந்திடுத்து அவாளுக்கும்  இந்தக் கல்யாணத்துலே இஷ்டம் இல்லேன்னு !”

” இருந்தாலும், அவர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிறதையா இரு சாகரா, கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிட போறார்.

“அதெல்லாம் இந்த சாகரன கையில அடக்கிட முடியாது அத்தி ! ” காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

மேலும் அதை எண்ணிச் சிரித்தவன், தன் புரவியை எடுத்துக் கொண்டு நீதி மன்றத்துக்கு சென்றான்.

அங்கே அர்ச்சனாவும் நிழலியும் அந்தக் கிராமத்தின் முக்கியமானவர்களும் வந்திருந்தனர், பின் சாகரனும் வர, அந்தக் குப்பை கிடங்கை அகற்றக் கோரியும் மேலும்  மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் மேலும் வழக்கு பதிவு செய்து விட்டு வெளியே வந்தனர்.

அவர்கள்  வழக்கு விசாரணைக்கு வரும் தேதியை சொல்லி அன்று வரும்மாறு பேசி வழியனுப்பி வைத்தாள் நிழலி. சாகரன் வேலையாக உள்ளே இருக்க, அர்ச்சனா மட்டுமே உடன் இருந்தாள் .

சரியாக அவள் முன் வந்த ஆதர்ஷன், அவளை கீழிருந்து மேல் வரைக்கும் பார்த்தவன், ” சும்மா சொல்லக் கூடாது ஆள, கவுக்கற அளவுக்கு அழகா தான் இருக்க ! “என்றதும் அவனை விழியாலே எரித்தாள் நிழலி.

“அப்ப்பா! மனுசுக்குள்ள கண்ணகி நினைப்பா ! கண்ணாலே என்னை எரிக்கற,  உண்மைய சொன்னா, ஏன்மா கோவைப்படுற? அப்பா இல்லாத உன் மகளுக்கு அப்பாவ தேட ஆரம்பிச்சுட்ட போல !” எனக் நக்கலாக  கேட்டான் .

“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் மரியாதையா  பேசுங்க ! பப்ளிக்னு பார்க்காம  அசிங்கமா பேசிட்டு இருக்கீங்க ? முதல்ல இங்க இருந்து கிளம்புங்க !”

“நாங்க அசிங்கமா பேசிறது இருக்கட்டும் ! முதல்ல உங்க மேடம் பண்ற அசிங்கத்துக்கு என்ன பெயர வைக்க போறீங்க ?”

அர்ச்சனா, ஏதோ வாய் திறக்க, அவளை அடக்கியவள், “அர்ச்சனா, அடிப்பட்ட நாய்,  கத்த வந்துருக்கு கத்திட்டு  போகட்டும்   விடு ! ” என்றதும், கோபம் அவனுக்கு சர்ரென்று ஏற ” யாரு டி நாயிங்கற ?”என்று எகிறினான்.

“இங்க, எங்கிட்ட எத்தனை பேர் பேச வந்திருக்காங்க மிஸ்டர் ஆதர்ஷன் ?” எனக் கிண்டலாக  மொழிய, பல்லை மேலும் பல்லைக் கடித்தான்.

“ஹேய் யூ ! என் வாழ்க்கைய அழிச்சிட்டு, நீ இன்னொருத்தன் கூட சந்தோஷமா இருக்க போல, இவன் எத்தனாவது ஆளு?” என பொது இடமென்று பாராமல் அவளை அசிங்க படுத்தி, அவளை கூனிக்குறுக வைக்க எண்ண, ஆனால் அவளோ எதற்கும் துணிந்தவள் போலவே நின்றாள்.

அர்ச்சனாவோ சாகரனுக்கு கால் செய்து ஸ்பிக்கீரில் போட்டாள், அவர்கள் இருவரும் அறியாத படி
அவன்  “ஹலோ ! ”  என்றவனுக்கு நிழலியின் பேச்சே விழுந்தது.

“நான் எத்தன ஆள வச்சிருந்தா உனக்கு என்ன? ஏன் உன்னால் முடியலன்ற கடுப்பா !” என்று அவனது ஆண்மையை சீண்ட, மேலும் வெறியனவன் “ஏய் ! நீ எல்லாம் பொண்ணா டி ?” என்று ஆதர்ஷனின் குரலைக் கேட்டதும், தனது நடையில் வேகமெடுத்தவன் பேசுவதை கேட்டுக் கொண்டே நடந்தான்.

“நான் பொண்ணா இல்லையா,  உங்கிட்ட நிரூப்பிக்கணும்  அவசியம் இல்லை மிஸ்டர் ஆதர்ஷன் ” என்றாள் அமர்தலாக, அவளை அத்தனை பேருக்கு முன் அவமானப் படுத்த முயன்றும் தோற்று தான் போனான் ஆதர்ஷன்.

“அப்ப , எவன் கிட்ட டி நிரூபிச்சிட்டு இருக்க? “

“ஏன் தெரிஞ்சுட்டு எங்களுக்கு விளக்கு பிடிக்க போறீயா? உன்னால அதை தவிர வேற என்ன பண்ண முடியும் ? ” பாவமாக  முகத்தை வைத்து மேலும் அவனது கோபத்தை தூண்ட, அவளை அடிக்க  கரங்களை உயர்த்தியவனின் கையை பிடித்துக் கொண்டான் சாகரன்.

“பொண்ண, பொது இடத்துல  அசிங்கமா பேசறவன் நல்ல ஆம்பளயே இல்ல !” என்றவன்” ஸ்ஸ்… நீ தான் ஆம்பளயே இல்லேல ” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல, அவனிடமிருந்து கையை உருவியவன் சட்டையைப் பிடித்தான்.

“யாரு டா ஆம்பள இல்ல?  ” 

“ஏன் கத்தி, உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கற ஆதர்ஷா ?கூல் மேன் கூல் ! ஃபரஸ்ட்  அவங்கள அனுப்பி வைச்சிட்டு பேசலாம் “என்றவன் அர்ச்சனாவிடம் கண்ணைக் காட்ட, அவளோ நிழலியை இழுத்துக் கொண்டு போனாள்.

“சாகரா , இவன் கிட்ட என்ன பேச்சு ? நீ வா ” என அவனது கைப்பிடித்து இழுக்க மேலும் ஆதர்ஷனுக்கு  எரிந்தது. ” நீ போ நிழலி நான் வறேன் ” அவள் கையை எடுத்துவிட்டு அனுப்பி வைத்தான்.

“என்ன ஆதர்ஷா, என்னையும் அவளையும் பார்க்கும் போது காந்துது போல !எஞ்சாய் மேன். நிழலிக்கு நீ பண்ண துரோகத்தை நினைச்சு உன்னை வெட்டி போடுறளவுக்கு கோபம் வந்தது தான்.  ஆனாலும் உன்னை கட்டி பிடிச்சு முத்தம் வைக்கவும் தோணுது !என்ன பண்ண?  ” என்றதும் புரியாமல் விழித்தான் ஆதர்ஷன்.

“என்ன புரியலயா ? நிழலி எனக்கு மட்டும் தான் சொந்தம் , அது தான் கடவுள் போட்ட முடிச்சும் கூட,  இடையில ஏதேதோ நடந்திருக்கலாம். ஆனால் இனி நான் நிழலிய விடமாட்டேன். ஒழுங்கா எங்க வழில வர்றாம போயிடு ! அது தான் உனக்கு நல்லது ” என்று மிரட்டி விட்டு நகர,

பெரிதாய் சிரித்தான் ஆதர்ஷன், ” நான் சாப்பிட எச்சில் இலை டா அவ, அதுல போய் சாப்பிட நினைக்கறீயே  வெட்கமா இல்ல, இதுல என்னை ஆம்பளயானு கேட்கற? ” என மேலும் சிரிக்க,

“கடவுள், எனக்கு படைத்ததை நீ ருசி பார்த்துட்டு எச்சில்ங்கறீயா ? ஒண்ணுக்கும் ஒதவாத நீ எல்லாம் பேசுற !” எனக் கேவலமாக, அவனை பார்த்தவன் “அவ மனுசு தான் எனக்கு வேணும். உன்ன போல தேவைய தீர்த்துட்டு கடந்து போறவன் நான் இல்ல . அவளை தேவதையா தாங்க போறவன். இனி எங்க வாழ்கையில தலையிடாத !” என்றவன் செல்ல, மேலும் வன்மத்தை தான் வளர்த்து நின்னான்.

மூவரும் அமைதியாக பயணிக்க, ஆதர்ஷனின் வருகை,  இருவருக்கும்  தனது கடந்த காலம் நினைவிற்கு வந்தது.

காற்று வீசும்