காற்று 12

பட்சிகளின் ஆரவாரத்தில் ஆதவனின் ஆட்சித் தொடங்கிய காலை வேளையது. நிழலியின் வீட்டில்,

நடுக்கூடத்தில் அனைவரும்  தங்களின் பணிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, சாகரன் உள்ளே நுழைந்தான்.

“ஹேய் சாகார… எப்படி இருக்க? அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு எங்களை எல்லாம் பார்க்காம போயிருக்க…” கிருஷ்ணன் செல்லமாக அதட்டி கேட்க,

“நான் நல்லா இருக்கேன்ப்பா, அன்னைக்கு  லேட்டா கிடுத்து உங்களை பார்க்க முடியாம கிளம்பிட்டேன்பா… நீங்க எப்படி இருக்கேள்? ”  கேட்டவாறு அவர் பக்கத்தில் அமர்ந்தான்.

“எனக்கென்னப்பா, நல்லா இருக்கேன், வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? என் மருமக கிட்டயே அசிஸ்டெண்ட்டா சேர்ந்திருக்க போலயே…!” அவன் தோளில் கையை போட்டு பேச,

“எல்லாரும் ஃபைன்ப்பா,  நேக்கு அவளை விட்டா யாரை தெரியும்? ரொம்ப நாள் கேப் விட்டிருத்து, சோ, யாரும் அசிஸ்டெண்ட்டா சேர்த்துப்பாங்கனு டவுட் அதான்…”என்றான்.

“ஆனாலும், உனக்கு தைரியம் தான் அண்ணா, அந்த அங்கிரி பேர்ட் கிட்ட அசிஸ்டெண்ட்டா  சேர்ந்திருக்கியே? ” சாகாரனின் அருகில் வந்த வாசு, “ஹவ் ஆர் யூ பிரதர், கதையில கொஞ்ச நாள் உன் பக்கத்தை காணோமே எங்க போன?”

“கொஞ்ச நாள் கேனடால இன்ஜீனியரா வேலைப் பார்த்தேன்… அப்றம் அப்பா வர சொல்லிட்டா, இந்தியா வந்துண்டேன். நேக்கு லாயர் ஆகணும் தான் ஆசை, அதான் நிழலிக்கிட்டயே அசிஸ்டெண்ட்டா சேர்ந்துண்டேன்” என்றே விளக்க, அவனை ஒரு மாதிரி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்,

“ஏன்டா அம்பி, நோக்கு உடம்பு நன்னா தானே இருக்கு? மேல் மாடில எதுவும் அடிகிடி பட்டுருத்தா?” எனக் சந்தேகமாக வாசு கேட்க,

“ஏன்டா வாசு அப்படி கேக்குற?நேக்கு என்ன நான் நன்னா தான் இருக்கேன்… நோக்கு என்ன பார்த்தால் எப்படி தெரியுது? “

“பைத்தியக்காரனாட்டம் தெரியுது போல மாமா?” மிதுரனும் அங்கு வர, “என்ன பேச்சு மிது இது?” தென்றல் அவனை அடக்கி விட்டு, சாகரனிடன் காஃபியை கொடுத்தார்.

“பின்ன என்ன அத்த, கேனடால வேலை பார்த்துட்டு, இங்க வந்து பிஸ்னஸ் ஆரம்பிப்பார் பார்த்தால், அக்கா கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்ந்திருக்கார், அதுவும் லாயராக… இதுக்கு பெயர் என்ன சொல்ல?” அவனும் விளக்கம் கொடுக்க,

“அப்படி சொல்லு மச்சான்… கரெட் எனக்கெல்லாம் கேனடா போக வாய்ப்பு  கிடைத்தால்,  போகங்கடா நீங்களும் உங்க கம்பெனியும் ஓடியே போயிடுவேன்…” என மனதிலுள்ளதை போட்டு உடைக்க, அனைவரும் வாசுவை தான் முறைத்தனர்.

“பார்த்தீங்களா மாமா, உங்க புள்ளையோட ஆசைய?” மிருதுளா போட்டு கொடுக்க, கிருஷ்ணன் அவனை  நெருங்கினார்.

‘ஐயோ வாசு வாயை விட்டுட்டீயே சமாளி…!’ என தனக்குள்ளே எண்ணியவன், தன்னை நெருங்கி வரும் தந்தையின் கையில் சிக்காமல் பானுமதியின் பின்னால் நின்றவன்,

“அப்பா, நான் அண்ணனுக்காக தான் சொன்னேன்.  நம்ம கம்பெனியில வேலை பார்க்கறத நான் பாக்கியமா நினைக்கறேன்… “என்று சமாளிக்க அங்கே சிரிப்பலைகள் தான்.

“சும்மா இருங்கப்பா, எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும்  பிடிச்ச வேலையா இல்லேன்னா எல்லாம் வேஸ்ட் தான்.சாகரன் அவனுக்கு பிடிச்ச வேலைய பார்க்கறான் . இதுல அவனுக்கு சந்தோசம் கிடைக்கதுன்னா  போதுமே…! என்ன சாகரா?” பானுமதி கேட்க, “சரி தான் அத்தை…” என அர்த்தம் பொதிந்த  பார்வை வீசினான்.

அங்கே அனைவரும் பேசிக் கொண்டிருக்க, சாகரனின் விழிகளோ தன்னவளை தான் தேடின… பீச் கலர் புடவை அணிந்து கருப்புகோட்டை கையில் பிடித்த படி தன் மகளுடன் கீழே இறங்கி  வர, அவள் மீது படிந்த பார்வையை மாற்றாமலே அமர்ந்திருந்தவன் எழுந்தே நின்றான்.

“சாகா…”என அழைத்துக்கொண்டே வேகமாக இறங்கினாள் அதிதி.

“அதிதி மெதுவா போ…”நிழலியும் கத்திக் கொண்டே வேகமாக இறங்கினாள். “சாகா…” அதிதி, அவன் காலடியில் வந்ததை கூட, அறியாமல் நிழலியை பார்த்தே நின்றான்.

“சாகா…” என அவன் வயிற்றில் ஒரு குத்துவிட, “அவுச்…”என்றவன் அப்போது தான் அதிதியைக் கண்டான், அவளோ  கோபமாக முகத்தை திருப்பினாள்.

“ஹாய் அதிதி குட்டி, எப்போ வந்தீங்க?” அவள் உயரம் அமர்ந்து கேட்க, அவன் காதருகே வந்து, “நீ உன் ஹார்ட் கார்ன் சைட் அடிக்கும் போதே வந்துட்டேன்” என்றவளை விழிகள் இடுங்க பார்த்தவன், என்ன சொல்வதென்று  தெரியாமல் வழிந்திட, “டோன்ட் வொரி நான் ஏர் பேபி  கிட்ட சொல்ல மாட்டேன்…” என்றாள் ஹஸ்கி வாய்ஸில்.

“தேங்க யூ, ஆமா உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும் பேபி?”அவளை தூக்கிக்கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க, ” அதுவா, தினமும் வாசு சித்தப்பாவும் மிரு சித்தியும் இதை தானே பண்றாங்க… எனக்கு இதெல்லாம் தெரியாது என்னை வச்சே இதெல்லாம் பண்ணுங்க…” என்று தலையில் அடித்துக் கொள்ள, அவன் சிரித்து கொண்டே, அவளுக்கு கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“என்ன ரெண்டு பேரும் ரகசியம்  பேசுறீங்க , கொஞ்சுக்கிறீங்க…?என்ன விஷயம்?” இருவரின் அருகே நிழலி வர,

“அது பிரண்ட்ஸ் குள்ள ஆயிரம் சீக்ரெட்ஸ் இருக்கும் பேபி, சில சுவீட் கிஸ்ஸஸ்  கூட இருக்கும், இதெல்லாம் நீ கேட்கக்கூடாது கேட்டாலும் நாங்க சொல்ல மாட்டோம் என்ன சாகா?” என்றிட, “எஸ் எஸ் பேபி… வீ  ஹாவ் சம் சீக்ரெட்ஸ், வீ டோன்ட் சேர் இட் பேபி…!” என்றான் அதிதியின் நெற்றி முட்டி.

“பட், அதிதி அம்மாகிட்ட நோ சீக்ரெட்ஸ் சொல்லிருக்கேனே…! அம்மா கிட்ட மறைக்கலாமா?” என போட்டுவாங்க, அதிதியோ யோசித்து விட்டு சாகரனை பார்க்க, அவனோ பாவம் போல முகத்தை வைத்து விட்டு”வேணாம்” என்றான்.

“ஏர்பேபி, சாகரன் ட்ரஸ்ட் மீ, சோ நோ சேரிங்க… சாகா வா சொல்லும் போது கேட்டுக்கோ…” இருவரையும் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமாக முடித்து வைத்தாள். சாகரன் மீண்டும் நெற்றியில் இதழ்பதித்து தன் மகிழ்ச்சியை தெரிவிக்க,  இருவரையும் சந்தேகமாக பார்த்து விட்டு, சாப்பிட அமர்ந்தாள்.

“இங்க பாரு சாகா, ஏர்பேபி ஒரு சஸ்பீசியஸ் அணிமல்(suspicious animal சந்தேகப் பிராணி)சோ, அவ கிட்ட  ஏதாவது பண்ணி மாட்டிக் காத, ஓகே …” மீண்டும் ஹஸ்கி வாய்ஸில்  பேசினாள், “ஓகே” என்றான்.

இருவரையும் சாப்பிட அழைத்தனர், அனைவரும் சிரித்து பேசி உண்டு விட்டு அவரவர் பணிக்கு  கிளம்பினர்.

“அத்தை, எனக்கு இன்னைக்கு சாப்பாடு குடுத்து விட வேணாம்,  கேஸ் விஷயமா தேனி போறேன். வர லேட்டாகும். அதிதிய மட்டும் யாராவது  ஸ்கூல்ல இருந்து  கூட்டிட்டு வந்திடுங்க…” என்றவள் அதிதியோடு வெளியே செல்ல, உடன்  சாகரனும் வந்தான்.

இன்றும் வாசுவோடு மிருதுளா செல்ல, “இன்னுமா உன் ஸ்கூட்டி சரியாகல ? ” முகத்தை சுருக்கி கேட்க, ” ம்ம்ம்… ஆமாக்கா”

“ஏன், என்ன பிரச்சனை அதுல?”

“தெரியலக்கா, நீ வேணா மெக்காணிக் கிட்ட போன் போட்டு கேளு, இப்போ எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண டைம் இல்ல …” அவன் காரில் ஏறி அமர்ந்திட, காரும் கிளம்பியது.

‘ சஸ்பீசியஸ் அணிமல்னு அதிதி சொன்னது சரியாத்தான் இருக்கு… வீட்ல உள்ளவாளே சந்தேக படுறா, இவள  எப்படி மாத்த போறேனோ சாகரா… !’ புலம்பிவிட்டு காரில் அமர்ந்தான்.

அதிதியின் முன் எதுவும் பேச வேணாம் என்றெண்ணி அதிதியோடு விளையாடிக் கொண்டே நிழலி மீது ஒரு பார்வையை வைத்தான்… அவளோ விவரங்கள் அடங்கிய  கோப்புகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

பள்ளியும் வர அதிதியை இருவரும் சேர்ந்து இறக்கி விட்டு மீண்டும் தேனியை நோக்கி பயணித்தனர்.

“நிழலி, உன் பிரச்சனை தான் என்ன?” மொட்டையாக கேட்க, அவளோ புரியாது விழித்தாள். ”  எனக்கு என்ன பிரச்சனை   ஐயங்கார்?” மீண்டும் அவனிடமே கேட்டாள்.

“வீட்ல உள்ளவாள சந்தேகப் படலாமா? அவ லவ் பண்றது வீட்டுக்கே தெரியும்… வாசு தான்  மிருவ கல்யாணம் பண்ணிக்க போறான் முடிவாயிடுத்து. அப்றம் ஏன் அவா சேர்ந்து போறத தப்பா பார்க்கற ? அப்படி பார்க்கறனால உன்ன தான் அவா தப்பா நினைப்பா, தேவையா இதெல்லாம் நிழலி…?”

“முடிவு தானே பண்ணிருக்காங்க, இன்னும் கல்யாணம் பண்ணலயே, அதுக்குள்ள ஏன் சேர்ந்து சுத்தனும்… ?கல்யாணத்துக்கு அப்றம் அவங்க ரெண்டு பேரும் எப்படி வேணாம் இருக்கட்டும் ,ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டும் பேரும்  இப்படி இருக்கறது எனக்கு சரினு படல… “

“அவங்க ரெண்டும் பேரும் தான் கல்யாணம் பண்ணிக்க போறானு முடிவான பிறகு , சேர்ந்து போறதுல என்ன தப்பாகிட போறது…?”

“நானும் அப்படி நினைச்சு தான் அவன் கூட போனேன்… நானும் அப்படி நினைச்சு தான் அவன் கூட…”என் தனக்கு நேர்ந்த  விபத்தை தொண்டை அடக்க அம்பங்கள் நீரை வார்க்க , முழுவதுமாக கூறமுடியாமல் அழுதாள்.

“நிழலி ரிலாக்ஸ் ” என்றே அவன் நீரை கொடுக்க, அதை அருந்தியவள் தன்னை சமன் படுத்த  முயன்றாள்.

“ஏமாத்தனும் எண்ணம் இருந்தால் கல்யாணத்துக்கு  முன்னாடி பின்னாடி னு யாரும் யோசிக்க மாட்டாங்க நிழலி… உண்மையான காதலும் இருக்கு டி. உனக்கு நடந்த வைத்து  காதலும் , காதலர்களும் இப்படி தான்  நினைக்காத, நீ பார்க்காத , உணராத காதல் இங்க அதிகம். அதை நீ பார்க்கும் போதும் உணரும் போதும் புரிஞ்சுப்ப…  வீட்டில இருக்கவாள சந்தேகபடாத நிழலி, அவா எல்லாரும் உன் மேல  மதிப்பு  வச்சிருக்கா… அதை நீ கெடுத்துக்காத…” என்றவன் வெளியே  வேடிக்கைப்  பார்த்தான்.

இருவருக்குள்ளும் பெருத்த அமைதியே இருக்க, அதை களைத்து கேஸ் விஷயம் பேசுவது போல அவளது  எண்ணத்தை திசை திருப்பினான்.