காற்று 10
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஆழ்வான் என்னும் பெயருடையவன், அகிலத்தை ஆழவே எழுந்தருளி, தனது கதிர்களை எங்கும் வியாப்பித்து இருந்தான்.
நீல நிற சேலையில் தங்க நிற பெரிய பாடர் வைத்த காட்டன் புடவை அணிந்து அந்தக் காட்டன் புடவைக்கு ஈடாக விறைப்பாக, தன் மகளை ஒரு கையிலும் மற்றொரு கையில் கருப்பு அங்கியையும் ஏந்தி வந்தாள்.
சேர்ந்து உண்ண, அவளுக்காக அவிழ்க மேசையில் அனைவரும் காத்திருந்தனர். நீள்விருக்கையில் தனது கருப்பு அங்கியையும் அதிதியின் பள்ளிப்பையையும் வைத்தவள், அவர்களை நோக்கிச் செல்ல, அதற்குள் கிருஷ்ணன், கையில் கொண்டு பைலை அவளிடம் நீட்டினார்.
“அந்த லெட்டர்ல இருக்க விஷயம் எல்லாம் உண்மை தான். அந்த ஊர் மக்கள் எல்லாரும் ரொம்பவே கஷ்டப்படறாங்க, கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ்.யோசித்து முடிவெடு மா…!” என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்தார்.
“மருமகளுக்கும் மாமனாருக்கும் பேச இந்த நேரம் தான் கிடைச்சதா ? பிள்ளைங்க இங்க பசியோட இருக்குதுங்க… வந்து சாப்பிடாம என்ன டிஸ்கஷன் அங்க ? ” தென்றல் சத்தம் போட, இருவரும் சிரித்துக் கொண்டே அவரை நோக்கி சென்றனர்.
“சாரி அத்த, ஒரு முக்கியமான விசயம் அதான் பேசிட்டே நின்னுட்டோம்…” மன்னிப்பு கோரி விட்டு அமர்ந்தாள்.
“எத்தனை முறை சொல்றது சாப்பிட்டு உங்க டிஸ்கஷன் வைங்கன்னு, மருமகளும் மாமனாரும் தான் கேக்கறது இல்ல…” அவர்களை குற்றம் சாட்டிக்கொண்டே பரிமாறினார்.
கையில் இருந்த பைலை திறந்து வைத்துக் கொண்டவள் சாப்பிட வாய் வைக்க, கையிலே ஒன்னு போட்டார் வெண்மதி.
“ஸ்ஸ்… ஆஆ மதி மா ” வலியில் முனங்கினாள். ” இப்ப தானே தென்றல், சாப்ட்டு பேசுங்க , என்னமும் செய்ங்க சொல்லுச்சி, அதுக்குள்ள புக்கை விரிச்சி வைச்சு சாப்பிடுற, அந்தந்த நேரத்துல அந்தந்த விஷயத்தை சரியா செய்யணும் நிழலி மா.
ஒரு நேரத்துல ரெண்டு வேலை செய்யணும் நினைக்காத, ரெண்டையுமே உன்னால் முழுசா முடிக்க முடியாது. ஒரு வேலைய முடிச்சிட்டு அடுத்த வேலைய் செய். உன்ன பார்த்து தான் உன் தங்கச்சி தம்பிகளும் உன் மகளும் கத்துப்பா…! ஒழுங்கா சாப்ட்டு அடுத்த வேலைய பாரு…” அதட்டி விட்டு செல்ல, அதிதியிலிருந்து அனைவரும் சிரித்தனர்.
“மிரு மாமா, நீ மெக்கானிக் தானே?” அதிதி மிருதனை பார்த்து கேட்க,
“ஃபயர்பேபி, இப்போதான் தான் அவன் படிக்கவே ஆரம்பிச்சுருக்கான். அதுக்குள்ள அவனை மெக்கானிக்னு முடிவு பண்ணாத, நாலு வருஷம் முடிச்சிட்டு வரட்டும், அப்ப அவன் என்னாவா இருக்கான் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம் ” என வாசு கேலி செய்ய,
“யோவ் மாமா, என்ன கிண்டலா, கையில் மார்க் வந்த நிமிசமே, நான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினீயர்னு முடிவு பண்ணிட்டேன். இந்த வருஷம் மட்டுமல்ல நாற்பது வருசமானாலும், நான் மெக்கானிக் தான்யா…” தன்னையும் தன்தொழிலையும் பெருமை பேசியவன், ” நீ சொல்லு ஃபயர் டார்லிங்,
இந்த மெக்கானிக் மாமா, உனக்கு என்ன செய்யணும்…” என வினவ,
“என் சைக்கிள் கேரி பேக் லூசா இருக்கு. அதை சரி பண்ணி கொடு…!” என்றாள்.
அவன் ஏதோ பெருசாக எதிர் பார்க்க, அவள் கூறியதில் புஸ் என்றானது. மற்றவர்கள் சிரிக்க, மிருதுளா,
“ப்ரதர், முதல் கஷ்டமரே, பெரிய வண்டி, அப்றம் லாயர் பொண்ணு பார்த்துக்க, அமௌண்ட கொஞ்சம்
அதிகமாகவே கரைந்திடு..! ” என்று கூறி கண்ணடிக்க, அவனும் கண்ணடித்தவன், அதிதியிடம், “ஒரு டென் தவுசன் ஆகும் பரவாயில்லையா டார்லிங்…” எனக் கேட்க,
“யோவ் மாமா, அதுக்கு நான் புதுசே வாங்கிடுவேன் யா…” தன் பிஞ்சு கையை நீட்டி சொல்ல, சற்று முன் அவன் பேசிய படிய அவளும் பேச, மீண்டும் சிரிப்பலைகள் தான் அசடு வழிய, நிழலியை பார்த்தான்.
“நீ என்ன பேசுறீயோ அதை தான் அவளும் பேசுவா, கொஞ்சம் பார்த்து பேசு ” என்று அவளிடம் சொல்லுவிட்டு கைகழுவ எழுந்தாள். பின் அதிதியை அழைத்துக் கொண்டு வெளிய வர, வாசுவின் காரில் மிருதுளா, ஏறச் சென்றவள், இருவரையும் பார்த்தது டாட்டா காட்டினாள்.
“எங்க டி உன் வண்டி ? இவன் கூட ஏன் போற?”
“வண்டிய சர்விஸ் குடுத்துருக்கேன்க்கா, அதான் மாமா கூட போறேன். பை…” என்றவள் அவள் பதிலை எதிர்பாராதது போல சென்று விட, அவர்கள் சென்ற திசையைப் பார்த்து நின்றாள்.
அவள் பார்வையை உணர்ந்த பானுமதி, பல்லை கடித்துக் கொண்டு, “எல்லாரும் உன்னை போல இருக்க மாட்டாங்க…! அதுங்க ஒன்னா போனாத்தான் என்ன? ரெண்டும் கட்டிக்க போறதுங்க தானே… எப்ப பாரு ரெண்டு பேரையும் சந்தேகமாகவே பார்க்கறது” என்று அவளை திட்டிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
அவர் கூறிய முதல் வாக்கியமே அவளை சுருக்கென தைத்து வலியைகொடுக்க, கைகளை இறுக மூடி தன் கோபத்தை கட்டுப் படுத்தியவள், விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்தவளால், இன்னும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
அவளை கண்ட, அதிதி, மூடி இருந்த இமைகளின் மேல் முத்தம் வைத்தாள். நிழலி விழிகளை திறக்க, அணையை திறந்ததும் விழும் நீர் போல கண்ணீர் கொட்ட, அதைப் பிஞ்சு விரலால் துடைத்தவள்,
“பேபி, பானு அப்படித்தான் நீ தானே சொல்லுவ, அப்போ ஏன் பீல் பண்ற…? மார்னிங்க அழுதிட்டே போனால் அந்த டே சரியா இருக்காது சொல்லுவ தானே… சோ அழாத பேபி” என்று கன்னத்தில் முத்தம் வைக்க, தன் மகளின் சமாதானம் பேச்சில் மொத்த கோபமும் வடிந்து போனது..
அவளை இறுக்க அணைத்து முத்தம் வைத்தவள் அவளை அமர்த்தி சீட் பெல்ட்டை போட்டு விட்டு புறப்பட்டாள். மகளின் கார் மறையும் வரைப்பார்த்து இருந்தவர், வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
‘ எப்படியாவது அவளுக்கு ஒரு நல்ல காலம் பிறந்திடாத ” என்ற இயலாமையில் அவளை வதைக்கவும் செய்கிறார்.
கார், அந்தப் பெரிய வளாகத்தினுள் நுழைந்தது. அதிதி, ஒரு பக்கம் இறங்க, இவளும் இறங்கி அவள் முன் அவளுயரதிற்கு அமர்ந்து வாயெடுக்க,
“பேபி, ஸ்டாப்… லஞ்ச புல்லா சாப்பிடணும், கிளாஸ்ல குட் கேர்ள் இருக்கணும், யாரையும் பீட் பண்ண கூடாது… ஐ னோ பேபி… தினமும் ஸ்லோகன் போல சொல்லிட்டே இருக்க, எனக்கு
ரைமிஸ் விட இது தான் மனப்பாடமா இருக்கு. உன்னோட எப்பையும் போர் பேபி…” எனத் தலையில் அடித்துக் கொள்ள, குழந்தையை போல முகத்தை சுருக்கினாள் நிழலி.
“ரெண்டு பேர்ல யார் பேபின்னே தெரியல… ? கான்பூஸ் ஆக்கிறீங்க பேபிஸ்…” என்று சாகரன் வர,
“சாகா…! “என்றழைத்து அவனது காலை கட்டிக் கொண்டாள். அவளை தூக்கி ஒரு சுத்து சுத்தியவன், தன் கைகளுக்குள் வைத்து கொண்டு நிழலியை நோக்கி வந்தான். அவனை இங்கு எதிர்பாராதவள், அவனது வருகையைச் சந்தேகமாக தான் பார்த்தாள்.
“சாகரா, இங்க என்ன பண்ற?
“நான் என் பிரண்ட பார்க்க வந்தேன்” என்றவன், ‘ உன்னை அல்ல இவளை ‘ என்று அதிதியை, காட்டி அவளைபார்க்க வந்தாகக் கூறினான்.
“சாகா, டெய்லி என்ன பார்க்க வருவீயா?” ஆசையாக கேட்கும் அதிதியின் நெற்றியை முட்டினான்.
“அவனுக்கு வேலை இருக்கும்.டெய்லி வந்து பார்ப்பான் எக்ஸ்பெக்ட் பண்ணாத அதிதி..! அண்ட் இது என்ன புது பழக்கம்…?” கொஞ்சம் கறாராகவே கேட்டாள்.
“கொஞ்சம் நிறுத்தறீயா ,என்னால அதிதிய தினமும் பார்க்க முடியும், மார்னிங் முடியலைன்னா , ஈவினிங் , அதுவும் இல்லேன்னா நையிட் நான் பார்த்துட்டு தான் போவேன்… நீ எங்களுக்குள்ள வராத …! ” என்றவன் அதிதியை நோக்கி,
“என் பிரண்ட் கேட்டு, மாட்டேன் சொல்லுவேணா? கண்டிப்பா, டெய்லி மை ப்ரசென்ஸ் இருக்கும் பேபி…” என்று கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“தேன்க் யூ சாகா”என்று கழுத்தை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள். மற்ற ஆண்களை கண்டு தூரம் செல்லும் அதிதி, பார்த்த இரண்டு நாளிலே அவனுடன் ஓட்டிக் கொண்டாள். அவனது மயக்கும் வித்தை அவளிடமும் பழித்தது.
“இந்தா பேபி…” என்று டேட்ஸ் பாக்கெட்டை அவளிடம் கொடுத்தான். அதைக் வாங்கி திருப்பி
பார்த்தவள், ” சாகா, நீ சாக்லேட்ட பார்த்து இருக்கீயா?”
“ம்ம்… பார்த்து இருக்கேன், சாப்பிட்டு இருக்கேன். ஏன் பேபி?”
“அப்படியா? ஆனா, நான் கேட்டது சாக்லேட் தானே? நீ என்ன வாங்கிட்டு வந்திருக்க?” என்று பல்லை கடிக்க,
” ஓ… அதுவா? சாக்லேட் அன்ஹெல்த்தி பேபி..
டேட்ஸ் தான் ஹெலத்தி. நம்ம பிரண்ட்சிப் போல, நீயும் ஸ்டாரங் இருக்கணும் இல்லையா, அதான் தினமும் ரெண்டு சாப்பிடணும், அதுவும் மார்னிங் , ஈவினிங் அண்ட் நைட் ஓகே?” என்று கட்ட விரலைக் காட்ட,
“ஓ.கே” என்று அதே போல செய்தாள். இருவரும் கதைகள் பேசியே நிழலி என்ற ஜீவனை மறந்தனர். அவளுக்கு கோபம் தான் வந்தது, இருந்தும் இடத்தை எண்ணிப் பொறுமை காத்தவள்,
“அதிதி, டைம்
ஆச்சி வா போலாம்…!” என்று கூறி தன் இருப்பை காட்டிக் கொண்டாள். ” ஒ.கே போலாமா?” அதிதியிடம் கேட்டு கொண்டே முன்னே நடந்து நிழலியின் பொறுமையை சோதித்தான்.
அவளை வகுப்பறையில் விட்டுவிட்டு, இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து வந்தனர்.
“நான் கார் ஓட்டுறேன்” சாவியை வாங்கிக் கொண்டு காரை எடுக்க இவளும் அமைதியாக மறுபக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.
அந்த சாலையில் கார் வழுக்கிக் கொண்டு சென்றது… சாலையில் விழிகள் இருந்தாலும் அவளது எண்ணம் சாகரனை சுத்தி இருந்தது.
“என்ன பேபி அமைதியா வர?”
“ஒன்னுல்ல” என்றாள். ஆனால் அதுவே அவனுக்கு அவள் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு என்று உணர்த்தியது. அவள் கேட்க போகும் கேள்வியை எதிர்கொள்ள தன்னை தயார் செய்துக் கொண்டான் .
மீண்டும் ஒரு அமைதி, அது புயலுக்கு முன் அமைதி என்று அவனுக்கு தெரியும்..” அடேய் சாகரா, இந்த புலி அமைதியா இருக்குன்னா, கண்டிப்பா பாயத்தான். மனச இரும்பாகிக்க சாகரா”
கிரேட் கரிகாலனை போல தனக்குள்ள சொல்லிக் கொண்டான்.
“உன் இன்டென்சன் என்ன?” சட்டென பாய்ந்துவிட்டாள்( கேட்டுவிட்டாள்) பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தியவன் அதிர்ந்து “வாட்…?”என்றான்.
“உன் இன்டென்சன் என்னனு கேட்டேன்…?” என்றாள் மீண்டும்.
“இன்டென்சனா? என்ன கேக்குறனு எனக்கு புரியல…”என்றான்.
“புரியும் படியாவே கேக்குறேன், என்னை தேடி வந்ததுக்கான உன் இன்டென்சன் என்ன?” எனக் கேட்க, தனக்குள் எழுந்த கோபத்தை ஸ்டேரிங்கில் காட்டினான்.
“இன்டென்சன்…” மீண்டும் சொல்லிக் கொண்டவன் அவள் புறம் திரும்பி “உண்மைய சொல்லட்டுமா? இல்லை பொய் சொல்லட்டுமா?” எனக் கேட்க, அமைதியாக இருந்தாள்.
“உண்மையே சொல்றேன். என் நிழலிய, என் தோழிய பழய படி மாத்த தான் வந்தேன். அதான் என்னோட இன்டென்சன் போதுமா…” என்றான்.
அவள் ஏதோ வாயெடுக்க, அதை தடுத்தவன், ” உன் லைப் பார்க்காமல் எதுக்கு என்ன மாத்த நினைக்கணும் தானே கேக்க போற…?” எனவும்” ஆம்” தலையை ஆட்டினாள்.
“ஒருவாட்டி செஞ்ச தப்பே என்னை கொன்னுட்டு இருக்கு. மறுபடியும் அதே தப்ப என்னால செய்ய முடியாது. உனக்கு ஒரு நல்லது நடக்காம, நேக்கு எந்த நல்லதும் வேண்டாம். என் நட்பு என்ன சும்மா பாசிங் கிளைவுட் நினைச்சீயா, காலேஜ் முடிஞ்சதும் யாரோ எவரோ போக, என்னோட பெஸ்ட் பிரண்டு டி நீ…!அப்படியே விடவும் முடியாது” என்றவன், மீண்டும் கோபத்தில்” என்ன இன்டென்சன் கேட்டேல நீ?
ஏழு வருஷமா உன் கிட்ட எந்த இன்டென்சனோட பழகுனேனோ அதே இன்டென்சனோட தான் இப்பையும் பழகுறேன். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லேன்னா என்னை ஃபயர் பண்ணிடு!” என்றான்.
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை… ” வண்டியை எடு!” என்றாள். விழி விழும்பில் விழிநீர் திறள, உதட்டின் விழும்பில் புன்னகை அரும்பியது அவனுக்கு.
அவன் சொன்னது அனைத்தும் உண்மை தான், ஆனால் காதல் என்று வரும் இடத்தில் நட்பை போட்டு உள்ளிருக்கும் அனைத்தையும் கொட்டி விட்டான். ஆனால் நட்பல்ல காதல் தான் என்று அவளுக்கு தெரிய வந்தால் அவனது நிலைமை தான் என்னவோ?
இங்கோ ஒரு ஊரே நிழலியின் பதிலுக்காக காத்திருந்தனர்.