காதலின் அரங்கேற்றம்

அரங்கேற்றம்…

“பாஸ் பாஸ்…. ப்ளீஸ் என் பைக் ரிபைர், அர்ஜெண்ட்டா காமராஜர் சாலையில இருக்க, கமெர்ஸ் ஹாலுக்குப் போகணும் ப்ளீஸ் சார்…” என வழியில்,  இரு சக்கர வாகனத்தில் வந்தவனை வழி மறித்தான் அவன்.

“சரி பாஸ், நானும் அங்க தான் போகணும், ஏறுங்க..” என்றான்.
அவனும் ஏறி அமர,  வண்டியை எடுத்தான்.. 

அண்ணா நகர் சாலையில் வண்டி சீறிப் பாய்ந்தது. ” எதுக்குப் பாஸ் அங்க? ” என இயல்பாக பேச ஆரம்பித்தான் வருண்.

” பாஸ், அங்க இன்னக்கி என் கசினோட பரத நாட்டியம் அரங்கேற்றம்.  நான் நேரத்துக்கு போகல, அப்றம் பரத நாட்டியம் ஆட மாட்டா, ரம்யா கிருஷ்ணன் போல காளியாட்டம் தான் ஆடுவா கொஞ்சம் சீக்கிரமா போங்க பாஸ்..” என்றான் ராம்..

” எத்தனை மணிக்கு அரங்கேற்றம் பாஸ்?” 

” அதுவா, ஆறு நுப்பதுக்கு ஸ்டார்ட் ஆகும் பாஸ். கொஞ்சம் சீக்கிரமா போங்க” என்றான் கொஞ்சம் பதட்டத்தோடு. 

” பாஸ் மணி எத்தனை பார்த்தீங்களா? ” அவனை மேலும் பயமேற்றிவாறு.

” பாஸ், மணிய பார்த்தா, பயம் அதிகமாகும் ன்னு நான் பார்க்கல பாஸ்…” என்றான் நகத்தைக் கடித்துவாறு.

“மணி, செவன்திர்ட்டி… பாதி ப்ரோக்ராம் முடிஞ்சுருக்குமே..” என்றதும் அவன் முதுகில் முகம் புதைத்தவன், ” ஐயோ, போச்சே, அந்தப் பிசாசு இன்னக்கி நையிட் தனியா அரங்கேற்றம் நடத்துவாளே! போச்சு போச்சு…” என கைகளை உதறியவாறு…

” ஆல் தி பெஸ்ட் பாஸ்… ஆமா, கசின்னா, தங்கச்சியா பாஸ்? ” எனவும்
” தங்கச்சி இல்ல, பாஸ் இவ அதுக்கும் மேல… “என்றான் வருணோ கண்ணாடி வழியே அவன் முகத்தைப் பார்த்தான், ராமோ நகங்களைக் கடித்தவாறு வெட்கம் கொண்டான்.

” பாஸ்,என்ன பண்றீங்க? இப்படி எல்லாம் பண்ணாதீங்க, அப்றம் அரங்கேற்றத்துக்கு போக முடியாது அசுபத்திரிக்குதான் போகணும்.. 
ப்ளீஸ் பாஸ்..” கண்ணாடி வழியே  கெஞ்ச, ” ஓகே ஓகே..” என்றான் சலிப்போடு

” அப்ப, லவ்வரா பாஸ்? ” என்றதும் ” ஆமா, பாஸ் அத்தைப் பொண்ணு, சின்ன வயசிலுருந்தே லவ் பண்றோம். அவ படிச்சுட்டு இருக்கா, நான் வேலைத் தேடுறேன்.. ரெண்டும் முடிஞ்சதும் கல்யாணம் தான்..”என்றான் கனவுகளோடு..

” வாழ்த்துக்கள் பாஸ், அப்றம் உங்க ஆள் பேரு என்ன பாஸ்? “

“தேவா, தேவதர்ஷினி.. ” 

” நைஸ் பாஸ், …” என்றான்..

” ஆமா பாஸ், நீங்களும் அங்க தானே போறேன் சொன்னீங்க? அங்கன்னா அங்கதான் போறீங்களா?” என ராம் கேட்க,

” ஆமா பாஸ், என் ஆளும் அங்க தான் அரங்கேற்றம் பண்றா? நானும் அங்க தான் போறேன். ஏற்கனவே லேட்டுன்னு வேகமா போறேன் பாஸ்… ” என்றான் கொஞ்சம் பயம் கலந்த, பூரிப்போடு, 

” செம் பிஞ்சு, பாஸ்… அப்ப உங்களுக்கும் ஒரு  தனி அரங்கேற்றம் இருக்கும் போல? ” களிப்போடு கேட்டான் ராம். வருணுக்கோ  உள்ளே பய பந்து உருள வெளியே தலை குனித்தான். 

” ஆமா, பாஸ், இன்னக்கு இருக்கு… ப்ளாக்ல போட்டுருவா பாஸ்… அப்றம் கால்ல விழுந்தால் தான் ப்ளாக் எடுப்பா!” என்றான் பாவம் போலே,

” பிளாக் அப்ஷன் கண்டு பிடிச்சவன் மட்டும் கிடைக்கட்டும் இருக்கு அவனுக்கு” என்றான் ப்ளாக் வாங்கும் சங்கத்தலைவர்.. அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்  வண்டியை நிறுத்தினான்..

இருவரும் அடித்து பிடித்து ஓடிவர, அங்கே தேவாவும், ராகவியும் தனி தனியாக பரதநாட்டியம் ஆடிவிட்டு இப்போது சேர்ந்து ஆடத் தொடங்கி இருந்தார்கள்.

ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அபிநயத்தோடு தனது திறமையை அரங்கேற்றினார்கள்.

இருவரும் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டனர். ராம், ” அந்த ரெட் உங்க ஆளா பாஸ்…”
” அந்த ரோஸ் சிஸ்டரா பாஸ்? ” எனவும் ஒரு வெட்கம் புன்னகைப் புரிந்தான்..
அங்கு இருவர் மட்டும் தான் ஆடிக் கொண்டு இருந்தனர்…

பாடல் முடிய மேடை எங்கும் கரகோசம் தான்..

ராமின் மொத்த குடும்பமும் அங்கிருந்தது, ” அடேய் அண்ணா, எப்போ வந்த?” அவன் தங்கை கேட்க, ” நான் ஸ்டார்ட்டிங் வந்துட்டேன்” என்றான்.

” அப்படியா, அப்போ நான் என்ன பாட்டுக்கு ஆடுனேன் சொல்லு?” என கையைக் கட்டி ஜாம்பாய் கேட்டாள் தேவா

” அது … அது…. மார்கழி திங்கள் அல்லவா…” என்றதும் மொத்த குடும்பமும் தலையில் அடித்துக் கொண்டு, கை விரித்துச் சென்றனர்.

அவனை தன் தீப் பார்வையால் எரித்தாள், ” சாரி தேவா, சீக்கிரமா கெளம்பிட்டேன் டி, வரும் போது பஞ்சர் வேற பைக்கை ஓரமா நிறுத்திட்டு லிஃப்ட் 
கேட்டு வந்தேன். என் பைக் எந்த நிலமையில் இருக்கோ” என அவன் பைக்கிற்காக வருத்தம் கொள்ள, மேலும் முறைத்தவள், ” அந்த ஓட்ட பைக்கை, ஒரு நாய் கூட சீண்டாது… எங்க விட்டியோ அங்க தான் இருக்கும், நீயும் திருந்த போறதில்லை, பைக்கையும் மாத்த போறதில்லை, ரெண்டையும் வச்சிட்டு நான் தான் கஷ்ட பட போறேன்.. “என்றாள் தலையில் அடித்துக் கொண்டு…” ஈஈ .” என வழிய அவன் தலையில் குட்டு வைத்தாள்.

” அப்பாடா என் பேபி சமாதானம் ஆயிட்டா, ” என்றதும் சிரித்து விட்டாள்.. அவர்களுக்கு என்று அது ஒரு கோட் வோர்ட் 

” ஆமா என்கூட வந்த மனுஷன் என்ன ஆனார் தெரியல வா போய் பார்க்கலாம். ” என அவளை அழைக்க” யாரு டா அது? “

” அது வா எனக்கு லிஃப்ட் கொடுத்து காப்பாத்தின மனுஷன், உன் பிரண்டோட லவ்வர். அவர் எந்த நிலையில இருக்காரோ”  என்றே பார்க்கச் சென்றான் ராம்.

வருணோ, ராகவியின் காலுக்கடியில் இருக்க, இருவர் மட்டுமே இருந்த அறையில் இவர்களும் நுழைய வருணைக் கண்டு சிரித்தான், ” என்ன பாஸ் விழுந்துட்டிங்க?”

” வேற வழித் தெரியல , என்னால தனியா ஒரு அரங்கேற்றம் பார்க்க முடியாது பாஸ்… ” என்றான் காலுக்கடியில் இருந்தவாறு..

” மானத்தை வாங்காம எந்திரிடா ” என்றதும்  சட்டையைச் சரிசெய்துக் கொண்டு மீசையில் மண் ஒட்டாதவாறு கெத்தாக நின்றான் .

” பெரிய நடிகன் பாஸ் நீங்க, உங்க கிட்ட இருந்து கத்துக்கணும் ..” என்றான்.

“எது, அப்ப, அப்ப, தப்பு செஞ்சு கால்ல விழுகிறதயா மிஸ்டர்..” என்றாள் ராகவி, தேவா சிரிக்க இருவரும் அசடு வழிந்தனர். 

” விடு ராகு, போலச்சி போகட்டும் இந்த முறை விற்றுலாம்..” என்றதும் வருணும் ராமும் கண்ணாடித்து சிரித்துக் கொண்டனர். 

அதன் பின் இருவருமே தன் காதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினர் தன் காதலியோடு..