கலைந்த ஓவியமே

அத்தியாயம் ஒன்று

உருவ கேலிகள் நமது அனைவரது பேச்சு வழக்கிலும் கலந்திருக்கிறது. குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என எதாவது ஒரு தருணத்தில் நாமும் அத்தகைய சொற்களைப் பிறர் மீது வீசி இருக்கலாம். நாம் வீசிய சொற்கள் அந்த நபரை பாதித்து இருக்குமா? இல்லையா? எனச் சிந்திப்பதற்குக் கூட இடம் தராமல் அந்தத் தருணங்களைக் கடந்திருப்போம்…

****”ஹலோ மகிமா., நான் நவின் பேசறேன்…” என்ற குரலில் இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.அது எதற்கென ஆராய்ச்சி செய்யும் மனநிலையில் தான் அவளில்லை. “லைன்ல இருக்கியா இல்லையா,..” என்ற அதட்டல் குரலில் தன்னிலைக்கு வந்தவள் “சொல்லுங்க கேட்குது…” என்றாள் வரவழைத்தக் கோபத்துடன். “எதுக்கு வேண்டாம்னு சொன்ன…” எனப் பற்களை கடித்தபடிக் கேட்டான்”இங்க பாருங்க அது என் விருப்பம், பிடிக்கலன்னா பிடிக்கலன்னு தான் சொல்ல முடியும்…” என்றாள் கட்டமாக”அதான் ஏன் என்னை பிடிக்கல…” அதே கேள்வியில் நின்றான். “ஏன் பிடிக்கலன்னு உங்களுக்கே தெரியும். உங்க வீட்டுல ஆள் உயர கண்ணாடி இருந்தா பாருங்க…” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.. அவள் அப்படி கூறியதும் கண்மண் தெரியாதளவிற்கு கோபம் வந்தது அவனுக்கு, அவள் கூறியதை போலவே அவன் அறையில் இருக்கும் ஆள் உயர கண்ணாடியின் முன் நின்றான். அவனை பார்த்து அவன் உருவம் கேலி செய்து சிரிக்க, மேசையிலிருந்த தண்ணீர் குவளையை கையில் எடுத்தவன் தன்னை பார்த்து சிரிக்கும் தன் உருவத்தின் மீது தண்ணீரை ஊற்றினான்.ஜஸ்ட் குட்டி டீஸர், தாமதத்திற்கு மன்னிக்கவும்… இனி பரிஜாதமும் பூக்கும்…