கலைந்த ஓவியமே 9

இரண்டு மிடறு பருகிய பின் “போதும்…”  என தலையாட்டி வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.

“ஐயோ என் செல்லம்…” எனக் கொஞ்ச வேண்டுமென தோன்றியது நவினுக்கு…

அவன் மனம்  போன போக்கை நினைத்தவனுக்கு ஐயோவென்றானது. ‘அவள் மேல் உனக்கு இருப்பது காதல் இல்லை,வீட்டில் பார்த்த பெண் என்பதால் உண்டான ஈர்ப்பு  ((அதை ஈர்ப்பு லிஸ்டில் கூட சேர்க்க கூடாது, வேண்டுமென்றால் ஜஸ்ட் சைட்டிங் லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம் என ரீடர்ஸ் கழுவி ஊற்றியதும் நினைவு படுத்த வேண்டுகிறேன்))…” என தனக்கு தானே ஆயிரம் முறை கூறிக் கொண்டது நினைவில் வர பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சாரி முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் முறைப்பைத் துளியும் கண்டுகொள்ளதவன் அவளை என்னவென்பது போல் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அவனுக்கும் தனக்குமான இடைவெளியை அவனைப் போலவே கண்களால் சுட்டிக் காட்டினாள்.

அவளின் கண்களின் பாசையில் நிமிடமேனும் விழுந்து எழுந்தவன் சற்று தள்ளி நின்றான். அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த தங்களின் கேபினிற்குள் நுழைந்துக் கொண்டாள். 

அவள் உள்ளே சென்றதும் கேபினுக்குள் நுழைய கால்கள் பரபரத்தாலும் சிறிது நேரம் அவளை தனியே விட நினைத்தவன் சேல்ஸ் மேனேஜரின் கேபினை நோக்கி நடந்தான்.

அங்கு அக்கவுண்டன்ட் பேரரசும், சேல்ஸ் மேன் மாப்பிளை மீரானும் இருந்தனர். இவன் அவர்களின் கேபினிற்குள் நுழைந்தும்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்காதல் என்று அர்த்தம்… என மீராணும், பேரரசுவும் பாட,

“அடிங்க…” என்றபடி டேபிளில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை அவர்களின் மீது எறிந்தவன் “என்னங்க டா…”  அவர்களின் பாடலுக்கு சிரிக்க துடித்த இதழ்களை அடக்கியப்படிக் கேட்டான்..”அதான் பார்த்தோமே, அவங்க முறைக்கறது என்ன?? நீங்க அவங்களேயே பாக்கறது என்ன?? …” என மீரான் ஆரம்பிக்க “அட அட அப்படியே பாக்க சிவாஜி கணேசன் சாரையும் , பத்மினி மேடத்தையும் பார்த்த  மாதிரியில்ல  இருந்துச்சி…” என பேரரசுக் கூறி முடித்தப்படி இருவரும் ஹைபை அடித்துக் கொண்டு சிரித்தனர்.

இடுப்பில் கைவைத்து இருவரையும் பொதுவாக முறைத்துப் பார்த்தவன் “அவங்க ஏதோ டிஸ்டப்பா தெரிஞ்சாங்க டா, அதான் தண்ணி கொடுக்க போனேன்…” என பதில் கூற, இருவருமே  ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டு  மீண்டும் நவினைப் பார்த்து “நம்பிட்டோம்…” எனக் கத்தினார்கள்.

“ஸ்…” என சுண்டு விரலை காதில் வைத்து அடைத்தவன்

“பூவுக்கு பயந்து பூச்சாண்டிங்க கிட்ட மாட்டிகிட்டேன் போலயே…” என முனகிக் கொண்டே அறைவாசலை நோக்கி நடந்தான்.

அவன் அங்கிருந்து வெளியேறினாலும்   பேரரசின் சிரிப்பும், மீரானின் சிரிப்பும் கேட்க தான் செய்தது… 

நவினின் அறை இரண்டு புறமும் கண்ணாடிகளைக் கொண்ட அறை என்பதால் இவர்களின் கேலி மகிக்கு தெரியாமல் தான் போனது. ஆனால் அறைக்கு வெளியில் வந்தவனின் சிரிப்பு நன்றாகவே அவளுக்கு தெரிந்தது…

ஆம் பாதியில்  பாதியில் விட்டு சென்ற வேலையை முழுவதும் முடித்தாள். அவள் வேலையை செய்து முடிக்கவும் சேல்ஸ் மேனேஜரின் கேபினிலிருந்து நவின் சிரிப்போடு வெளியில் வரவும்  சரியாக இருந்தது.

சிறிது தூரத்தில் இருந்து வந்து கொண்டிருத்தவனை இமை தட்டாமல்  பார்த்துக் கொண்டிருந்தாள் மகி.. அவளின் கண்கள் அவனின் அல்லி விழிகளை மட்டுமே பார்த்தப்படி இருந்தது.

அடித்துக் கூறினால் கூட இவனுக்கு மாறு கண் இருக்கிறது என நம்பமாட்டார்கள்.  நவின் ஸ்பெக்ஸ் அணிந்து இருந்ததால் அதிகம் அவனின் பார்வையின் மாற்றம் வெளியே தெரியவில்லை…

நன்றாக ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே அவனின் கண்களில் வேறுபாடு இருக்கிறது என அறிய முடியும். மற்றபடி அவன் கண்கள் மற்றவர்களை போல சாதாரணமாக இருப்பது போல் தான் தெரிந்தது.

ஒருவருக்கு இதுதான் குறை எனக் கூறிவிட்டாள் போதும் அதை நிச்சியம் நம் மனம் ஆராய்ச்சி செய்யும். இதோ தற்போது மகி செய்து கொண்டிருப்பதை போல…  அவளுக்கு மட்டுமல்ல நம் நிலையும் இதுதானே ஒருவனுக்கு வாய் பேச முடியவில்லை என தெரிந்தாலே போதும் அவனுக்காக பரிதாப படுகிறேன் என்ற பெயரில் அவனையே தான் நாம் அதிகம் கவனித்துக் கொண்டிருப்போம்… சிலர் ஆதங்கத்தில் பாக்கிறார்கள் என்றால் சிலர் அலட்சியத்தில் பாக்கிறார்கள்… இப்படிப்பட்டவர்களை அவனவர்கள், அவளவர்களின் கண்களுக்கு மட்டும் தான் அவன் சக மனிதனாக பார்க்க படுகிறான்… மகியின் பார்வை இதில் எது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

“பிளேன் ஃபினிஸ் ஆயிருச்சா…” என்ற குரலில்  வேகமாக துடித்த இதயத்தினை தடவிக் கொண்டவள்.  வாயிற் கதவை பார்த்தாள்.

‘ அதுக்குள்ள இங்க எப்படி…’ என நினைத்த மனதிடம்

‘ நீ அவன் கண்ணை ரசிச்சு பார்த்துட்டு இருக்கற வரைக்கும் நடந்துட்டே இருக்க இது என்ன ஹிந்தி சீரியலா…’ என மற்றொரு மனம் பதில் சொல்ல

‘ நான் சும்மா தான் அவன்

  பாத்தேன்.நான் ஒன்னும் அவனை ரசிக்கல, அவன் வாய்ஸ் அவர் வாய்ஸ் போல இருக்கேன்னு பார்த்தேன்…” என  மனதிற்கு பதில் கூறியவாறே எதிரில் இருந்தவனைப் பார்த்து”ஹான் முடிஞ்சுது சார், ஏதாவது  கரெக்சன் இருந்தா சொல்லுங்க… சேங்ச் பண்ற” எனக் கூறினாள்.

“ஒகே காட்டுங்க…” என்றபடி  சிஸ்டத்தை தன் புறம் திருப்பி சில  மாற்றங்களைக் கூறியவன் தான் இருக்கையில் அமர்ந்தான்.

அவன் கூறிய மாற்றங்களை சில நிமிடங்களிலயே செய்து முடித்தவள் அவனைப் பார்த்தாள்.  அவனோ வழமை போலவே ஏதோ  சிஸ்டத்தில் பார்த்துக் கொண்டிருத்தான். இப்போதும் அவளின் கண்கள் அவனை இமைக்காது பார்த்தது ஏனோ இவனின் குரல் அவனை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. 

***********

ஒரு சிலருக்கு நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதே பல சமயங்களில் தெரியாது…  அந்த தவறை யாரோ ஒருவர் எடுத்துக் கூறினாலோ அல்லது அவர்களின் தவறை சுட்டிக் காட்டினாலோ மட்டும் தான் அந்த நபருக்கு தான் செய்தது தவறு என்பதே தெரியும்.

அதுவரை அவர்கள் செய்யும் செயல்களனைத்தும் சரியென மட்டுமே எண்ணுவார்கள்… அதே நிலையில் தான் இப்போது நிவேதாவும் சரவணாவும் இருந்தனர்.

சரவணனுக்கு நிவேதா திட்டும் வரை  தன்னுடைய செயலும், பேச்சும் சரியா

தவறா எனப் புரியவில்லை.
சொல்லபோனால்  எந்த உரிமையில் அவளிடம் இப்படியெல்லாம் பேசுகிறோமென கூட அவள் அவனைக் கண்டிக்கும் வரை தெரியவில்லை,

( தவறா??? இல்லை அது என்னவென பெயர் தெரியவில்லயா என அவனே அறிவான்)

தன் வலது காலை மரத்தில் வைத்து இடது காலை தரையில் ஊன்றி லேசாக சாய்ந்து அமர்ந்தவனின் கண்கள் என்னவோ காட்டில் வேலை செய்பவர்களைப் பார்த்தபடி இருந்தாலும் அவனின் கவனம் என்னவோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவளின் மேல் தான் இருந்தது…’வீட்டுக்கு போனதும் கால் பண்ணுங்க தம்பி…’ என சிவகாமி கூறியனுப்பியதால் அவருக்கு அழைத்தான்.

போனில் பேசியது என்னவோ நிவேதா தான். குரலைக் கேட்டதுமே நிவேதா தான் பேசுகிறாள் என உணர்ந்து  சாதாரணமாக தான் ஆரம்பித்தான்.  ஆனால் நிவேதாவோ இவனை யாரென தெரியவில்லை எனக் கூறிட  வேலையாட்களை ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து மெல்ல நடந்துக் கொண்டே

” பாருடா பொண்டாட்டிக்கு மரியாத பேச கூட வருது…” என அவளை  சீண்டினான்.

அவளின் மற்ற பேச்சை விட படிக்காதவன் என்பது இவனின் மனதில் ஆழ்ந்து பதிந்து போனது

“படிக்காத உனக்கெல்லாம் படிச்ச நான் வேணுமா…” என அவள் திட்டியதும் தன் தகுதி என்ன என்பதை உணர்ந்துக் கொண்டான்… அவள் கூறுவதும் உண்மை தானே படித்த அவளுக்கும் படிக்காத எனக்கும் ஏணி என்ன மாடிப்படி கட்டினால் கூட எட்டாதே என நினைத்தவனுக்கு ஏனோ மனம் வலித்தது… ஏன் இந்த வலி என ஆராயும் முயற்சியை அவன் எடுக்கவில்லை என்பதை விட அடுத்து அவளின் உதாசீன பேச்சு அவனை மேலும் யோசிக்க விடவில்லை. “இப்ப எல்லாம்  விவசாயத்தை வைச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது, மழை வந்தா தான் சோறுன்னு இருக்கறவனை எப்பிடி  இந்த நிவேதா கல்யாணம் பண்ணிப்பாண்ணு நினைச்ச…” எனக் கோபமாக கேட்டாள்… இத்தனை நேரம் அவனை உதாசீனம் செய்ததுக் கூட  கோபம் வரவில்லை, ஆனால் அவன் குலதெய்வமாக வணங்கும் விவசாயத்தைப்  பற்றி உதாசீனமாக பேசவும் அத்தனைக் கோபம் வந்தது… நிச்சியம் அவளுக்கு பதில் கூறிவிட வேண்டும் என்ற முனைப்பில் அடுத்து பேச வாய் திறக்கும் முன்பே  ‘நீ அவளிடம் உரிமையாக  பேசாது இருந்திருந்தால் அவள் ஏன் உன்னையும், உன் தொழிலையும் உதாசீனம் செய்ய போகிறாள். உன்னால் தான் அவள் அப்படி பேசுகிறாள்…” என இவனின் மனம் குற்றம் சாட்டியது.

இருந்தும்  அவளின் உதாசீன பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என நினைத்தவன் சட்டென அங்கிருந்து விலகி நின்றப்படி அவளுக்கு பதில் கூற எத்தின்னுக்கும் வேளையில் “மாமா…” என அழைத்தப்படி அவனின் பின்னால்  கட்டிக் கொண்டாள் பூங்கொடி.

சட்டென நிகழ்ந்த அணைப்பால் கை நழுவி அலைபேசி கிழே விழுந்து ஸ்விட்ச் ஆப் ஆனது…  அலைபேசி கிழே விழுந்ததால் நிவேதாவிடம் பதில் கூற முடியாது போக, தன் பின்னால் கட்டிக் கொண்டவளை அவள் கட்டியணைத்த வேகத்தை விட தன்னிலிருந்து பிரித்து எடுத்தான்.

“ம்ம்…” என சினுங்கியப்படி நின்றவளின்  கன்னம் வழக்கம் போலவே அவனின் கை வண்ணத்தில் வீங்கிப் போனது மட்டுமல்லாமல் அவளின் இதழ்கள் கிழிந்து செந்நீரை வெளியேற்றியது.

“வெட்டிருவென் ராஸ்கல், வீட்டுல தான் இப்படி பண்ணிட்டு இருந்தேன்னா இப்ப நாலு பேரு வேலை செய்யுற காட்டுலயே வந்து கட்டிப்பிடிச்சுட்டு இருக்க, கொஞ்சமாவது ஏதாவது  இருக்கா இல்லையா, நானும் ஆயிரம் தடவை சொல்லிட்டேன் நீயும், மகியும் வேற வேற இல்லைன்னு ஆனா அதை காதுல கூட வாங்க மாட்டற, அப்படியே வந்து மோதற, வாயில நிறையா வருது, இதுவே நீ இல்லாம வேற யாராவது இருந்தா நான் கேட்கற வார்த்தையே வேற மாதிரி இருந்திருக்கும். இப்பவே இது எல்லாத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வைக்கிறேன்…” என்றவன் கிழே விழுந்த அலைபேசியை கையில் எடுத்தப்படி விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான்…

பூங்கொடியின் செயலால் அவனின் உள்ளம் உலைகனலாக கொதித்துக் கொண்டிருந்தது . ஆனால் அவனின் மற்றொரு மனமோ அதற்கு நேர் மாறாக கேள்விகளை எழுப்பியது

“உன்கிட்ட ஒருத்தி  உரிமையா நடந்துக்கறான்னு இப்படி அடிச்சுட்டு வர, அப்ப நிவேதா கிட்ட நீ நடந்துக்கிட்டது மட்டும் சரியா…??? பூங்கொடிக்கு நீ மாமன் முறை வேணும் அதனால பூங்கொடி உன்கிட்ட உரிமையா நடந்துகிட்டா,  ஆனால் நிவேதாகிட்ட எந்த உரிமையில பொண்ட்டாட்டி ன்னு சொல்லிட்டு வந்த…” எனக் கேட்க, விறு விறுவென நடந்துக் கொண்டிருந்தவனின் வேகம் சட்டெனக் குறைந்தது…

‘ஏன் அவளிடம் மட்டும் அதிக உரிமை எடுத்துக் கொண்டோம்,..’ என தனக்கு தானே கேள்வி கேட்டான்.

‘ வெறும் உரிமை மட்டுமா எடுத்து கொண்டாய்…’ அவனின் அழைப்பை நினைவுப் படுத்த நொந்தே போனான்… 

சொல்லபோனால்  நிவேதா கண்டித்த பின்  தன் தவறை உணர்ந்தான் என்றால் பூங்கொடி அணைத்த பின் தான் நிவேதாவின் மேல் அவனுக்கு வந்த உணர்வையே உணர்ந்தான்.

***

“யார் டி போன்ல, எதுக்கு ரூமுக்குள்ள போன…” என்ற சிவகாமியின் கேள்வியில் தன் தாய் அவள் பேசியதைக் கேட்கவில்லை என்பது போல் பெருமூச்சை வெளியிட்டவள் “யாரோ ஹிந்திக்காரன் மா, கிய்யா முய்யோன்னு கத்தினான்… அதான் அவனுக்கு புரியற பாஷையில பேசி வைச்சேன்…”  எனக் கூறியவளை நம்பாத பார்வை பார்த்தார் சிவகாமி.

“எதுக்கு இப்படி பாக்குற மா…” என்றவள் சிவகாமியின் கையில் அலைபேசியை திணித்தப்படி அங்கிருந்து நகர்ந்தாள்…

நிவேதாவின் பேச்சில் சந்தேகம் வர சட்டென அலைபேசியிலுள்ள கால் ஹிஸ்டரியை பார்த்தார், அவள் கூறியது போல ஏதோ புது எண்ணில் இருந்து தான் வந்திருந்தது… இருந்தும் மனம் கேளாது மீண்டும் அதே நம்பருக்கு அழைத்தார். அது சுவிட்ச் ஆப் என வரவும் ஹிந்திகாரன் தான் போல என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.