கலைந்த ஓவியமே 6

தன் மகள் மாநிறத்துடன் இருந்தால் வரன் பார்ப்பதில் சிக்கல் வந்துவிடும் என்று கவலைகொள்கிற பெற்றோரில் ஒருவர் தான் சிவகாமி, தாயே கவலை கொண்டால் . பொதுவெளியில் சொல்லவா வேண்டும் ஏகத்திற்கும் பேசுவது உண்டு.. இதற்கு நிவியின் பதில் என்னவாக இருக்கும் என்றால் பையன் அழகா இருக்கணும்னு பொண்ணு நினைச்சா இப்ப பசங்க பாதி பேருக்கு கல்யாணம் ஆயிருக்காது என கூறுவாள்

***

சிவகாமியின் பேச்சில் மனம் முழுவதும் உலை கனலாக கொதித்து கொண்டிருந்தது நிவேதாவுக்கு,

“புள்ளை மாநிறத்துல இருக்கறதுனால நகைநட்பு அதிகமா எதிர்பார்க்கறாங்க தம்பி…” என சிவகாமி கூறியது இப்போதும் காதில் கேட்டுகொண்டே இருந்தது அவளுக்கு…

மாநிறமாக இருப்பது இவளின் தவறா என்ன?, பெற்றோர் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இருக்கிறாள் இதில் இவள் தவறு என்ன இருக்கிறது???

மாநிறமாக இருப்பதால் தான் இருபத்தி ஐந்து வயதாகியும் வரன் அமையவில்லை என சிவகாமி வருத்தப்பட்டு பேசுவதெல்லாம் இவள் மனதை காயப்படுத்தாமல் இருந்ததில்லை, ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு வருவோர் போவோரிடமும் இவள் மாநிறமாக இருப்பதால் வரன் அமையவில்லை என புலம்புவது இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதெல்லாம் பல சமயம் காதில் வாங்கி கொள்ளாவில்லை என்றாலும் சில சமயம் மனம் ரணப்பட்டு தான் போகும்.

இதில் தன் மீது என்ன தவறு இருக்கிறது நான் என்ன செய்தேன் என குமுறிக் கொண்டிருந்தவளின் மனமோ ‘அதே தான் உன் அண்ணனுக்கும், உன் அம்மா உன் நிறத்தை மட்டும் தான் சொல்லுது. ஆனா நீ ஒவ்வொருத் தடவையும் அவனோட குறையை குத்திக் குத்தி காமிச்சிட்டு இருக்க…’ என சரியாக கேள்வி எழுப்ப,

முகத்தை அழுந்தி துடைத்து கொண்டவள் ‘அவனுக்கு கண்ணு தான் அப்படி, மத்தபடி அவன் பையா பட கார்த்தி மாதிரி அழகா இருக்கான்… அதுவும் கண்ணாடி போட்டுகிட்டா கண்ணு மாறு கண்ணா இருக்கறது கூட தெரியாது, ஆனா நான் அப்படியா, விருமன் பட ஹீரோயின் மாதிரி மாநிறமா தானே இருக்கேன்..’ என மனதிற்கு பதில் கொடுக்க

‘இருந்தாலும் உனக்கு விருமான் பட ஹீரோயின் கொஞ்சம் ஓவர் தான்…’ என மனம் அவளை கிண்டலடிக்க தன்னாலயே அவளின் இதழ்கள் விரிந்து கொண்டது..

இதழ்களின் விரிப்பில் இதுவரை இருந்த கோபம் சட்டென மாயமாய் மறைந்து போக தன்னாலேயே தாயினை தேடியது அவளின் கண்கள்..

வீட்டு வாசலிருந்து விறு விறு வென வீட்டிற்குள் நுழைந்த சிவகாமியை பார்த்தவள்

‘ போச்சு, சிவகாமி வர வேகத்தை பார்த்தா, சிவானட்டாம் ஆட போகுது…’ என நினைத்தபடியே சிவகாமியை பார்த்தாள். அவள் நினைத்தது போல தான் சிவகாமியும் வீட்டினுள் நுழைந்தும் நுழையாததுமாய் தன் சிவ பூஜையை ஆரம்பித்தார்.

“மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லையா உனக்கு,இருபத்தி அஞ்சு வயசாயிடுச்சானா இன்னும் யாருகிட்ட எப்படி பேசணும்ங்கறது தெரியறதில்லை, எதிரியா இருந்தாலும் வீட்டுக்கு வந்தா வாங்கன்னு மரியாதை கொடுத்து தான் பேசணுமுன்னு சொல்லி தானே கொடுத்தேன்…” என்றவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தொலைபேசியை நோண்ட ஆரம்பித்து விட்டாள்.

“பரவாயில்லை அந்த தம்பியா இருக்க போயி நீ பேசனதுக்கு எதுவும் பேசாம போயிருச்சு. இதுவே வேற யாராவது இருந்திருந்தா  செவினியிலயே ஒன்னு வுட்ருபாங்க (விட்ருபாங்க)…,” என ஆதங்கம் தாங்காது பேசினார். சிவகாமியின் கத்தலில் எவ்வித முக பாவனையும் காட்டாது அவரை மீண்டும் நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள்…

(அவளைப் பொறுத்தவரை சரவணனை திட்டியதில் தவறே இல்லை, வரதட்சணை கேட்பது எவ்வளவு குற்றமோ அதே போல் தானாக வந்து பெண்ணிற்கு வரதட்சணை கொடுக்கிறேன் எனக் கூறுவதும் குற்றம் தானே… இவர்களை போல பெண் வீட்டார்கள் விருப்பட்டு மகளுக்காக கொடுத்த பொன்னும், பொருளும் தான் இப்போது வரதட்சணை என்ற பெயரில் முடிந்திருக்கிறது… இருப்பவர்கள் கொடுக்கிறார்கள் இல்லாதவர்கள்??? இன்றும் சில கிராமங்களிலும், நகரங்களிலும் மதிப்புள்ள படிப்பை மட்டுமே நகைகளாக அணிந்திருக்கும் பெண்கள் தான் இருக்கிறார்கள் அவர்களிடம் வெறும் பணக் காகிதங்களையும், தகரங்களையும் எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் சரியாகும்…)))

நிவேதா பதில் கூறியிருந்தால் சிவகாமி அப்படியே விட்டு இருப்பாரோ என்னவோ, ஆனால் அவள் அமைதியாக இருந்தது இன்னுமின்னும் அவருக்கு கோபத்தைக் கிளற

“பதிலே பேச மாட்டா, அவ என்ன கொஞ்ச நேரம் நாய் மாதிரி கத்திட்டு விட்ருவான்னு நினைப்பு, இந்த வீட்டுல எனக்கு மரியாதையே இல்ல, சம்பளமே இல்லாத வேலைகாரி தானே நானு,…” என ஆரம்பித்தவர் அது இதுவென பேசி நிவேதவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் பேசியதில் வந்து நின்றது…

“பையன் சுமாரா இருந்தாலும் புள்ளை மாநிறமா இருக்க கூடாதாம்… மாநிறமா இருக்குன்னு சேர்த்து பவுன் போட சொல்றாங்க… சேர்த்து போட்டா கருப்பா இருக்கறவ செவந்துடுவாளா (சிவந்து)., காசு பணத்துக்கு எப்படியெல்லாம் பிள்ளையை கொற (குறை) சொல்ல வேணும்னு இருக்கானுங்க போல., இப்படியெல்லாம் வரவன் போறவன் எல்லாரும் சொல்றாங்கன்னு தான் நல்லா சாப்பாடு டி நல்லா சாப்பாடு டின்னு சொல்றேன் கேட்டா தானே…” என சிவகாமி கூறியதும் மூக்கு விடைக்க அவரை முறைத்தாள் நிவேதா…

“முழியாங்கண்ணி எதுக்கு இப்படி முறைக்கற…” என அதற்கும் அதட்டியவர் மீண்டும்

“நல்லா சாப்பட்டா தானே கொஞ்சமாவது கலரா ஆக முடியும், எதுவும் சாப்படறது இல்லை, நான் கொடுக்கறத சாப்பிடவே கலராயிடுவா, வர மாப்பிளை எல்லாரும் பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்கா, மாநிறமா இருக்கான்னு தட்டி விட்டுட்டே இருக்காங்க, வயசு புள்ளையை வீட்டுல வைச்சு இருக்கறது வயத்தில நெருப்பை கட்டிட்டு இருக்க மாதிரி இருக்கு, இவளுக்கு அமைஞ்சா தானே அவனுக்கு பாக்க முடியும்…” என சிவகாமி பேச பேச,

“ஆமா அவனுக்கு கியுல நிக்குது,…” என மனம் கவுண்டர் கொடுத்தது.. மட்டுமல்லாமல் முன்னால் சிவகாமி கூறியதற்கும் கவுண்டர் கொடுத்தபடி தான் இருந்தது..

‘ நீ மட்டும் பிராய்லர் கோழி மாதிரி இருந்தா பத்தாது உன் புருசனும் பிராய்லர் கோழி மாதிரி இருந்தா தான் நானும் பிராய்லர் கோழி மாதிரி இருப்பேன்.. நீ பிராய்லர் கோழி மாதிரியும் உன் புருசன் நாட்டு கோழி மாதிரி இருந்தா நான் இப்படி தான் பொறப்பேன்…’ எனக் கூற துடித்த மனதினை அப்படியே அடக்கியவள் சட்டென சோபாவிலிருந்து எழுந்து தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்..

” இப்படியெல்லாத்துக்கும் கோபம் வந்தா போற வீடு ஜெகஜோதியாக இருக்கும்… வரவன் அரை நொடி கூட வைச்சு இருக்கா மாட்டான் தொரத்தி (துரத்தி) விட்ருவான், அதுவும் நீ பண்றதுக்கெல்லாம் பொடனிலயே நாலு போடுவான்…” என அவளுக்கு கேட்கவே கத்தி பேசினார் சிவகாமி.

அவர் பேசுவதில் டாட்டா காட்டிவிட்டு சென்ற கோபம் தற்போது டென்ட் போட்டு அமர்ந்து கொண்டது அவளின் தலையில்… கோபத்தில் பொத்தென படுக்கையில் விழுந்தவளுக்கு சில நிமிடங்களில் கண்கள் சுழற்றி கொண்டு வர, சிவகாமி பேசுவதெல்லாம் மெல்லிசையாய் காதில் கேட்க சிறிது நேரத்தில் உறங்கி போனாள்…

*** ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்தாலும் மெல்லிய சாரல் போல் ஓர் உணர்வு அவனின் கோபத்தை கண்ணாடி போல் தகர்தெறிவது போல் தோன்ற சட்டென திரும்பி வீட்டின் வாசற்கதவை பார்த்தான்… அவள் இல்லை, ஏனோ அவளின் மேல் கோபம், ஏற்கனவே இறுகியிருந்த முகம் இப்போது பாறையை போல் இறுகியது…

‘இது தேவை இல்லாத ஆணி, அந்த புள்ளை நல்லா படிச்சு இருக்கு, நீ பாத்தவது கூட ஒழுங்கா முடிக்கல, என மனம் ஒரு புறம் கூற, அதுவும் சரியென தோன்ற மனதில் தோன்றிய அந்த உணர்வை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டவன் வாகனத்தை உயிர்ப்பித்தான்.வழியெங்கும் மனதில் குழப்பங்களும் கேள்விகளுமே நிறைந்திருந்தது..

‘ இந்த அத்தை ஏன் இப்படி பாண்றாங்க, நம்மகிட்ட பையன் வேண்டாமுன்னு சொல்றான்னு சொல்லிட்டு, பையன் வீட்டுல பொண்ணு வேண்டாம்னு சொல்றதா சொல்லி இருக்காங்க, ஒருவேளை பையனை பிடிக்கலன்னு சம்மதத்தைத் தட்டி விட நினைச்சு இருப்பாங்களா, அப்படியே இருந்தாலும் ஏன் நம்மகிட்ட பொய் சொல்லணும், தைரியமா உண்மையைவே சொல்லி இருக்காலமே, பையன் வேண்டாம்னு சொன்னா என்ன சொல்ல போறோம்…” என நினைத்தபடி வாகனத்ததில் சென்று கொண்டிருந்தவனின்  மனமோ மீண்டுமொரு முறை சிவகாமி கூறியதை அசைப்போட்டது.

“அன்னைக்கு சாயங்காலம் தான் கால் பண்ணி சொன்னாங்க…” என்ற சிவகாமி கூறியதும், அன்று மதியமே பூங்கொடி அழுதது நினைவு வந்தது.

“மாப்பிள்ளை வீடு வேண்டாம்னு சொல்லிட்டாங்க…” என அவள் ஒப்பாரி வைக்காதக் குறையாக அழுதது மதியம் தானே.. ஆனால் சிவகாமி கூறுவது அன்று மாலை தான் தங்களுக்கு அழைத்துக் கூறினார்கள் நாங்கள் அதற்கு முன்பு அவர்களிடம் பேசவில்லை எனக் கூறிகிறார், அதற்கு மேல் மகியும் மாப்பிள்ளையை வேண்டாமென கூறிவிட்டதாக கூறுகிறாரே, அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் அவனை மறக்க வேலைக்கு செல்கிறேன் எனக் கூற வேண்டும்.  என பலபல கேள்விகள் முன்னால் வர என்னதான் நடக்கிறது வீட்டில் என்ற குழப்பதிலயே வீட்டை நோக்கி பயணித்தான்…

*****”

“அம்மா,அம்மா…” என்ற குரலில் வீட்டிலிருந்து வெளி வந்தார் வேணி…கிட்டத்தட்ட பத்து பேர் இருப்பார்கள் சரவணனின் வீட்டிற்கு வேலைக்கு வந்திருப்பார்கள் போல என யூகித்து கொண்டவர் அவர்களை என்னவென கேட்க

“இன்னைக்கு விதை கிழங்கு போடணும்னு தம்பி சொல்லி இருந்தாரு, வீட்டுல போயி பார்த்தேன் யாரு இல்லைங்க நம்ம மூர்த்தி ஐயாவையும் காணோம் …அதான் இங்கேயே வந்தேனுங்க…” என வேலையாட்களில் ஒருவன் முன் வந்து கூற

“சரி இருங்க நானே வரேன்…” என்றவர் தன் வீட்டை பூட்டிவிட்டு அவர்களுடன் சென்றார்…

“மாடியில இருக்கற கிழங்கு தான் மருந்து போட்டு உலர்த்தி வைச்சது எடுத்துட்டு போங்க…” என கூற தயங்கி நின்றார் முன்னால் வந்து பேசியவர் “என்ன துரை அப்படியே நிக்கற,..” என அதட்ட “தம்பி வீட்டு முற்றத்தில இருக்கறது தான் எடுக்கணும்னு சொன்னதா நாபகம்மா (ஞாபகம்)…” என துரை தயங்கிக் கொண்டே கூறினார்… ” எனக்கு தெரியாதா, ஒழுங்கா நான் சொன்னதை செய்…” என வேணி கட்டளையாக சொல்ல, அதற்கு மேல் அவர்களும் பேசவில்லை… ******* தன் இரண்டு சக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் சரவணன்.சரவணனின் வீடு அந்தக்கால வீட்டைப் போல் பெரிய வீடு, வீட்டின் முற்றத்திலயே மஞ்சள் கிழங்குகள் காய வைத்தபடி இருக்க, மாடியிலிருந்து மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்தப்படி இருந்தனர் வேலையாட்கள்… ‘

“நான் வேற வீட்டுல இல்லை, கிழங்கு விதைக்கு மருந்து போட்டதை எடுத்துட்டு போறாங்களா இல்லையான்னு தெரியலையே..’. என நினைத்தவன்

“அண்ணே மருந்தை போட்டதை தானே எடுத்து போறீங்க… அப்படியே கொண்டு போயி வெதைச்ச (விதைத்தால்) கிழங்கு அழுகி போயிடும்.., மருந்து கிழங்கு எதுன்னு பாப்பா கிட்ட கேட்டு தானே எடுத்துட்டு போறீங்க…” என வேலையாட்களிடம் வினாவினான்.

“பாப்பா வுட்ல இல்லைங்க தம்பி, முதலாளி அம்மா (வேணி) தான் மருந்து கிழங்க கைகாட்டானங்க…’ என அவர் சொல்ல “ஒரு நிமிசம் இருங்க அண்ணே வரேன்…” என்றவன் வேணியை தேடினான்.

“இந்தப்பா சரவணா..” என கையில் இருந்த நீர் மோரை நீட்டினார் வேணி. அவரிடம் முகத்தை காட்டாது வாங்கி கொண்டவன்

“ஏனுங்க த்த்தை, வீட்டு மாடில இருக்கற விதை கிழங்கை எடுக்க சொன்னீங்களா இல்லை முற்றத்தில இருக்கறதை விதை கிழங்கை எடுக்க சொன்னீங்களா…” என கேட்டான்.

“மாடியில இருக்கறது சரவணா…” என்றதும் வேலையாட்களை ஒரு பார்வை பார்த்தான்… தூக்கி வைத்த மூட்டைகளை எல்லாம் மீண்டும் மாடிக்கே கொண்டு சென்றனர்..

“என்னாச்சு ப்பா,..” என வேணி கேட்க”இதெல்லாம் வேக வைச்ச கிழங்கு அத்தை, விதைக்கு போடற கிழங்கு எல்லாம் இங்க இருக்கறது தான்…” என சரவணா சொல்ல, வேலையாட்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வேணியை தான் பார்த்தனர்…

எப்போது சரவணனின் வேலை இது தான் விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை வைத்து விடுவான். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி மாடியில் காய வைத்து விடுவான். அதனால் கிழங்கு அழுகல் அதிகம் இருக்காது அதை பற்றி தான் மேலே கூறியது.

ஸ்டோரில இரண்டு ஹீரோ ,இரண்டு ஹீரோயின்… கொஞ்சம் அட்ஜஸ்ட் pannikonga… yennaa நான் இன்னும் மகி,நவினை காட்டவே இல்லை அப்பவே purinjukonga இன்னும் அவங்க பார்ட் வரல… ஜஸ்ட் 6 ud thaan poyi irukku so. அப்பறம் இழுக்கர போல இருந்தா சொல்லிடுங்க… விமர்சனங்களும் கேள்விகளும் வரவேற்க படுகின்றது…