கலைந்த ஓவியமே – 5

சிலர் பாராட்டுகிறோம் என்று நினைத்து உருவக்கேலி செய்வார்கள். சொல்லி முடிக்கும் வரை பலருக்கும் அது தவறு என்று கூட தெரியாது. இது போன்றவர்களுக்கு நவினின் பதில் மறைமுகமானதாக தான் அதிகம் இருக்கும்.

**தன் விழியின் அதிர்ச்சியையும் இதழின் விரிப்பையும், நிமிடத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தவள் எதிரில் இருந்தவனை முறைத்தாள். ‘சாதரணமா பேசனதுக்கே பொண்டாட்டி சொல்லிட்டு போனான். நீ வேற எக்கச்சக்கமா பேசி வைச்சு இருக்க,  கண்டிப்பா ஏடாகூடாம செய்வான் கொஞ்சம் அடங்கி இரு…’ என ஒருபுறம் மனம் கூப்பாடு போட்டுக் கத்தினாலும் வீட்டிலிருந்து வெளியில் வந்த அதே வேகத்தில் அவனை நெருங்கி நின்று முறைத்தாள்.

தன்னை நெருங்கி வருபவளின்   முக பாவனைகள் இவனுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்க நமட்டு சிரிப்புடன் “என்ன டி பொண்டாட்டி, ச்சீ சாரி…” என பின்னந்தலையில் அடித்துக் கொண்டப்படி 

“என்னங்க க்கா சொன்னீங்க…”  என ஒற்றை கண் சிமிட்டி   கேட்டவன் சிவகாமி பார்ப்பதற்குள் முகத்தை மாற்றி கொண்டான்.

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல பேசாது முறைத்து நின்றவளை மீண்டும் பொண்டாட்டி என அழைத்து சீண்டி விட்டு  நல்ல பிள்ளை போல் நின்று விட்டான். 

“யூ…” என கழுத்தை நெறிக்க கைகளை கொண்டு சென்றாள்.

ஒரு நிமிடம் சிவகாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,  அதற்குள் நிவேதா சரவணனை கழுத்தை நெரிப்பது போல கைகளை கொண்டு சென்றிருந்தாள். அவள் அவனை நெருங்கியதும்   அவசரமாக நிவேதாவை பிடித்த சிவகாமியோ

“என்ன பழக்கம் இது, வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் நடந்துக்குவியா…” என பெரியதாக அதட்டல் போடவும்.

“இப்படி நடந்துக்குவியாவா,  இவன் நடந்துக்கிட்டது மட்டும் சரியா…” என நிவேதா கத்த,
முன் சரவணன் பேசியதை தான் கூறுகிறாள் என நினைத்த சிவகாமியோ

“அவரு ஏதோ தப்பா நினைச்சுட்டு அப்படி பேசறாரு டி,…” என்ற சிவகாமியை முறைத்தாள் நிவேதா. சிவகாமி அப்படி கூறியதும் இதுவரை இருந்த குறும்புகள்  மாறி

“தப்பா நினைச்சுட்டு பேசறானா., என்ன சொல்றீங்க எனக்கு புரியல…” எனப் புரியாதை பாவனையுடன் கேட்டான்.

அவன் தன்னை கண் சிமிட்டி பொண்டாட்டி என அழைத்தது மட்டுமல்லாமல் சிவகாமி பார்ப்பதற்குள் அவன் முகத்தை மாற்றி கொண்டது இப்போது எதுவும் அறியாத பிள்ளை போல் விசாரிப்பது என அனைத்தும் நிவேதாவிற்கு மேலும் கோபத்தைக் கொடுக்க 

“எப்படி நடிக்கிறான் பாரு, இவனை நம்பாத மா,..” என மீண்டும் அவனை நெருங்கி சென்றாள்.

“வாயை மூடிட்டு உள்ள போ டி, அடங்கா பிடாரி, பொட்டப் புள்ளை மாதிரியா நடந்துக்கற, வீட்டுக்கு வந்த ஆம்பளை பையனை அடிக்க போற, எடுத்தது எல்லாம் வியக்கனாம் பேசிட்டு என் மானத்தை வாங்கவே பொறந்து இருக்கியா நீ…” என கத்தியப்படி அவளை தடுத்து நிறுத்தினார் சிவகாமி.

அவன் முன்னே தன்னை அடங்கா பிடாரி, etc… என திட்டியது மேலும் கோபத்தை கொடுக்க

“வியக்கணம் பேசறன்னா, ஓ இவன் பண்றது எல்லாம் சரியா,  பொண்ணை விலைக்கு கேட்டுட்டு இருக்கான், இதை தப்புன்னு சொல்ற நான், உனக்கு அடங்கா பிடாரியா…” என சொல்ல, அவளின் மனசாட்சியோ ‘ அவன் இதை மட்டுமா செஞ்சான்…’ என கேள்வி எழுப்பியது.

தன் மனதின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன் தாயை பார்த்தாள்.”நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு, எனக்கு தெரியாதா யாரு எப்படின்னு.., உனக்கு நடந்தது வேற, இப்ப இவரு பேசறது வேற இரண்டையும் சேர்த்து பேசிட்டு இருக்காதா போ…” என்ற சிவகாமியின் பேச்சில் எரிச்சல் வர  இருவரையும் முறைத்து விட்டு தள்ளி நின்று கொண்டாள்…

” நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தம்பி… போன வாரம் அவளை பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை வீட்டாலுங்க புள்ளை கொஞ்சம் மாநிறமா இருக்கறதுனால நகைநட்பு எதிர்பார்த்தாங்க, நீங்களும் நகைநட்பை பத்தி பேசவும் இப்படி  நடந்துக்கிறாள்…” என்றவரிடம் சரியென தலையாட்டியவனின் மனமோ ‘நிச்சியம் ஆயிருச்சா…’ என அதிர்ச்சி குரல் எழுப்பியது…

மனதின் அதிர்ச்சி விழி வழியே பிரதிபலிக்க நிவேதாவை ஒரு பார்வைப் பார்த்தான்..  அவனின் பார்வை தன் மேல் படுவதை உணர்ந்தவள் அவனை முறைத்து விட்டு  வீட்டிற்குள் நுழைந்துக் கொண்டாள். அவளின் செய்கையில் மனமும், முகமும் இறுகி நின்றவன்”சரிங்க ம்மா, நான் கிளம்பறேன்…” என்றபடி அவரின் பதிலைக் கூட  எதிர்பார்க்காது கேட்டை நோக்கி நடந்தான்.

தன் மகளின் பேச்சில் தான் கோபம் கொண்டு செல்கிறானோ என்ற எண்ணம் சிவகாமிக்கு தோன்ற அவன் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது…சரவணன் பேச பேசவே அவன் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என புரிந்து கொண்டார் சிவகாமி, அதனாலயே அவன் முழுவதும் பேசட்டும், அதற்கு பின் நம் தரப்பை கூறலாம் என விட்டுவிட்டார். அதற்குள் நிவேதா இடையிட்டு அவனின் மனம் நோகும் படி பேசிவிட்டாள். வாயிலை நோக்கி நடந்தவனின் பின்னால் ஓடியவர் 

“தம்பி ஒரு நிமிசம்…” என அழைத்தார். அவர் அழைத்ததும் சட்டென நின்றவன் அவரை திரும்பி பார்த்தான்.

அவனின் அருகில் சென்ற சிவகாமியோ “நீங்க நினைக்கற போல நாங்க நகைநட்பை எதிர்பாக்கல தம்பி,..” என ஆரம்பிக்கவும் தான், தான் எதற்காக இங்கு வந்தோமென அவனுக்கு உரைத்தது…

காலையில் பார்த்த பெண்ணிற்காக வந்த விசயத்தை பாதிலயே விட்டுவிட்டு செல்கிறோமே என்ற ஆதங்கம் தன்னாலேயே எழ, அதற்கு காரணமனவளின் மேல் கோபம் வந்தது அவனுக்கு, இருந்தும் தன் கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் சிவகாமி கூறியதை உள் வாங்க ஆரம்பித்தான்.

“அன்னைக்கு சாயங்காலம் உங்க அத்தை தான் போன் பண்ணி புள்ளைக்கு பையனை பிடிக்கலன்னு சொன்னாங்க, அதை கூட என் பையன் நம்பாம  உங்க பொண்ணுக்கு கால் பண்ணி கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டதா சொன்னா, நேரடியா புள்ளைக்கே பிடிக்கலன்னு சொன்னதும் தான் அடுத்து நாங்க பேசல, ஆனா நீங்க வீடு வரைக்கும் வந்து புள்ளைக்கு பையனை பிடிச்சு இருக்கறதா சொல்றீங்க, எதுக்கும் உங்க வீட்டுலயும், பொண்ணுகிட்டியும் ஒரு வார்த்தை பேசிட்டு போன் பண்ணி சொல்லுங்க தம்பி,  எங்களுக்கு உங்க பணமோ, பொருளோ வேண்டாம் என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், உங்க பொண்ணை மட்டும் கொடுங்க எங்க பொண்ணை போல பாத்துக்கறோம்…” என சிவகாமி சொல்ல

“வீட்டுல பேசிவிட்டு சொல்றங்கங்க ம்மா…” என்றவன் கேட்டை நோக்கி நடந்தான். 

மனதில்ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்தாலும்  மெல்லிய சாரல் போல் ஓர் உணர்வு அவனின் கோபத்தை கண்ணாடி போல் தகர்தெறிவது போல் தோன்ற சட்டென திரும்பி வீட்டின் வாசற்கதவை பார்த்தான்… அவள் இல்லை, ஏனோ அவளின் மேல் கோபம் ஏற்கனவே இறுகியிருந்த முகம் இப்போது பறையை போல் இறுகியது…  *********

அலுவகத்தில் அமர்ந்திருந்தவனின் கண்கள் நொடிக்கு ஒரு முறை தனக்கு எதிரில் இருந்த டேபிளை ஆசையாக வருடியது… எப்போது வருவாள்???எப்போது அவளை பார்ப்பது என இருப்பவனுக்கு இப்போதைக்கு ஒரே ஆறுதல் அவள் அமரும் அந்த டேபிள் தான்…

அவளை நினைத்தாலே நிமிடங்கள் அனைத்தும் உருகுவது போல் தோன்றியது நவினுக்கு.

குறையை முன் வைத்து தான் அவள் தன்னை வேண்டாமென கூறிவிட்டாள் என மனம் எத்தனை முறை கூவினாலும் அதனை அவன் காதில் கூட வாங்கவில்லை அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது… அன்று அலுவலகத்தில் அவள் பேசியது அவனின் கண்முன்னே வந்து சென்றது… “புராஜக்ட் மேனேஜர் ஒருத்தர் இருக்காரு பாத்தியா…” என ஒருவள் கேட்க,”கண்ணு கூட ஒரு மாதிரி இருந்துச்சே, மனுசன் யாரை பார்க்கறான்னு தெரியல டி, நானும் என்னை தான் பாத்துட்டு இருக்காருன்னு நினைச்சேன்… வலது கண்ணு என்னை பாத்தா இடது கண்ணு உன்னை தானே பாக்குது…” என கிண்டலாக சிரித்தபடியே கூறினாள் மற்றொருவள்.

இது அருகில் அமர்ந்திருந்த மகியின் காதிலும் அந்த வழியாக சென்ற நவினின் காதிலும் சரியாக விழுந்தது… நவினுக்கு இது போன்ற கேலிகள் பழக்கம் தான் என்பதை போல கடந்து செல்ல, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த மகியோ சட்டென இருவரையும் திரும்பி முறைக்க அவளின் பார்வையில் இருவரும் அமைதியாகி விட்டனர்.

அப்போது அவளின் செய்கையில் விழுந்தவன் தான் அதற்கு மேல் அவளின் மீதிருந்த கோபம் எல்லாம் காற்றோடு காற்றாய் பறந்தன என்பது தான் உண்மை… இருவரையும் அவள் பார்த்த பார்வை இப்போதும் கண்முன்னே வர  தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

அவளின் நினைவில் மிதந்து கொண்டிருந்தவனின் காதில் தெரு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு பின் ஓர் பெண்ணின் அண்ணா என்ற குரலும் கேட்க, அவசரமாக அலுவலகத்தில் இருந்து  வெளியில்  ஓடினான். கைகளால் இரண்டு காதுகளை அடைத்து கொண்டு  கண்கள் இரண்டையும் இறுக மூடி “அண்ணா..” என சத்தமாக கத்தியது வேறு எவருமில்லை நம் மகியே தான்.

  அவள் கத்திய கத்தலில் தெருநாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் திரும்பி ஓடியது… நாய்களின் குறைக்கும்  சத்தம் கேட்காது போக ஒற்றை கண் திருந்து சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். அதில் ஒரு நாய் இவளை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடியது. அந்த நாயையும்,இவளையும் மாறி மாறி பார்த்தவனுக்கு குபீரென சிரிப்பு வர சத்தமாக சிரித்து விட்டான். ஒரு ஆணின் சிரிப்பு சத்தத்தில் கண்கள் இரண்டும் விரிய சத்தம் வந்த திசையை பார்த்தாள். அதற்குள் அவன் அங்கிருந்து சென்றிருக்க சிறு தோள் குலுக்களுடன்  அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் அன்று இன்டர்வயூவில் பேசிய அட்டண்டரிடம் நேராக சென்றவள்

“ஹாய் சார், நான் மகிமா, அர்ஜெண்ட் வொர்க் இருக்குன்னு சொல்லி கால் பண்ணாங்க,..” என கேட்டதும்“எஸ் மேம், சடென்லி கஸ்டமர் பிளேனை சேஞ்ச் பண்ண சொல்லிட்டாங்க… அதான் வேற வழியில்லாம சார் உங்களை கூப்பட சொன்னாரு…” என்றதும்

“இட்ஸ் ஓகே சார், ஆல்ரெடி இருக்கற பிளேனை கொடுங்க அண்ட் கஸ்டமர் ரீகுர் மெண்ட்ஸ் (requirements) என்னன்னு சொல்லுங்க..” என கேட்க“அந்த ரூம்ல புராஜெக்ட் மேனேஜர் இருப்பாரு லைக் உங்க கேபின் கூட அங்க தான் இருக்கு அண்ட் டிடைல்ஸ் எல்லாம் அவரு எக்ஸ்பிளைன் பண்ணுவாரு…” எனக் கூறியதும் நன்றி கூறிவிட்டு அவர் கைகாட்டியா இடத்தை நோக்கி நடந்தாள். 

நவின் இருக்கும் கேபின் இரண்டு பக்க  கண்ணாடியிலான அறை என்பதால் முன்னால் நடந்த அனைத்தும் இவன் கவனித்து கொண்டு தான் இருந்தான்…  அவர்கள்  பேசியது  காதுகளுக்கு கேட்கவில்லை என்றாலும் நிச்சியம் அடுத்துத் தன்னை காண தான் வருவாள் என நினைத்தவனுக்கு இதயம் பலமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது…