கலைந்த ஓவியமே 1
மஞ்சள் நகரம் என அழைக்கப்படும் ஈரோடு தான் நம் கதையின் கதைகளம், பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராச ராச சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியும் இருந்தது… காலம் செல்ல செல்ல ஈரோடு மாவட்டம் இப்போது பெரிய நகரமாக திகழ்கிறது. அந்த மாவட்டத்தின் ஓர் முக்கிய கடைவீதி தான் பி.எஸ் பார்க்… இங்கு ஆடி மாதம் மட்டுமல்ல எல்லா மாதங்களிலும் துணியின் விலை சற்று மலிவு தான். தயாரிப்பாளர்களின் நேரடி கொள்முதலில் பல துணிக்கடைகள் இருப்பதாலோ என்னவோ இங்கு ஆடைகளின் விலை மலிவு தான். ஈரோடு சுத்து வட்டார சாமானிய மக்களுக்கு இந்த கடை வீதிகள் தான் ஆடை ஷோ ரூம்.. பி.எஸ் பார்க் கடைவீதிகளை வேடிக்கை பார்த்தபடியே வந்தவளின் கண்கள் கந்தன் வீதி என்ற பெயர் பலகையில் நிலைத்தது.
“அண்ணா, இங்க தான்…” என ஆட்டோக்கராரிடம் கூற, ஓரம் பார்த்து வாகனத்தை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுனர்.
அவரிடம் எண்பது ரூபாயை கொடுத்தவள் அந்த வீதிக்குள் நடந்தாள். பார்க்கில் இருந்த கூட்டம் இந்த வீதிக்குல் இல்லாமல் இருந்தது அதுவே அவளுக்கு சற்று நிம்மதியை கொடுத்தது. வாகனம் செல்லாத ஓர் இடத்தில் நின்றவளின் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அந்த இடத்திற்கு அவள் புதிது என்பது அவளின் பார்வையே அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது. காற்றிலாடும் தன் கேசத்தை செவியில் ஒதுக்கி விட்டவள் சிறிது தூரம் அந்த வீதியில் நடந்தாள். அவள் தேடி வந்தது அவளின் கண்ணில் சிக்காது போக்கு காட்டியது. அலைப்பேசியை கையில் எடுத்தவள் செய்தி தாளில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு சென்றதே தவிர மறுபக்கம் அழைப்பு ஏற்காது போக கடுப்போடு அலைபேசியை பார்த்தபடி நின்றாள்.
“கீ, க்கீ…” என்ற வாகனத்தின் அதீத சத்தத்தில் திடுமென பயந்தவள் சற்றே பின் தள்ளி நின்று சத்தம் வந்த திசையை பார்த்தாள். அவள் அந்த வாகனத்தை தெளிவாக பார்க்கும் முன்பே இரண்டு சக்கர வாகனம் அவளின் பார்வையிலிருந்து மறைந்திருந்தது…
“இவனுங்களுக்கெல்லா நூறடி ரோடு போட்டாலும் நம்ம மேல தான் ஏறிட்டு போற போல போவாங்க…” என தன் பார்வைக்கு சீக்காமல் போன இரண்டு சக்கர வாகனத்தின் உரிமையாளரை மனதில் நாலு திட்டு திட்டியவள் தன் கையில் வைத்திருந்த அலைபேசியை பார்த்தாள். மணி காலை ஒன்பதரையை காட்டியது
“பத்து மணிக்கு இன்டர்வியூ, இந்த சார் வேற போன் எடுக்கவே மாட்டறாரு…” என புலம்பியவள் அந்த கம்பெனியின் அட்ரஸை கூகுள் மேப்பில் போட்டு தேடிட அது ஏதோ சந்துக்குள் போவதைப் போல் இருந்தது. மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் கூகுள் மேப்பில் காட்டிய வழியில் நடந்தாள்.சிறிதும் தூரம் நடந்தவள் அங்கிருந்த ஒருவரிடம் அலுவலகத்தின் பெயரை கூறி கேட்கவும் அவர் நேராக செல் என கூறவும் சரியென தலையாட்டி நன்றி கூறியவள் சிறிது தூரம் நடக்க அவள் தேடிய அலுவலகம் இருந்தது. அலுவலகத்தின் வெளிப்புற அமைப்பே அதன் தற்போதைய நிலையை சொல்லாமல் சொல்லியது. அவளின் மனதில் ஆச்சரியம் எழாமல் இல்லை, இருந்தும் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளாமல் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அங்கு அமர்ந்திருந்தவர்களை கண்டதும் தன்னாலேயே அவளின் கண்கள் விரிந்து சுருங்கியது ஒன்று இரண்டு பேர் இன்டர்வியூக்கு வந்திருப்பார்கள் என நினைத்து தான் வந்திருந்தாள் ஆனால் அங்கு மலைபோல் குவிந்து கிடைந்தனர். இருந்தும் மனதில் ஓர் தைரியம் உருவாக ஏதோ ஓர் நம்பிக்கையில் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தாள்.
நேரம் செல்ல செல்ல அவளின் இதயம் மத்தளம் போல் அடித்துக் கொண்டது என்னதான் படித்து இருந்தாலும் மூன்று வருடங்கள் வேலையில் பணி புரிந்து இருந்தாலும் இன்டர்வியூ எனும் போது மனம் அடித்துக் கொள்ளுவது சகஜம் தானே… மனதின் பயத்தை போக்க அந்த (அலுவலகத்தின்) கம்பெனியின் பிரோபைலை கூகிளில் தேடி பார்த்தாள். ஏ.சி.எப். கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டிசைனிங் என்றிருந்தது… டிராக்டர், புராஜக்ட் மேனேஜர், குவாண்டட்டி, சர்வேயர், பல பிரிவுகள் இருந்தது அதில் இவள் இன்டர்வயூக்கு வந்திருப்பது புராஜக்ட் டிசைனராக தான். அந்த அலுவலத்தின் தற்போதைய புராஜக்ட் என அனைத்தும் பார்த்து கொண்டிருந்தவளின் காதில்
“மகிமா…” என்ற சத்தம் கேட்க சட்டென குரல் வந்த திசையை பார்த்தாள். இன்டர்வியூக்கு அவளை உள்ளே போக சொல்லி ஃபியுன் வந்து நின்றார். அவரிடம் சரியென தலையாட்டி உள்ளே சென்றாள். மூன்று நிலைகள் கேள்விகள் எழுப்பப் பட்டது… இதயம் ஒரு புறம் மத்தளம் வாசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் கேட்டக் கேள்விக்கு பதில் கூறினாள். அவர்கள் கேட்ட சில கேள்விக்கு நேரடியாகவே தன் மனதில் உள்ளதையும் கூறினாள்.. இவளின் பேச்சில் புருவம் உயர்த்தி வியந்து பார்த்தவர் அவளை காத்திருக்க கூறினார்… மகிமா காத்திருந்த நிமிடங்கள் அனைத்தும் மணி நேரமாக, அவளின் பொறுமையை சற்று சோதித்து விட்டு தான் அவளை உள்ளே அழைத்தனர். அவள் உள்ளே சென்றதும் உடனே அவளின் வேலையை உறுதி செய்து விட்டனர்… சந்தோசமும், சிரிப்புமுமாய் வெளிவந்தவளை இமைக்காது பார்த்தான் அவன்.. அவனின் பார்வையையும் அவனையும் கண்டிருந்தால் அன்றே வேலைக்கு வரவில்லை என கூறி இருப்பாளோ என்னவோ… அவனை காணாது வெளியில் வந்தது அவளின் அதிஷ்டமா இல்லை துரதிர்ஷ்டமா என காலம் தான் பதில் சொல்ல கூற வேண்டும்… ********மஞ்சள் நிறமும் அல்லாது முழுமையாக சிவப்பு நிறமும் அல்லாது இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியனின் செங்கதிர்கள் வெண்ணிற மேகங்களை சூழ்ந்து கொண்ட நேரமது வீட்டிற்குள் நுழைந்தவனின் காதில்”ஆமா, நின்றுருச்சு…” என்ற குரலில் அப்படியே நின்றான்.”தெரியல, அந்த பொண்ணு தான் வேண்டான்னு சொல்லிட்டாங்க போல,..” இப்போது அவன் தங்கை தான் பேசுகிறான் என நன்றாகவே தெரிந்தது… “அப்படியெல்லாம் இல்லை, நான் அந்த பொண்ணு இடத்தில இருந்தாலும் இது தான் சொல்லி இருப்பேன்,எனக்கு இப்படி பையனை பார்த்து கட்டி வைப்பாங்களா சொல்லு… எனக்கே இப்படி தோணும் போது அந்த பொண்ணுக்கு பிடிக்காம போகறதுல ஆச்சரியம் இல்லை,…” சற்று நக்கல் தோனியில் இருந்தது போல் தோன்றியது அவனுக்கு தன் தங்கை தன்னை பற்றி தான் பேசுகிறாள் என்பது தெளிவாக தெரிந்தது அவனுக்கு. இளகியிருந்த மனம் மீண்டும் இறுகியது… கோபத்தை வெளியில் காட்டாது நெடுநெடுவென தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொண்டான்… அவன் அறையில் இருந்த ஆள் உயர கண்ணாடியின் முன் நின்றான் நேற்று அவள் போனில் கூறியதும் தற்போது அவனின் தங்கை பேசுவதும் மாறி மாறி கேட்டது… “ஹலோ மகிமா., நான் நவின் பேசறேன்…” என்ற குரலில் இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.அது எதற்கென ஆராய்ச்சி செய்யும் மனநிலையில் தான் அவளில்லை. “லைன்ல இருக்கியா இல்லையா,..” என்ற அதட்டல் குரலில் தன்னிலைக்கு வந்தவள்