கலைந்த ஓவியமே – 15

உருவக்கேலி.. நம்ம சமுதாயத்தில் தொடர்ந்து வர கரையான். நவின் உருவத்தை கேலி பேசறது தப்புன்னு தெரியாம சிலர் பேசறாங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சும் அதுக்கு என்னங்கற மெத்தனத்தால இருக்கற சிலர்ல நம்ம நிவேதாவும் ஒருத்தி.. நிவேதா எத்தனை கேலிகள் பேசினாலும் கண்டுக் கொள்ளாமல் தான் இருப்பான் அவளிடம் பதிலுக்கு பதில் பேச மாட்டான் அது தான் அவனோட நாசுக்கான பதில்.

ஹாஹன் அப்ப முதல் எபில அவன் பேசனதுக்கு என்ன ரியாக்ட் பண்ணான் என கேள்விகள் எழுப்புவது புரிகிறது. அவள் பேசும் போது அதை அவன் கடந்து தான் சென்றான். அவளின் முன் கோபமோ அழுகையோ இல்லை வேறு எந்த உணர்வையும் அவன் காட்டிக்கவே இல்லை, இது தான் அவளுக்கான சிறந்த பதில்.

இந்த உருவக் கேலி நம்ம வீட்டுல இருந்து தான் ஆரம்பிக்குது… முடிஞ்ச வரைக்கும் நம்மளும் நம்ம பசங்களுக்கு இது போல பேசக் கூடாதுன்னு ஆரம்பித்தில் இருந்தே சொல்லிக் கொடுப்போம்… சிறு மாற்றத்தை கூட நம்மில் இருந்து ஆரம்பிப்போம்… ##########

கோவில் சன்னிதியில் அமர்ந்திருந்த சிவகாமியின் அருகில் அமர்ந்தவனோ “போகலாமா அம்மா…” என்றான்.

“போகலாம் தம்பி, அவ எங்க…” என்றார் கண்களால் மகளை தேடியப்படி”என் பின்னாடி தான் வந்தாலே…” என்றவனும் கோவில் வாசலில் கண் பதிக்க

“அங்க இருக்கா பாருங்க…” என கை அவள் வரும் திசையை கை காட்டினான் … சாதாரண சுடிதார் தான் அணிந்து இருந்தாள் ஆனால் அதுவே அவளுக்கு பொருத்தமாக இருந்தது… “

இன்னைக்கு குழந்தை அழகா இருக்கால்ல தம்பி…” என்றார் சிவகாமி

“ஆமாம் ம்மா…” என்றான் அவளை பார்த்து கொண்டே… பெருமூச்சுடன் நவினை பார்த்த சிவகாமியோ

“நீங்க இப்படி இருக்கறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு தம்பி, இப்பவே இரண்டு பேரும் இரண்டு திசையில இருக்கீங்க.., நான் இல்லாத ஒரு நிலமை வந்தா குழந்தையை தனியா தவிக்க விட்றாத தம்பி,…” என சிவகாமி சொல்ல சட்டென அவரை திரும்பி பார்த்தான்.. அவரோ அவரின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் மேலும் தொடர்ந்தார்.

“அவ என்ன பேசினாலும் காதுல வாங்கிக்காத, உனக்கு வர போறவ எப்படின்னு தெரியல, அவ எப்படி இருந்தாலும் நம்ம குழந்தையை மட்டும் தனியா விட்டுடாத தம்பி, வயசு ஆயிருச்சே தவிர இன்னும் பக்குவம் இல்லை, பக்குவம் இல்லாம தான் இன்னும் நடந்துக்கறா, பேசறதும் பக்குவம் இல்லாம தான் பேசறா, அவளே ஏதாவது உன்னை சொன்னாலும் உன் புள்ளையா நினைச்சுக்க தம்பி, அவளை தனியா விட்றாத., நான் இருக்கும் போதே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டன்னா அவ குடும்பத்தை அவ பாத்துகுவா, அதுக்கு முன்னாடியே நான் போயிட்டேன்னா…” என சிவகாமி சொல்ல சொல்லவே நிவேதா வந்து விட்டாள்.

“என்ன?? போயிட்டா., என்ன பேசிட்டு இருக்க ம்மா,..” எனக் கேட்டவள் சிவகாமியின் மறுபுறத்தில் அமர்ந்துக் கொண்டு

“டே அம்மாவை என்னடா சொன்ன…?? எதுக்கு இப்படி பேசறாங்க,..” என நவினிடம் எகிறி விட்டு “இங்க பாரு மா, அவனுக்கு பொண்ணு அமையலன்னு நீ அது இதுன்னு பேசிட்டு இருக்காதா ம்மா, அதெல்லாம் நல்லபடியா அமையும், சும்மா தேவை இல்லாம பேசிட்டு இருக்காதா…” என அவருக்கு ஆறுதல் கூற, சிவகாமியின் கண்களில் கண்ணீர் துளிகள் வெளி வந்தது…

“டே உன்னால தான் அம்மா அழுகறாங்க, அப்பவே ஹாஸ்பிடல் போயி ஐ செக்கப் பண்ணிட்டு வந்திருந்தா இதெல்லாம் தேவையா., ஊசிக்கு பயந்துட்டு போகாம இருந்து இப்ப பாரு…” அவனிடம் சண்டைக்கு செல்ல அவனோ அமைதியாக அவளை பார்த்தான்.

“இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்ததை இப்ப சொல்லி காட்டற பாரு…”என சிவகாமி சொல்ல சொல்லவே சிரித்து விட்டார்… சிவகாமியின் சிரிப்பை பார்த்த பின் நவினின் இதழ்களில் புன்னகை அரும்பியது..

அவர் பேச பேசவே மனம் முழுவதும் துடியாய் துடித்தது. எப்போதும் இப்படி கூறுபவர் தான் இருந்தாலும் மனம் கவலையில் ஆழ்ந்தது… தந்தை இல்லை என்ற நிலையை மனதளவில் ஏற்று கொண்டவனால் தாய் இல்லை என்றால்??? அந்த எண்ணத்தையே அடியோடு வெறுத்தான்… தங்தையில்லா தாய் அன்பில் வளர்ந்த நமக்கே இப்படி என்றால் இரண்டும் இல்லாமல் வளர்ந்த மகியின் நிலையை எண்ணி பார்த்தவனுக்கு  தன்னவளை பூ போல் தாங்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தானாகவே எழுந்தது.

************

ஆட்டம் பாட்டம் என ஆரம்பித்த மகியின் கல்யாண வைபோகம் இரவு வரையிலும் நீடித்தது. வேட்டி சட்டையில் கம்பீரமாய் வளம் வந்து கொண்டிருந்தான் சரவணன். ஜீன்ஸ் பேண்ட், அதற்கு ஏற்றது போல் சட்டையணிந்து வழமை போலவே தன் குறும்பு புன்னகையால் கவர்ந்து கொண்டிருந்தான் கிருஷ்ணன்…  நிவேதாவோ சிவப்பு நிற லேகங்காவுடன் தேவதையாய் வளம் வர, சிவகாமியின் முகத்தில் அத்தனை சந்தோசம் தெரிந்தது… மணமகளின் அறையில் அமர்ந்து இருந்தவளிடம் “அண்ணி…” என்றப்படி நிவேதா வந்தாள்.

“சொல்லுங்க அண்ணி,..” என்றாள்.”அண்ணா உங்களுக்கு கால் பண்ணான், நீங்க எடுக்கலயாம், அவன்கிட்ட பேசிடுங்க…” என சிரிப்போடு நிவேதா சொல்ல முகத்தில் தோன்றிய சிவப்பை மறைத்தப்படி “ம்ம்..” என தலையாட்டினாள்.

“பார்றா, வெட்கத்தை…” என கலாய்க்க “போங்க அண்ணி…” என்றவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது அவளுக்கு…

ஹ்ம்ம்..ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.ம்ம்ம்

மெல்லிசையே என் இதயத்தின்
மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே

என்ற பாடல் அவள் அருகில் கேட்க தொலைபேசி எங்கே என்பதை போல் இருவரும் அறைக்கு வெளியில் வந்து பார்த்தனர்..ஓர் சிறுவனிடம் அது இருந்தது அவனும் அலைப்பேசியுடன் இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்..

” கேம் விளையாட வேணும்னு கேட்டான் அதான் கொடுத்தேன், அதுக்கு அப்பறம் நானே மறந்துட்டேன்…” எனமகி கூற கூறவே அவர்களின் அருகில் வந்த சிறுவன் அலைபேசியை மகிடம் நீட்டியப்படி

“உங்களுக்கு கால் வந்துட்டே இருக்கு அக்கா…” என்றான் வெறுப்பாக, அவனுக்கு போன் இனி கிடைக்காதோ என்ற கவலை போல் “சரி நான் பேசிட்டு தரேன்…” என சிறுவனிடம் கூற, மறுபடியும் தருவாங்க போல என நினைத்தவன் முகம் முழுக்க சிரிப்போடு அங்கிருந்து நக்ர்ந்தான்… “அண்ணா தான் கால் பண்றான், பேசுங்க அண்ணி,..” என நிவேதாவும் அங்கிருந்து செல்ல, அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் மகிமா என்கிற மகாலட்சுமி.

“சொல்லுங்க…”என்றாள் வெட்கத்தோடு.

“கொஞ்சம் பேசணும் மகி…” என்றான் “எங்க இருக்கீங்க…” கண்களால் அவனைத் தேடிக் கொண்டே கேட்டாள்.

“இங்க தான் மாடியில இருக்கேன். இங்க வா.. பேசணும்…” என்றான்.

“சரி இருங்க வரேன்…” என்றவள் மாடியை நோக்கி நடந்தாள்.

“நாளைக்கு நமக்கு கல்யாணம், இப்ப யாராவது நம்ம பேசறது பார்த்தா கிண்டல் பண்ணுவாங்க பிரசாத்…” மாடியில நின்றவனிடம் சிணுங்கலாக கூறினாள்.. அவளின் சிணுங்கல் அத்தனை அழகாய் இருந்தது.. ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் தான் அவன் இல்ல..அவனின் முகமே சரியில்லை என நினைத்தவள்

“என்னாச்சு ஏன் உங்க முகம் சோர்ந்து இருக்கு…” எனக் கேட்க “எனக்கு கொழப்பமா (குழப்பமா) இருக்கு மகி, நான் இந்த நேரத்தில இப்படி நினைக்கறது தப்பா சரியான்னு கூட தெரியல, ஆனா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே உன்கிட்ட கேட்கணும் தவியா தவிக்கிறேன், அதுக்கு சரியான சந்தர்ப்பம் அமையல, இதுக்கு மேலயும் கேட்காம இருந்தா நமக்கு தான் ஃபீயூசர்ல பிராப்ளம் வரும்…” என்றான். அவனை என்னவென்பது போல் பார்த்தாள்.

(((“இங்க பாருங்க அது என் விருப்பம், பிடிக்கலன்னா பிடிக்கலன்னு தான் சொல்ல முடியும்…” என்றாள் கட்டமாக”அதான் ஏன் என்னை பிடிக்கல…” அதே கேள்வியில் நின்றான். “ஏன் பிடிக்கலன்னு உங்களுக்கே தெரியும். உங்க வீட்டுல ஆள் உயர கண்ணாடி இருந்தா பாருங்க…”))) அவள் முன்னாடி பேசியதை இப்போது கூறியவன்

“இதுக்கு என்ன அர்த்தம், முதல்ல சரின்னு சொன்னாய், அப்பறம் வேண்டாம்னு சொன்னாய், ஏன்?? எனக்கு புரியல, அப்ப பிடிக்காத என்னை இப்ப மட்டும் எப்படி பிடிச்சுது…??? இப்பவும் நீ சொன்ன குறை என்கிட்ட இருக்க தான் செய்யுது., நீ சொன்ன மாதிரி ஆள் உயர கண்ணாடி முன்னாடி தான் நின்னிட்டு டெய்லி என் முகத்தைப் பார்த்துட்டு தான் இருக்கேன்.என்கிட்ட துளி கூட மாற்றம் இல்லை, குண்டா, கண்ணு ஒரு மாதிரி அசிங்கமா…”என முகம் இறுக சொல்ல சொல்ல

“போதும் நிறுத்துங்க முதல்ல, பிளீஸ் உங்களை நீங்களே ஏன் மட்டம் தட்டி பேசறீங்க, இதெல்லாம் ஒரு குறையே இல்லை, சொல்லபோனால் அது உங்களுக்கு குறையாவே தெரியல…” என குரல் நடுங்க கத்தியவள் மீண்டும் “உண்மை தான் ஃபர்ஸ்ட் உங்களை பாக்காம தான் வீட்டுல சரின்னு சொன்னேன்.. அப்பறம் நீங்க கால் பண்ணி பேசும் போது உங்க குரல் என்னை வேண்டாம்னு சொல்ல வைக்கல, அதுல அப்படியொரு ஈர்ப்பு எனக்குள்ள உங்க வாய்ஸ் ஆழ புதைஞ்சது போல ஒரு உணர்வு, அதான் நீங்க கேட்கும் போது சரின்னு சொல்லிட்டேன்,..” அடுத்து அவள் கூறும் முன்பே

“அப்ப என்னை பார்க்காம தான் சரின்னு சொன்னாயா…” ஏமாற்றமாக ஒலித்தது நவினின் குரல்.”ஆமா,..” என மகி சொல்ல, அந்த நிமிடம் இருவரிடமும் ஆழ்ந்த அமைதி., பெருமூச்சுடன்

“சரி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, கல்யாணத்தை நிறுத்திடலாம் மகி, எனக்கு என் குறையை முழுமையா ஏத்துக்கிட்டு என்னை லவ் பண்ற பொண்ணு தான் வேணும்… நீ என்னை பாக்காம லவ் பண்ண சொல்றது கேட்க வேணா நல்லா இருக்கும். ஆனா ரியல் லைஃப்ல செட் ஆகாது., இவனை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டோமுன்னு ஒரு துளி நீ நினைச்சாலும் அது எனக்கான தோல்வி தான் மகி, நான் தோத்து போயிடுவேன்னு எனக்கு பயமா இருக்கு மா. பிளீஸ் நம்ம பிரிஞ்சுடுவோம்…, கிழே யார் கேட்டாலும் நான் பாத்துக்கிறேன்…” என்றவன் அவளின் பதிலைக் கூட கேட்காது கிழே இறங்கினான்.

சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த சந்தோச உணர்வு இப்போது அப்படியே வடிந்ததை போல் உணர்ந்தாள். நவின் தன்னை எப்படியாவது வெறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று அப்படி பேசிவிட்டு வைத்தாள். ஆனால் தான் பேசிய வார்த்தைகள் இப்போது இந்த நேரத்தில் தன்னையே பழிவாங்கும் என அவள் நினைக்கவில்லை.

தலை பாரமாக இருக்க, தன்னாலயே விழிகளில் நீர் சூழ்ந்துக் கொண்டது… அப்படியே அமர்ந்து விட்டாள் கிழே பயங்கர சத்தம் அவன் வேண்டாமென கூறியதால் வரும் சத்தம் போல் என நினைத்தவள் அங்கு செல்லவே இல்லை.

சிறிது நேரத்தில் சரவணன்,வேணி,கிருஷ்ணா, பூங்கொடி, மூர்த்தி அனைவரும் மேலே வந்து இருந்தனர்.

“பாப்பா, முதல்ல எழு, இப்ப என்ன ஆயிருச்சு, ஒன்னும் இல்லை டா… காலையில கண்டிப்பா உன் கல்யாணம் நடக்கும், நம்ம கிருஷ்ணா தான் மாப்பிள்ளை…” என சரவணன் சொல்ல திடுமென அவனை பார்த்தாள்.

“எங்க எல்லாருக்கும் இதுல சம்பந்தம்…” என்றான் சரவணன் விழிகளில் நீர் படலம் சூழ்ந்து கொண்டது.

அவனிடம் எதுவும் பேசவில்லை கண்மூடி தன் அண்ணனின் மார்ப்பில் சாய்ந்து கொண்டவள் சரியென தலையாட்டினாள். அடுத்த நாள் காலை மீண்டும் பரபரப்பு,மணமேடையில் நவின் இருக்கும் இடத்தில் கிருஷ்ணன் இருந்தான், இதழ்களைக் கடித்து அழுகையை அடக்கி கொண்டவளுக்கு அவளையும் மீறி ஒரு கேவல் வெளிவர நிஜத்திலும் அழுது விட்டாள்…

“சின்னாக்குட்டி என்னடா ஆச்சு??…, பாப்பா என்னாச்சு டா,கால் ரொம்ப வலிக்குதா ஹாஸ்பிடல் போகலாமா??…” என்ற சரவணனின் குரலும், கிருஷ்ணனின் குரலும் மாறி மாறி கேட்க மெல்ல கண் விழித்தாள்.

தான் இருக்கும் இடம் என்ன என்பதை உணவரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. விழிகளை உருட்டி உருட்டி திருத்திருவென பார்க்கும் மகியிடம்”என்ன டா என்னாச்சு??…. கால் ரொம்ப வலிக்குதா??…” மீண்டும் சரவணன் கேட்க, அப்போது தான் இவ்வளவு நேரம் நடந்த அனைத்தும் அவளின் கனவு எனப் புரிந்தது…

முதன் முதலில் அவனிடம் பேசியது, அதற்கு பின் அவன் மேல் உண்டான ஈர்ப்பு பின் அலுவலகத்தில் நவினின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தது, கிருஷ்ணாவை திருமணம் செய்ய சொல்லி பூங்கொடிக் கூறியது, என இத்தனை நாட்களாக ஆழ் மனதில் அழுத்தி கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் சேர்த்து கோர்வையாக கனவில் வந்து இருக்கிறது என உணர்ந்துக் கொண்டவள் சரவணனையும், கிருஷ்ணாவையும் பாவமாகப் பார்த்து வைத்தாள்…