ஒளி 8

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

வகுப்பறையில் காயூ மற்றும் மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே காயூ யாரைப்போல மாப்பிள்ளை வேணும் கேட்டதற்கு மாணவிகள் அனைவரும் ஜானி என்றனர். ”  யார் ஜானி ?  ” என்ற கேள்வியை முன் வைத்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள் காயூ.

” மேம் உங்களுக்கு ஜானியைத் தெரியாதா ? “

” தெரியாதுமா, எந்த பட ஹீரோ ? “

”  படம், ஹீரோ இல்லை மேம்.  ரியல் ஹீரோ ” என்றனர்.

” தெரியவில்லை யாரென்று ? ” என்று தோளைக்குலுக்கினாள்.

” அவர் பெட் கட்டினதுனால தானே நீங்க இங்க வேலைக்கே வந்தீங்க மேம் ” என்றதும் அவள் முழித்தாள்.

” எனக்கு நியாபகம் இல்லையே. எப்படி இருப்பார், யாரு அவர் ?”

ஐயோ! பிரஜன் தலையில் கையை வைத்துவிட்டான்..

” மேம் ஜானி அண்ணா தான் இரண்டு வருசத்துக்கு முன்னாடி இங்க பிரசிடென்டட்.

அவர் வந்ததுக்கு அப்பறம் தான் ராக்கிங்  இல்லைன்னு சொல்லி நோட்டிஸ் போர்ட்ல ரூல்ஸ் கொண்டுவந்தாங்க.

எல்லா மாணவிகளும் பாதிப்பில்லாம எந்த பசங்களும் தவறாக நடந்துகாம டிஸ்ப்பீளினா கொண்டு வந்தது அவர் தான் மேம்.

கல்ஜரல் பங்கசன் நடக்கும் போது எந்த தப்பும் நடக்காம இருக்கவும் பெண்களுக்கு பாதுகாப்பும் கொடுப்பார்.ஒவ்வொரு ஸ்டூடன்ஸ்க்கு இம்பார்ட்டன் தருவார்.

தகுதி பார்த்து, பணம்
பார்த்து பழக மாட்டார்.தப்புனா அதுயாரா இருந்தாலும் தப்புன்னு சொல்லி, தண்டனை கிடைக்கச் செய்வார்.ஸ்காலர்சிப் ஸ்டுடன்ஸ் அவங்க ஸ்காலர்சிப் கிடைக்கிறத மாதிரி பண்ணினார்.நிறையா உதவியும் பண்ணிருக்கார். காலேஜ்ல மட்டுமில்ல வெளியேயையும் தான் ” என்று பெருமைப் பாடினான்.

” ம், பரவாயில்லை அந்த நல்ல மனுசன பார்க்கனுமே” காயூ கூறவே,

” மேம் அவரே வர்றாரு
மேம் ”  என்று கூறிய மாணவியின் முகம் அவனை நோக்கி திரும்பியது.
தன் வகுப்பு எதிரே உள்ள வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான்..

அந்த வராண்டாவிலிருந்து இந்த வகுப்பை கடந்துதான் செல்லவேண்டும் என்பதால் வந்துகொண்டிருந்தான்.எல்லாரும் அவனையே பார்த்தனர்.மாணவிகள் அனைவரும் கன்னத்தில் கை வைத்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.அதை கண்ட காயூவிற்கு சிரிப்பு வர, சிரித்துக்கொண்டே அவனைக் காண்டாள். அவனோ சிரித்தகொண்டிருக்கும் காயூ வை கண்டான்.

ஒற்றைநொடிக்குள்
எத்தனைமுறை வீழ்ந்தேனோ
எண்ணப்படா இவ்வீழ்ச்சிக்கு
காதலெனபெயரிடவா !

அவளைப் பார்த்துக்கொண்டே கடந்தான். அவளும் அவன் செல்லும் வரை விழிகளை திருப்பவில்லை.
அவனும் மறைந்தான்.

” இவர் தான் ஜானியா ?”

” ஆமா மேம்  “

”  ம்ம் நல்ல ஹேண்ட்சம்மா தான் இருக்கார்  ” என்றதும் எல்லாரும் கத்தியே விட்டனர்.

” சரி சரி பசங்க, நீங்க சொல்லுங்க எந்த மாதிரி பெண் வேண்டும் ? “

ஒருவன் தைரியமாக எழுந்தான்.” மேம் அவங்க மட்டும் தான் சொல்லுவங்களா, ஜானி மாதிரின்னு நாங்களும் சொல்லுவோம்..” என்றதும் காயூ அதிர்ந்து

” என்னாது, நீயும்  ஜானி மாதிரின்னு சொல்லப் போறீயா ?”என்று கேட்டாள்.

வகுப்பே அதிர சிரித்தனர்  ”  ஐய்யோ மேம் அது
இல்லை. அவங்க ரியல் ஹீரோவை சொன்னதுபோல. நாங்க ரியல் ஹீரோயின் உங்களைப் போல தான் பெண் வேண்டும் ”  என்று கூற பசங்களும் ஆமோதித்தனர். வகுப்பு முடிந்ததென்று மணி அடித்தது.மெல்லியதாய் சிரித்தப்படி வெளியே நடந்தாள்.

அந்த நால்வர் வகுப்பில் அமர்ந்திருந்தனர். ஒரு மாணவனை விட்டு பிரஜனை அழைக்கச் சொல்லிருந்தான் ஜானி.
பிரஜனும் வந்தான்.

” அண்ணா சொல்லுங்க என்ன விசயம் ? “
” எதுக்குடா என்னைய எல்லாரும் கோரஸ்ஸா பார்த்தீங்க. அந்த காயத்திரி மேம், ஏன் பார்த்தாங்க. என்னடா பேசுனீங்க என்னப் பத்தி ? .”

” காலேஜின், அறியவகை ஜந்து நீ தானு சொல்லிருப்பாங்க இல்லடா பிரஜன்  ”  தியாகு கூற, அவனை முறைத்தான்.
” அண்ணா அதுவந்து… ”  என்று தயங்கினான்.

” அடேய் சொல்லுடா…”

” இல்ல அண்ணா! உங்களுக்கு  எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் காயந்திரி மேம் கேட்டாங்களா ? 
பொண்ணுங்க எல்லாரும் உங்க பேரைத்தான்  சொன்னாங்க.”
உடனே ஜானி காலரைத் தூக்கிவிட்டுகொண்டான்  ” ஆனா…. ” என்று பிரஜன் இழுத்தான்.
” என்னடா ஆனா ?”

“உடனே காயத்திரி மேம், நீங்க யாருன்னு  தெரியலை சொல்லிட்டாங்க  அண்ணா ” என்றுச் சொல்ல, இதை கேட்ட தாமஸ்,  பைசல் , தியாகு, மூவரும்
விழுந்து விழுந்து சிரித்தனர்  ” ஐய்யோ பல்பே ! ” 

” பிரஜன் உண்மையா அவங்க அப்படிதான் கேட்டாங்களா ஜானி யாருன்னு ?”

” ம்ம் ஆமா அண்ணா. அப்பறம் நீங்க பண்ணதெல்லாம் சொன்னேன். அப்பதான் அவங்களும், அந்த நல்ல மனுசன பார்க்கனுமே சொல்ல, நீங்க வர சரியா இருந்தது.எல்லாரும் உங்களையே பார்த்தோம்.”

” அப்பறம் அப்பறம் பசங்க கிட்ட கேட்டாங்க யாரு மாதிரி பெண் வேணும் அதுக்கு..
நம்ம ரவி இருக்கான்ல. அவன் தைரியமா காயத்திரி மேம் மாதிரியே பொண்ணு வேண்டும் சொல்லிட்டான்..” என்றான்.

சற்று பொறாமை தலைதூக்கியது அவனுக்கு. ” அப்ப பெல் அடிக்க சிரிச்சுடே போயிடாங்க. “

” ஹாஹா மச்சி, ஹீரோ டா,  ஹீரோடான்னு காலரைத் தூக்கிவிட்டுருந்த. இப்படி யாருன்னு கேட்டுட்டாங்களே மச்சி உன்னைய ” என்று தியாகு கூற, மற்ற மூவரும் சிரித்தனர்..” நீ என்ன சொல்லு, நான் தான்டா ஹீரோ மச்சி இந்த கதைக்கு “

” மச்சி பொதுவா படத்துலையோ கதையிலையோ பிரண்ட்ஸை  தான் காமெடியனா போடுவாங்க, இல்லை காமெடியனைத்தான் பிரண்டா போடுவாங்க. ஆனா, இந்த கதையில தான் ஹீரோவையே காமெடியனா மாத்திடாங்களே  மச்சி வா வா வந்து கூப்புல உட்காரு ”  என்று கலாய்த்துவிட்டான் தாமஸ்.

” மச்சி பொதுவா ஹீரோதானே ஹீரோயின ரசிக்கனும், ஹீரோயின் ஹீரோவ  ரசிக்கனும்   ஆனா, இங்க ஹீரோயின் ஹீரோவ  தெரியாது சொல்லிட்டாங்க பாரேன்.. ஜானியவே யாருன்னு தெரியாது சொல்லிடாங்க பா.. அவங்கள மாதிரி தான் மச்சி பொண்ணுவேணும்.” பைசல் கூற அவனை முறைத்தான்.

” இப்ப நீ,   நான் , காமெடியன் தான் மச்சி” தியாகு கூற சிரித்தனர். அமைதியாக அமர்ந்துவிட்டான் ஜானி, அவர்கள் அடுத்து பேசினதெல்லாம்  காதில் விழவில்லை.

இங்கோ சிரித்துக்கொண்டே வந்தவளை, கேள்வி கேட்டு மறித்தனர். ”  என்னடிமா சிரிச்சுட்டே வர்ற? “

” இல்லை சுந்தரம்”  என்று அனைத்தையும் கூறினாள்.

” எவ்வளவு தைரியம் அவனுக்கு, எப்படி அப்படி சொல்லலாம்…?” கௌசி கோபம் கொண்டாள்.
” நீ சும்மாவ விட்ட காயூ.”

” இதுல நான் என்ன சொல்ல கௌசி. நான் தான் கேள்வி கேட்டேன்.அவங்க பதில் சொன்னாங்க. அதுமட்டுமில்லாம அவன் என்னை மாதிரி தானே சொன்னா என்னையில்லையே. அவன்கிட்ட நான் கேட்டு, நானே அவனை திட்டுனா அது தப்பாயிடும். அதான் கடந்துவந்துடேன்.”

” இப்படி அவங்கள பேசவிட கூடாது காயூ ” கௌசி கூற, ”  எந்நேரமும் கிளாஸ் எடுத்தா போர் கௌசி. சுந்தரமா நீங்க சொல்லுங்க நான் பண்ணது தப்பா ? “

” இல்லடிமா நீ எதுவும் சொல்லாதது சரிதான். நாம அத ஏன் செய்றன்னு கண்டிச்சோம்? அத ஏன் செய்யகூடாதுனு யோசிப்பாங்க.இந்தகாலத்துப் பசங்க மன நிலை அதுதான். நாம தட்டித்தான் கொடுக்கனும் ஏத்திவிடகூடாது. ” சுந்திரம் கூறினார்

” சரிதான் மா..
நாம பிரண்டிலியா தான் நடந்ததுனும் அவங்க  கிட்ட, அப்பதான் அவங்க மனுசுல எந்த தப்பான எண்ணமும் பதியாது. நல்ல விசயங்களையும் சொல்லி அவங்களை ஊக்கமே படத்தனும், கண்டிப்பில்லாம சொல்லி அவங்கள மேம் படுத்தனும் ” சக்தி கூற

” சரியான சொன்னீங்க சாமி.”

” ஆனா, அந்த பையன் சொன்னதுல எந்த தப்பும் இல்லை மாமி “

அவனை புரியாமல் பார்த்தாள் காயூ.
” என்ன சொல்லவர்றீங்க சாமி ? “

எழுந்து வகுப்பிற்கு தயாரானவன். வாசல் வரை சென்று திரும்பி அவளைப் பார்த்து “
அவன் சொன்னதில் தவறேதுமில்லை உன்னை போல பெண் கிடைத்தாள் வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும் ”  என்று கூறிச் சென்றுவிட்டான் சக்தி.
அவளுக்கு ஏனோ மனம் நெருடலானது.கௌசியும் சுந்திரம்பாளும் சிரித்துக்கொண்டனர்.

”  அந்த காயத்தி வந்து  ஒருவாரம் ஆச்சு ஆதிசார். இன்னும் அவனை அனுப்பாம விட்டுவச்சிருக்கீங்க, ஆச்சரியம் தான்.”

” எடுத்த எடுப்பிலே குறைச் சொல்லிட்டு இருந்தா தெரிந்துவிடும். நாம தான் வஞ்சகம் வச்சுருக்கோம்ன்னு.அவளா சின்ன விசயத்துல மாட்டுவா அப்ப பார்ப்போம்..”

” பார்த்து சார் பார்ப்போம் பார்போம்ன்னு சொல்லி, உங்க இடத்துக்கு அவ வந்திடாம ”  என்று கூறிச்சென்றார் அவரது கையாள். காயூவை வெளியே அனுப்ப திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார் ஆதி.

ஆதி,  சம்பத்தின் தம்பி. இந்த கல்லூரியில் அவருக்கும் பங்கிருந்தாலும்  முதல்வராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் விருச்சமாய் வளர்ந்திருக்க, அதை வேறோடு அறுக்கவே, சம்பத் வெங்கட்டை முதல்வராக்கினார். அதற்கு தான் இத்தனை  கோபம். எதாவது பிரச்சனையைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

அண்ணா, வெங்கட்டை இடைமாற்றிடுவார் என்று நினைத்தே ஒவ்வொரு பிரச்சினைகளைக் கொடுக்க.

எல்லாத்தையும் சமாளித்து தான் கல்லூரியை நடத்திக்கொண்டு வருகிறார் வெங்கட்…

ஏழுவருடங்களுக்கு முன்பு ஆதி , வெங்கட் மற்றும் ஹரிஹரன் மூவரும் கல்லூரிப் பேராசிரியாராக பணியாற்றினர். மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்..

அப்போது இருந்த முதல்வர் வி.ஆர்.ஸ் வாங்கி விடவே. சம்பத்திற்கு ஒரே குழப்பம் யாரைத்தேர்வு செய்யவேண்டும்..

இப்பதவிக்கு, ஹரிஹரனோ , வெங்கட்டிற்கோ பெரிதும் ஆசை இல்லை. ஆனால் ஆதிக்கு இப்பதவி மேல் பேராசை  உண்டு..

தன் தம்பியைப் பற்றித் தெரிந்த சம்பத் அவரிடம் அந்த பொறுப்பை தர மறுத்து மற்ற இருவரில் ஒருவரிடம் கொடுக்கலாம் என்று நினைத்தவருக்கு.

முதலில் தோன்றியது ஹரிஹரனே கல்லூரி போர்ட் மெம்மர்ஸ்ஸிடம் கலந்துபேசுவதை அறிந்துக்கொண்ட ஆதி,

ஹரிஹரனை பழிவாங்க ஒரு பெண்ணை வைத்து அவனை தவறானவன் என்றும் இவன் முதல்வரானால் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தன்னாட்களை வைத்து மாணவர்களைபோல். கல்லூரி நிர்வாகத்திடம் கம்பளைண்ட் கொடுக்க வேறு வழியின்றி டிஸ்மிஸ் செய்தனர்.

தன்னை நிருப்பிக்க வழி தெரியாததால் வெளியேச் சென்றுவிட்டார்.

அடுத்து வெங்கட்டை என்ன செய்யலாம் என்று நினைக்க, சம்பத் அவரையே முதல்வாராக, இவரை துனை முதல்வாராக நியமனம் செய்தார்.

அன்றிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கின்றனர்.

ஆதிக்கு வஞ்சகம் அதிகமாகிக்கொண்டே போனது.
திறமையான ஆசிரியர்கள் நிறைந்த அந்த கல்லூரியில் ஆதியை போல் சில வஞ்சக மனிதர்களும் ஆதியுடன் கூட்டனி வைத்திருக்கின்றனர்.திறமை அதிகம் இருப்பதால் தலைகனம் அதிகம் கொண்டிருக்கிறார் ஆதி.

சம்பத்திற்கு ஒரு மகள், ஆதிக்கு ஒரு மகன்.சம்பத்திற்கு பெண்குழந்தை தாமதமாக பிறந்தததால் முதல் ஆண்வாரிசு ஆதியின் மகன் தான் ஷ்ரவன்..

தாயைப்போல பிள்ளை  என கூறவது போலத்தான் இவனும் தந்தைபோலவே. ஏன் அதற்கும் மேலே பெண்கள் பெயரை கூட விட்டுவைக்காத அக்மார்க் நல்லவன். குடி போதை என அனைத்திற்கும் அடிமையானான்.

வீட்டிற்கு ஒரே ஆண் வாரிசு என்பதால் அவனது தப்பைக் கண்டிக்க மறந்தனர்.அவனும் mca சேர்ந்திருக்கிறான் அதே கல்லூரியில்.
அவனைப் பற்றி வெங்கட்டிற்கு தெரிந்தும்..வேறு வழியின்றி சேர்த்துக்கொண்டார்.

இதுவரை அவன் பிரச்சினை எதுவும் பண்ணவில்லை. இனி வரும் விழைவுகள் யாரும் அறிந்திடவுமில்லை.

ஸ்வாதி அழகான அமைதியான பெண். தன் தமயனுக்கு நேரெதிரே. அன்பானவள்.வீட்டில் செல்லம் கூட பன்னிரெண்டாவது படிக்கிறாள்.இவள் தங்கை என்பதால் ஷ்ரவன் விட்டுவைத்திருக்கிறான்,.

ஆதியின் அடுத்த டார்கேர்ட் காயத்திரி தான். அவளை வேலைவிட்டு தூக்கினால்.இனி யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது என்று மனதில் வைத்த அவளை எவ்வாறு துரத்திவிடலாம் என்றே யோசித்துக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறே கல்லூரி நாட்கள் நகரந்தது.சைகில் டேஸ்ட் இன்டர்னல் என்று அனைவரும் பிசியாகிக் கொண்டிருந்தனர்..

இருந்தும் பிரச்சினை இருக்கத்தான் செய்தது கம்யூட்டர் ஆசிரியரால். சரியாக பாடம் நடத்துவமில்லை வகுப்பிற்கு வருவதுமில்லை. எங்கையாவது இடம் கிடைத்தால் படுத்து உறங்கிடுவார்.இப்போது இன்டர்னல் எக்ஜாம் என்ன பண்ணுவதென்றே மாணவர்கள் குழம்பிபோயிருந்தனர்..

” ஏன்டி இந்த கம்யூட்டர் சம்பஜட்ல பெயில் ஆயிடுவோம் போலையே? கம்ப்யூட்டர் சப்ஜட் படிச்சு வந்தவங்க  எழுதிடுவாங்க. நாம பயோமேத்ஸ் எப்படி டி கம்ப்யூட்டர் பத்தி தெரியும்…” தர்ஷினி கூற

” நானாலாம் கம்ப்யூட்டர் லேப் பக்கம் போய் நாலுவருஷம் ஆச்சு டி ” லத்திகா கூற..

” இந்தாலும் ஒன்னுமே எடுக்கல,  க்ளாஸ்க்கு வரதே இல்லை. லேப்க்கும் கூட்டிட்டு போறதில்லை.இப்ப இன்டர்னல்ன்னா என்னடி எழுத..?
இப்படியே போச்சுன்னா செம்லையும் கோவீந்தா தான்..” தர்ஷினி கூற,

” பேசாம பிரஜன் சீனியர் கிட்ட சொல்லுவோமா ?”

” அது தான்டி சரி.. “

பர்ஸ்ட் இயர் மாணவர்கள்  அனைவரிடமும் கலந்து பேசினார்கள்.பின் தேவ் பிரஜனிடம் இதை பற்றிக் கூறினாள்,..

” சீனியர்…”

” சொல்லு தேவ் “

” அது வந்து…”

” சொல்லுமா எதுவும் பிரச்சினையா…?”

” ஆமா சீனியர் எங்களுக்கு கம்ப்யூட்டர் சார் ஒழுங்கா வரதே இல்லை.இப்ப இன்டர்னல் வர போகுது பயமா இருக்கு “

” ஏய் இத இப்ப வந்து சொல்லுற செம் முடிச்சுட்டு சொல்லருக்கலாம்ல “

” எனக்கு தெரியல சீனியர் பயமா இருக்கு.கம்ப்யூட்டர் ஸ்டுடெண்ட்ஸ் கூட எழுதிருவாங்க. ஆனா, எங்களுக்கு ஒன்னுமே தெரியாது சீனியர்” என்றாள்.

” சரி சரி நான் சார்கிட்ட பேசுறேன்.நீ போ…”
.
அவன், கம்ப்யூட்டர்  டிப்பார்மெண்ட்டிற்கு அவரை காணச் சென்றான்.
அவரோ அங்கே தூங்கிகொண்டிருந்தார்.

” சார் சார்.” எழுந்திருக்கவே இல்லை.மீண்டும் அழைத்தான்
ம்க்கூம் எழவே இல்லை.

” சார் ”  என்று ஓங்கி கதவை தட்டப் பதறி அடித்துக்கொண்டு எழுந்தார்.வெங்கட் சார் என்றோ பயந்து, ஆனால் வந்ததோ பிரஜன்.

” உனக்கு அறிவில்ல யாருமில்லைன்னா, போக வேண்டியதுதானே. ஏன் இப்படி கத்திட்டு இருக்க?”

” சார், நான் பார்க்க வந்ததே உங்களை தான் ” என்றான்.

” என்னையா என்ன விசயம் ?”

” நீங்க கிளாஸ் ஒழுங்க எடுக்கலைன்னு கம்பளைண்ட் வந்திருக்கு சார்.  ப்ளீஸ் சார், கிளாஸ் எடுங்க சார்.இன்டர்னல் வரப்போகுது, அப்பறம் செம் வேற வரும் பாவம் சார் ஸஸ்டுடெண்ட்ஸ் “

” நான் ஒழுங்க எடுக்கலைன்னு கம்பளைண்ட் வேற வருதா ? யாரு என் மேல கம்பளைண்ட் கொடுத்தா ?

” அத விடுங்க சார், இப்ப வந்துகிளாஸ் எடுங்க சார்” 

” முடியாதுடா, நீ சொன்னா நான் கேட்கனுமா ? யாரு கம்பளைண்ட் கொடுத்தா சொல்லு. நான் இன்டர்னல் கைவைக்கிறேன்” மிரட்டினார்.

“அதெல்லாம் பண்ணிடாதீங்க சார். ப்ளீஸ், வந்து கிளாஸ் எடுங்க சார்” பிரஜன் அவரிடம் கெஞ்சினான்.

” முடியாதுடா “

” நான், வெங்கட் சார்கிட்ட கம்பளைண்ட் பண்ணுவேன் சார் ” 

” ஓ.. அவ்வளவு தைரியம் இருக்கா ? போடா போய் பண்ணு  ”  என்றார்.

அவனும் செல்ல, கோபம் கொண்டு
முதலாம் ஆண்டு மாணவர்களிடம் வந்தவர்,” யார் என் மேல கம்பளைன்ட் கொடுத்தது? ” என்று கேட்க அமைதியாக இருந்தனர்.

” இப்ப நீங்க சொல்லல, நான் இன்டர்னல் மார்கில் கை வைப்பேன் ” என்றார்.
அனைவரும் பயந்திட வேறு வழியின்றி தேவ் எழுந்தாள்.