ஒளி 7
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
வகுப்பில்லாத நேரம் என்பதால் காயூ நூலகத்தில் அமர்ந்து தனக்கு தேவையானவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாணவர்கள், நூலகத்தில் அதிகம் அங்கிருந்ததால், இடமின்றி இருந்தது. ஜானியும் அங்கே வர, இருக்கை காயூவின் எதிரே தான் இருந்தது. அதில் அமர்ந்தான். அவனும் படித்துக்கொண்டே நிமிடத்திற்கு அவளை காண…
அவளோ கண்ணெடுத்து பாரேன் என்றிருந்தாள். அவனை பார்க்கவே இல்லை. தன் கடிகாரத்தை பார்த்தவள், புத்தக்கத்தை மூடி அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டுத் திரும்பி நடக்கும் போது எதிரே பேசிக்கொண்டு வந்த சக்தியை மோதினாள்.
நெற்றியில் முட்டியதால் தலைகுனிந்து கொண்டு தேய்தவளின் முகத்தை அவனும் பார்க்க சரியாக தெரியவில்லை. இவளும் பார்க்கவில்லை..” அவன் சாரி” என்றான்.தேய்த்துகொண்டே தன் கைகளை உயர்த்தி பரவாயில்லை என்பதுபோல காட்டிச்சென்றாள்..
ஒருகையால் தேய்த்துக்கொண்டு மறுகையை அவனுக்கு காட்டிச்சென்றதால் அவனால் அவளின் முகத்தை சரியாக பார்க்கவில்லை. அவள் சென்றுவிட, இவனோ பார்த்துக்கொண்டே நின்றவன்
‘ யாரிவள்…’ என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
” சக்தி சார் இமயமலையிருந்து எப்ப வந்தீங்க ? ” என்று கேட்டு சக்தியின் யோசனையைக் கலைத்தான் ஜானி.
” இமயமலையா என்னடா சொல்லுற ? ”
” ரஜினிசார், அப்ப அப்ப அங்க போயிட்டு வரமாதிரி. நீங்களும் அப்பப்ப கோவில் குளம்ன்னு போயிருங்க.” அதான் கேட்டேன்.
” அடப்பாவி ! சரி அதவிடு யாரிது புதிதா ? “
” யாரு சார் ?” ஜானி வினவ.
“
இப்பதானேடா என்னை இடித்து விட்டு போனாள். அந்த பெண் யாரு ? “
“
எந்த பெண்ணு சார் இடிச்சா ? ” அவன் நக்கலாக கேட்டான்.
” நான்தான் இடித்தேன் பார்க்காமல் தான் சரி அத விடு யாரவள்.”
” சார் அவங்க உங்க டிபார்ட்மெண்ட் தான். மேத்ஸ் சப்ஜட் எடுக்க வந்திருக்காங்க.”
” வாட் !
ஆதிசார் தான் அவளை எடுத்தாரா ? . “
” இல்லை அது என்னாச்சுன்னா ” முழுகதையும் சொன்னான்.
” பார்ரா ! நீ பெட் கட்டி ஒரு ஆளை உள்ளே சேர்த்துட்ட,
நீ தோற்று உன்னிடம் அவங்க காசுவாங்களேன்னா, ஆச்சரியம் தான்டா.”
” இதுக்கே இப்படி சொல்லுறீங்க.இவ்வளவு நேரம் அவங்க முன்னாடி நான் உட்கார்ந்து இருந்தேன். ஒருநிமிடம் கூட பார்க்கவே இல்லை.”
” ஹாஹா !ரொம்ப சோகமா சொல்லுறீயே நீ. இடித்த என்னையும் தான் பார்க்குவே இல்லை ” என்றான் சக்தி.
” என்னவோ சார். என்னைவிட வயசு கம்மிதான். ஆனா, அவங்கள மேல மரியாதையும், அப்பறம் ஏதோ ஒரு உணர்வு தோணுது. “
” மரியாதை சரி. அது என்ன ஏதோ ஒரு உணர்வுகொன்னுடுவேன் மெலினாவை வச்சுட்டு இன்னாடா பேசுற நீ “
” சார் விசயம் தெரியாதா ? நானும் அவளும் ப்ரேகப் பண்ணிடோம்..”
” ஏன்டா ? “
” அவளுக்கு என்னைவிட,
அடம்பரமும் அதற்கு தேவையான பணமும் முக்கியமா போச்சு சார். அது யார்கிட்ட இருக்கோ அவங்க முக்கியம் போயிட்டா..”
” சரி விடுடா.உனக்கு அவ இல்லைன்னு ஆண்டவர் கணக்கு என்றவன்.சரிடா நான் கிளம்புறேன் வகுப்பிற்கு முதல் நாள் போகனும் ”
” சரி சார் ” என்றான் ஜானி.
வகுப்பு இருந்தது, சக்திக்கும் காயூவிற்கும் அவரவர் வகுப்பில் முழ்கினர்.நேரமும் கடக்க சக்தி முதலில் நுழைந்தான்.
” என்ன ராமன் மாம்ஸ், நம்ம குடும்பத்துல உறுப்பினர் வந்ததைகூட தெரிவிக்கவில்லை ”
” மகனே! நீ எங்கடா இங்க இருக்க. பக்தி பழம்டா நீ! ஊரு ஊரா கோயிலா சுத்திரியே ” சுந்திராம்பாள் கேட்க,
” அதானே! இந்த கோயில வர பொண்ணுங்க பின்னாடி சுத்திருந்தா இவனுக்கு கல்யாணமாவது ஆயிருக்கும். ” ராமன் கூற…
” அட! நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்லுறீங்க ? .”
” அண்ணா நீங்க வரல அதான் அவள பத்தி சொல்லல இப்ப சொல்லுறோம். பெயர் காயத்திரி பி.இ முடிச்சுருக்கா.இங்க மேத்ஸ் எடுக்க வந்திருக்கா..இதோ அவளே வந்துடா! ” என்று கௌசிகூறி முடிக்க, திரும்பினான் அவளும் வாசலில் சிலைபோவே நின்றாள்.
இதுவரை எந்த பெண்ணையும் பார்க்காதவன் . இன்று அவளை கீழிருந்து மேலாக பார்க்க.தெய்வீக கலையில் இருந்தாள்.விட்டால் இவன் அம்மன் என்று காலில் விழுந்தாலும் விழுந்திருப்பான்.
” வாயா காயூ ” என்றார் ராமன்.
” காயூ இது சக்திடா.” என்றார் சுந்தரம்.
” வணக்கம் ” என்றாள். அவனும் வணக்கம் வைத்தான்.தன் இருப்பிடத்தில் அமர்ந்தாள்.
” ஏன் இவங்க வரல.” அவள் கேட்க,.
” அட தங்கச்சி. இவன் பேண்ட் டிஸ்ர்ட் போட்ட சாமியார், ஆசிரியர் பெயர் கொண்ட அருள்வாக்கு ஜோசியர் என பல பெயரு வச்சு கூப்பிடலாம்.ஏன்னா சக்திமேன் இவன் ரொம்ப பக்திமேன்கோயில் குளம் சுத்துவான் மா.”
” நல்லதுதானே அண்ணா ”
” என்னமா சொல்லுற.”
” இந்த காலத்துல இப்படியாரையுமே பார்க்க முடியாது அண்ணா. மன நிம்மதி ஒன்னு இல்லாதனால பல பேர் அத தேடுறேன்னு தவறான பாதையில் போறாங்க. ஆனா, இவரோட பாதை சரிதானே.
முதலாவது கோயிலுக்கு போறதே வேண்டுதல் நிறைவேறுதோ இல்லையோ மன நிம்மதி கிடைக்கனும் தான் போறாங்க.
அது அவருக்கு கிடைக்குதுல அண்ணா, அவர் ஆரோக்கியமாவும் இருப்பார் ” காயூ கூற அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
” அதுக்கு இந்த சின்னவயசிலையேவா இப்படி இருக்கனும்.” ராமன் கூற
” அப்பா.. காலம் வேறப்பா. அந்தகாலம் மாதிரி இந்தகாலம் இல்லை. இப்படி உங்களால பசங்கள பார்க்க முடியிறதே இல்லை காரணம் அதான்பா.
காலம் மாறுது மனிதனும் மாறிடுறாங்க.நிம்மதி, தவறான பாதையில தேடுறாங்க கிடைக்கிறது என்னவோ அற்ப சந்தோசம் தான்.”
” ஆத்தி நீ பெண்சக்திமா. அண்ணாவும் இப்படிதான் பேசுவான்.” கௌசி கூற அவனை பார்த்து அழகாய் ஒரு புன்னகை புரிய, விழுந்துதான் போனான் அவனும்.
” இந்தாங்க காயத்திரி ” அவள் முன்னே குங்குமத்தையும் திருநீரையும் கொடுக்க அவள் திருநீரை மட்டும் எடுத்து வைத்தாள். ” குங்குமத்தையும் வைங்க.”
” இல்லங்க வேணாம். “
” ஏன் என்னாச்சு நான் கொடுக்கிறதுனால ஒன்னில்லைங்க வைச்சுங்கோங்க..”
” இல்லை நான் வைக்க கூடாதுங்க ” என்றாள். எல்லாருக்கும் ஒரே சங்கடமாய் போனது.
” அப்பறம் மாப்பிள உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” விக்னேஷ் இழுத்துச்சென்றான்.
” டேய் ஏன்டா இழுத்துட்டு வந்தா ?.”
” அவங்க தான் வேணான்னு சொல்லுறாங்கள சக்தி, ஏன் கம்பல் பண்ற?.”
” அவங்க வைக்கல அதான் கம்பல் பண்ணேன்..”
” அவங்க வைக்க கூடாதுடா.”
” ஏன்டா ?” சக்தி கேட்க
அவனும் அவளின் கதையை கூற சற்றுகண்கலங்கியது..” ஏன்டா கணவன் போனா பொட்டு வைக்க கூடாதுனு இருக்கா..இந்த பூ பொட்டெல்லாம் சிறுவயதுலருந்து பெண் வைத்துக்கொண்டுதான் வளர்கிறாள்.இடையில் வரும் கணவன் அதை கொடுப்பதில்லை.அவன் இறந்தாலும் அந்த பெண் அதையும் ஏன்டா இழக்கனும்.
அப்படியும் ஒருசிலர் வைச்சாங்கன்னா அந்தப் பெண்ணை பேசத்தான் செய்து இந்தசமூகம். ச்ச்ச…தன்னை அழகுபடுத்து கொண்டு வாழும் வயது
அவளுக்குபூவையும் பொட்டையும் பறித்து வாழ சொல்றாங்க “
” மாப்பிள ஏன் டென்சனாகுற.”
” இதெல்லாம் பார்த்தா கோபமா வருதுடா.” என்று கூறி சென்றான்.
சக்தி,பெயருக்கேற்றார் போல் சக்தியுடையவன்.சிவன் பக்தன் காலையில் ஆரம்பிக்கும் மந்திரங்களை இரவுதான் முடிப்பான்..
வேலையில்லா நேரமதில் சிவ மந்திரங்களை படிப்பான்.கண்ணியமானவன் மாரியாதைக்குரியவன்.தவறென்றால் யாரென்றுகூட பார்க்க மாட்டான் பட்டென்று கூறிவிடுவான்.ஆதி இவனிடம் சற்று ஒதுங்கி தான் இருப்பார்.வெங்கட்டிற்கு செல்லபிள்ளை.தந்தை ஆறுமுகம் தாய் ராதா,ஒரே அக்கா கணவனை இழந்து ஒரு பெண் குழந்தையோடு தாய்வீட்டிற்கு வந்துவிட்டாள்..
சிறு வயதிலே இப்படியாயிற்று என்ற கவலைமட்டும் தான் அக்குடும்பதிற்கு. அவர்களை விட்டு தனியாக வந்து இந்த ஊரில் விக்னேஷ்ஷூடன் தான் தங்கிருக்கிறான்.கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டும் திரியும் தன்மகனை நினைத்து பெற்றோருக்கு கூடுதல் கவலை வேறு. அந்த கவலை மாறுமா.இவனின் எண்ணம் தான் மாறுமா பாப்போம்
ஒரு வாரம் கல்லூரி அழகாய் நாட்களை கடத்தியது.இன்று விடுமுறை தினம். அவரவர் வீட்டில் வேலை செய்யும் நாள்.
“குதிரை யுத்த நாளுக்காக ஆயத்தமாக்கப்படும் ஜெயமோ கர்த்தரால் வரும்..”என்று வசனத்தை கூறி பாதர் அங்கே பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்.பலர் கூடிய இருந்தனர்.
ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் என்றும். தன் அன்னை, தங்கை பாட்டியென ஒரு புறமும் தன் தந்தையோடு தானும் மறுபுறம் அமர்ந்திருந்தான் ஜானி.
அங்கே பிரேயர் நடந்தக்கொண்டிருந்தது..
தந்தை இருப்பதனால் அமைதியாக இருந்தான். ஆனால் அவனது போனை சைலன்டில் போட மறந்தே விட்டான்.மெசேஜ் என்ற பெயரில் சாத்தானின் தூதோ தெரியவில்லை தந்தையின் முறைப்பில் சைலன்டில் போட்டான்.
பின் அனைவரும் சமாதானம் சொல்லிக்கொண்டனர்.அவனோ சுற்றுமுற்றும் கூறியவன் தன் தந்தையிடம் சமாதானம் கூற அவரோ சமாதானம் என்று வெறும் வார்த்தை மட்டும் கூறி திரும்பிக்கொண்டார்.பின் ப்ரெயரில் கடைசியாக ஆமேன் கூற அனைவரும் கலைந்தனர்.
” எத்தனை தடவ சொல்லுறது ஜானி. போனை சைலன்டில் போடு கேட்கவே மாட்டியா? ” கடிந்தார்.
” இல்லப்பா மறந்துடேன் ” என்றதும் அவனை முறைத்தார். முன்னாடி அவர் நடக்க,.
” என்னவாம் இவருக்கு இப்ப. சும்மா சும்மா மில்ட்ரி ஆப்சர் மாதிரி ரொம்ப விரப்பா இருக்கார்.”
” இவ்வளவு நேரம் அவர் உன்
முன்னாடிதானே இருந்தார். பேச வேண்டியது தானே, இப்ப பேசுற ?” ஜெனிப்பர் கேட்க,
” ஜெனிமா நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது. “
” அடேய் நான் தான் பேசுனேன்..” என்றார்.
” அப்பனும் புள்ளைக்கும் இதே வேலையா போச்சு வாடா கத்த போறான் ” பாட்டி அழைத்து சென்றார்.
அவர் நடந்து கொண்டிருந்தார்.பின் இவர்கள் நடந்தனர்.
” ஜார்ஜ் சார் என்ன சார் ஆளவே பார்க்க முடியல ?” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.
” பாருமா யாரோகூடெல்லாம் சிரித்து பேசுறார். நமக்கிட்ட மட்டும் முறைத்து தான் பேசுறார் என்ன டிசைன்னு மா இவர் ? ” ஜானி கேட்க
” அது தெரிஞ்சா சரி பண்ணமாட்டோமா அண்ணா.. “
” இருக்கேன் ஜேம்ஸ் ஏதோ…”
” என்னாச்சு ஜார்ஜ் சார் ? “
” லவ் பண்றேன் வந்து நின்னான்
என் புள்ள. யாருன்னு பார்த்தா வேற மதம். நான் ஒத்துக்கல்ல, ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
வீட்டுல சேர்க்கல, சொத்து வேணும் கேஸ் போட்டுடான்.அவனுக்காக தான் இதெல்லாமே. ஆனா, வேற மதத்தில இருக்க பொண்ணை கட்டி இப்படி என்னை ஆசிங்க படுத்திட்டான்.”
” சார் இந்த மாதிரி பண்ற பசங்கல சோத்துல விசத்தை வைத்து கொன்றனும்.. இல்லை வீட்டுல நம்ம வாழ்க்கையிலே சேர்க்க கூடாது. அவனுக்கு எதுவும் செய்யாதீங்க.ஏன் நம்ம மதத்துல பெண்ணில்லையா, பெற்றோர்கள் நாம பண்ணிவைக்க மாட்டோமா ? நம்முடைய மதத்தை காதல் சொல்லி இழுவு படுத்திறாங்க.புனிதத்தை கூட தெரிஞ்சுகாம மாத்தி கல்யாணம் பண்ணி புரட்சி போராட்டம் குடும்பத்தோட மானத்தை வாங்குறாங்க.எங்க வீட்டில் இப்படி நடந்த கொலைதான் சார் பன்ண்ணுவேன்.” என்று அவர் ஆத்திரமா கூற,
ஜெர்ஸி, ஜானி இருவரும் பார்த்துக்கொண்டனர்.” அண்ணா உன்னைய தான் அப்பா சொல்லுறார்.”
” நான் என்னடி பண்ணேன் ? “
” நீ காதல் வந்து நின்னா உன்னைக் கொல்ல கூட தயங்கமாட்டாரு போல.. “
” ஏன்டி நான் ஏன் காதல் பண்ணப்போறேன்?”
” இல்ல சொல்லுறேன், கவிதை காயத்திரி உலருவேல அதக்குச் சொன்னேன். ” என்றாள். அவனுக்குள் கிலி பிறந்தது..
அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.
” எப்பா இந்த நான்வெஜ் சாப்பிட ஒருவாரம் காத்திருக்கனுமா..”
” வேற என்னடா பண்ண நான் பள்ளி போகனும், பாட்டியால முடியாது. அதுவுமில்லாமல் உங்கப்பா கடுமையா சொல்லிட்டார் சண்டே மட்டுமே நான்வெஜ்.. “
” அதானே மில்ட்ரியே தேவைல போல. இந்தபடுத்து படுத்துறார்..வளர புள்ள நல்ல சாப்பிடவேணாமா நானும்.”
” அண்ணா நீ வளர்ந்தது போதும். இதுக்குமேல நீ வளர்ந்தா வீட்ட இடிச்சு கொஞ்ச உயரமா சீலிங் போடனுமே..”
” குட்டிமா நீயுமா அண்ணவா கலாய்க்கிற…”
” ம்ம் ஆமாமா…”
” உங்கிட்ட இருந்தெல்லாம் கண்டிப்பா விடிவுகாலம் பிறக்கும் எனக்கு வரபோற தேவதை எனக்கு நான்வெஜ் சமைச்சு கொடுப்பா”
” ரொம்ப கனவுகாணாத நான்வெஜ் சமையக்க தெரியாத பொண்ணா, இல்லைனா அத வெறுக்கிற பொண்ணா தான்டா வரப்போகுது உனக்கு, ” பாட்டி கூற
” அப்ப அண்ணனுக்கு ஐயர் வீட்டுப்பொண்ணுதான் பொண்டாட்டியா வரனும்.” அவள் கூற அவனுக்கு காயத்திரி நினைப்பே தோன்றியது.
” அடியே என்ன பேசுற நீ? அப்பா இன்னக்கு பேசுனத கேட்டேல.இத கேட்டா இன்னும் சத்தம் போடுவார் ” என்றதும் நினைப்பில் பறந்தவன் பொத்தென்று விழுந்தான். மதியமாக உண்ட மயக்கத்தில் சரிந்தான்.
இங்கோ காயூ வீட்டில் சாம்பார் ஆம்பளம் காய்கறி என்று உண்டனர்..” எப்படிக்காக இந்த நான்வெஜ் சாப்பிடுறாங்க. ”
” ஏன் தேவ்மா அத பத்தி கேட்கிற.”
” இல்ல அத பார்த்தாலே கொமட்டுறது நமக்கு. ஆனா அதையும் தின்னுறாங்க “
” ஆதி காலத்துலே மக்கள் எல்லாரும் ஒன்னா இருந்தாங்க. அப்பறம் சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் உருவாக்கி வேதங்கள் பல கற்று நமக்கு போதிச்சுருங்காடா.
ஒவ்வொரு பிறிவினருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும்டா.
எப்படி ஐந்திணையா தமிழ் இலக்கியத்துல பிரித்து அந்த திணையில் வாழுற மக்கள் அங்க கிடைக்கிற சாப்பாட்ட பழக்கபடுத்தி அதன் வழியே வந்தது மாதிரி இதுவும்.
மீனவர்களை என்ன சொல்ல அவர்களோட முதன்மையான வேலையே அதான் அதுலையே இருக்கிறவங்க அத சாப்பிடாம இருக்க முடியுமா? அப்ப பசினு என்ன கிடைத்தது சாப்பிட்டு வந்தாங்க அதுக்கப்புறம் நாகரிகம் கலாய்ச்சாரம் உருவானது.
மக்களை ஒரே இனமா பார்க்காம அவங்களுடைய தொழிலை வைத்து பிரிச்சாங்க. நாளடைவில் அதுவே ஜாதி மதம் ஆயிருத்து.
வரலாறு அப்படிமா..” என்றாள்.
” ஏன் சாப்பிட்டாறங்க கேட்டா இப்படியா கிளாஸ் எடுப்ப? உன்னை ஆசிரியராக்கினது தப்பா போச்சு..மேத்ஸ் டீச்சர்தானே நீ வரலாறு டீச்சர் மாதிரிபேசுற?”
” அடிப்பாவி நீ கேட்டது பதில் சொன்னா என்னையே கலாய்கிறீயா…” அவளைத் துரத்த அழகாய் கழிந்தது அந்தநாள்.
மறுநாள் வழக்கமாக கல்லூரிக்கு சென்றனர். இந்த ஒருவாரத்தில் அனைவரிடமும் நன்றாக பேச பழக்கிக்கொண்டாள்,.கௌசிக்கு தோழியானாள்..
சக்தியிடம் விக்னேஷ்ஷிடமும் சகஜமாக பேச பழகிகொண்டாள்.
அவள் சாமி என்ற அழைக்க, இவனோ சொல்லுங்க மாமி என்று அழைத்துக்கொள்ளுவார்கள்.சக்திக்கு காயூவை பிடித்துவிட்டது… கொஞ்சம் கொஞ்சமாகக அவனிதயத்தின் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறாள்.
வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தாள் காயூ.
” என்ன பேகம் ஒரே சோகம். ” தன்முன் அமர்ந்த மாணவியிடம் கேட்டாள் காயூ.
” மேம், அவங்க வீட்டுல அவளுக்கு மேரேஜ் பண்ண போறாங்களாம்.. “
” வாவ் நல்ல விசயம்தானே..”
” போங்க மேம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணணும் ஆசை எனக்கு.. ஆனா அதுக்குள்ள கல்யாணம் பேசுறாங்க ”
” ஹாஹா கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணு. “
” எப்படி மேம் தெரியாதவன கல்யாணம் பண்றது…?”
காயூ அவள் முன்னே கைகட்டிக்கொண்டு நின்றாள்.” உங்க அம்மாக்கு உங்க அப்பா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி யாரோ தானே.
கேள்வி பட்டிருக்கேன் உங்களுடைய திருமணத்தின் போதுதான் மாப்பிள்ளையே பார்ப்பாங்களாமே அதுவும் முடிந்ததக்கு அப்பறம் தான் சொல்லுவாங்க.இப்ப எப்படி இருக்காங்க உங்க அப்பா அம்மா சந்தோசமா தானே இருக்காங்க, உன்னை பெத்தெடுத்து வளர்ந்து எத்தனை வருடம் ஆச்சு.
ஐந்து நிமிசம் பார்க்கிறாங்க சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திபிள்ளையும் பெத்து வளர்த்து நல்லாதானே வாழ்றாங்க..
அந்த காலத்தில பொறுமை இருந்தது இந்த காலத்துல இல்ல, அதான் காதல்ன்ற பெயருல சேராங்க காதல் தீந்ததும் பிரிஞ்சிடுறாங்க.
ஒரு சுவாரஸ்யம் இருக்கும் தெரியுமா தன் கணவனுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்கும் தெரிஞ்சுகிறது. முதல் நட்பாகி அப்றம் காதலாகி சேர்ந்து வாழ்றது சுவாரஸ்யம் நிறையாக இருக்கும். ஆனால் காதல் திருமணத்துல முன்னதாகவே காதலித்துவிட்டு திருமணம் ஆனா, பின் காதலிக்கவே மறந்துவிடுகிறார்கள் ” என்றாள்.
அவள் மனதை மாற்றினாள் காயூ..
” டாங்கியூ மேம்.இத நான் டரை பண்றேன்” அவள் கூற, ” என்னது டரை பண்றியா? எம்மா ஒரு தடவ தான் கல்யாணம் நடக்கும் டரை பண்றேன்னு சொல்லாதமா பக்கோனு ஆகுது” ஒருவன் கூற அனைவரும் சிரித்தனர்.
” சரி சரி பொண்ணுகளுக்கெல்லாம் எப்படிபட்ட மாப்பிள்ளை வேணும்…?” காயூ கேட்க,
“
ஜானி மாதிரி ” என்று
அனைவரும் கோரஸ் பாடினர்.
” ஜானியா எந்தபட ஹீரோ? “
” பட ஹீரோ இல்லை, ரியல் ஹீரோ மேம் “
” ரியல் ஹீரோ வா யாரு ?”
” மேம் ஜானியைத் தெரியாதா ?” பிரஜன் வினவ,” தெரியல பிரஜன் யாரு அது ?” என்றதும் எல்லாரும் விழித்தனர்..
(ஹீரோயினுக்கு ஹீரோ பத்தி சொல்லமா விட்டுடேனோ ஆத்தி காயூமா சொதப்பிட்டாளே)..