ஒளி 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஆடிடோரியத்தில் அனைவரும் கூடிருந்தனர். மேடையில் நிர்வாகி, முதல்வர் ,துணைமுதல்வர் என மேலே அமர ஆதியும் அமர்ந்தார். கீழே ஆசிரியர்களுள் ஒருவராய் காயூவும் அமர்ந்தாள்.
வெங்கட்டே முதலில் பேசினார், அனைவருக்கும் வணக்கம் வைத்தவர்.
” நாம இங்க கூடிருக்கிறது எதற்கென்றால், ரொம்ப நாளா இன்ஜினியரிங் மேத்ஸ் பாடத்திற்கு ஆசிரியர் நியமனம் செய்யாமலே இருந்தோம். அதுனால மாணவர்கள் ரொம்ப பாதிக்க பட்டிருக்கீங்க.அதுக்காக மன்னிப்பு கேட்கிறோம்.இனி அந்த பிரச்சனை இருக்காது நாங்கள்
ஆசிரியரை
தேர்ந்தெடுத்துவிட்டோம். இனி யாரும் கவலை பட வேண்டாம்,
” மாணவர்களே! நீங்க எங்க மேலையும், நாங்க உங்க மேலையும் அதீத நம்பிக்கை வச்சிருக்கோம் தெரியும். இதுனால் வரைக்கும் தவறான விசயத்துக்கிற்காக மாணவர்கள் என் முன்னாடி வந்தது இல்லை. அதற்காக உங்களை நினைச்சு பெருமைப் படுகிறேன்.இங்க எல்லோரும் நல்விதமா பழகுறது நமக்கான பெருமை இன்னும் இந்த கல்லூரி ஒழுக்கத்திற்கு பெயர்பெற்றதுக்கு நீங்களும் ஒரு காரணம் தான். உங்களுக்காக வந்திருக்க இந்த ஆசிரியரையும் நம்மில் ஒருவராக நினைத்து ஏத்துக்கோங்க. அவங்க எப்படி வகுப்பு எடுப்பாங்கன்னு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கு தெரியும்.அதுபோல நல்ல முறையாக வகுப்பை எடுப்பாங்க நம்புங்க நாங்க நல்ல ஆசிரியரைத் தான் தேர்ந்தெடுப்போம்.
இவங்களும் அப்படிதான். நல்ல படிங்க நல்ல மதிப்பெண் பெற்று உங்கள் வாழ்க்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போங்க..” என்று அவர் பேசிமுடிய அதிர்ந்து கரகோசத்தால்.சில வார்த்தைகள் பேசுமாறு காயத்திரி அழைத்தனர்.
எல்லாருக்கும் வணக்கம் வைத்தாள். ” நான் காயத்திரி, ஆசிரியர் என்று சார் சொன்னார். ஆனால் நான் இங்க ஆசிரியராக வரல. ” அனைவரும் அவளை பார்க்க. ” ஆசிரியரென்று சொல்லபடுகிற மாணவி தான் நான். உங்கள் கிட்ட இருந்து கத்துக்க தான் நான் வந்துருக்கேன்.
என்னையும் உங்கள ஒரு ஆளா
ஏதுக்கோங்க.” என்று அவள் எங்கே படித்தாள், என்ன படித்தாள் என்று கூறினாள்
“
அனுபவத்தால கற்கபடுகிற
மாணவர்கள் தான் நாம். அதில் சில தப்புகள் தான் பெரும் பகுதியான பாடம். அதில் இருந்து கத்துக்கலாம் அந்த பாடமும் ஒருமுறைதான் கத்துக்கொடுக்கும். பின் நம்மைத் திருத்திக்கவே சொல்லும்.. நானும் பாடம் தான் கற்க வந்துருக்கேன்.என்னையும் உங்கள் தோழியாக நினைத்துக்கொள்ளுங்கள்.
அதற்காக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.. நான் கற்பது போல நீங்களும் நன்றாக படித்து நல்ல அனுபவம் கற்று இங்க இருந்து போகனும் வாழ்த்துக்கள் ” என்று கூற மீண்டும் ஒரு கரகோசம்.
பின் அனைவரையும் போகச் சொன்னார்கள்.. மாணவர்கள் கிளம்பினார்கள், ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர்.
” தேவ், உங்க அக்கா சூப்பரா பேசுனாங்க ” என்று அவளிடம் அனைவரும் பாராட்டை தெரிவித்தனர்..
” காயத்திரி மா…” நிர்வாகி சம்பத் அவளிடம் வந்தார்.” வெங்கட் ஒரு முடிவு எடுத்தா அது சரியாதான் இருக்கும். இத்தனை வருசமா அதான் நடக்குது..
அவன் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கான்னா கண்டிப்பா உனக்குள்ள நல்ல திறமை இருக்கு நினைக்கிறேன். எங்களோட நம்பிக்கையையும் நீ தான் காப்பத்தனும்மா…” என்றார்.
” கண்டிப்பா சார் இது வேலை மட்டும் இல்ல சார், நம்பிக்கை அடிப்படையில எனக்கு வைத்திருக்க தேர்வு கண்டிப்பா ஜெயிப்பேன்.. ” என்றாள்.
” சரிமா வாழ்த்துக்கள் ” என்று கூறி சென்றார்.
சிவில் டிப்பார்மென்ட் ஆசிரியர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார் வெங்கட். இவர் ஆதி ஹெச். சோ.ஓ டி மா… இவர் ராமன், இவங்க சுந்தராம்பாள். இவர் விக்னேஷ் இன்னோருதர் வர்றல . அவர் பெயர் சக்தி, இவங்க கௌசல்யா…”
அனைவருக்கும் வணக்கம் வைத்தாள் அவர்களும் தான்..” பிரஜன், இவன் நம்ம காலேஜ் பிரசிடென்ட். உனக்கு மாணவர்கள் பத்தி எதுனாலும் தெரியனுமா இல்ல உதவினாலும் இவன் செய்வான்” என்றார்.
” ஒகே மா ஆல் தி பெஸ்ட் வொர்க்கைப் பாருங்க ” என்றார்.
” ஆதியும் அவளிடம் வந்தார். தயாராக, இருங்க மிஸ்.காயத்திரி. நீங்க இங்க நிறையா பார்க்க வேண்டிருக்கு” என்றதும்
அவரை புரியாமல் பார்த்தாள்
” நிறையான்னா, நீங்க சொன்ன அனுபவம் பொறுப்புகளைச் சொன்னேன், வாழ்த்துக்கள். ” என்றார்.
அவளும் சிரித்துக்கொண்டே ” நன்றி” என்றாள்..
அனைவரும் ஸ்டாப் ரூமிற்க்கு சென்றனர்.தன் இருக்கைக்கு வந்தாள் காயத்திரி அவளுக்கென்று டேபில் கப்போர்ட் இருந்தது.
அவளை வலைத்தனர் ஆசிரியர்கள். ராமன், ஐம்பது வயதுடைய ஆசிரியர் ஸ்ட்ரிடாகவும் இருப்பார் அதே சமயம் தோழமையாகவும் பழகுவார்.
சுந்தராம்பாள் நாற்பதெட்டு மதிக்க தக்க பெண் அன்பாக இருப்பார். மாணவர்கள் தன் பேச்சில் இழுத்துவிடுவார். அறிவுரை அதிகம் சொல்லுவார்.
கௌசல்யா காயத்திரியை விட நான்கு வயது பெரியவள், இன்னும் கல்யாணம் ஆகவில்லை .
விக்னேஷ் பின் சக்தி அவர்களும் இருபதெழு வயதுடையோர் இருவரும் தோழர்கள் கூட விக்னேஷூம்கௌசல்யாவும் காதலித்து வருகின்றனர்.
ஆனால் வீட்டிற்கும் கல்லூரிக்கும் தெரியாது. அந்த டிபார்மெண்ட் ஆதியைத் தவிர அனைவருக்கும் தெரியும். அவர்கள் குடும்பமாய் ஒற்றுமையாய் பழகுவார்கள். உதவி செய்வார்கள். அது ஒரு அழகிய குடும்பம்.அதில் இப்போது காயத்திரியும் சேர்ந்திருக்கிறாள்.
அவளுக்கு பல அறிவுரை கூறினார்கள்.முதலில் ஆதியிடம் வம்பு வைத்திடாதே, எதிர்த்து பேசாத என்று பல அறிவுரை கூறினார்கள்.நேரம் நன்றாய் சென்றது மதிய உணவு நேரம் வர.
இங்கே அனைவரும் சாப்பிட்டனர்.
தேவ் , தர்ஷினி ,லத்திகா, தாமஸ் பைசல், தியாகு ,ஜானி அமர்ந்திருந்தனர். முதலில் ஸ்விட்டும் பின் சாம்பார் , பொறியல் என்று கொஞ்சமாக கொஞ்சமாக பறிமாறினாள்..
” என்ன ஜானி அமைதியா இருக்க…” தியாகு கேட்டிட ” ஒன்னில்லடா “
” அப்ப சாப்பிடு..”
” ம் ” என்று சாப்பிட்டான்.
” சாப்பாடு எப்படி?” என்று தேவ் கேட்க,
” இப்படியே
நாங்க சாப்பிடோமுன்னா, போதும் நாங்க ஹேல்தியா குண்டா ஆகிருவோம்..” என்றான் தாமஸ்.
” உங்கள் வீட்டுல கேட்கமாட்டாங்களா தேவ்? இவ்வளவு சாப்பாடு எடுத்துட்டு வர்றீயே..”
” இல்ல மாட்டாங்க. நான் பிரண்டுக்குனு சொல்லிருவேன்.”
” ம்ம் இப்ப உங்க அக்காவேற வந்துருக்காங்க. தெரிஞ்சா திட்ட மாட்டாங்களா, வீட்டுல சொல்லமாட்டாங்களா? “
” எங்க அக்காக்கு என்மேல நம்பிக்கை அதிகம் இருக்கு. நாங்க இரண்டு பேரும் எப்பையும் பிரண்ஸ்ஸா இருப்போம்.நான் நம்ம காலேஜ் நடக்கிறதை எல்லாம் அக்காகிட்ட சொல்லிருவேன்.எங்குள்ள மறைக்க எதுவுமே இல்ல வீ ஆர் பெஸ்ட் பிரண்ட்ஸ்…”
அவள் பேச பேச தியாகு ரசித்துக்கொண்டே ஜொல்லு விட ஆரம்பித்தான்.
அதைகண்ட ஜானி பைசலிடம் கண்ணை காமித்தான், இவனும் பார்த்தான்.இருவரும் கீழே அவனது காலை மிதித்தனர்.” ஆ ” என்று கத்தினான்.
” என்னாச்சு? ” என்று அவள் கேட்க, எறும்பு மித்திச்சுருச்சு.
“ஙே” என்று அவள் பார்க்க
” சாரி கடிச்சுருச்சு.. ” அனைவரும் நார்மலாக தியாகு அவர்களை முறைக்க, இருவரும் சிரித்தனர்.
இங்கோ, ” ஏன்டிமா உன்னைப் பத்தி சொல்லு கொஞ்சம் கேட்போம் ” என்று சுந்தராம்பாள் கூற காயத்திரி தன்னை பற்றியும் கூறினாள். அங்கே ரெக்காட் நோட்டிற்காக வந்த பிரஜனும் வர காயத்திரியின் கதை அவள் கூற பிரஜனோடு சேர்த்து அனைவரும் பரிதாப பட்டனர்..
” இந்த சின்ன வயசுல, இப்படி ஒரு கஷ்டத்த அனுப்பவிக்கன்னும்மா நீ.
” சுந்தராம்பாள் கேட்க,
” வாழ்க்கையைக் கஷ்டமில்லாம நகர்ந்தா, எதையும் கற்றுக்கொள்ள முடியாதும்மா. இந்த கஷ்டம் முதல்ல என்னை முடக்கித்தான் போட்டது. ஆனா, இது மட்டும் பெண்ணுக்கு முக்கியம் இல்ல.கல்யாணம் வாழ்க்கையை அனுப்பவிக்காத பெண்களும் சாதிக்காம இல்லையே,
விதவைன்னு சொல்லிட்டு வெளியுலகம் அவங்களை தள்ளி முடக்கித்தான் வைக்கிறாங்க..
இன்னைக்கு அப்படி இல்லைமா..
யாரு என்ன சொன்னாலும் தன்பிள்ளைக்காக புருசன் இல்லாத சில பெண்கள் போராடுறாங்க.
உலகம் எவ்வளவு பேசினாலும் தன்னோட வாழ்க்கை தான் முக்கியம்னு வாழ்றாங்க..
அதுல நானும் விதிவிலக்கல்ல,
முடக்கி ஆளுவது இந்த சமூகம். அதுவும் சுயநலம் வாய்ந்தது. தனக்கு நேரும் வரை எதுவும் தப்புதான் முக்கியமா பெண்கள் செய்வது.
அதுவே தன்வீட்டு பெண்கள் என்று வரும்போது அதை தவறென சொல்ல மறுக்கிறார்கள்.
இதான் நான் கற்ற பாடம் சமூகம் எப்படின்னு, முடிந்தளவு நான் அச்சமூகதோட ஒன்றாம வாழ்றேன்”
” ஆத்தி இது பிள்ளை தெளிவால பேசுது சுந்தரம்”
” ஆமா அண்ணா, இது குழந்தையின்னு நினைச்சா, இது என்ன ஔவையார் மாதிரி பேசுது ?” அவர்கூற சிரித்துவிட்டாள்.
” சிரிச்சா, நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க ” விக்னேஷ் கூற கௌசல்யா அவனை முறைத்தாள்.
” அடப்பாவி பக்கதிலே காதலிய வச்சு எப்படி வழியுறான் பாருங்களேன், “என்றார் சுந்தரம்.
” காதலியா ? ” காயத்திரி கேட்க
” ஆமாடா இவரும் நானும் காதலிக்கிறோம் மூனு வருசமா.”
” அப்படியா அப்ப உங்கள நான் அண்ணின்னு கூப்பிடட்டுமா. ” என்றதும் எல்லாரும் சிரித்தே விட்டனர்.
” காயூமா சரியா சொன்ன போ…” ராமன் சிரித்துக்கொண்டே கூறினார்.
விக்கேனஷ் முகம் சற்றே வாடியது போலே தெரிய…” என்னாச்சு அண்ணா தப்பா சொல்லிடேனா ?….”
” ஒன்னில்லமா, இவள கடுப்பாக்க, நான் அப்படி சொன்னேன். கடைசில எனக்கு அது ஆப்பா வந்திட்டு. சரிமா இன்னைலருந்து நீயும் நானும் அண்ணன் தங்கச்சி சரியா ” என்று கேட்க ” அப்பாடா இப்பதான் கௌசல்யா முகம் பிரைட்டாகுது ”
” போங்கமா, காயூமா நீ என்னை எப்படிவேணாலும் கூப்பிடு அந்த அண்ணியும் நல்லாருக்கு. நாங்களெல்லாரும் முறைவச்சு தான் கூப்பிடுவோம் இந்த சார் இல்லாதப்ப மட்டும்.
அவர்தான் ரொம்ப டெரர், சிக்குனோம் அவளோதான். ஆனா, அதிகம் நேரம் இங்க இருக்க மாட்டார். நாங்க ஹாப்பியா இருப்போம் நீயும் பார்த்து இரு…” என்று கௌசி சொல்ல,
கொஞ்சம் பயம் அவள் கண்ணில் தெரிந்தது.” பயப்பிடாத காயூமா நாங்க இருக்கோம்ல..” ராமன் கூற “சரிப்பா” என்றாள்.
பிரஜனோ, அதை கேட்டவன்..
யோசித்துகொண்டே வந்தான்.
இங்கே பட்டாளமாய் அமர்ந்து தேவ்வின் சமையலை சாப்பிட்டுகொண்டிருந்தனர்.” ஹேய் பிரஜன் இங்க வா ” ஜானி அழைக்க அவனும் அங்கே சென்றான்
” வாடா வந்து சாப்பிடு…” என்றான்.
” பசிக்கல அண்ணா நீங்க சாப்பிடுங்க,..”
” ஏன் சீனியர் நாங்க கொடுத்தா சாப்பிடமாட்டிங்களா ?” தேவ் கேட்டாள்.
” அப்படியல்லாம் இல்ல தேவ் “
” டேய் ! அப்படி என்னாச்சு உனக்கு இவ்வளவு சோகமா இருக்க ? ”
” அது… அது… வந்து அண்ணா…!”
” அடேய் சொல்லுடா ” தியாகுவும் கேட்டான்.
” ஸ்டாப் ரூம் போனேன். அங்க தேவ் அக்கா அவங்க வாழ்க்கையில நடந்ததை சொன்னாங்க கஷ்டமா இருந்தது. எங்க அம்மா நியாபகம் வந்தது அதான்” என்றதும்
தேவ் அமைதியனாள்.
” சாரி தேவ்”
” எதுக்கு சீனியர், சாரி எல்லாம் எங்க அக்காவே சொன்னாளா? “
” ஆமா தேவ் ” அவள் முகம் சோகமாகியது.” உங்க அக்காக்கு என்ன தேவ்? ” ஜானி கேட்க, அவளுக்கோ அழுகை வந்தது..
” தேவ் அழதா ” என்று அனைவரும் ஆறுதல் கூறினார்கள்..” சரி விடு தேவ் எதையும் சொல்ல வேணாம் விடு, ப்ளிஸ் அழதமா ” என்று தியாகு கெஞ்சினான்.
தன் கண்களை துடைத்தாள்
” அக்காக்கு எம்.இ படிக்கணும் லெக்சரர் ஆகனும் ஆசை. ஆனா, கல்யாணம் பண்ணிட்டு படிக்க வைக்கிறோம் சொல்லி மாப்பிள்ளையும் வந்தார். கல்யாணமும் நடந்தது.
ஆனா, அவளோட ஜாதகத்துல தாலிகட்டினா மாப்பிள்ளை இறந்துடுவான் இருந்தது.
அதுக்கு பரிகாரம் பண்ணுறேன். ஒரே வீட்டுலையும் இருவரையும் பிரிச்சுதான் வைத்திருந்தாங்க.
மாமா அமேரிக்கால வேலைப்பார்த்தார்..
அவரை, அங்க வேலைக்கு வர சொல்லி கூப்பிட்டாங்க மனசே இல்லாம மனுசன் போனார். திரும்பி ஒருவாரத்துல பிணமா தான் வந்தார். ஜாதகம் பலிச்சுருச்சு. அக்காவ ஊரே பேசுச்சு, மாமியாரும் திட்டி வீட்டுக்கு அனுப்பிவைச்சுடாங்க.
அதுல இருந்து அவ வீட்டுக்குள்ளே முடங்கி போய்டா.. இப்ப தான் நாங்க தேற்றிகொண்டு வர்றோம்” என்று முடித்தாள்.
நால்வருக்கும் பெரும் அதர்ச்சிதான்.ஜானி எழுந்தே சென்றுவிட்டான்.யாரும் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை. மதிய உணவுவேளை முடிய அனைவரும் வகுப்பிற்கு சென்றனர்.
முதல்முறையாக வகுப்பெடுக்க போகிறாள், தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிச்சென்றாள்.இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அமர்ந்திருக்க உள்ளே வந்தாள்.
அனைவரும் எழுந்தனர்.
அவர்களை அமர வைத்து ஒருபார்வை அனைவரையும் பார்த்தாள்.
” ம்ம்,..நல்ல சாப்பிட்ட மயக்கம். இப்போ பாடம் எடுத்தா அப்படியே தூங்குவீங்க தானே? ” என்றதும் அவர்கள் சிரித்தார்கள் ” ஒகே வேற டாபிக்பேசலாமா? ” என்றாள். அனைவரும்
ஆர்வமானார்கள். கொஞ்சநேரம் பேசி, பின் வகுப்பை எடுத்தாள். யாருக்கும் தூக்கம் வரவில்லை அனைவரும் ஆர்வத்தோடு கவனித்தனர்.
ஜானியின் கவனம் இங்கு இல்லை. அவன் மனதுமுழுக்க தேவ் கூறியதிலே இருந்தது.யாரும் எதுவும் அவனிடம் கேட்டிடவில்லை. மாலை கல்லூரி முடிய தேவ் , காயூ வீட்டிற்கு வந்தனர்.
பாட்டியிடம், கல்லூரியில் நடந்ததை கூறினாள். ” ஏன்டிமா உன் வாழ்க்கையில நடந்த விசயத்தைக் கூட சொல்லனுமா?”
” அப்படி கேளுபாட்டி, அக்கா இதையேன் அங்கெல்லாம் சொல்லுற? “
” எப்படியும் தெரியதானே டா போகுது. அப்ப சொல்லி பேசி கஷ்டபடுறத விட முன்னாடியே சொல்லிட்டா அத பத்திப் பேச மாட்டாங்கடா…”
” என்னமோ அக்கா, இனி அந்த விசயம் நடந்த மாதிரியே காட்டிக்காத, யார்கிட்டையும் சொல்லாத…” என்றாள்.
” சரிங்க மேடம், தங்கள் உத்தரவு படியே நடக்கிறேன்…” என்றதும் சிரித்துவிட்டாள் அங்கு சந்தோசமே நிலவியது..
கணத்த மனதுடனே வீட்டிற்கு வந்தான் ஜானி. ” வாடா ” ஜெனிபர் வரவேற்றார்.சோபாவில் தன் பாட்டி அருகே அமர்ந்து அவர் தோற்பட்டையில் சாய்ந்துக்கொண்டான்,.” ஜானி, என் கூட வேலைப் பார்க்கிற மிஸ்ஸோட பொண்ணு எம்.இ முடிச்சிருக்கா, அவள வேணா வர சொல்லவா. நல்ல பொண்ணுடா இன்டர்வியூ பண்ண சொல்லுடா சார்கிட்ட “
” தேவையில்லமா, ஆல்ரெடி ஆள் வந்தாச்சு.” என்றான்.
” யாரு அண்ணா வந்தது? ” ஆர்வமாக கேட்டாள் ஜெர்ஸி , ” காயத்திரி ” என்றான்
” யாரு குள்ளவாத்து அக்காவா…?”
” ம்ம் ஆமா ” என்று அறைக்குச்சென்றான்
அவளும் உடன் சென்றாள், ” அண்ணா நிஜமாவா “
” ஆமா குட்டிமா….”
” ஐய்யோ ஒருநாள் பார்த்ததுக்கே கவித எழுத ஆரம்பிச்ச, இப்ப டெய்லி பாப்பியே கவிதை புக் போட்டு கவிஞர் ஜானின்னு பட்டம் வாங்கிடுவியே! ” என்று அவனை கேலி செய்ய,
” குட்டிமா அண்ணணுக்கு தலைவலிக்குது. நான் தூங்கறேன்” என்று மெத்தையில் படுத்தான், சரியென்று வெளியே வந்துவிட்டாள். இரவு சுகமாய் நீண்டு காலை விடிந்தது.
இங்கோ கல்லூரியில்,
” சக்தி எங்க போயிட்டு வர்ற ? “
” வேண்டுதல் சார். “
” எதுக்கு சக்தி கல்யாணம் ஆகனும்ன்ன?” வெங்கட் கேட்க
” அதெல்லாம் இல்ல சார் ” என்று பிரசாதத்தை நீட்டினான். அவரும் பூசிக்கொண்டார்.
” என்ன சக்தி இது ? “
” எது சார் ? “
” உன் வயசுல அவனவன் காதல் பொண்ணு பீச்ன்னு சுத்துறான்.நீ ஏன்டா சாமி சாமி சிவன் சொல்லிட்டு கோவில்கோவிலா சுத்துற…?”
” சார் எனக்கு பிடிச்சதை தானே சார் செய்ய முடியும் “
” இதுல என்ன டா உனக்கு பிடிக்குது…?”
“மனநிறைவா இருக்கு சார்..”
” உனக்கெல்லாம் கல்யாணம் ஆச்சுனா, நீ பூஜை அறை தவிர எந்த அறைக்கும் போகமாட்டா போலையே ” என அவனை கேலி செய்தார்.
” சார் கல்யாணம் வாழ்க்கையில ஈடுபாட்டு இல்லை. எனக்கு அதில் இஷ்டமுமில்லை” என்றான் தீர்க்கமாக,
” உனக்குன்னு ஒருத்திய பார்க்குற வரை இப்படிதான் சொல்லுவ பார்ப்போம் சக்தி, அவளை பார்த்ததும் என்ன சொல்லுறேன்னு? ” என்றதும் சிரித்தவன் பார்க்கலாம் என்று வெளியே வந்தான்.
ஜானி, லைப்பேரிக்கு வந்தான். அங்கே நிறைய மாணவர்கள் அமர்ந்திருக்க அவனோ இடத்தைத் தேடினான். இடமோ
காயத்திரிக்கு எதிரே தான் இருந்தது. அங்கே சென்று அமர்ந்தான்.
அவளின் கவனம் புத்தக்கத்திலிருந்தது, இவனது கவனமோ அவள் மேல் இருந்தது. ‘ஒரு பார்வை பார்ப்பாள்’ என்று நிமிடத்திற்கு ஒருமுறை அவளையே பார்த்தான். அவளோ, இவனை பார்க்கவே இல்லை சிறிது நேரம் கழிய அவளோ மணியைப் பார்த்தாள். ‘இப்போதாவது தன்னை பார்ப்பாள் ‘ எனறெண்ணியவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவனை பார்க்காமல் எழுந்து செல்ல, அங்கே வந்த சக்தியின் மேல் மோதி நின்றாள்.