ஒளி 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
” என்னா மச்சி இப்படி ஆகிடுச்சு?
” தாமஸ் கேட்க
” எப்படி ஆகிடுச்சு ?” ஜானி மீண்டும் கேட்டான்.
” இல்ல ஜானி நீ பெட்ல… ” என்று அவன் முடிக்க விடாமல்,
” பெட்ல ” என்று ஜானி அவனை முறைத்தான்.
” நீ தோத்திட்டீயா ? இல்ல ஜெயிச்சுட்டீயா? ” தாமஸ் கேட்க
பைசலோ ” தெரியலையே பா ” என்று ராகம் பாடினான்.
“அவங்க சின்ன பொண்ணாட்டம் தெரியிறாங்க மச்சி! ” தியாகு கூறினான்.
” ஆமாடா, நம்மல விட ஏஜ் கம்மிதான். ஆனாலும் எவ்வளவு தைரியமா கிளாஸ் எடுத்தாங்க..?” காயூவை புகழ்ந்தனர்.
” ம்ம்….” என்றான் ஜானி.
” என்னடா ம்ம்? ஜானி உனக்கு அவங்களை பிடிக்கலையா…?”
” அப்படி இல்லடா, நான் இதுவரைக்கு பார்க்காத பெண்ணா இருக்காள். ரொம்ப வித்தியாசமான பெண்…!” என்றான்.
” என்னடா ஆச்சு உனக்கு…?”
” தெரியில மச்சி” என்று தோலை குலுக்கினான்
” இன்னா மச்சி புத்தகம் பூட்டிடேன் கதவிட்ட? இப்ப இப்படி பேசுற?”
” பன்னி, ஒருத்தரைப் புகழ்ந்தேன்.
அதுவும் ஒரு பொண்ண புகழ்ந்தா உடனே காதலா?”
” இல்ல மச்சி, நீ எந்தப் பொண்ண பத்தியும் புகழ்ந்து பேசியது இல்லையே… அதான்” பைசல் குழைய,
” பேசுற மாதிரி நான் பார்த்த பெண்கள் இல்லைடா அதான்… ” என்றான்.
” ம்க்கும் பசிக்குது வாடா சாப்பிட போலாம். ” தியாகு அவர்களை அழைக்க, ” நான்வரல, என்னைகிண்டல் பண்ணும் அந்த குள்ளவாத்து…! ” என்றான்.
” அதெல்லாம் பண்ணாது வாடா…! “
” போடா நான் லஞ்சு வைச்சிருக்கேன் இங்கயே சாப்பிடுறேன்” என்று அடம்பிடுத்தான் ஜானி.
” உனக்கே இது சிரிப்பா இல்லை வந்து தொல…”
” சரிசரி வர்றேன். ஆனா, அவ பேசினாலும் கண்டுகாம போயிடனும். நீங்களும் போய் பேசகூடாது. அவ முன்னாடி கிண்டல் பண்ணிங்க கொன்னுடுவேன் ” என்று மிரட்டினான் ஜானி தன் நண்பர்களிடம்.
” சரி சரி வா மச்சி…” அனைவரும் கேண்டீனிற்கு செல்ல, அங்கே தேவ் அமைதியாக அமர்ந்து சாப்பாட்டை திறந்தாள்.. நால்வரும் அவளை கடந்தனர்.தாமஸ் மறந்து அவளிடம் பேசினான்.
” என்ன தேவ், இன்னைக்கு என்ன தக்காளி சாதமா? ” என்று கேட்க ஜானி அவனை முறைத்தான்..
அவளும் அவர்களை அப்போதுதான் பார்த்தாள்.
‘ ஐய்யோ இவன் வேற வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டிகிறான். இப்ப இவ கிண்டல் பண்ணுவாளே!’ தனக்குள்ளே அவன் பேசிக்கொண்டான்
” ஆமா தாமஸ், எப்படி கண்டிபிடிச்சீங்க?” தேவ் கேட்க, ” ஈஈ…வாசனை வந்துச்சு” என்று வழிந்தான். ” அப்ப வாங்க சாப்பிடலாம், எல்லாரும் வாங்க ஜானி சீனியர் நீங்களும் வாங்க ” என்றாள்.
” என்னாது ஜானிசீனியரா? சிவங்கி சீனியராச்சா? என்னமா மரியாதை எல்லாம் கொடுக்கற? ” பைசல் கேட்க
” எங்க அக்கா சொன்னா, உன்னை விட பெரியவங்கள அப்படிபேச கூடாது தப்புன்னு “
” பார்ரா உங்க அக்கா பேச்சையெல்லாம் கேட்பியா…? ” தியாகு கேட்டான்.
” எங்க அக்கா, எனக்கு அம்மா மாதிரி அவ என்னையும் குழந்தை மாதிரி பார்ப்பா. அவ சொல்லுறது தான் கேட்பேன்….”
” சரி சரி தக்காளி சாதத்தை கொடு சாப்பிட்டு பாப்போம்….” ஜானி கேட்க நாலுவருக்கும் ஒரு வாய் கையில் கொடுத்தாள் சாப்பிட்டவர்கள்
திகைத்தனர்.
” ம்ம்… யாரு செய்தா இந்த சாதத்தை ? ” என்று ஜானி கேட்டான்.
” என் அக்கா தான்…”
” ப்பா… செம்ம ” என்று அவளது டிப்பன் பாக்ஸ் எடுத்து ஜானி உண்ண ஆரம்பித்தான்..” நீ என் சாப்பாட்டை சாப்பிடு. நான் இத சாப்பிடுறேன்.” என்று கொடுத்தான்.
அவளோ சிரித்து விட்டு எதுவும் கூற வில்லை தர்ஷினியும் லத்திகாவும் சாப்பாட்டை பகிர்ந்தனர்.
” அடேய் ஜானி எங்களுக்கு” என்று கூறி மொய்த்தனர்..
” அடச்ச நிம்மதியா சாப்பிட விடுறீங்களா இந்தாபோ! ” என்று கொஞ்ம் கொஞ்சம் கொடுத்து மீதியை தின்றான். சாப்பிட்டு முடித்துவிட்டு” தேவ் நீ சாப்பிடலையா ? ” என்றவனை முறைத்தாள் தேவ்.
” ஈ…குட்டிமா செம்ம டேஸ்ட்டா இருந்ததா சாப்பிடேன்.நீ வேணா என் சாப்பாட சாப்பிடேன்” என்று இவன் கொடுக்க அதை வாங்கி திறந்தாள்.அதில் மீன் குழம்பை ஊற்றி பிரட்டிருந்த சோறும் இரண்டு மீன் தூண்டுகள் இருப்பதை பார்த்தவள் பயந்து தள்ளி வைத்தாள்.ஜானி சிரிக்க உன்னை, அவனை அடிக்க துரத்தினாள்.
இங்கோ காயத்திரி வீட்டிற்கு வந்தாள்.
” என்னாச்சுடி மா…?” பாட்டி கேட்க
” இருபாட்டி வந்து சொல்லுறேன்” என்று ரெப்ரஸ் பண்ணிட்டு வந்தாள்.பாட்டியும் அன்னையும் அமர்ந்து கேட்க, நடந்ததை கூறிமுடித்தாள்.
” நல்ல ஆஃபர் டி காயூ உனக்கு. நீ சம்பாதிக்கனும் அவசியம் இல்லைதான். ஆனா, நீ வீட்டோட
இருந்து உன்னோட திறமையும் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைந்துட்டே போகுது.. நீ வேலைக்கு போனும், அதான் சரி வரும். நீ விரும்பினது ஆசிரியராகனும் தானே தானா வந்த வாய்ப்பை நழுவ விட்டுறாத நல்லா யோசித்து முடிவு எடு ” என்று பாட்டி கூற, ” ஆனால், நான் வெறும் பி.இ தானே பாட்டி”
” நீ படிச்சு, உன் பிரண்ஸ் எல்லாருக்கும் சொல்லித்தருவேல. அப்ப எதுவும் தகுதி தேவைப்பட்டதா சொல்லு…?
இங்க பாரு காயூமா தயங்காத எந்தவொரு வேலைக்கும் நாம தகுதியானு கேட்கக் கூடாது? தகுதி இருக்கோ இல்லை அத செய்து பார்க்கனும்.
இல்லைன்னு நினைக்கிற தகுதியை வளர்த்துகனும். தகுதியை விட நம்பிக்கையும் திறமைதான்டா முக்கியம் அது உன்கிட்ட நிறையா இருக்கு…” பாட்டி கூற அவரை அணைத்துக்கொண்டாள்…
” அப்பா வரட்டும் கலந்து பேசுவோம். ஆனா, இந்தப் பாட்டியோட விருப்பம் நீ போனும் தான்டா. ” அவளோ தன்னறைக்குச் சென்றாள்.
மாலையில் கல்லூரி முடிய, ஜானி தன்வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்தவன் தன்னறைக்கு சென்று ரெஃப்ரஸ் ஆகிவிட்டு,கர்த்தரின் சிலை முன் மண்டியிட்டு தொழுதான். பின் தன் அப்பாவைத் தேடினான்.
” என்னடா சீக்கிரமா வந்துட்ட…?” ஜெனிப்பர் கேட்டார்.
” ம்ம் அப்பா இருக்காருன்னு தான் “
” அவரு எப்பையோ ஊருக்குபோயிட்டாரு…” அமர்த்தலாக கூறினார்.
” அடப்பாவிகளா, சொல்லமாட்டிங்களா நான் லேட்டா வந்திருப்பேனே… !” என்றதும் ஜெனிப்பரிடம் முறைப்பைப் பெற்றான்.
” ஈஈஈ….” அவன் வழிய அவன் கையில் காஃபியும் பிஸ்கட்டையும் திணித்தார். சாப்பிட்டுகொண்டே ஹாலில் அமர்ந்தான். மேரியும் ஜெர்ஸியும் பேசிக்கொண்டிருந்தனர்.
” ஹேய் அண்ணா ஜெயிச்சுட்டியா? ” என்றதும்
” இல்லை ” என்று தலையாட்டினான்,.
” அப்ப தோத்திட்டியா ஐநூறு ரூபாய் போச்சா?” அதற்கும் ” இல்லை ” என்று தலையை ஆட்டினான்.
” என்ன அண்ணா சொல்லுற ஒழுங்கா சொல்லு? ” என்று அவள் கேட்க நடந்ததை கூறினான். ” ரொம்ப நல்ல பொண்ணுலடா ” மேரி கூற, ” சரி அண்ணா அவங்க எப்படிருந்தாங்க?குள்ளவாத்து
மாதிரியே இருந்தாங்களா…?”
அவள் கேட்க அவள் எப்படி என்று அவளை நினைக்கலானான்.
” இல்ல குட்டிமா அவ…” என்று அவ,
” கருப்பருவியாய் கூந்தல்
வெள்ளை நதியென
அவள் நெற்றி
வளைந்த வில்லாய்
அவளின் புருவம்
தொடுத்திடும்
விழிபார்வையொன்றும்
அம்பென…
நடனமாடும்
இருகருவிழிகள்…
தென்றலே
அவளது மூச்சுகாற்று..
பூவிதழோ அவ்விதழ்
அனல் கொண்ட தேகம்
கண்ணைப்பறிக்கும்
பாயுமொளியவள்
இதயத்தை திருடும்
வழிபறியவள்…”
என்று கூறி முடித்தும் அமைதியாய் கேட்டிருந்த்தவள், ” டேய் அண்ணா ! ” என்று அவனை உலுக்கினாள்.
“என்ன குட்டிமா?”
” ஒரு வரில அழகா இருக்கா, இல்லை, சுமாரா இருக்கான்னு சொல்லுறத விட்டுட்டு. வைரமுத்து மாதிரி கவித சொல்லிட்டு இருக்க. என்ன அண்ணா மறுபடியும் காதல் ஆஆஆஆஆ?”
” இல்ல குட்டிமா, கவித எழுத டரை பண்றேன் அதான் அந்த ஸ்டையில சொன்னேன். நானாவது மறுபடியும் காதலிக்கிறதாவது, நம்ம அப்பாவ பத்தி தெரியாதா உனக்கு. நாம கிருஸ்டீயன் அவ ஹிந்து எப்படிடா ? போறப்போக்குல ஒரு சைட் மாதிரி நினைச்சுக்கோயேன்.. இனி அவளைப் பார்க்கவே போறதில்லை. இதில
காதல் கன்றாவின்னு ” என்றவனை சந்தேகமாக பார்த்தவள், ” அதே எண்ணத்தோடு இரு அண்ணா, இல்லேன்னா அப்பா கொல்ல கூட தயங்கமாட்டார் பார்த்துக்க”
” தெரியும் குட்டிமா. நமக்கு படிப்பு குடும்பம் தான் முக்கியம்.”
” சரி அண்ணா ! அந்த வேலைக்கு யாரு தான் வருவா? “
” தெரியலைடா… ” என்று உறங்கச்சென்றான்.
இங்கோ,
” வாவ் அக்கா உன்னைய அந்த வேலைக்கு கூப்பிடுறாங்களா ?” தேவ் கேட்டாள்.
” ம் ஆமா தேவ் ”
” சூப்பர் அக்கா. நீயும் நானும் ஒன்னா காலேஜ் போலாம் அக்கா” என குதித்தாள்.
” தேவ் கொஞ்சம் சும்மா இரு நானே யோசிச்சுட்டு இருக்கேன்….”
” இதுல யோசிக்க என்ன இருக்கு மா” அவளது அப்பா இடையில் நுழைந்தார்.
” அப்பா என்ன சொல்லுறீங்க ?… “
” இது ஒரு நல்ல வாய்ப்புடா உனக்கு. திறமையிருந்தும் உபயோகிக்காத மனிதனை என்னான்னு சொல்லுறது.. மிருங்களே தன்னோட திறமைகளை இப்ப காட்டுதுங்க.
நம்ம திறமை மறைத்து வைத்து என்ன பண்ண காயூ மா. வீட்டுகுள்ள அடைந்திருக்கிறது தான் உனக்கு பிடிச்சுருக்கா? “
” அப்படி இல்லப்பா இருந்தாலும் என்னால இது முடியுமா அப்பா? “
” உனக்கு உன்மேலையே நம்பிக்கை இல்லையாடா ?” அவளோ தலைகுனிய,
” காயூ… வாழ்க்கையில பாடம் கற்பது எளிதானது அல்ல. அடிப்பட்டு தான் பாடத்தை கற்கவே முடியும்.. உனக்கு நடந்த நினைச்சு வீட்டுக்குள்ளே முடங்கி இருக்க சொல்லுற பெற்றோர் நாங்க இல்ல.ஏதோ உன்வாழ்க்கை இப்படி ஒரு சம்பவம் நடந்திருச்சு, அத பத்தியே நினைக்காம. கடந்து அடுத்த கட்டத்திற்கு போணும் டா.நீ செய்ய போற ஆசிரியர் வேலை மாணவர்களுக்கு மட்டுமில்ல உனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கத்துக்கொடுக்கும்டா.. இங்க நான் உன் அம்மா, பாட்டி, தேவ் யாரும் தடையா இல்லைடா.உனக்கு நீயே தடையா இருக்காத.உனக்கு நிறையா நேரமிருக்கு நாளைக்கு சொல்லு அப்பா கூட வர்றேன்.”
” சரிப்பா.. “
” நாங்க எதையும் திணிக்க மாட்டோம் டா. உன் சந்தோசம் உன் முடிவு தான் எங்களுக்கு வேணும் ” நாயகி கூற.
” அக்கா நல்ல முடிவா எடுக்கா.”
” அதெல்லாம் நல்ல முடிவா எடுப்பா.வாங்க சாப்பிடலாம்.” அனைவரும் பேசி சாப்பிட்டு உறங்கச் சென்றனர்.
இங்க ஜானி தொழுக, கண்ணைமூடினான்.
அவன் கண்னை மூட, அவளே வந்தாள்.
‘ என்ன கொடுமை கர்த்தரே இது’ என்றவன் கஷ்டபட்டு தன்னை அடக்கி பிரேயர் பண்ணிமுடித்தவன், பெட்டில் விழுந்தான்.
விட்டத்தை பார்க்க மின்விசிறிகள் தன்னைமறந்து வேகமாய் சுத்திக்கொண்டிருந்தது. அதையே கண்டவனுக்கு இன்றைய நாளின் நினைவுகள் சுழன்றது.
‘ ஒருநாள் தானே பார்த்தேன் இந்த பாதிப்பு வர காரணம் என்ன? ‘
” ஒரு நாள் தான். ஆனா, நீ ஓராயிரம் தடவ பார்த்திட்ட மகனே! நானே சாட்சி.” என்று மனச்சாட்சி குற்றம் கூற.. ‘ இல்லையே ஒருதடவ தான் பார்த்தேன்..’ அவன் கூற
” பொய்சொல்லாத நீ சொல்லுறது பொய்ன்னு மத்தவங்களுக்கு தெரியாது. ஆனா, எனக்கு மட்டுமே தெரியும் பொய்யென்று…”
‘ வந்திட்டாரு வக்கில் வாதாடா அடங்குடா ‘ என்று அடக்கிவைத்து கண்மூடலானான்.அவனதுதேவதை நினைவில் இருக்க நித்திரைதேவி தழுவ மறுத்தாள்.
” சரி அவள பார்த்த நாம தூங்கமா இருக்கோமே.. நம்மல பார்த்து அவ தூங்காம இருப்பாளா?”
” பேராசை மகனே ” என்று மீண்டும் மெல்லிய ஓசை வர குப்பற படுத்துகொண்டு தூங்க முயற்சித்தான்,..
கதிரவன் எழுப்பதல் வேலையைச் சிறப்பாய் செய்தான். வாசலில் கோலமிட்டாள்.
கடவுளை தொழுதால் தன் அழகிய குரலால்.
” குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.” பாடினாள். அவ்வீட்டாருக்கு அதுவொரு புத்துணர்ச்சியே கொடுத்தது. பின் சமையற்கட்டிற்குள் தன் அன்னைக்கு உதவி புரிந்தாள்.
” ஏன்டிமா என்ன முடிவு எடுத்துருக்க…?”
அவளோ சிரித்துகொண்டு ” மீண்டும் பள்ளிக்கு போகலாம் சொல்லறது மாதிரி மீண்டும் கல்லூரிக்கு போகலாம் தான் ” என்றாள்.
அவளின் முகத்தை வழித்தவர் ” என் ராசாத்தி நல்ல படியா போய்ட்டு வாடி தங்கம் இனி உனக்கெல்லாம் நல்லகாலம் தான்டா போய் கிளம்புடா.” என்றார்.
அவளும் தன் தங்கையோடே கிளம்பினாள். உடையை நேர்த்தியாக முகம் சுளிக்காதவாறு உடுத்தினாள் மூவரும் விடைபெற்றனர்.
கல்லூரிக்கு வர, அங்கே ஆபீஸ்ல் நாராயணனும் காயூவும் அமர்ந்திருந்தான். தேவ் தன் வகுப்பிற்கு வந்தாள்.
இருவரும் வெங்கட் ரூமிற்கு உள்ளே சென்றனர்.” வணக்கம் சார்.”
” வணக்கம் உட்காருங்க..”
” நான் சூர்யநாராணன், காயத்திரி அப்பா சார்.அவளுக்கு இங்க வேலைக்கு வர்ற சம்மதம். இதர விசயங்கள் பேசனும் அதான் நானும் வந்தேன்…”
அவர் யோசித்தவர் ” காயத்திரி நீங்க போய் ஆபீஸ்ல பார்ம் தருவாங்க பில் பண்ணி கொடுமா ” என்றார் வெங்கட்.
சரியென்று அவளும் வெளியேறினாள். ” இப்ப சொல்லுங்க நாராயணன் சார் சம்பளத்த பத்தியா? “
” ஐயோ இல்ல சார். அவ சம்பாரித்து வாழனும் அவசியம் இல்ல சார்.அவள வேலைக்கு அனுப்பிறதே அவ வீட்டுலே முடங்கி இருக்க கூடாதுன்னு தான்” என்றவர் அவளுக்கு நடந்தை கூறினார்.
” இன்னுமா சார் இப்படியல்லாம் இருக்கு, கஷ்டமாத்தான் சார் இருக்கு இந்த சின்ன வயசுல… “
” அப்பறம் இங்க அவளுக்கு எந்த பிரச்சினையும் வர்றாதுல சார்..” நாராயணன் கேட்க
” நீங்க கவலை படாதீங்க நாராயணன் காயத்திரி இங்க ஒரு ஆசிரியரா இருந்தாலும், எனக்கு அவ பொண்ணு மாதிரி.நான் பார்த்துபேன் சார்… இங்க இருக்குற மாணவர்களுக்கும் எனக்கு அப்படிதான்.. நீங்க தைரியமா இருங்க நாங்க பார்த்துபோம்..”
பின் அனைத்தும் பேசி முடித்து சென்றார் நாராயணன். வெங்கட், சிவில் மூன்று ஆண்டு மாணவர்களுக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணினார்…
அனைவரும் ஆடிட்டோரியத்தில் கூடினர்.
” டேய் மச்சி சிவில் பில்டிங் அமைதியா இருக்கு எங்கடா போனாங்க எல்லாரும்? ” ஜானி கேட்டான்..
வகுப்பில்லாததால் அங்கே அரட்டை அடித்தனர்.” மீட்டிங் டா….” தாமஸ் கூற
” உனக்கு விசயமே தெரியாதா…?”
” என்னாதுடா…?”
” நம்ம தேவ்வோட அக்கா வந்தாங்கள, அவங்களே அந்த சப்ஜட்டிற்கு ஆசிரியரா போட்டுடாங்க ” தியாகு கூற.. ஜானியின் உலகம் நின்றது.
‘ ஆத்தி ஒருநாள் பார்த்ததுக்கு நான் தூங்கலையே, இதுல தினமும் பார்த்தா நான்.
கர்த்தரே இது என்ன சோதனை உன் பிள்ளைக்கு? இனி அந்த பிள்ளை இருக்க பக்கம் தலைவச்சு படுக்க கூடாது ஜானி..’ தனக்கு தானே தன் மனதிற்கு கட்டளைபோட்டான்.
அடங்கி போகிறதா? திமிறி எழுகிறதா ?என்று பொறுத்திருந்து காணலாம்