ஒளி 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
இன்ஜினியரிங் மேத்மேடிக்ஸ் என்ற பாடத்திற்கு ஆசிரியர் இல்லாததால் முதலாம் , இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கொந்தளித்தனர்.
அதனால் பிரஜனிடமே கம்பளைண்ட்டும் கொடுத்தனர்..
பிரஜன் வெங்கட்டீடம் கூற, அவரோ ஆதியை பற்றிக் கூறினார். ” சார் இதுக்கு வழி இல்லையா? “
” இருக்கு நானே ஒரு ஆள் நியமனம் செய்றேன்.”
” பொறுமையா இருக்க சொல்லுபா.விளம்பரம் கொடுத்திருக்கோம். நீயூஸ் பேப்பர்லையும் கொடுத்திருக்கோம் பாப்போம்.நீ கவலைப்படாத,
அவங்களையும் கவலைபடாம இருக்க சொல்லு.”
” சரிசார்…” என்று வெளியே வந்தான்.
பிரஜன் நம்ம கல்லூரியின் பிரசிடென்ட். இரண்டாம் ஆண்டில் தேர்வு செய்யபட்டான். இந்தப் பதவிக்கு, அதுவும் ஜானியால் தான்.
ஜானி நிகர மதிக்கப்படுபவன் இவன் தான். அனைத்தையும் சரியாக செய்பவன். மதித்து நடப்பவன் தான். பிரசிடென்ட் என்ற அலட்டல் இருக்காது. அனைவருக்கும் அவனை பிடிக்கும்.. வெங்கட் ஜானியைப் போலவே இவன் மேலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்.அதையும் இவன் காப்பாத்திக்கொண்டுருக்கிறான்.
ஜானியை கண்ட பிரஜன் அனைத்தையும் கூறினான்.
” சரி பீல் பண்ணாத பிரஜன்வா போய் பாப்போம் ” என்று ஜானி அவனை முதலாம் ஆண்டு வகுப்பிற்கு அழைத்துச்சென்றான்.
அங்கே சிலர் அரட்டை , சிலரோ விளையாட , சிலரோ புக்கின் உள்ளே நுழைந்தனர்.அவர்களின் செயலை கண்டு ஜானிற்கு சிரிப்பே வந்தனர்.
” குட்மார்னிங் சீனியர் ” எல்லாரும் விஷ் செய்தனர்.
அவர்களின் புக்கை வாங்கி பார்த்தவன். கொஞ்ச நேரம் அவனுக்கே புரியவே இல்லை.
அந்த சம்,போட்டு போட்டு பார்த்தவன் நொந்துதான் போனேன்
கடுப்பில் புக்கை டேபிலில் போட்டான்.
தேவ்விற்கு சிரிப்பே வந்தது சிரித்துவிட்டாள்.
” ஹேய் தேவ் எதுக்கு சிரிக்கிற… ?”
” பெரிய இவரு மாதிரி வந்திங்க
சம் போட.. இப்ப என்னாச்சு ?”
” ஓ… அப்ப பேசுற மேடம் வந்து போடுறது…. “
” எனக்கு எப்படிபோட தெரியும்? “
” தெரியாதுல, அப்ப ஏன் சிரிக்கிற? ” என்றதும்
அவள் முறைக்க.
” எனக்கே தெரியலைன்னு தான்
மண்டையப் பிச்சுகிறேன்.
இதுல சிரிப்பு வேறையா உனக்கு.. “
” எங்க அக்கா இதெல்லாம் ஈஸியா போடுற்றுவா. எங்க அக்காக்கு இதெல்லாம் சாதாரணம் ” என்றால் அமர்த்தலாக,
” ஒ… உங்க அக்கா என்ன படிச்சிருக்கா?..”
” அவளும் சிவில் தான் முடிச்சுட்டா…”
” எப்ப முடிச்சா…?”
” இந்த இயர் தான் “
” ஓ… mba படிக்கிற எனக்கே தெரியல உங்க அக்காவுக்கு தெரிஞ்சிடுமா.அதுவும் இப்ப தான் முடிச்சிருக்கா.சிலபஸ் மாறிருக்கு..”
” எங்க அக்கா அதெல்லாம் ஈசியா போட்டிருவா…”
” ஒ… பெட் கட்டலாமா ?”
” பெட்டா?.”
” எஸ் உங்க அக்கா யாருகிட்டையும் கேட்க கூடாது. கணக்கை இங்க வந்துதான் அதுவும்
நீ தான் காட்டனும் அவ போடனும்
முடியுமா?”
” ஓகே பெட்க்கு நான் தயார் “
” ஜெயிச்ச ஐந்நூறு ரூபாய் பெட். ஒகே வா ” ஜானி பெட் கட்டினான்.
” சரி தயார். நான் என் புக் இங்கையே வச்சுட்டு போறேன்” என்று கூறிக்கொண்டிருக்கும் போது வெங்கட் வந்தார். ” இங்க என்ன பிரச்சினை ?”
” குட்மார்னிங் சார் ” என்று அனைவரும் விஷ் பண்ணினர்.
பிரஜன் தான் விளக்கினான்.” சார், பர்ஸ்ட் இயருக்கு ஒரு சம் டவுட் . ஜானி அண்ணா வந்தாங்க, அவங்களாலே முடியலையாம்.
அதான்
தேவதர்ஷினி, பர்ஸ்ட் இயர். அவங்க அக்கா இதை எடுப்பாங்களாம் அதான் பேசிட்டிருக்கோம்… “
” உங்க அக்கா பெயர் என்னமா ? என்ன படிச்சுருக்காங்க? “
எங்க அக்கா பெயர் காயத்திரி, B.E சிவில் *******கல்லூரி பெயரைச் சொல்லி படித்தாகச் சொன்னாள். அது உலகளவில் மிக பெரிய பெயர்பெற்ற கல்லூரி அங்கே ஸ்காலர்ஸ்ப்பிற்கு அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்தான் மட்டுமே
இடம் கிடைக்கும்.
அங்கு படித்தவர்கள் திறமையானவர்கள் தான் என்று நம்பும் கல்லூரி அதை இவள் விசயத்தில் ஒத்துக்கொள்ளலாம்.
” உங்க அக்காவ வர்ற சொல்லுமா பார்க்கலாம் “
” நிஜமாவா சார்…”
” எஸ். அவங்க எப்படி க்ளாஸ் எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்மா, நீ கூட்டிட்டுவா ” என்று வெங்கட் சொல்லிச் சென்றார்.
” மறந்திடாத பெட் பெட் தான். பாப்போம் யார் ஜெயிக்கிறான்னு…” ஜானிகூறவே,
” கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன்…” என்றாள்.
” இதுவரைக்கும் ஜானி அண்ணா எதுலையும் தோற்றதே இல்ல எந்த பெட்டைலும் தேவ் ” பிரஜன் கூறினான்.
” அப்படியா அப்ப நாளைக்கு தோற்றுபோவார்.
எழுதி வச்சுகோங்க சீனியர்.” என்று திமிராக கூறிச்சென்றாள்.
இங்கோ வெங்கட் இதைப்பற்றி கூறினார்.
” வெறும் பி.இ படிச்சா மட்டும் போதுமா ? நல்ல காலேஜ் தான், அதுக்காக சரியான படிப்பில்லாம எப்படி எடுக்கிறது..
கவர்மெண்ட்ல ரூல்ஸ் இல்லை
அவங்க கேட்பாங்களே.. “
” முதல்ல அவங்க வரட்டும் ஆதி சார். எப்படி நடந்திறாங்க பாப்போம். அதுக்கப்புறம் கலந்து பேசலாம்.
உங்ககிட்ட ஒரு தகவலாகத் தான் சொல்லுறேன். நாளைக்கு அவங்க க்ளாஸ் எப்படி எடுக்கிறாங்கன்னு பாப்போம்.” என்றார்.
ஆதியோ ‘ வரட்டும், அது ஒரு பெண் எப்படியும் பயந்து ஓட வைத்திடலாம் ‘ என்று அலட்சியமா எடுத்துக்கொண்டார்.
இங்கோ வீட்டில்….
” முடியாது தேவ், யாரைக் கேட்டு நீ பெட் கட்டின…? “
” யார கேட்கனும் ? என்ன ஒருத்தன் அவமான படுத்திட்டான். சோ நான் ஜெயிச்சே ஆகனும் இதுல. அதுனால நீ வர்ற அங்க”
” உன்னோட இஷ்டத்துக்கு ஆட முடியாது தேவ். என்னை கேட்கமா ஏன் இப்படி பண்ற ?”
” நீ செய்வேன்னு
நம்பிக்கைல தான். அதுமட்டுமில்லை சார் வர சொன்னார். சோ உனக்கு இதுல நல்ல பியூசர் இருக்கு அக்கா. ப்ளீஸ் வா..” என்றாள், காயூவோ,
” முடியாவே முடியாது. நான் அங்க வரமாட்டேன் ” என்றாள்.
” என்னடா நீ இப்படி மாறிட்ட. எதையும் சவால ஏத்துகிட்டு செய்ற ஆள் நீ. கோழை இல்லடா, போய்டு வா. உன்னால முடியும்” என்று அவளது தந்தையும் கூறினார். ” ஆனா, அப்பா காலேஜ்ல எப்படிபா நான் போய் ”
” நீ கோ எட் காலெஜ் தானே படிச்ச.இப்ப என்னடா தயங்குற…?”
” என் பொண்ணு இப்படி மாறிடாளே, ஏன்டி நீ எவ்வளவு தைரியமான பொண்ணுன்னு? நாங்களே உன்ன பார்த்து மெச்சிருக்கோமே டீ… ” தேவகி புலப்பினார்.
” எல்லோரும் அமைதியா இருங்க காயூ உன் பாட்டி சொல்லுறேன்.பெட்டுகாக இல்ல. உன்னோட திறமையை உனக்குள்ளையே புதைந்து இருக்கு. அது மக்குறதுக்குள்ள வெளிய எடு.
வீட்டுக்குள்ளையே அடையாத, இந்த வீட்டுக்குள்ளே உன்வாழ்க்கை முடியல. நாளைக்கு நீ போய்ட்டு ஜெயிச்சுட்டுவா.இது மை ஆடர்” என்றார். எதுவும் சொல்லாது ஒத்துக்கொண்டாள்.
இங்கோ.
‘ என்ன, வீடு மயான அமைதியா இருக்கு ? ‘
” ஜெனிப்பர் , ஜெர்ஷி… ” என்று அவர்களை அழைத்துக் கொண்டே உள்ளே நூழைந்தான் ஜானி.
” ஸ்ஸூ…..” வாயில் விரல் வைத்த வாறே ஜெர்ஸி வர ” அப்பா அப்பா.. ” சைகையில் உள்ளே இருப்பதாகக் கூறினாள். அவனும் வாயில் விரல் வைத்துக்கொண்டு தன்னறைக்குச் சென்று, உடைமாற்றி டைனிங் டேபிளிலுக்கு வந்து அமர்ந்தான். எல்லாரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.
” மணி எத்தனை ? “
” ஒன்பதுபா. “
” எப்ப கல்லூரி விட்டது ? ”
” ஐந்து மணிக்குபா.. “
” எங்க போன ?..”
” தியாகு விட்டுக்குபா… “
” எதுக்கு ? “
” பிராஜட் டிஸ்கஸ் பண்ண “
” வேற எங்கையும் போலையே ? “
” இல்லபா..”
” பைபிள் வாசிக்கிறீயா ? “
” வாசிக்கிறேன்பா “
” பிரேயர் பண்றியா ? “
” பண்றேன் பா. “
” ம்ம் ஒழுங்க இருக்கனும் ” இவையெல்லாம் சாப்பிட்டுகொண்டே இருவரும் பேசினர். பின் அவர் எழுந்து செல்ல…” ஜெனி, இது அப்பாவா இல்ல ஆபீஸரா ? இத்தனை கேள்வி கேட்கிறார்…?”
” டேய் சும்மா இரு ஜானி கேட்டிட போது”
” சரி, எப்ப வந்தாரு ? எப்ப போவாரு ?.”
” தெரியலடா…”
” ஜெனிமா உன் புருசனுக்கு இன்னோரு வீடு இருக்குன்னு நினைக்கிறேன். அதான் இங்க சரியா வரதே இல்லை…”
” என் புருசனைப் பத்தி தப்பா பேசாதடா. இது ஒரு வீடுன்னா. அவர் வேலை பார்க்கிற ஆபீஸ், அது ஒருவீடு. பாவம் பிஸ்னஸ்க்காக ஊரா ஊரா சுத்துகிறார்….”
” அதானே ! புருசன விட்டுக் கொடுக்க மாட்டியே… ” என்றவன் தன் தங்கையிடம் சென்றான். ” குட்டிமா காலேஜ் எப்படி இருக்கு…?”
” நல்லாருக்கு அண்ணா.
நீ சொல்லு குள்ளவாத்து என்ன பண்ணுச்சு…?”
என ஆர்வமாக கேட்டாள். வீட்டில் இருவரும் நண்பர்களை போலத்தான். அனைத்தையம் கூறிவிடுவார்கள் ஜானியும் ஜெர்ஸியும். அவனும் தேவ்வை பற்றி கூறியிருந்தான்.
அவளிடம் நடந்தை கூறினான்” சூப்பர் அண்ணா, நாளைக்கு நீ தான் ஜெயிக்க போற… “
” கண்டிப்பாடா! ஜானி தோற்றதா சரித்திரமே இல்லை…” என்றான்.
அழகாய் ஓர் வாய்ப்பை கதிரவன் நாளாய் கொடுத்திருக்க, வீட்டெங்கும் மந்திரமொலிக்க, சாமிராணி புகையில் கோயிலாய் காட்சி கொடுத்தது அந்த வீடு.
” அக்கா ரெடியா ?” என்று கேட்டு வந்த தேவ் கண்களை விரித்தாள்.
அழகாய் பிங்க் வண்ண காட்டன் புடவையில் ஓவியமாய் வந்தாள் காயூ,
இடைக்குமேல் கீழ் தொங்கும் முடியை அள்ளி மடக்கி கழுத்துவரை போட்டிருந்தாள்.கழுத்தில் மெல்லிய செயின்.காதில் பெரியதாய் தொங்காமல் ஒட்டியே தனது வேலை செய்துக்கொண்டிருந்த
தோடுகள் அவளை அழகாய் காட்டிக்கொண்டிருந்தது.
நெற்றியில் சிறுமச்சம் போல் ஒரு சிறு பொட்டு அதற்குமேலிட்ட திருநீறு.அவள் அழகை கண் வைத்திடக்கூடாது என்று இறைவனிட்ட திருஷ்டிபொட்டே அவளின் இதழின்கீழ் உள்ள அழகிய சிறு மச்சமே.
அவளைக் கண்டோரை இழுத்திடுவாள் இச்சையால் அல்ல.தெய்வீக கலை அவளிடத்தில் பார்ப்பவரெல்லாம் கை எடுத்து ஒருமுறை அவளை வணங்காமல் இருப்பதில்லை.அப்புடவை அவளின் அங்கங்களை மறைத்தது.எந்தவொரு இச்சைக்கு இழுத்திடாது இருந்தது. அவளதுதோற்றம் எண்ணமும் போலே இருந்தது.
” அக்கா அழகா இருக்க அக்கா….” என்றதும்
சிறு உதட்டை விரித்து புன்னகையித்தாள்.
” ஆமாடி என் கண்ணே பட்டிடும் போலடிமா ” அவளை வழித்தார் அவளது அன்னை.
” போமா…” என வெட்கம் கொண்டாள்.
” செல்லமே …!” பாட்டி அழைக்க,
” பாட்டி ” என்று காலில் விழுந்தாள்.
” எப்பையும் சேமமா இருடிமா.நோக்கு எந்த குறையும் வராது.ஜெய்ச்சுட்டு வாடிமா நோக்கு ஸ்வீட் பண்ணிவைக்கிறேன் “
” சரி பாட்டி ” என்று கூறி இருவரும் விடைபெற்றனர்.
இங்கோ, “மேரிமா, என்னை ஆசிர்வாதம் பண்ணு ” என்று அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
” ஏன்டா ? “
” உன் பேரன் இன்னைக்குப் பெட்ல ஜெயிக்கணும் தான் ”
” என்ன பெட் டா ?”
” அதுவா ” என்றவன் அனைத்தையும் கூற, ” எனக்கு என்னமோ, அந்த பொண்ணு தான் ஜெயிப்பான்னு தோணுது…”
” அந்த பொண்ணு யாருனு கூட தெரியாது. அவளுக்கு போய் சப்போர்ட் பண்ணுற…!”
” மனுசல பட்டுச்சுடா,சரி சரி கர்த்தர் உன் கூட எப்பையும் இருப்பார். வென்றுவா மை கிரேன்சன்…. ” என்று ஆசிர்வதித்தார்.
” வர்றேன் மேரி ” என்று கல்லூரிக்கு கிளம்பினான்..
எல்லோரும் ஆவலாக வந்தனர். முதலாம் ஆண்டு வகுப்பில் அனைவரும் கூடி இருந்தனர். ஜானி, தாமஸ் , தியாகு , பைசல் , பிரஜனும் அவர்களோடு இருந்தனர்.
கல்லூரிக்கு வந்தவர்கள் நேராக வெங்கட்டை காணச்சென்றனர்.
” சார், சீஸ் இஸ் மை சிஸ்டர் காயத்திரி…” என்றாள்.
” வணக்கம் மா ” என்றார்.
” வணக்கம் சார்…”
” நீ கான்ஃபிடென்டா இருக்கியா மா ? “
” ம்ம்… இருக்கேன் சார்…”
” ஆல்திபெஸ்ட் மா… “
” நன்றிசார். “
” அழைச்சுட்டு போமா…” என்றார்
முதலில் தேவ் உள்ளே நுழைந்தாள்.அவள் மட்டும் வருவதை கவனித்த ஜானி,
” எங்க உங்க அக்கா ? ” என்று கேட்டான்.
” வர்றல ” திமிராக அவள் கூற, வாய்விட்டே சிரித்தான்.
அனைவரும் சிரிக்க,” என்ன தோற்றிடுவோம் பயமா ? “
” அடேப்பா, எங்க அக்கா வந்துட்டா. சும்மா உன்கிட்ட விளையாடினேன் சிவங்கி…” என்றவள் தன் அக்காவை அழைத்தாள். அழகுபாவை அவள் உள்ளே வந்தாள்.
ஜானி மட்டுமில்ல, மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர்.
” இவ தான் என் அக்கா காயத்திரி. அக்கா நான் பெட் கட்டின ஒட்டகச்சிவங்கி இவங்க தான் பெயர் ஜானிபிரிட்டோ அவங்க பிரண்ட்ஸ் ” என்று அறிமுகம் செய்துவைத்தாள் எல்லோருக்கும் வணக்கம் வைத்து ஒரு பொன்சிரிப்பை உதிர்த்தாள்.
அவளிடம் புக்கை கொடுத்தான் ஜானி. ஒரு சேரில் அமர்ந்தவள் ஆராய்ந்தாள் அந்த கணக்கை. பின் ஒரு பேப்பர் பேனாவை வாங்க்கொண்டு போட்டு பார்த்தாள்.
அவளையே நோக்கிய கண்களை எடுக்க மறந்தான் ஜானி.
அப்போ அப்போ பேனா முனையை இதழிலில் வைத்து யோசனை செய்யும் அழகையும் கண்கள் இங்கும் அங்கும் நடனமாடவதையும் ரசிக்க மறக்கவில்லை.
பூட்டிய புத்தகம் மெதுவாய் திறக்கலாகுதோ !
பின் ஒர் முடிவுக்கு வந்தவள் ” நான் வகுப்பை எடுக்கிறேன்” என்றாள். அவனோ கரும்பலகையை காண்பித்தான்,
அதற்குள் வெங்கட், ஆதியையும் அந்த டிப்பார்மெண்டின் ஆசிரியரையும் அழைத்து அங்கே வந்தார்.
அவர்கள் உள்ளே சென்று அமர வகுப்பை தொடங்கினாள்.
கேள்விலிருந்து முதல் ஸ்டேப்பிலிருந்து கடைசி வரை அழுத்தமாக மனதில் நிற்குமாறு கூறினாள்.விடையும் சரியென வந்தது.
ஆதி ” இதையேன் மாற்றி போற்றிருகிறாய்? ” என்று கேட்க,
” புக்கில அது தவறாக பிரண்ட்டாகிருக்கிறது…
அதற்கு இதுதான் சரியானது” என்றுகூறினாள். “நீங்கள் வேண்டுமென்றால் பரிசோதனை செய்யுங்கள். ஆனால் அதற்கு இதான் சரியென்றாள்…” மாணவர்களுக்கு எளிதாக புரிந்தது.. ஜானி வாயடைத்துப் போனான்..
பின் ஆதி கேட்க அத்தனை கேள்விகளுக்கும் சரியாகவும் சலிப்பின்றியும் பதில் தந்தவளை ஆச்சரியமாக பார்த்தார் வெங்கட்..
ஆதியே இதற்கு மேல் கேள்வி இல்லை என்று அமைதியாகிவிட வெங்கட் கைத் தட்டினார். அவரை தொடர்ந்து அனைவரும் கைத்தட்டினார்கள்.
அதற்கும் புன்னகையை உதிர்த்தாள்.” என் கேபினுக்கு வாமா…” என்று கூறிச் சென்றார் வெங்கட்.
ஆதியோ தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் சென்றார்.
” அக்கா ” என்றே தாவி அவளை அணைத்தவள் முத்தம் கொடுத்தாள். ” தேவ் இது காலேஜ் டி” என்றாள் வெட்கம்கொண்டு, ” பரவாயில்லை கா, நீ என்னை ஜெயிக்க வச்சுட்ட, சோ ஐ யம் ஹாப்பிகா…!” என்று குதுகலித்தாள்.
” குட்டி நீ சந்தோசமா இருந்தாலே போதும் இந்த அக்காக்கு ” என்று வாஞ்சையாக மொழிந்தாள். ” ஹேய் ஜானி சார், நான் ஜெயிச்சுடேன்” என்று தேவ் சந்தோசத்தில் கூறினாள்.
” சரி சரி குள்ள வாத்து, உங்க அக்கா கிரேட் தான் ” என்று தன் பர்ஸை எடுத்து பணத்தை அதிலிருந்து தேவ்விடம் கொடுக்க சென்றவனை தடுத்தாள் காயூ.
” சாரி மிஸ்டர் ஜானி, இதெல்லாம் வேணாம். என் தங்கச்சி ஜெய்க்கணும் நினைச்சேன், அவ்வளவு தான். அவ ஜெயிச்சுடா அதுவே போதும். இந்த பணமெல்லாம் வேணாம், ” என்றாள் தன்மையாக,
” அக்கா ஏன் ?”
” தேவ், அடுத்தவங்க காசு நமக்கெதுக்கு? இது அவங்க கஷ்டபட்டு உழைக்கிற பணம் ஈஸியா கொடுத்திட மாட்டாங்க. அதுல மனநிறைவு இருக்காது. நம்ம அப்பா நமக்கு கொடுக்கும் போது இது வேணாம்” என்று அறிவுரை கூறினாள்.
” சரிக்கா…” என்று தலையை அசைத்தாள் தேவ். அவளை அழைத்துக்கு கொண்டு அலுவலகத்திற்குச் சென்றாள். ‘ இப்படி ஒரு பெண்ணா ‘ என்று விழித்துப் பார்த்தான் ஜானி.
வெங்கட்டை காணச்சென்றாள்.” ரொம்ப அழகா எடுத்தமா.எனக்கே மீண்டும் வகுப்புக்குப் போய் படிக்கனும் தோணுச்சு. நீ இங்க வேலைக்கு வர்றியாமா. உனக்கே தெரியும் உன் சிஷ்டர் சொல்லிருப்பா. சோ நீ யோசித்து சொல்லுமா.., “
” சார் நான் வெறும் பி.ஈ தான் படிச்சிருக்கேன்…”
” பரவாயில்லை மா நீ ஆசிடெண்ட் பிரபசரா சேர்ந்துகோ. உனக்கு டவுட்ன்னா ஆதி சார் கிளயர் பண்ணுவார் ” என்றார்
” நான், வீட்டுல கேட்டு சொல்லுறேன் சார் ” என்றாள்.
” சரிமா உன் இஷ்டம் நல்லா முடிவா சொல்லுவேன் நம்புறேன்மா ” என்றார் கனிவாக, ” சரி சார், நான் வர்றேன் ” என்று வெளியே வந்தவள் யோசனையோடு வீட்டிற்குச் சென்றாள்.