ஒளி 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
” இப்படியா டி சொல்லுவ? சின்ன மீனோகளோடே தப்பிச்சிருக்கலாம். இப்படி பேசி பெரிய திமிங்கிலத்துக்கிட்ட மாட்டிவிட்டியே ” லத்திகா கூறினாள்.
” எனக்கு இவன் இப்படி பேசுவான் தெரியாதுல டி”
” என்னடி தெரியாது மூஞ்ச பாரு. இதுங்களாவது பொண்ணுங்க, அவனுங்க பசங்க டி. ஏடாக் கூடமா எதாவது ராக் பண்ணிட்டா என்னடி பண்ணுவ ?” தர்ஷூ கேட்க,
” அதெல்லாம் எதுவும் பண்ணமாட்டாங்க…, அப்படி எதாவது பண்ணினா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிருவோம். எல்லாரும் அப்ப கேட்பாங்கல! ” என்றாள் தேவ்.
“தேவ் செம டி….”
” எதற்கு தைரியமா இருக்கனும் சரியா வா ” என்று படைவீராங்கனையாய் அவள் முன்னே செல்ல, இருவரும் பின்னே சென்றனர். வரும் வழியெல்லாம் ஜானிக்கு வணக்கம் வைக்காதவரென்று யாருமில்லை. அனைவரும் அவனுக்கு மரியாதை கொடுத்தனர். அவனும் தான் தன் கையை அசைத்தவாறே நடந்தான்.
” ஏன்டி பெரிய ஆள இருப்பானோ! இவ்வளவு பேரும் மரியாதை கொடுக்கிறாங்க. அந்த சீனியர்ஸ் பேசிக்கிட்டதை கேட்டியா தேவ்? இந்த காலேஜ்ஜோட பிளே பாய் இருப்பானோ…!”
” ஆங், இருக்கலாம். ஆனாலும் பசங்களும் வணக்கம் வைக்கிறாங்களே…!”
” அப்போ கேங் லீடர் இருக்கலாம். இல்ல காலேஜ் பிரசிடேன்ட் இல்லைனா காலேஜ் அவனுடையதா கூட இருக்கலாம். சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு சும்மா வாங்கடி ” என்று அதட்டினாள் தேவ்
அங்கே ஆறுபேர் அமர்ந்திருந்தனர் “அங்க பாரு டி எல்லாரும் பல்க்கா இருக்கானுங்க ” தர்ஸு பயம் கொள்ள,
” ஸ்ஸூ… சும்மா வாடி ” மீண்டும்அதட்டினாள் தேவ்.
ஜானியுடன் மூன்று பெண்கள் வருவதை கண்ட தியாகு அவனிடம்
” வா ஜானி, யாருடா இவங்களெல்லாம்? ” கேட்டான்.
” நம்ம சிவில் ஜூனியர்ஸ் டா! ” என்றான்.
” எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்திருக்க…?” பைசல் கேட்டான். ” இருடா இங்கவாங்க,..” ஜானி, அவர்களை அழைத்தான். மூவரும் அவர்கள் முன் வந்து நின்றனர்.
” டேய் இவங்க பாரதி கண்ட புதுமை பெண்கள் டா. ராக் பண்ணா பயப்பட மாட்டாங்களாம். அதான் அதையும் பாப்போம் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். ராக் பண்ணுவோமா?” அவர்களை பார்த்து விஷசமமாய் சிரித்து கேட்டான் ஜானி.
” ஆமாடா போர் அடிக்குதுடா சும்மாவே உட்கார்ந்து இருக்கிறது… ராக் பண்ணலாம் டா ஜானி..” தாமஸ் கூறினான். ” ம்ம்… ஆரம்பிங்க காய்ஸ்.”
” ஹலோ நீங்க நோட்டிஸ்போர்ட்டை பார்க்கல. இங்க நோ ராக்கிங். மீறினால் சஸ்பண்ட் யூ நோ ” என்று சட்டம் பேசினாள் தேவ்.
” அடேங்ப்பா! இந்த ரூல்ஸ் நமக்கு தெரியாம போச்சே தாமஸ்,” ஜானி கூறி அவளைக் கலாய்ந்தான்.
” அதான் சொல்லிடேன்ல, இப்ப தெரிஞ்சுங்கோங்க… “
” ஓ…. நாங்க மீறி பண்ண என்ன பண்ணுவாங்க?”
” சஸ்பண்ட் பண்ணுவாங்க ” தேவ் பதிலுக்கு.
” பண்ணா பண்ணிட்டு போட்டும். இன்னைக்கு உங்களை ராக் பண்ணியே ஆவோம் ” ஜானி உறுதியாக கூறினான்.
“அடியே ! அந்த வாய வச்சுட்டு சும்மா இர்றேன் டி. சாரிண்ணா ப்ளீஸ், எங்களை விட்டிருங்கண்ணா நாங்க ஜூனியர் எங்களை விட்டுடுங்க அண்ணா…”
” ஆமா அண்ணா விட்டுடுங்க க்ளாஸ்ஸூக்கு போகனும் ப்ளீஸ்…” என்று லத்திகாவும் கெஞ்ச, தேவ் மட்டும் திமிரா நின்றாள்.
” சரி நீங்க மட்டும் போங்க. இந்த குள்ள வாத்து இங்கே இருக்கட்டும். ” என்று ஜானி தேவ்வை பார்த்து கூறினான்..
” எது நான் வாத்தா ? நீ தான் ஒட்டகச்சிவங்கி.. “
” என்னது நீ யா ? மரியாதை யா பேசு….”
” நீ எனக்கு மரியாதை கொடுக்கல, அதான் நானும் கொடுக்கல…. “
” கொஞ்சமாவது சீனியர் கிட்டா பேசுறோம் பயமிருக்கா பாரேன் இவளுக்கு?”
” பயமா எனக்கா சான்சே இல்ல”
” பார்த்தேல வரும் போது எல்லாரும் என்னைப் பார்த்து எப்படி பயந்தாங்கன்னு? “
” ஆஹான் ! அது பயம் இல்ல, உங்கமேல வச்சிருக்க மரியாதை. பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாத ஆள் இல்லை நான்” என்றாள் பதிலுக்கு பதில்.
” அப்ப எனக்கா தெரியல ..”
” ஆமாம் தெரியல ….”
” ஓய் குள்ள வாத்து!….”
“ஓய் ஒட்டக்கசிவங்கி!….”
இருவரும் சண்டையிட்டு நின்றனர்.
” அண்ணா! அண்ணா! ” என்று இருவரும் கெஞ்சவே…” சரி போங்க… சிவில் ப்ளாக் அங்க இருக்கு ” அவன் கூறவே, அவளை அழைத்து, இல்லை இல்லை இழுத்துச்சென்றனர்.
அவளோ அவனை பார்த்து உதட்டை சுளித்துவிட்டுச் சென்றாள்.
” பார்த்துமா, சுழுக்கிக்க போது. ஆள பாரு குள்ள வாத்து…!” அவளை பார்த்து முனங்கினான். ” டேய் என்ன டா முதல் நாளே சண்டையா… ?”
” ஹாஹா… சும்மாடா! அவளைப் பார்த்ததும் வம்பிழுக்க தோணுச்சு அதான் தாமஸ்…”
” பார்ரா அப்படி என்ன இருக்கு அவகிட்ட ?” பைசல் கேட்க. தெரியவில்லை என்பது போல தோளை குலுக்கினான் ஜானி ” என்னடா லவ்ஸ்ஆ ?..”
” டேய் ! அவள பார்க்க என் ஜெர்ஸி மாதிரி தெரியுதுடா… அதான் வம்பிழுத்தேன்…”
” ஜெர்ஸி மாதிரியா ? ” தாமஸ் சந்தேகமாக கேட்க,” ம்… ஆமாடா, இனி என் வாழ்க்கையிலும் இதயத்திலும் காதல் அறை பூட்டிவிட்டேன் மகனே! திறக்கலாகாது…” என்று திமிராய் கூறினான் ஜானி.
” அடேய் ! தியாகு நாங்க இவ்வளவு பேசுறோம். நீ அமைதியா இருக்க ? ” அவனை உலுக்கினான் பைசல்.
” ஆமால டேய்! நீ இங்க தான் இருக்கியா…?” ஜானி கேட்க, ” ஆமாடா கொஞ்ச நேரம் முன்னாடி வர்ற இங்க தான் இருந்தேன்… “
” அப்ப இப்ப ? ” பைசல் கேட்க,” அது… ” அவர்கள் போன திசையைக் காட்டினான்.
” டேய்! இங்க ஒரு காதல் அறை ஓபனாயிருச்சுடா !… ” தாமஸ் கூறினான்.
” மச்சான் காதல் வேணாம்டா! பாதிக்கபட்டவன் சொல்லுறேன்.
இந்த ஜானி சொல்லுறேன்…”
” டேய் ஜானி! நான் காதல் வேணான்னு பாதிக்க பட்டத்துக்கு அப்புறமா சொல்லுறேன். இப்ப வேணும் சொல்லுறேன்” என்று தியாகு சொல்ல,
“ஆ- வென” வாயைப் பிளந்தான் ஜானி.
” அந்த மூணுல யாருடா தியாகு?” பைசல் கேட்க,” வேற யாரா இருக்கும். அந்த குள்ள வாத்தாதான் இருக்கும். அவதானே டா…? ” ஜானி கேட்க,
” ம்ம்… ஆமாடா அவதான்” என்றான்.
” நினைச்சேன், என்னடா இவ இப்படி பேசுறாளேன்னு யாரு மாட்டிட்டு கஷ்ட பட போறாங்கன்னு, அது நீயா இருக்க போறேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்குடா…!”
” ச்ச… சும்மா இருங்கடா முதல் டீடெய்ல்ஸ் கேதர் பண்ணுங்க பாய்ஸ் ”
” உன் தலையெழுத்து என்ன பண்ண? பண்றோம் பண்ணித்தொலைகிறோம் ” ஜானி கூற ” நண்பேன்டா! ” அவனை அணைத்தான் தியாகு.
இவையாவும் தெரியாத தேவ்வோ அங்கே தன்னை தன் வகுப்பில் அறிமுகம் படுத்திக்கொண்டாள். அவளின் தோழிகளும் தான்.இன்னும் புது புது நண்பர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு,சந்தோசமாக இருந்தாள்.
” என்ன ஆதி சார், இப்ப இதுக்கு ஒரு தீர்வே இல்லையா…?”
” இருக்கு வெங்கட் சார். ஆனா, நீங்க தான் ஒத்துக்கமாட்டிகிறீங்க …!”
” நீங்க , நான், இங்க வேலை செய்ற எல்லாருமே சம்பளத்துக்கு வேலை பார்க்குறவங்க… ஒவ்வொருவருக்கும் அவங்க படிப்பு , தகுதிக்கு ஏற்ற வேலைக்கெற்ற சம்பளம் கொடுக்கிறோம். ஆனால் நீங்க அதிகமா கேட்கிறீங்க…! இது நம்ம காலேஜ் சார். நாம தான் அட்ஜஸ்ட் பண்ணனும்.. சொன்னா கேளுங்க நீங்க சீனியர் ஹேச்.ஓ. டி வேற…!” வெங்கட் இறங்கி பேச,” அப்ப வேற யாரையாவது வேலைக்கு வைங்க…”
” அதை தான் செய்யமாட்டிக்கிறீங்களே, வந்தவங்க சரியில்லைன்னு சொல்லி அனுப்பிவிடுறீங்க.நாங்க என்ன தான் பண்ண ஆதி சார்…?” என்று அழுத்தினார்.
” சார் வந்தவங்க நாம எதிர்பார்த்த மாதிரி இல்லை. நான் என்ன பண்ண? “
” சரி இனி வர போகிற ஆளை நாங்க எடுத்தா உங்களுக்கு பிரச்சினை இல்லையே…! ” வெங்கட் கேட்க,
தோளை குலுக்கியவர் சிரித்துக்கொண்டே ” பார்க்கலாம் யாருவராங்கன்னு ” என்றே கூறி எழுந்து சென்றார்.
Ncp engineering college (கற்பனை).
இந்த காலேஜின் நிர்வாகி திரு.சம்பத் அவர்கள் முதல்வராக திரு.வெங்கட் அவர்களின் பொறுப்பில் இந்த கல்லூரி இருக்கிறது.
இவரால் தான் இக்கல்லூரி
பெரும் பெயர் பெற்றது.
சம்பத்தின் நம்பிக்கையை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வருபவர். அனைவருக்கும் மரியாதை அளிப்பவர்.
தகுதி பார்த்து பழகாதவர். கல்லூரி வேலை செய்பவர் யாராகினும் மரியாதை குறைத்தோ கூட்டியே பேச மாட்டார்.
அனைவரும் சமமே என்ற கூற்றை இதயத்தில் பொறித்தவர்.
இவருக்கென்று யாருமில்லை. ஆனாலும் அனாதையுமில்லை என்று கூறுபவர். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் யாவரும் தன் பிள்ளைகள் என்றே நினைப்பார். அதையே மொழிவார்.அதே போல் காண்பார், நடப்பார்.
அதற்கு நேரெதிகாக வாழ்பவர் ஆதி துணையாளர்.சிவில் டிப்பார்ட்மெண்டின் ஹேச்.ஓ .டி.
ஆதியின் நினைப்போ
வெங்கட்டின் இடத்தை பிடிக்க வேண்டுமென்றே இருந்தது .
ஆனாலும் சம்பத் ஒருபோதும் அதை மட்டுமே செய்யவிடமாட்டார்..
தன் டிப்பார்மெண்டில் ஒரு கணித பாடத்திற்கு ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறது.
ஆனாலும் அதற்கு ஆசிரியரை தேர்வு செய்ய விடாமல் ஆதி தடுத்துக்கொண்டிருக்கார்.
“நானே எடுக்கிறேன் ஆனால், அதிகம் பணம் வேண்டும் “என்று புதியதாய் பிரச்சினை கொடுக்கிறார்..
ஆதி திறமைவாய்ந்தவர்.அவரை அனுப்பிவைத்துவிட்டு அந்த இடத்தில் வேற ஒருவரை வைக்க அவரைவிட திறமையானவர் யாருமில்லை என்பதால் அவர் தரும் ஒவ்வொரு பிரச்சினை பொறுத்து தீர்வையும் கொண்டுவருவார் வெங்கட்.
அதே போல் இப்போது எழுந்த பிரச்சனை அங்கே யார் வருவார் என்று வெங்கட் தேர்ந்தெடுத்தால் ‘இதில் குறை அதில்குறை’ என்று தவறாக கூறி அவரை நிராகரித்து விடுவார்.
இதே வேலை என்றே இருக்கிறார். “இந்த முறை நாங்களே தேர்வு செய்துக்கொள்ளுகிறோம் ஆதி” என்று வெங்கட் கூற, “அதையும் பார்க்கலாம்” என்று கூறி திமிரை காட்டிச்சென்றார். ஆதி பக்கம் ஐந்து பேரே நின்றனர்.ஆனால் வெங்கட் பக்கமே அதிக ஆசிரியர்கள் ஆதரவாக இருந்தனர். மறைமுகமாக, ஆதியின் கோபம் கல்லூரி தாண்டி வஞ்சகமாய் இருக்கும். எதிர்த்தவனின் நிலையாராலையும் கனிக்க முடியாத நிலைக்கு விட்டுவார். கல்லூரியின் ஓர் பங்கு பிரச்சனை இதுவே.
மதிய உணவு இடைவேளை, கேண்டீனில் தன் தோழிகளோடு சேர்ந்து தேவ்வும் சாப்பிட்டாள்.
” என்ன குள்ள வாத்து வெளுத்து கட்டுற போல…. ” என்று கூறிக்கொண்டு அங்கே வந்தான்
ஜானி.
” நான் ஒன்னு குள்ள வாத்து இல்லை.” என்றாள் முறைப்பாக, ” அப்ப உன் பெயர் என்ன ?”
” என் பெயர் தேவதர்ஷினி. “
‘ தேவதர்ஷினி ‘ தனக்குள்ளே கூறிக்கொண்டான் தியாகு.
” குள்ள வாத்துக்கெல்லாம் அழகான பெயர் வச்சிருக்காங்க ” என்றவனை முறைத்தவள், ” ஒட்டகச் சிவிங்கி மாதிரி இருக்க, உனக்கு போய் ஜானின்னு வச்சிருக்காங்களே! அது மாதிரி தான்…” என்றாள்.
” மச்சி செம கலாய்…!” பைசல் , தாமஸ் , தியாகு கூறி சேர்ந்து சிரித்தனர். அவர்களை முறைத்தான் ஜானி, மூவரும் அமைதியானர்கள்.
” என்ன கொழுப்பா…?”
“எனக்கில்லப்பா…”
” அப்ப எனக்கா…?”
” நான் சொல்லப்பா…”
” குள்ளவாத்து குள்ள வாத்து…!”
” ஒட்டகச்சிவிங்கி…!”
” சரி சரி என்ன சாப்பாடு தேவ்?” தியாகு கேட்க,” தயிர்சாதம் தான்..” என்றாள்.
” தயிர் சாதமா!!!…” முகம் அஷ்டகோணலாய் போனது தாமஸ்க்கு.
” ஏன் ஏன் சீனியர்? உங்க முகம் அப்படி போகுது?” தேவ் கேட்க, ” ஏன்மா கோழி , மீனு , மட்டன் இதெல்லாம் சமைக்க மாட்டாங்களா ? ” என பைசல் கேட்டான்.
காதை பொத்திக்கொண்டவள்” ஐயோ ! அதெல்லாம் நாங்க சாப்பிடமாட்டோம்” என்றாள்.
” ஐயோ சீனியர் ! அவ ஐயராத்து மாமி. ” லத்திகா கூற
” வாட் மாமியா? “நால்வரும் அதிர்ந்து கோர்ஸாக கேட்டனர். தியாகுவின் தோளை அழுத்தினான் ஜானி.
” ஆமா நாங்க ப்யூர் வெஜ்…”
” ம்க்கும்… வாத்து கூட
அதெல்லாம் சாப்பிடாதுதான்” என்றான் ஜானி.
” போய் சாப்பிடு ஒட்டகச்சிவிங்கி!” என்று கூறியவளை முறைத்தவன்
” உன்னை அப்புறமா கவனிச்சுகிறேன்…” என்றவன் சாப்பிடச் சென்றான். அங்கே சாப்பிட அமர்ந்தவர்கள் தியாகுவை பார்த்து சிரிந்தனர்.
” ஏன்டா சிரிக்கிறீங்க ?” கடுப்பில் கேட்க,
” மச்சி நீ காக்கா காலையே, கோழிகாலா நினைச்சு திண்றவன். அவ பெயர சொன்னாளே கத்துறா செட்டாகுமா ?” பைசல் கேட்க, ” அதெல்லாம் கிடையாது, எனக்கு செட்டாகும், கல்யாணத்துக்கு அப்புறமா மாறிப்பேன்”
” என்னாது ?” அவர்கள் இழுக்க,
” இல்லடா, அவளை மாத்திப்பேன் சொன்னேன்” என்றான்.
” என்னமோ பண்ணு. ஆனால், இதெல்லாம் தப்பு. அவங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க. சாஸ்திரம் சம்பிரதாயம் அதிகம் பார்க்கிறவங்க.”
தாமஸ் கூற ” டேய் அதெல்லாம் அந்தகாலம்….”
” இல்ல இந்த காலத்துலையும் இருக்காங்க. என்னமோ பண்ணித்தொலை பிரச்சினைன்னு வந்து நிக்காத அவளோதான்…” எச்சரிக்கை செய்தான் ஜானி.
” எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்டா. என் நண்பர்கள் நீங்க இருக்கிற வரை ” தியாகு கெத்தாக, சொல்ல, ஜானியோ தலையில் அடித்துக் கொண்டு ” நினைச்சேன் டா இவன் இப்படி சொல்லுவான்…”
” ஈஈஈஈஈ…” தியாகு இளிக்க, ” ச்சீ…. வாய முடு…” என்றான் சலிப்பாக,
கல்லூரி முடிய, தேவ் வீட்டிற்கு வந்தாள். காலேஜ்ஜில் நடந்த அனைத்தையும் தன் அக்காவின் மடியில் படுத்துக்கொண்டு கூறினாள்.
இது ஒரு வழக்கம் தன் தங்கைக்கு சாப்பாடு ஊட்டிவிடுவாள். “பெரிய குழந்தை இவ” என்று பாட்டி வம்பிழுத்தாலும் “ஆமா பாட்டி இவ எனக்கு பெரிய குழந்தை தான்” என்றிடுவாள். யாருக்காகவும் யாரையும் விட்டுகொடுக்க கூடாது நினைப்பவள் தான் காயூ.
அன்று கதிரவன் விழித்து, விடியலை அதை கொடுத்தான்.
சிவில் டிப்பார்மெண்டிற்கு கணித ஆசிரியர் இல்லை என்பதால், அந்த பாடம் எடுக்க படவே இல்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் ப்ரஜனிடம் கம்பளைண்ட் செய்தனர்.
” டேய் பிரஜன் என்னடா புலம்பிட்டே போற, என்னாச்சு? ” ஜானி கேட்க, ” அண்ணா ” என்று முதலில் ஜானியை அணைத்தான். அவன் முதுகை ஆதரவாக தட்டியவன், தன்னிடமிருந்து பிரித்து ” என்னாச்சு பிரஜன் ? ” என்று கேட்டான்.
” அண்ணா…! நம்ம டிப்பார்ட்மெண்ட் மேத்ஸ் சப்ஜட் ஆள் போடலை. ஸ்டுடன்ஸ் கேட்டு கம்பளைண்ட் பண்றாங்க. ஆதி சார், அந்த விஷயத்துல பிடியே கொடுக்கல, பாவம் வெங்கட் சார் தான் என்ன பண்ணன்னு முழிக்கிறார்.இதுல பர்ஷ்ட் இயர்ஸ் வேற, இப்ப கூட ஒரு சம் தெரியல நடந்துங்க. நீங்க படிச்சு தானே வந்தீங்கதானேன்னு சொல்லுறாங்க. ஆனால் புக் சிலபஸ் மாத்திடாங்கன்னு சொன்னாலும் கேட்கல அதுலயே நிக்கிறாங்க. நான் தான் முழிச்சுட்டு நிக்கிறேன் அண்ணா… ” என்றான் சோகமாக,
” சரிடா ரிலாக்ஸ் இரு! நான் வந்து பார்க்கிறேன் ” என்று கூறி வகுப்பறைக்குச் சென்றான் ஜானி.
ஒளியாய் பாய்ந்தாயே!