ஒளி 14
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அன்றைய கல்லூரிப் பொழுது முடிந்து, அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்.,
காயூவிற்கோ ஜானி கூறியதே பாட்டாய் ஒடிக்கொண்டிருந்தது.
” என்ன காயூமா அமைதியா இருக்க? “
” ஒன்னில்ல பாட்டி”
” இல்லைடி, நீ இப்படி இருக்க மாட்டியே! என்னான்னு சொல்லு. ” பாட்டி அவளை வற்புறுத்திக் கேட்டார்.
” ஆமா, அத்தை, அவ நேத்துல இருந்து சரியே இல்லை…”
” அதெல்லாம் ஒன்னில்லை, நான் நல்லாருக்கேன். எனக்கு ஒன்னில்லம்மா.”
” பொய் மா, ஜானி கவிதையைப் படிச்சதுல இருந்து தான் அக்கா இப்படி இருக்கா..”
” தேவ், நீ போய் ஒழுங்க படி செம் வருதுல ” என காயூ அவளை அதட்டினாள். ” சரி ” என்று சென்றுவிட்டாள்..
” அவளை ஏன்டி திட்ற ? நீ சொல்லு அந்த கவிதைனால தான் நீ இப்படி இருக்கியா? ” நாயகியும் கேட்டார்…
” பாட்டி, கணவன் இறந்தா ஏன் பூவையும் பொட்டையும் எடுக்க சொல்லுறாங்க?..
அவங்களும் பெண் தானே! ஏன் இந்த சமூகம் இப்படி இரண்டா பிரிச்சு பார்க்குது சுமங்கலி அமங்கலின்னு. நல்ல நேரத்துல்ல சுமங்கலி வந்தா நல்லது நடக்கும். அதுவே அமங்கலி வந்தா கெட்டது நடக்கும் அபசகுணம்ன்னு, ஏன் பாட்டி இதெல்லாம்?..”
” இதெல்லாம் சாஸ்திரம் சம்பரதாயம் சொல்லிட்டு திரிறவங்க பார்க்கிறது டா.சமூகத்தில் இந்த மாதிரி பேசுறவங்க தான் அதிகம். ஒருத்தி அமங்கலியா இருந்து பூவித்தா, அந்த பூவை வாங்கிக்க மாட்டாங்களா என்ன? அதை அந்த தெய்வம் ஏத்துக்காதா? . முன்னோர் சொன்ன தெளிவான கருத்துகள் எல்லாமே நாள்பட நாள்பட மறுதழுவி மாறி இப்படி வந்து நிற்கிதுடா,.இந்தப் பொட்டு, பூ தாய் விட்டு சீதனம் டா, அதை கணவன் போயிட்டா வைக்க கூடாதுன்னு சொல்லுறதுல எந்த உரிமையும் இல்லை.
ஏன் இதுவே மனைவி இழந்த கணவனுக்கு பொட்டிட கூடாது அமங்கலன் விதவையன், எதுவும் பெயர் இருக்கா? கிடையாது தானே. மனைவி இறந்தால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அவனுக்கு உரிமை இருக்கும் போது. ஏன் பெண், கணவனை இழந்த பின்னும் பொட்டையும் பூவையும் வைக்க உரிமையில்லை? ஆண்கள் என்றால் வேறு பெண்கள் என்றால் வேறா தான் பார்க்கிறாங்க..
இங்க பாருடி காயூ நம் மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். அதை நமக்கு ஏற்றார் போல மாத்திண்டு வாழனும். அத விட்டுடு சமூகத்தை நினைச்சு பயந்தா நம்ம வாழ்க்கையை வாழ முடியாது.”
” இருந்தாலும் பாட்டி, நான் பொட்டு பூவச்சுகிறது சரியா ?”
” ஏன்டி சரியில்லை, நீ ஒன்னும் நல்லா வாழ்ந்து பேரப் பிள்ளைகளை எடுத்து, கணவனை இழுந்த பொம்மனாட்டி இல்லடி, .நீ இன்னும் கன்னி கூட கழியாத சின்ன பொண்ணுடி. ஏன்டி விதவைன்னு உனக்கு நீயே பெயர் சூட்டிகிற.
நாங்க, உனக்கு திருமணம் செய்து வைத்தா, நீ சுமங்கலி தானே! நீ விதவை இல்லடி. நீ இன்னும் கல்யாணம் ஆகாத பெண் அவ்வளவுதான். மணவாளனுக்காக காத்திருக்கும் பெண்.
இப்படி பொட்டிட்டுகாம பூச்சுடாம இருக்க கூடாது ” என்றவர் அவளை அழைத்து சென்றார் பூஜை அறைக்கு. நாயகியும் உடன் சென்றார்.
அந்த பரந்தாமன் முன் நின்று பூஜை தட்டை எடுத்தவர்.,அதில் உள்ள குங்குமத்தை வைக்கச் சொன்னார்…
” வை டி இதை “
” பாட்டி ” என்று தயங்கினாள்.
” வைன்னு சொல்லுறேல…” அவளோ தன்கைகளால் அந்த குங்குமத்தைத் தொட அதில் என்ன தயக்கமோ அவளது கரங்கள் நடுங்கியது. இருப்பினும் அதை தன் கைகளால் ஒற்றி தன் நெற்றியில் வைத்தாள்.பூவை எடுத்தவர், அவளைத் திரும்பச் சொல்லி வைத்துவிட்டார்.
” இவ்வளவு நாள், நான் ஏன் இதைச் செய்ய சொல்லேன்னா. நீயா இதைப் புருஞ்சுகணும் தான். உன்னை வற்புறுத்த கூடாதுன்னு தான்.பூவும் பொட்டும் பெண்னை அழகு சேர்க்கிற அழகியல் சொல்லுறதை விட, அவளுக்கு அது ஒரு நம்பிக்கை டி. அழகா இருக்கடிமா.ஷேமமா வாழபோற ” என்றார் பாட்டி.
” அம்மா…”
” அத்தை, உண்மைதான் எனக்கும் கூட தயக்கமிருந்தது. ஆனா, இப்ப இல்லை.உன் வாழ்க்கையில நீ சந்தோசமா வாழணும்டா. அதான் அம்மாக்கு வேணும்..” என்றதும் அவள் பாட்டி காலில் விழுந்தாள்.
” இனி பழைய காயூவா இருக்கணும் செல்லம், எப்பையும் சிரிச்சுட்டே இருக்கணும் ” என்றார். அவளையே அவள் கண்ணாடியில் பார்க்கச்சென்றாள்.
தன்னை ஆராய்ந்தவளின் கவனம் ஜானியிடம் சென்றது. அவன் பிடித்த கைகளைத் தொட்டுப்பார்த்தாள்.உயிர்வரை ஏதோ உணர்வுத் தொட்டுசென்றது .
விடியல் பெற்ற வானம் போல் அவள் மனதும் விடிந்தது,..
தயக்கமின்றியே இருந்தாள்.
தலைகுளித்து இறைவனைப் பிராத்தனை செய்து பின் அனைத்து வேலைகளையும் முடித்தாள்.
கல்லூரிக்குக் கிளம்ப சிறியதாய் நாமதிலகமிட்டு அதெற்கு மேல் குங்கமும் இட்டு தலையில் பூச்சூடி ஐயாராத்து மாமிகளைச் சொல்லவா வேண்டும் அழகிய ஒளியாய் நடந்துவந்தாள்.
சூரிய நாராயணன், அவளைப் பார்த்து ஆச்சரியபட்டு தான் போனார். ‘ என் பொண்ணா இது? ‘ என்று
” அப்பா,… “
” அழகா இருக்கமா!
என் கண்ணே பட்டும் போல ” எனவும் புன்னகைத்தாள்.
” அக்கா, ஜானியோட கவிதைகள் உன்னை இப்படி மாத்திருச்சே! ”
அவள் அமைதியாக இருந்தாள்.
” ரொம்ப நல்ல பையன்மா, தேவ்வுகாக பேசிருக்கான். இப்ப காயூவை மாத்திருக்கான். அந்த பையனை ஒருநாள் வீட்டுக் கூட்டிட்டு வா தேவ்.
” கண்டிப்பா அப்பா, கூட்டிட்டு வரேன் ” என்றாள்.இருவரும் கல்லூரி வந்தனர்.
காயூவிற்கு, கல்லூரியில் நம்மை எதாவது சொல்லிடுவார்களோ என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.
அவளால் சாதாரணமாகவே இருக்க முடியவில்லை.
வெங்கட், அவளை ஆராய்ந்தார்.’ ஜானி எழுதிய கவிதைக்கும் காயூவிற்கும் சம்மதம் இருக்குமோ ‘ என்று நினைத்தவர். வீணாக ஏன் இந்த சந்தேகம் என்று விட்டுவிட்டார்.
அவள் ஸ்டாப் ரூமிற்குள் நுழைய அவளைக் கண்ட அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்க காயூ தயங்கி தலைகுனிந்தாள்.
” ஏன்டிமா தலைகுனியிற, நாங்க எதாவது சொல்லுவோம்ன்னா.இது உன் வாழ்க்கைடா. நீ அதை வாழறதுக்கு யாரு தடைச் சொல்ல போறா.இதான்டிமா உனக்கு அழகே ” என்றார் சுந்தரம்.
” ஆமாடா, இப்பதான் என் பொண்ணு ரொம்ப தெளிவா இருக்கா! ” ராமன் கூறினார்.
” என் தங்கச்சி தேவதைடா!..” என்றான் விக்கி,
” அப்ப நாங்களாம் இல்லையா ?” கௌசி கேட்க,
” தேவதைன்னு, அழகா இருக்கிறாவங்களதான் மா சொல்லுவாங்க”
” அப்ப நான் அழகு இல்லைன்னு சொல்லுற..”
” நீ நேம்பூட்டி தேவதைக்கும் மேலன்னு சொல்ல வந்தேன்டா.” என்றதும் அவள் முறைத்தாள்.
” ஆத்தி நானில்லங்கோ. ” என்றான் விக்கி, அனைவரும் சிரித்துக்கொண்டிருக்க, இங்கே எதுவும் நடக்காதது போல் காயூவை சைட்டடித்துகொண்டிருந்ததான் சக்தி.
” அடேய்! எருமையே எல்லாரும் உன்னை தான்டா பார்க்கிறாங்க, சக்தி ஜொல்லு வடிச்சது போதும்..” என விக்கி காதுக்குள் கூற, அவனோ அவளிடமிருந்து தன் கண்ணை விடுவித்தான்.
” மாமி, ரொம்ப அழகா இருக்கேள்.” என்றான்.
” நன்றி சாமி “
” எங்களைப் பார்த்தா பாவமா தெரியலையா உங்களுக்கு, இப்படி கொல்லுறீங்களே?.”
” டேய்
படவா!.. என்ன பேசுற நீ ?” என்ற சுந்திரம் அதட்டினார்.
” எனக்கென்னமோ சாமியார் பதவில இருந்து, அவன் விலக போறானோன்னு தோணுது.” என்றார் ராமன்.
எல்லாரும் சக்தியைக் கலாய்க்க.. காயூவிற்கோ ஜானியிடம் தான் எண்ணம் சென்றது எழுந்து வெளியே சென்றாள்.
அந்த கல்லூரி வளாகத்தில் ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்தது. அங்கே சென்றவள், இறைவனிடம் வேண்டுதலை வைத்தாள்.
வகுப்பில்லாததால் நூலகத்திற்குச் சென்றாள்.
முதல் வகுப்பென்பதால் யாருமில்லை அங்கே. ஆனால் ஜானியும் தியாகுவும் இருந்தனர்.
தியாகு எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
ஜானி வாசித்துக்கொண்டிருந்தான்.
புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தவள் அமர்ந்தாள். அப்போது தான் தன் எதிரே ஜானி இருப்பதைப் பார்த்தாள். ஆனால் அவனின் கவனம் புத்தகத்தில் இருந்தது.
அவன் பார்ப்பான் என்று அவள் பார்க்க, பார்வையை அவன் எடுப்பாதாயில்லை.
இதை கண்ட தியாகுவோ
‘ அடப்பாவி ஒரு கவிதை எழுதி, அந்த பெண்ணையே மாத்திட்டான்..
இவங்களும் மாறிடாங்க.எங்கப் போய் இதெல்லாம் முடியப்போகுதோ!.’
இருவரும் பார்த்துகொள்ளவில்லை.
தியாகு அவன் அருகில் அமர்ந்தவன் ” குட்மார்னிங் காயூ மேம் ” என்றான். அப்போது தான் ஜானி, அவளைப் பார்த்தான். குட்மார்னிங் என்று அவளும் கூறி ஜானியைப் பார்த்தாள். சில நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தனர்..
அழகான நெற்றில் நாமதிலகமும் குங்குமும் இருக்க, அவளது அழகு கூந்தலில் மல்லிகை பூ அழகுபடுத்திக்கொண்டிருந்தது..
அவன் அவளைக்காண, அவள் விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.
” மேம் நீங்க உண்மையாவே அழகா இருக்கீங்க. இந்த பூவும் பொட்டும் அழகுதான் உங்களுக்கு.இந்த தோற்றமும்
உங்க மாற்றமும் உங்களுக்கு எப்பையும் சந்தோசத்தை கொடுக்கும் மேம்.. ” தியாகு கூற அவள் புன்னகைத்தாள்.
” தோற்றம் ஒ.கே தான். ஆனா, மாற்றமில்லையே தியாகு “
இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.
” என்னடா சொல்ல வர்ற?… “
” பூவும் பொட்டும் வச்சா போதாது, மனசையும் மாத்தணும். இன்னும் ஏன் அந்த தயக்கம். யாராவது எதாவது சொல்லிருவாங்களேனு பயமா? அந்த கண்ணுல இருக்க அந்த பயம் அது மாறணும். சும்மா பூவும் பொட்டுவைக்கிறதால நோ யூஸ் டா தியாகு.
நம்ம மனசையும் மாத்தணும்
எப்பையும் போல திமிர் கொண்டு பார்வையும் நெஞ்சல தைரியத்தை சுமந்து யாரு என்ன சொன்னாலும் கவலை இல்லைனு போயிட்டே இருக்கணும். மனசை தெளிவா வைக்கணும் அதான் உண்மையான மாற்றம் ” என்று கூறி எழுந்துச்செல்ல தியாகுவும் எழுந்துசென்றான். அவளோ அவன் கூற்று உண்மையெனவும் எப்படி சரியாக என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
” டேய் அவங்க தான் மாறிடாங்களே! இன்னும் என்னடா பண்ணணும் அவங்க? “
” டேய் உனக்கு புரியல டா. நான் முதல் முறையா பார்த்தப்போ, அவ கண்ணுல ஒரு திமிரைப் பார்த்தேன். ஆனா, இப்ப அது இல்ல. பூவையும் பொட்டையும் வச்சுகிட்டாலும் இன்னும் யாராவது எதாவது சொல்லுவாங்களோன்னு தயக்கம், அவகிட்டா நிறையாவே இருக்கு. அதான் நான் அப்படி பேசினேன்.”
” சரிதான் உனக்கு மட்டும், அவங்கப் பார்வை புரியுதா என்ன?”
” நிச்சயமாக, அவளை என்னால் படிக்க முடியும் டா “
” முதல்ல, வர்ற செம்க்கு ஒழுங்கா படிப்போம் வாடா ”
” டேய் வேலட்டை மறந்து வைச்சுட்டு வந்துடேன் டா. எடுத்துட்டு வந்துறேன். ” என்று தலையில் கைவைத்தப் படி கூறினான்.
” நீ நடத்துடா நடத்து… ” என்றான் தியாகு.
“ஈஈஈ….”என இழித்துக்கொண்டு,
மீண்டும் அவளிடம் வந்தவன். அவளோ யோசனையில் இருத்தாள்.. அதை சொடக்கிட்டு கலைத்தான்.அவளோ அவனை பார்க்க. ” நீ ரொம்ப அழகு, உனக்கு முன்னாடி இந்த பூவும் பொட்டும் தூசு தான்.நான் இதை வைக்கச் சொன்னதே உன்னோட திமிரும் தைரியமும் இன்னும் அதிகமாக இருக்கணும் தான்..
அது இரண்டு இல்லாதப்பவே, நீ தைரியாம இருந்த. ஆனா, இப்ப இல்லை.தோற்றத்தை மாத்துனது போல உன் மனசையும் மாத்திடு.
முதல் நாள் பார்த்த திமிர் அந்த கண்ணுல இப்போ இல்லை, வெறும் தயக்கம் தான் இருக்கு. ப்ளீஸ் மனசையும் மாத்து காயூ.
மத்தபடி, ரொம்ப அழகா இருக்க.. பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு ” என்றதும் ஒற்றைப்பூர்வத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
.” ப்ப…ப்ப.பர்சை எடுக்க வந்தேன் ” என்று கூறி எடுத்துகொண்டு கிளம்பினான். அவன் பார்ப்பதை அறியாமல், அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். தன் முதல் வெற்றியென குதித்து சந்தோசமாக சென்றான்..
அன்றைய நாள் நன்றாக சென்றது,. அடுத்து வந்த நாட்களில் செம் வர மாணவர்கள் யாவரும் பரீட்சைக்கு தயாராகினர்.இதில் ஜானிக்கும் தியாகுக்கும் தான் பெரும் வருத்தம் செம்மிலும் அவர்களைக்காண முடியாது லீவிட்டாலும் அவர்களைப் பார்க்க முடியாது என்று வருத்தப்பட்டனர்.
இப்படியே ஒவ்வொரு பரீட்சையாக எழுத… ஒரு பரீட்சையில் ஜானி எழுதும் அறைக்கு காயூ சூப்பர்வைஸ்ராக வந்தாள்.
வாய் முழுதும் பல்லானது ஜானிக்கு தியாகு , தாமஸ் , பைசல் தலையில் அடித்துக்கொண்டனர்.
ஒவ்வொரு பேப்பர் கொடுத்தாள். முதலில் பின் வினாத்தாளையும் கொடுத்தாள்.அவனே, வேகமாக பரீட்சை எழுதி முடித்துவிட்டு அவளை சைட்டடிப்போம் என்று நினைத்து பரீட்சை எழுதினான். யோசிக்கிறேன், என்று அவளைப் பார்த்துகொண்டு இருப்பான். அவளோ ஹாலைச் சுற்றி வட்டம் போடுவது.. டேபில் அமர்ந்து அங்குமிங்கும் பார்ப்பது என்றே பொழுதைக் கழித்தாள். அவன் பேப்பர் கேட்டால் மெல்லியதாய் புன்னகை செய்துகொடுப்பாள்,.இப்படி சென்றது. நேரமும் முடிந்தது. அவன் மட்டும் எழுதிகொண்டிருந்தான். பேப்பரை அடிக்கி வைத்து அவனருகில் வந்து நின்றாள். ” சாரி மேம் டூமினிட்ஸ்..”
” ம்ம் ஒகே ” என்றாள். எழுதி முடித்தவன் கட்டிகொடுத்தான்.மீண்டும் அடுக்கிவைத்து விட்டு கிளம்பினாள்,
அவள் பின்னே சென்றான்.
” என்னா மச்சி எக்ஜாம் எழுதுனீயா ?…” பைசல் கேட்க..” எங்க ஜொல்லுவிடவே நேரமில்லையே அவனுக்கு ” தாமஸ் கூற ” ச்சீ போங்கடா ” என வெட்கபட்டான்.
” ஐய்யோ கடவுளே! இத எங்களால பார்க்க முடியலையே…” என்றார்கள் கோரசாக.” போங்கடா, அவ டெய்லியும் வந்தா நல்லாருக்கும்ல ”
” இருக்கும், நீயும் எழுதமா அரியர் வச்சு இங்கனையே கதின்னு கிடப்ப.” தியாகு கூறினான்.
கல்லூரியில் பரீட்சை முடிந்தது, அனைவரும் விடுமுறை விட்டனர்.ஒருவாரம் விடுமுறை என்பதால் தேவ்வும் காயூ பெங்களூருக்கு சென்றார்கள்.சக்தி அவன் ஊருக்குச்சென்றான்.
அன்று சனிகிழமையாக இருக்க தியாகுவும் ஜானியும் கோயில் சென்றனர். அன்று போல் இன்று அவர்களை காணலாம் என்று எண்ணினான். ஆனால் ஏமாந்து தான் போனான்.
” யாரா தேடுற காயூவையா?…”
” ம்ம்.. ஆமா அவளைத்தான் ”
” அவங்க வரமாட்டாங்க, “
” ஏன்டா வரமாட்டாங்க?”
” அவங்க பெங்களூர் போயிட்டாங்க..” என்றான்.
” உனக்கு எப்படி தெரியும் ? ”
” தேவ் சொன்னாடா, செம் லீவுல அவங்க சித்தப்பா வீட்டுக்கு போறதா சொன்னாள். “
” தேவ்வா எப்போடா? …”
” மெசேஜ்ல சொன்னாடா.”
” மெசெஜ்ஆ,… இது எப்போ ? “
” நாங்க மெசெஜ்ல பேசுவோம். பிரண்டிலியாதான்டா,… “
” அடப்பாவி எங்கிட்ட இருந்தே மறச்சுடியே ! ”
” இருடா மொத்தமா குரூப் போடுவோம் அதுல உன்னையும் காயூவையும் ஆட் பண்றேன்” என்றான்.
அவ்வாறே செய்ய எல்லாரும் பேசிக்கொள்ள, காயூ மட்டும் வேணாம் என்று மறுத்துவிட்டாள்.
பெங்களூரில் பெரிய மாலுக்கு அங்குள்எ டூரிஸீட்பிலேக்கு என்று எல்லா இடத்திற்கும் சென்றார்கள்
ஒரு நாற்பது வயது நிரம்பிய பெண் ஆதியோடு செல்வதைக் கண்டாள். இருவரும் சாபிங் செய்ய அதை புகைப்படமாக பிடித்துக்கொண்டாள். தன் சித்தப்பா, அவர்களுடன் பேசுவதை பார்த்தவள்,
சித்தப்பாவிடம் விசாரித்து அட்ரசையும் வாங்கிக்கொண்டு. அவர்களைக் காணச்சென்றாள் காயூ
இங்கோ சக்தி தன் மனதில் உள்ளநெருடலைப் போக்க தன் தமக்கையிடம் பேசுவதற்காகவே வீட்டிற்குவந்தான்.
தன் தமக்கை எவ்வாறு தங்கள் வீட்டில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.இன்னும் சக்தி திருமணத்திற்கு ஒத்துகொள்ளாதது இருப்பது தன்னால் என்று அவனது தமக்கையும் தன் மகளால் தான் தன் மகன் கல்யாணம் செய்துகொள்ள மாட்டிக்கிறான் என்று அவரும் அப்ப அப்ப தன்மகளைச் சாடிக்கொண்டிருந்தார்.
தாய் வீடே இன்று அவளுக்கு நரகமாகிக்கொண்டிருந்தது.எதுவும் பேசாது தனக்கும் தன் குழத்தைக்கும் அடைக்கலம் என்று அமைதியாக இருக்கிறாள்.
இது சக்திக்குப் பெரும் வலியை தந்தது.
அவள் வெளியே ஏதும் சொல்லாமல் தன் மகள் ஆசைபட்டதை கூட வாங்கிகொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.தன் கணவரோட இருந்திருந்தால் இந்த நிலமை நமக்கு வந்திருக்காது.உண்ண உணவும் இருக்க இடமும் கிடைத்தால் மட்டும் போதுமா வாழ,.
தன்மானம் ஒன்று இருக்கிறதே பெற்றவர்கள், ஆனாலும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு நாம் சுமையாகிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றாலும் நமக்கே ஒர் எண்ணம் வந்துவிடும் அல்லவா,. தனித்து வாழ்ந்திடுலாம் இவ்வாறு வாழ்வது கொடுமையே இவ்வெண்ணம் அவளுக்கு வந்தது. தன் மகனென்று வரும் பொழுது பெற்றவர்களுக்கு தன் மகளும் வேறொருவளுடைய மனைவியாக தெரியகிறதோ! இருந்தும் அவளுக்கு அங்கே வாழ்வது கொடுமையாகவே இருந்தது. இதை சக்தி அங்கே சென்ற இரண்டு நாளில் அறிந்துகொண்டான்.