ஒளி 13

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஜானியின் கவிதை,  முதல் பரிசை பெற்றிருந்தது. அதை தன் பாட்டியின் மூலம் அறிந்துக்கொண்டான்.

” டேய் தியாகு, நான் எழுதிய கவிதை முதல் பரிசு கிடைச்சுருக்குடா!  ” என்றான் ஆனந்தமாக.

” பார்ரா, வேற எவனும் அனுப்பலையோ! அதான் உனக்கு முதல் பரிசு கிடைச்சுருக்கு..”

” ஏன் தியாகு இப்படி சொல்லுறீங்க?ஜானியோட திறமைக்கு, தான் இந்தப் பரிசு கிடைச்சிருக்கு “

” ஆஹான்! நீங்க சப்போர்டா தேவ் மேடம்” தியாகு கேட்டான்.
” ஆமா, நீ சொல்லு ஜானி எதைப் பத்தி கவிதை?”

” ம்… விதவைப் பத்தின கவிதை தேவ்மா.”

” எப்படி நாங்க படிக்கிறது ஜானி? ”  தேவ் கேட்டாள்.

” இரு, கேண்டீன் அண்ணாவ விட்டு வாங்க சொல்லுவோம்” கூறியவன், ‘
காயூவும் இதைப் படிக்க வைக்க வேண்டுமே ‘  என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

இங்கோ வெங்கட் ஆதியை அழைத்து அவர் மகனைப் பற்றி பேசினார்.” வாங்க ஆதிசார். எல்லாரையும் கட்டுகுள்ள கொண்டு வர்ற நீங்க,  உங்கள் மகனை மட்டும் தண்ணீர்தெளிச்சு விட்டீங்களா ?”

“என்ன பேசுறீங்க வெங்கட்?”

” உண்மைத்தான் பேசுறேன்.உங்கள ஒரு மாணவன் மரியாதை இல்லாம பேசுனா என்ன பண்ணுவீங்க  ஆதி ? “

” அவனைத் திட்டுவேன். கம்பளைண்ட் பண்ணி, அவங்க பெற்றோர் கிட்ட சொல்லி வார்ன் பண்ணச் சொல்லுவேன்..” என்றார்.

” இப்ப அதான் நடத்திருக்கு மிஸ்டர் ஆதி.உங்கள் பிள்ளையை அப்படிதான் வார்ன் பண்ணிருக்கோம்.அவனா, அட்டனஸ் போடுறான். மரியாதை கொஞ்சம் கூட இல்லை.நீங்கள் தான் சொல்லி தரனும் ஆதி.இல்லைனா மத்தவங்க அடிச்சு சொல்லிப் புரியவைப்பாங்க, அதுக்கு நீங்களே நல்லதைச் சொல்லிவைக்கலாம்.”

” என்ன சார் மிரட்டுறீங்களா ? “

” என்ன சார், நம்ம மாணவர்கள் தப்பு பண்ணா கண்டிச்சு பெற்றோர்கள் அழைத்து பேசுவது போலத்தான் நான் பேசுறேன்.நீங்க தானே அவன் அப்பா! அதான் சொல்றேன். நான் யாரென்று கூட பார்க்கமாட்டேன்.யார் மகனா இருந்தாலும், தப்பு செய்தால் தண்டனைகள் உண்டு சொல்லிவைங்க உங்கள் பிள்ளைகிட்ட.. ” என்றார் வெட்கட்.

” ம்ம் அதையும்,பார்க்கலாம் ”  என்று கோபமாக வெளியேறினார் ஆதி.

கேண்டீனில் அண்ணா ஒருவர் அந்த புத்தகத்தை  வாங்கி வந்தார்.அதை இவர்கள் பணம் கொடுத்து வாங்கினர்.

உணவு நேரம் முடிந்ததால், எல்லோரும் வகுப்பறையில் இருக்க, புத்தகத்தை வாங்கி வந்த தேவ். இன்னும் ஆசிரியர் வராததால் அதை படிக்க எடுத்தாள்.தர்ஷினி , லத்திகா அமர இருவருக்கும் நடுவே அமர்ந்த தேவ், அந்த புத்ககத்தை திருப்பினாள்.அந்த கவிதைப்
பக்கத்தை எடுத்தவள் படிக்கலானாள்,
படித்ததும் உறைந்து போனாள் தேவ்.
 

” உண்மையா எவ்வளவு நல்லாருக்குல..
கண்டிப்பா விதவைன்னு சொல்லிட்டு அவங்களை ஒதுக்கி வைக்காம, அவங்கள சாஷ்திரம் சம்பரதாயம் சொல்லி முடக்காம, சுதந்திரம் மா வாழ விடனும் டி இந்த சமூதாயம்  ” தர்ஷினி கூறினாள்.

” ஆமா, தர்ஷூ அவங்கள ஊக்கபடுத்தலைனாலும் பரவாயில்லை. ஆனால் ஒத்துக்கப்பட்டு மூலையில முடக்கி போடாமா இருந்தாலே போதும்.. ”  இவர்கள் பேச, தேவ்வின் சிந்தனை வேற எங்கோ சென்றது அதை கலைத்தான் சக்தி.

” மேடம் என்ன யோசனையில் இருக்கீங்க? நான் வந்தது கூட தெரியாம  ” சக்தி, அங்கே வகுப்பெடுக்க வந்ந்திருந்தான்.

” குட் ஆப்நூன் சார்.சாரி, இந்த கவிதையைப் பற்றி யோசித்தேன்.” .

” என்ன கவிதை ? ”  என்று வாங்கி பார்த்தான் சக்தி,..
அதை
படித்தவன், மனக்கண்களில் காயூவும் அவனது அக்காவும் வந்தனர்.

” அருமையாக இருக்கு இந்த கவிதை. யாரெழுதியது? ” என்று சக்தி கேட்டான்.” நம்ம ஜானி தான்.”

” அப்படியா நல்லா எழுதிருக்கானே!.ம்ம் சரி கிளாஸ் போலாமா?..” என்று தன் வகுப்பைத் தொடங்கினான்.

” டேய் எப்படிடா இதை எழுதுன.யாரை நினைச்சு எழுதன ?” தாமஸ் கேட்க.

” இது என்ன காதல் கவிதையா? யாரையாவது நினைச்சு எழுதுறதுக்கு விதவைக்கு எழுதின கவிதைடா  “

” அதான் டா, அந்த விதவை யாரு ? ”  பைசல் கேட்டான்.

” என்னடா கேட்கற ? “

”  மச்சி, நான் நேரடியாவே கேட்கிறேன். நீ காயூவ லவ் பண்றீயா?.”

” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”
” இந்த கவிதை அவங்கள நினைச்சுதானே எழுதுன ” தாமஸ்.

” விதவையா இருக்கிறது, அவங்க மட்டும் தானா?.. “

” அப்படி இல்லை மச்சி. நீ எழுதிருக்கிறத பார்த்தால் அவங்களுக்காக எழுதிருக்கியோன்னு தோணுது.
இந்த மாதிரி நீ எழுதினதே இல்லையே அதான்  ” 

” ஜானி ” என்று அழைத்துக்கொண்டே தேவ் வந்தாள்.
” ஜானி, உன்கிட்ட தனியா பேசணும்”

” இருங்கடா”  என்றவன், அவளை அழைத்துச் சென்றான் தனியாக…

” சொல்லு தேவ்..”

” இந்த கவிதை யாரு நினைச்சு எழுதுன ஜானி?.”

” ஏன் எல்லாரும் இதையே கேட்கிறீங்க? அப்படி என்ன சொல்லிட்டேன் இந்த கவிதையில. இப்படி எல்லாரும் ஒரே கேள்வியே கேட்குறீங்க?.”

” இல்லை, அன்னைக்கு நீ கோயில்  பேசினதும்.இந்த கவிதையும் ஏதோ சொல்லுது. இதை நீ அக்காவ நினைச்சு எழுதுனியோன்னு தோணுது.. “

” ம் ஆமா, உங்க அக்காவை நினைச்சு தான் எழுதுனேன். எனக்கு தெரிஞ்சு இளம் வயதிலே விதவையானது அவங்கதான்.அதான் அவங்கள நினைச்சு எழுதினேன்.எங்க பாட்டி விதவை தான். ஆனா, காலம் கடந்து தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துட்டு தான் இறந்துபோனார் என் தாத்தா. அதுனால அவங்கள ஒன்னும் சொல்லமுடியாது. ஆனா, உங்க அக்கா வாழ்க்கைனா என்னான்னு இன்னும் அறியாத வயசுல வாழ்க்கையே போச்சன்னு, எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காம இருக்காங்க. அதுக்காக தான் அவங்களை மாத்த தான் எழுதினேன் சாரி ” என்றான்.

” ஜானி, சாரி சொல்ல என்ன இருக்கு? நீ எழுதுனது சரிதான்.எங்க அக்காவை பழைய மாதிரி  மாத்தணும் ஜானி, அவளை மாத்த எனக்கு உதவி பண்ணுவீயா? “

” கண்டிப்பா தேவ்…
உங்க அக்கா மாறுவா. நான் மாத்தி காட்டுறேன்.இதை உங்க அக்காவ படிக்கச் சொல்லு என்ன சொல்லுறாங்க பார்ப்போம் ”  
” சரி ஜானி, நான் படிக்கச்சொல்லுறேன்  ”   என அங்கிருந்து கிளம்பினாள்.

‘ என் காயூவை மாத்த தானே இந்த கவிதையே.’ தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

கல்லூரி முடிய வீட்டிற்குச்சென்றனர்.ஜானியும் வீட்டுக்கு வந்தான்.ரெப்பிரஷ் ஆகிக்கொண்டு கடவுளைத் தொழுதான்.

” டேய் அண்ணா! உண்மையிலே நீ கவிஞர் ஆகிடுவ போலையே.
செம கவிதை அண்ணா, சான்சே இல்லை.ஆனா,அது வந்து இந்த கவிதை… “

” காயூவா நினைச்சு எழுதுனீயா  அதானே.” என்றான்.

” ம்ம் ” என அவள் தலையாட்டினாள். அவளிடம் ” ஆமா ” என்றான்.

” அண்ணா! என்ன இதெல்லாம், அவங்களுக்காக நீ ஏன் எழுதின? “

” குட்டிமா, நீ சொல்லு இப்ப நாம பொட்டு வைக்கமாட்டோம்.ஆனா, நம்ம மதத்துல சில பேர் பொட்டு பூ எல்லாம் வைக்கிறாங்க. ஆனாலும் நீ உன்னை அலங்காரம் பண்ணிக்காம ஒரு இடத்துக்கோ பங்கசனுக்கோ போனா எப்படி இருக்கும்.

எல்லாரும் அங்க கிரேண்டா அழகா நகை , பூ , பொட்டு எல்லாம் போட்டிருக்காங்க.நீ எந்த அலங்காரமும் இல்லாமல் போனா, உனக்கு எப்படிடா இருக்கும் ?

உன்னை எல்லாரும் எப்படி பார்ப்பாங்க. அதேபோல தான் இந்த சமூகம் பெண்களைத் தலை நிறையா பூ வைச்சு, கை நிறையா வளையல் பூட்டி குங்குமம் பொட்டி வைச்சு அழகான புடவை கட்டி  மகாலட்சுமி யா,இருக்கணும் சொல்றாங்க. ஆனால் அதே சமூகமே, சின்ன வயசுல கணவனை இழந்த பெண்களை கூட பூ ,பொட்டு , நகை அழகான புடவை எதையும் அனுபவிக்காமல் அமங்கலின்னு சொல்லி ஒதுக்கிறாங்க.
ஒரு பொண்ணா எப்படி வாழனும் தீர்மானிகிறது.ஆண்கள் கட்டுற  தாலியில தான் இருக்கா ?அந்த தாலி இல்லைன்னா அந்த பெண் அமங்கலியா ?( தாலியிழந்த பெண்கள்).

அதான் குட்டிமா, அவங்கள மாத்த அண்ணா எழுதுனேன்.” என்றான்.

” சரி அண்ணா, அவங்க பாவம் சின்ன வயசுலையே அவங்களுக்கு இப்படி ஒரு நிலமை வரக்கூடாது.”
இங்கே இவர்கள் பேச, ” ஜானி”  என அழைத்தார்,ஜேம்ஸ்..

அவனோ வேகமாக வந்தான் அவரிடம்.அந்த புத்தக்கத்தை அவன் மேல் வீச, எல்லோரும் பயந்தனர்.

அதே நேரம் காயூ இங்கே, தேவ்வின் வற்புறுதலில் கவிதையைப் படிக்க தொடங்கினாள்.

விதவை…..
பொட்டிடா
வார்த்தையென்பாதால்
பொட்டிடா
பெண்ணிற்கு
சூட்டினரோ,,…….
வகிடு ஒன்றில்
வாங்கிய பெரும்
வரமதை
இழக்க நேரிடும்
பொழுதும்
பெண்ணே
உன் வாழ்க்கையே
இழந்ததாய்
எண்ணங்களேனோ
இழந்த குங்குமமும்
வெட்கிகொள்ளவே
இச்சமூகம் கூறும்
சம்பிரதாயங்களோ….
பூசூட்டி அழகிட்டு
பேசும் அச்சமூகமே
பறித்து நசுக்கும்.
விதவையென்றால்…
வண்ணமிலந்தது
ஆடைத்தான்
உன் வாழ்க்கையில்
அல்லவே….
நீ தீட்டிய ஓவியம்
வண்ணம்பெறதோ…
நீ கட்டிய பூ
நாரோடு சேராதோ
மணமெங்கும் விசாதோ….
இயற்கை உன்னை
அரவனைக்க ஆசைகொள்கிறது
அற்பமனிதனின்
வார்த்தைக்குள்
முடங்குவதேனோ….
வயதுமுற்றி வழுவிழந்த
பெண்ணில்லை நீ
விதவை பெயரதை
சூட்ட…..
பிஞ்சுமனமாறா
பேதை பூவாக
காத்திருக்கும்
மொட்டு நீ
வண்ணமிலந்த
இதழாய் கருகத்தான்
ஆசையோ…
மீண்டும் வண்ணங்கள்
பெற பூவாய்
வாசணைகள்
வீச
இன்னோரு வாழ்க்கை
கைநீட்டி அழைத்திட
ஏற்றுக் கொள்வாய்
சமூகப்பேச்சில்
முடக்கிடாது குங்குமமிட்டு
பூச்சுடி உன் பிறந்த
வீட்டு சீதனமதை
கைப்பற்றிக்கொள்.
பெண்ணே !
சிறகில்லாத
பறவையில்லை நீ
சிறகிருந்தும் சமூக
கூண்டில் சிறையான
பறவை நீ !
முடக்கி வைத்த
கூண்டையும் உடைத்தெறிந்து
மீண்டும் பறக்க
உன் சிறகை(மனதை)
சீர்செய்துவா
பெண்ணே!
பறக்க உனக்கும்
ஓர் வானுண்டு( வாழ்க்கை உண்டு)
இம்மண்ணிலே வா
    ஜானி…

என்றிருந்தது. இதை வாசித்த காயூவின் அம்மா , அப்பா,  பாட்டி அனைவரின் எண்ணமுமே காயூவின் மேல் தான். இதை படித்தவளுக்கோ அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

இங்கோ ஜேம்ஸ் அவனை திட்டிக்கொண்டிருந்தார்.” என்னடா இதெல்லாம் ?”

” ஒரு மேகஜீன்ல கவிதைப்போட்டி வைச்சிருந்தாங்க. அதுக்கு எழுதின கவிதைப்பா? “

” கவிதை தெரியுது.  என்ன குங்குமம் , பூ , விதவைன்னு இதெல்லாம் நாம வீட்டிலையோ. நம்ம மதத்திலையோ பேசபடாத வார்த்தைகள்.எதுக்கு  இந்த கவிதை ? “

” அப்பா, இது வெறும் கவிதைப்பா,  போட்டிக்காக எழுதினேன். வேற எதுவும் இல்லைப்பா  ” என்றான்.

” படிக்கிற வழிய மட்டும் பாரு நீ. தேவையில்லாத வேலை எதுக்கு உனக்கு? “

”  எனக்கு கவிதை எழுத வரும்பா, என்னோட திறமை இது “

” மன்னாங்கட்டி! நீ ஒன்னும் எழுதவேணாம். முடிஞ்சா ஒழுங்க படிச்சு, நம்ம கம்பெனிக்கு வந்து வேலையை பாரு,
திஸ் இஸ் மை ஆர்டர்.” என்று சென்றுவிட்டார்.கவலையாக அமர்ந்துவிட்டான்.

” அண்ணா! விடு. அவர் எப்பையும் அப்படி தானே!.”

” தெரியும் டா! இருந்தும் பசங்களோட ஆசை , லட்சியம் எதுன்னு கூட கேட்க கூடாதா? ஏன் பாராட்ட வேண்டாம். திட்டாமல் இருக்கலாம்.நம்ம திறமை கண்டு, அதை வளர்த்துக்கொள்ள ஊக்கவிக்கும் தந்தையை பார்த்திருக்கேன்.  இவர் மட்டும் வித்தியாசமான தந்தை. “

” சரி விடுடா பேரா! ஒரு நாள் உன்னை புருஞ்சுபான்டா  ” என்றார் மேரி.அவரை முறைத்தவன்.

” உன்னத்தான் முதல் வெளுக்கணும்.. “
” என்னையவா? என்னை ஏன்டா வெளுக்கணும்? “

” என்ன பிள்ளை பெத்துவச்சுருக்க நீ? எங்கள பார்த்து சிரிக்கிறாரா? இல்லை உனக்கு என்னடா வேணும் கேட்டு எங்களை எங்கையாவது கூட்டிட்டு போனாரா ? வீட்டிலையே ஒருமணி நேரம் எங்களுக்காக செலவிட்டாரா ? எப்பபாரு வேலை வேலைன்னே மனுசன் இருக்கார்.எங்க
அம்மா ஜெனிகிட்ட  கூட அவர் அதிகமா டைம் செலவழிக்கல.
இதுகெல்லாம் காரணம் நீ தான். உன் பிள்ளைகிட்ட என்னத்தை சொல்லிகொடுத்து வளர்த்த?இப்ப எங்க உயிர போட்டு வாங்குது  ” என்றான்.

அவரோ உடனே ஒரே ஆக்டிங்கை போட்டார். அழுவதுபோல் தனது முந்தானை எடுத்து கண்ணில் வைத்துக்கொண்டார்.” அண்ணா! கிழவி நல்ல ஆக்டிங் போடுது விடாத அண்ணா “

” ஏய் கிழவி, சீன போடாத, நாங்க இத  மனோரம்மா ஆச்சி காலத்துலையே பார்த்துடோம். “

” இப்ப என்னடா? ஒருத்திய பெர்ஃபாமன்ஸ் பண்ண விடமாட்டீங்களே!  என் புள்ள ஒழுங்க தான்டா இருத்தான். எதுனால எங்களுக்கே  தெரியல இப்படி மாறி போயிட்டான்… ” 

” இந்த டயலாக் எக்ஸ்பிரிடேட் ஆகலையா இன்னும்? “

”  அத விடுடா… இந்த கவிதை அந்த காயூ நினைச்சுதான் எழுதுனியா ? “

” கிழவி நீயுமா? ” என்றவன் தலையில் அடித்துகொண்டான்.

  ” நானும் தான்டா, பதிலைச் சொல்லுடா பேரா!”

” ம்ம் ஆமா பாட்டி, அவளுக்காக தான் எழுதினேன் “

” ஏன்டா, அந்த காயூவ லவ் பண்றீயா நீ  ? ” என்றதும் அதிர்ந்தவன்,

” மேரி, நான் இந்த வீட்டுல சோறு சாப்பிடணும் எண்ணம் இருக்கா இல்லையா உனக்கு ? ” 

” ஏன்டா பேரா!அப்படி கேட்கிற? “

” ஜேம்ஸ், என்னையே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவாரு.”

” இல்லைடா ஹிந்தி சீரியல, ஹீரோ இந்த மாதிரி ஹீரோயினுக்கு எதார்த்தமா பொட்டெல்லாம் வைக்கிறமாதிரி சீன் வரும். கடைசில அவளையே கல்யாணம் பண்றது மாதிரியே ஆகிடும் அதான்டா கேட்டேன் “

” எடு அந்த கட்டைய! உன்னை தமிழ் சீரியல் பார்க்கவே கூடாதுன்னு சொல்லுறேன். நீ ஹிந்தி சீரியலுக்கு வேற பார்க்கிறீயா?.. அதுவும் என்னை வீட்டுகுள்ளேயே புதைக்க பிளான் வேற உன்னை.”

” ஈ….நோ கிராண்சான் கிராண்மா பாவம் டா ” எழுந்து ஓடியேவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல கல்லூரி இயங்கியது.வெங்கட் ஜானியை அழைத்து பேசினார்.” உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா ஜானி  ”  எனக் கேட்க
சிரித்தான்.

” ஏன்டா சிரிக்கிற?”

” ஒன்னில்லா சார் “

” சரி, இனி நம்ம காலேஜ்ல நடக்கிற அத்தனை பங்கசனிலும் உன்னோட கவிதை இருக்கணும் ஜானி..”
” சார்..”என ஆச்சரியமாய் அவரைப் பார்த்தான்.

” என்ன ஜானி? உனக்கு பிரைட் ப்யூசர் இருக்குடா, விட்டுடாத  ” என்றார். அவனுக்கே அழுகையே வந்தது அவரை கட்டிக்கொண்டான்.
” ஏன் ஜானி அழுகிற? “

” இல்லை சார் அப்பா ”  என்று அவர் கூறியதை கூறினான்.” விடு அவருக்கும் உன்னை பத்தி புரிய ஒரு சம்பவம் நடக்கும். கர்த்தர் மேல பாரத்தைப் போட்டு, உன் திறமையை வளர்த்துக்கோ முடிவில் அவரே உன்னைய ஜெயிக்க வைப்பார்..” என்றார் வெங்கட்.

” நன்றி சார் “

அவனை பாராட்டாத ஆளே இல்லை. ஆனால், அவனது எண்ணம் முழுதும் காயூ படித்துவிட்டாளா ? என்ன சொல்வாள் ? என்று தான் இருந்தது . அவளோ அன்று முழுதும் அவன் கண்ணில் படாதவாறே இருந்தாள்.

” ஜானி ”  என்று அழைத்தான் சக்தி.. ” சொல்லுங்க சார். “

” உன் கவிதை அருமைடா.எல்லாருடையே கண்ணையும் திறந்திட்ட  ” என்றான்.

” நன்றி சார்… “

” எங்க அக்காவும் விதவை தான். அவளை நாங்க பாதுக்காக்குறோம்ன்னு சிறையாக்கி வைச்சிருக்கோம் என்பதை உணர்த்தியது இந்த கவிதை.

விதவை என்ற பெயரை எந்த பெண்ணும் விரும்பி ஏற்காமாட்டாங்க.. ஆனாலும் சூட்டி விட்டு வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம்.என்ன செய்ய நானும் ஒரு சமூகவாதி என்றே கூற வேதனையா இருக்கு ” .

” சார் நீங்க வேதனை அடையிறத விட கொஞ்சம் மாறுங்களேன். உங்க அக்காவுக்காக மாற்றம் வேறெங்கோ வருவதைவிட நம்மிடமே தொடங்கட்டும் சார்.

அவங்கிட்ட பேசி அவங்க மனசை மாற்ற முயற்சி பண்ணுங்க.இல்லைன்னா அவங்களுடைய ஆசை என்னவோ அதை நிறைவேற்றுங்க. அதான் சரி நாம நம்ம வீட்டு பெண்களுக்குக் கொடுக்கிற மரியாதை சார்.முடக்கிவைக்காதீங்க மனதையும் மனிதியையும் சமூக கூண்டில்.” என்றான்.

” சரி ஜானி நன்றிடா. “

” இருக்கட்டும் சார்.” என்று சென்றுவிட்டான்.
உணவு நேரம் நெருங்க.எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டனர்.

” தேவ் உங்க அக்கா படிச்சாங்களா ? என்ன சொன்னாங்க? ” அவனின் ஆர்வத்திலுள்ள வேகம் இவளுக்கு சற்று சந்தேகமே வந்து.

” படிச்சவ, ஏன் அழுதான்னு தெரியல. எதையும் எங்ககிட்ட சொல்லை ஜானி ரூம்குள்ள போயிட்டா.அப்பறம் காலைல தான் பார்த்தேன்.அவளை ஏதோ மாதிரி இருந்தா” என்றாள் தேவ்.

” சரிவிடு சரியாகிடுவாங்க தேவ் ” என்றான். உணவு வேளை முடிய அனைவரும் தத்தம் வகுப்பிற்கு சென்றனர்..

தேவ் கூறியதிலிருந்து இவனால் இவனாகவே இருக்க முடியவில்லை வகுப்பில்.ஏனோ அவளின் கண்ணீரை காண முடியாமல் இருந்தாலும் அதை கேட்டதும் மனம் பிசைந்தது.

சர்ரிடம்,சொல்லிவிட்டு வெளியே வந்தான். ஏதோ எண்ணத்தில் இவனும் அந்த கவிதையில் எண்ணத்தில் அவளும் வர, மீண்டும் இடித்துக்கொண்டனர்.

அங்கு எல்லா மாணவர்களும் வகுப்பில் இருந்தனர்.இருவரும் வந்த இடத்தில் கேமிரா இல்லை என்பதால் தப்பித்தனர்.

இருவரும் இடித்துக்கொள்ள, அவளது புத்தங்கள் அனைத்தும் கீழே விழுந்தது. அதனை எடுத்துகொடுக்கும் போதுதான் ஜானியும் காயூவும் பார்த்துக்கொண்டனர்.

புத்தகத்தை வாங்கியவள் நடக்க ஆரம்பித்தாள். ” காயூமேம் ஒரு நிமிசம் ” என ஜானி சொல்ல நின்றாள். ” என் கவிதையைப் படிச்சுட்டு எதுவுமே சொல்லல நீங்க? ” அவனைக் கடந்தவள், மீண்டும் வந்தாள்.

” ஏங்க விதவையா இருக்கிற நாங்க, உங்களுக்கு என்ன பட்டிமன்ற தலைப்பா ?ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுறீங்க.

சிலபேர் இத தான் பண்ணணும் இத பண்ணகூடாது.சில பேர் ஏன் பண்ணாகூடாது பண்ணுங்க சொல்றாங்க.

நாங்க என்ன தலையாட்டி பொம்மையா.நீங்க சொல்லுறத செய்றதுக்கு.

நீங்க யார நினைச்சு இந்த கவிதை எழுதுனிங்க தெரியல.
ஆனா, இங்க எல்லாருடைய கண்ணோட்டமும் ஒரே மாதிரி இருக்காது.

எங்கள போல பெண்கள் என்ன ஆனா, உங்களுக்கு என்னங்க, அவங்க என்னமோ பண்ணிட்டு போட்டும்.

சமூகம் மிதிக்கணும் நினைச்சா மிதிச்சுட்டு போட்டும்,  நீங்க காப்பாத்துறேன் மேலும் அவங்க, ஏக பேச்சுக்கு எண்ணெயை ஊத்தாதீங்க. மிஸ்டர் ஜானி.”

கூறிவிட்டு நகர்ந்து செல்ல, அவளின் கைப்பிடித்து நிருத்தினான்.

” காயூ  ” என்ற அவனது இந்த அழைப்பில் அவளுக்குள் உணர்வுகள் ஊடுருவியது இதயத்தில்.திகைத்து பார்த்தாள் அவனையே.இருவரும் பார்த்துக்கொண்டெ நின்றனர்.

பின் தன்னை இருவருமே சமன் செய்துக்கொண்டனர்.” இங்க பாரு, நான் உன்னை நினைச்சுதான் கவிதை எழுதுனேன்.பொட்டு , பூ , இதெல்லாம் அழகியல் பெண்ணுக்கு அழகு சேர்க்கிற விசயங்கள். ஆனா, அதைவிட பெண்ணோட பேரழகு திமிரும் , தைரியம் தான்.

பொட்டுவைக்காததும் பூச்சூடாததும்.
உன் இஷ்டமா தான் இருக்கணும் அது.பிறரோட வற்புறுத்தல இருக்க கூடாது.இந்த சமூகத்தோட பேச்சை கேட்டு உன்னோட அழகான வாழ்க்கை இழக்காத.

பொட்டு வைக்கிறதினால பூ வைக்கிறதினால என்ன ஆக போது கேட்காத.

அது பெண்ணினுடைய உரிமை அதைப் பறிக்க முடியாது.உன்னோட உரிமையை யாருக்காவும் விட்டுகொடுக்காத .
அது உன்னையே கொடுக்கிறதுக்கு சமம்.

இந்த பூவும் பொட்டு அப்படியென்ன பெண்ணோட வாழ்க்கை செய்திட போகுதுனு நினைக்காத, சுமங்கலின்னும் அமங்கலின்னும் பிரிச்சுப் பார்க்கிற இந்த சமூகத்துக்கு இதான் முக்கிய காரணங்கள்.. கொஞ்சம் யோசி காயூ.

முற்றுப்புள்ளி வைத்த இந்த சமூகத்துக்கு நீ ஒரு தொடர்கதையா தொடரனும், அதுவும் பூவும் பொட்டோடும்.” என்று கூறினான், கூறிமுடித்த பின்னே தெரிந்தது அவளின் கையை இவன் பற்றியிருப்பதை. வேகமாக விடுவித்தான்.எதுவும் கூறாது சென்றுவிட்டாள்.