ஒளி 11
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கையில் தாளையும் பேனாவையும் எடுத்தவன் ஒரு பத்திரிக்கையில் கொடுத்த “விதவை” தலைப்பைப் பற்றிக் கவிதைகளை யோசிக்கலானான்,.
” டேய் மச்சி என்னடா பண்ற ? ” தியாகு கேட்க,
” மச்சி, இந்த பத்திரிக்கையில கவிதைப் போட்டி வச்சிருக்காங்கடா. அதான் அதில கலந்துக்க, கவிதை எழுதப் போறேன்..”
” என்னாத்த எழுத போற ? “
” கவிதை எழுத போறேன் மச்சி “
” நீயாடா கவிதை எழுத போற ? “
” ஏன் மச்சி, நானெல்லாம் கவிதை எழுதக் கூடாதா ? என்னால எழுத முடியாதா ? சொல்லு மச்சி “
” எழுது மச்சி கண்ட நாயெல்லாம் எழுதும் போது(அவனைதான்)நீ எழுதகூடாதா என்ன? எழுது எழுது.” என்றவனை முறைத்தவன் கவிதையை யோசித்தான்.
” கவிதை தலைப்பு என்ன மச்சி ? ”
” விதவை “
” உனக்குன்னே வருவானுங்களாடா ? ” தலையில் அடித்துக்கொண்டான்.
” பாரு மச்சி, நம்மல புரட்சி மோட்லே வச்சிருக்கானுங்க. ” என்றான்.
ஜானிக்கு தனிமையளித்து விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.
இங்கோ இருவரும் வீட்டிற்கு வந்தனர். தேவ்விடம் சொல்லிவைத்திருந்தாள் காயூ. கோயிலில் நடந்தைப் பற்றி வாய் திறக்காதே என்று. நம் தேவ் தான் ஓட்ட வாய் ஆயிற்றே.
இருவரும் உள்ளே வர்ற.” ப்பே” என்று அவர்கள் முன்னே வந்து சிறுவர்கள் கத்தினார்கள். இருவரும் பேய் முழி முழித்தனர்.
” ஹாஹா அக்கா பயந்துட்டியா ? நாங்கதான்..” என்றனர் அவர்களது தம்பி தங்கை.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
” ஆமாடா பேயே! பயந்துட்டேன் இப்படியாட பயப்பட வைப்பீங்க.” தேவ் கூற,
” ஹாஹா, சரியான பயந்தாங்கோழி அக்கா நீ” என்றான்.
சூரியநாரயாணனனுக்கு இரண்டு தம்பிகள் ஒரு தமக்கை.. அக்காவிற்கு(மாலதி)
இரண்டுமகன்கள் ( ஹரிநாராயணன் மற்றும் வெங்கடநாராயணன்) மாலதியின் கணவன் கேசவன்..
கேசவன் திருப்பூரில் பிரபலமான துணிகடை வைத்திருக்கிறார்.
ஹரி நாராயணன் அதைப் பார்த்துக்கொண்டுருக்கிறான்.
ஹரிநாரயாணன் மனைவி யாழினி வீட்டரசி.வெங்கட் எம்.எஸ் படித்துக்கொண்டிருக்கிறான்.
காயூவுக்கும் இவனுக்கும் ஒரே வயது.
முதல் தம்பி சந்திர நாராயணன் மனைவி லட்சுமி ஒரு மகன்(அஸ்வந்த் நாராயணன்) ஒரு மகள் (அஸ்விதா நாராயணன் ) சந்திர நாராயணனும் டாக்டர் தான்.பெங்களூரில் பெரிய மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.வீட்டரசி
தான் லட்சுமி. அஸ்வந்த் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.அஸ்விதா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
இரண்டாவது தம்பி (சங்கர நாராயணன்) மனைவி அனிதா ஒரே மகன்( யஷ்வந்த் நாராயணன்) யஷ்வந்த் lkg தான் படிக்கிறான்.அழகான குடும்பம் தான் சரஸ்வதி பாட்டி தேர்வாச்சே, தப்பாகுமா?.
அனைவரும் இந்த காலத்திற்கு ஏற்றார்போல் வாழ்பவர்கள்.மருமகனும் மருமகளும் சரஸ் பாட்டிக்கு கிடைத்த வரன்கள்.இதில் வாய் நீளுவது மாலிதிக்கு மட்டும் தான்.
அவர்தான் பழயை பஞ்சாகங்கத்தைபேசுபவர்.
ஜாதகத்தையும் நம்பி வாழ்பவர்.
” ஹேய் வந்த், செல்லம் விதா குட்டி எப்ப வந்தீங்க ? ” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கீழே அவளது சேலையைப் பிடித்து இழுதான் யஷ்வந்து. அவனைக் காண.. தூக்கு என்பதுபோல நின்றவனை தூக்கினாள். ” யஷ் குட்டி ” முத்தம் வைத்தாள் கன்னத்தில்.
” எப்படா வந்தீங்க ? ” தேவ் கேட்க,
” இப்ப தான்கா வந்தோம். ” விதா கூறினாள்.
எல்லாரையும் வரவேற்று நலம் விசாரித்து. பாசம் எல்லாம் கொட்டி முடித்தனர்.
” வேலைக்கு போறீயா காயூமா ? ” என்று கேட்டார் சந்திரன்.
” ஆமாம் பா போயிட்டுருக்கேன்.”
” எப்படிடா இருக்கு உன் காலேஜ் ? “
” நல்லா இருக்குப்பா, நல்ல மனுசங்க அங்க எல்லாருமே..”
” சரிடாமா,
சந்தோசமா இருடா.” என்று அவள் தலைவருட மெல்லிதாய் புன்னைகை செய்தாள்.
” தேவ், உனக்கு எப்படி இருக்கு காலேஜ் ?..” இப்போ சங்கர்பா கேட்க..
” போப்பா அதெல்லாம் காலேஜா ?நல்லாவே இல்லை ” என்றாள்.
” ஏன்டா ?”
” எப்ப பாரு படிபடி சொல்லிண்டே இருக்கானுங்க. டெஸ்ட் வைக்கிறாங்க பா,டெஸ்ட் நோட் ஒன்னு தான் இல்லை.யூனிபார்ம் இல்லை இருந்திருந்தா அது பள்ளியே தான்.”
” நீ படத்துல வர மாதிரி தான் காலேஜ் நினைச்சுட்டு போயிருப்ப தேவ். அவங்க வகுப்பறையே காட்டமாட்டானுங்க.வெளிய உட்காரது புக் எடுத்துட்டு போறதாகவே காட்டிருப்பாங்க நீயும் அப்படிதான்னு நினைச்சுருப்ப சரியா ” லட்சுமி கூற,
” லட்சுமா சரியா சொன்ன.அவ அந்த நினைப்பில காலேஜ் போனா ” காயூ கூறினாள்.
அவர்களை முறைத்தாள் தேவ்…
” எதுக்குபா தேவ்வை கலாய்கிறீங்க?
இதுல எங்க தப்பு என்ன இருக்கு. சினிமாகாரன் காமித்தால் அதற்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்.
அவன் இப்படிதான் காலேஜ்னு அபட்டமா சொல்லிருக்கனும்.அப்படி சொல்லாம மேலோட்டாம சொன்னா.பாவம் குழந்தை ஏமாந்துட்டு.” என்றார்.
” அப்படி சொல்லு அனி மா. ” அவளை கட்டிக்கொண்டாள் தேவ்.
பாட்டி வந்து தேவ்வை அடித்தார்.
” மேய்கிறது எருமை, இதுல பெருமை வேற “
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
” என்ன எல்லாரும் சேர்ந்து இந்த அப்பாவி ஜீவனைக் கலாய்கிறீங்களா ? எனக்கும் காலம் வரும் நானும் கலாய்ப்பேன்.. ஆமா சரஸ், எங்க உன் மூத்தப் பொண்ண காணவில்லை? “
” நாளைக்கு வர்றேன் சொல்லிருக்காடி “
” ஒ…, வரட்டும் வரட்டும்..”
” அக்கா, வாக்கா வெளிய போலாம் எங்கையாவது போலாம்.” என்றனர் சிரியவர்கள்.
” ஆமா, நம்ம யஷ்குட்டிக்கு நாளைக்கு பிறந்தநாள் வருதுல, அவனுக்காக சாப்பிங் போலாம் ” என்றனர். அன்று முழுவதும் குடும்பமே அலைந்தது.
மாலையில் வந்த் , விதா, தேவ்,காயூ நால்வரும் பீச்சிற்க்கு வந்தனர்.
ஆடையைத் தழுவிச்செல்லும் உப்புக்காற்றில்
நடக்கையில், தோள் தரும் தோழனே அக்கடல்.
அடித்து முந்திச்செல்ல அலைகளுக்கு யார்தான் போட்டிகளிட்டனரோ கரைத்தொட்டு கடலுள்ளே செல்கிறதே.
கடல் காற்று அவளின் கனத்த மனதையும் கனமில்லாது இறகாக்கியது..சிறிது நேரம் அவர்களுடன் கடலில் அலைகளுடன் விளையாடினாள்.
அவள் பாதம் தீண்ட முந்தும் அலைகளைவிட கரைமண்ணே அவளின் பாதம் சேர்ந்து கர்வம் கொண்டது..
பின் அவர்கள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து வந்து மணலில் அமர்ந்தாள். நினைவுக்கொக்கி ஒன்று இதயத்தில் மாட்டியது.
இன்று ஜானி கூறியது யோசித்தாள்.
தன்னருகில் ஒருநபர் அமர்வதைக் கூட கவனிக்காது அமர்ந்தவளின் யோசனையைக் கலைத்தான் சக்தி.
” அப்படி என்ன யோசனை மாமி? ” என்று கேட்டான் சக்தி.
அவள் பயந்தே விட்டாள்.” ஹேய் நான் தான் ரிலாக்ஸ்” சக்தி கூறவே,
” நீங்களா சாமி? நான் யாரோ நினைத்துடேன்.”
” என்ன யோசனை மாமி, நான் வந்தது கூட தெரியாம?”
” அப்படிலாம் எதுவுமில்லை சாமி.சும்மா கடலைப் பார்த்தேன்.
” நம்பிடேன் மாமி… ” என்றான்.
” அப்படியா? அப்ப நன்றி சாமி.. “
” எதுக்கு நம்பினதுக்கா ? ” என்றவன் கேட்க, தலையாட்டிவைத்தாள்.
” ஆமா யாரோட வந்த நீ ? “
” நானா இதோ விளையாடுதுங்கள அவங்கக்கூட தான் ” என்று விளையாடும் தன் தங்கை, தம்பியைக்காட்டினாள்.
” ஆமா நீங்க ? “
” நான் விக்னேஷ்ஷோட தான் வந்தேன். காதலியைப் பார்த்ததும் பிரண்ட கழட்டிவிட்டான். அதான் இங்க கொஞ்சம் காத்துவாங்களாமேன்னு நடந்தேன்.”
” நீங்களும் காதலித்திருந்தா? இப்படி தனியா வந்திருக்க மாட்டிங்க. தனியா உட்கார்ந்து இருக்கவும் மாட்டிங்க…”
” நான் தனியா தான் வந்தேன்.ஆனா, உன்கூட தானே உட்கார்ந்து இருக்கேன் “என்றதும் முறுவலித்தாள்
” கடற்கரை காதலர்களுக்கு மட்டுமா என்ன?”
” சரிதான் ” என்று தலையை ஆட்டினாள். அப்போது அவளைப் பார்த்தான். அவளுக்கேற்றார் போல் அழகான சல்வாரில் ஷாலை அழகாய் வயிற்றுக்கு மேல்வரை பெரியதாய் விரித்திருத்தாள். தன் ஜடையை முன்னாள் போட்டிருக்க அது அவள் மடியை துயில் கொண்டிருந்தது. முன்னால் தன் கண்களைத் தாண்டி கன்னத்தை தொடும் முடிகள் என அழகாய் யாரையும் ஈர்க்கும் வண்ணமிருந்தாள்.
” சேலையில பெரிய பொண்ணாட்டம் இருந்த நீ, இப்ப சல்வாரில் சின்ன பொண்ணா இருக்க காயூ” அதற்கு மெல்லியதாய் சிரித்தாள்.அந்த சிரிப்பை பதியவைத்துக்கொண்டான் தன் மனதில். ” நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல சாமி ?”
” அது… “
” சொல்ல இஷ்டமில்லைன்னா விடுங்க ”
” இல்லை சொல்றேன்.”
” என் அக்கா ஸ்வாதி. கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு…
இரண்டு வருசத்துக்கு முன்னாடி மாமா இறந்துட்டார்.
அவ இப்ப எங்கவீட்டுல தான் இருக்கா.
அவளுக்கு எங்களைத் தவிர யாரையும் தெரியாது.மாமாக்குச் சொந்தம் சொல்லிக்க யாருமில்லை. நான் கல்யாணம் பண்ணா, என் மனைவி என் அக்காவையும் அவன் பொண்ணையும் ஏத்துபான்னு என்ன நிச்சயம்?
பொதுவா கல்யாணம் ஆனா, பெண்கள் தனி குடித்தனம்ன்னு அம்மாவையும் அப்பாவையும் விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டுப் போறாங்க. இதுல அக்கா இருந்தா அவ்வளவு தான் அதான் பண்ணிக்கலை ”
” எல்லா பெண்களும் அப்படிதானா சாமி ? ” என்றாள்.
” இல்லை. ஆனால் எனக்கு பயம் காயூ…”
” நீங்கள் பார்க்கப் போற பெண்கிட்ட, இந்த கண்டிசனை சொல்லுங்க, யாரு சரின்னு சொல்லுகிறார்களோ, அவங்களை திருமணம் செய்ங்க…”
” சரிதான். ஆனா, சரின்னு சொல்லிட்டு பின்னாடி மாறிட்டாங்கன்னா என்ன பண்ண? “
” அப்படி ஒரு சூழ்நிலை வரமா, நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்..”
” இது நல்லாருக்கே..
ஏன் உங்களுக்கு தெரிய வேண்டாமா? குடும்பத்தில எப்படி எல்லாரையும் பொறுத்துப் போக வேண்டுமென்று.
அப்படி சொல்லி கொடுத்து வளர்க்கலையா? ஏன் குடும்பத்தைப் பிரிக்கிறீங்க..” என்று சக்தியின் ஆதங்கத்தை வைத்தான்.
” வீட்டிற்கு வர்ற போற பெண், இது தான் என் வீடு என் சொந்தம் பந்தம் என் அன்னை தந்தை என்று எண்ணினால் பிரிவும் சரி முதியோர் இல்லம் ஏன் இருக்க போகிறது…?”
மெல்லியதாய் புன்னகை செய்தவள்.” ஏன் சக்தி வர்ற மருமகளால தான் குடும்பம் பிரிகிறதா? முதியோர் இல்லம் இருக்கிறதா ?
” ஆமாதானே… “
” அப்ப குடும்பம்ன்னு வந்தா அங்க மருமகள் மட்டும் தானா சாமி. அந்த குடும்பத்தை மருமகள் மட்டும் தான் கட்டி காப்பாத்தனுமா? உங்க குடும்பத்துல ஆல்ரெடி உங்க அம்மா, அப்பா, நீங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிந்து வைச்சிருக்கீங்க தானே. அதுனால நீங்க அட்ஜஸ்ட் பண்ணிண்டு போவேள்.. ஆனா, வர்ற போகிற மருமகள் புதிதானவள்.
உங்கள் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்க அட்லீஸ்ட் ஒருவருடமாவது ஆகிட வேண்டாமா? முதலில் நீங்கள் தானே அட்ஜஸ்ட் பண்ணனும் அவளை. அப்ப தான், அவ உங்க மூவரையும் புரிந்துக்கொள்ள முயலுவாள்.
அதை செய்றது இல்ல. ஆனா, அவ செய்ற தப்பையும் அவ செய்ற வேலையில குறையைக் கண்டு, பெருசா பேசி அவள் மனசுல தவறாக எண்ணம் வந்து தனிகுடுத்தனம் வைக்கணும் நினைக்கிறாள்.
நீங்க சொன்னீங்களே, மாமனார் மாமியாரை அன்னை தந்தையாய் பார்க்க வேண்டும்.அதே போல் அவங்களும் தங்கள் மருமகளை மகளா தானே பார்க்க வேண்டும். ஒரு பழமொழி இருக்கு சக்தி..
ஊரான் விட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளருவான்.
இதுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா ? மாமியார் மருமகளுக்காக எழுதப்பட்டது இந்த பழமொழி.அதாவது ஊரான் விட்டுப் பிள்ளைன்னு சொல்ல படுற மருமகளை மாமியார் ஊட்டி வளர்த்தால், தன்னோட பிள்ளையான மகனை அவள் வளர்ப்பாள்(பார்த்துபாள்) என்று தான் அர்த்தம்.
பொதுவாக,ஒரு குடும்பம் பிரிஞ்சு போக மேலோட்டமா பார்த்தா அதுக்கு காரணம் வந்த மருமகள் தான் சொல்லிடுறாங்க
அதற்கு காரணத்தை யாரும் அலசி ஆராய்ந்தது இல்லை.
ஆனால் குடும்பம் வெறும் மருமகளால மட்டும் இல்லைங்க. இத்தனை வருடங்களா சேர்ந்திருந்த நீங்க, அவள் வந்ததும் பிரிந்து செல்ல காரணத்தை கண்டறிவதுமில்லை.
ஆனால் இவள் தான் காரணமென்று பொதுவாக சொல்லிடுறீங்க.. ஏன் புதியவளை பழையவர்கள் அட்ஜஸ்ட் செய்வது தவறா
என்ன?
ஒரு கையை மட்டும் தட்டினால், எப்படி ஓசை வரும். மற்றோரு கையும் வேண்டுமல்லவா.
ஆனால் மற்றகைகளுக்கு மனதில்லை என்றால் எப்படி ஓசை எழுப்பவது.
சாமி, பெண் எப்போதும் தனக்கு ஒரு
சுதந்திரம் வேண்டுமென்று நினைப்பாள்.ஆனால் அது அவ்வளவா கிடைப்பதே இல்லை.
உங்கள் அம்மாவும் மருமகள் தான். உங்கள் அம்மாவுக்கு மாமியார் இருந்திருப்பார்கள் தானே.உங்கள் அம்மாவும் மாமியாரிடமிருந்து
பிரித்து தன் குடும்பம் தனியாக வைத்தால் சரி. அதுவே மருமகளாக வேறொருவள் வந்து பிரித்தால் தவறு.
மருமகளால் ஆன முதியோர் இல்லம் அம்மாக்களால் இல்லையோ.இப்படி பார்சாலிட்டி பார்த்தால் பிரித்து தானே அழைத்து செல்வாள்.
நான் சொல்லவது போல அவளுக்கென்று சுதந்திரம் கிடைத்தால், பிரித்து அழைத்து செல்லமாட்டாள்.தவறை ஆராயாமல் பொதுவாக இவர்கள் தான் காரணம் என்று சொல்லாதீங்க சாமி.அப்படியே மருமகள் சரியாக இல்லை என்றால். தன் மகனுக்காக பொறுத்துக்கொள்ளலாமே.ஆனால் அதுவுமில்லை.
முதியவர் அனைவரும், மருமகளாக வந்த மாமியார்கள் தான்.
அது உருவாக்கப்பட மருமகள் மட்டுமே காரணமில்லை மகனும் தான்.
ஏன் பெற்றவளைத் தனியாக ஒரு வீடு அமர்த்தி, அவர்களை பார்த்துக்கொள்ளலாமே. முதியோர் இல்லத்தில் கொடுக்கும் பணத்தை தனியாக அவர்களைப் பார்த்துக்க செலவிடலாமே.எல்லா காரணத்தையும் மருமகள் மேல தான் திணிக்கிறீங்க.
எங்க வீட்டுல, எங்கள் பாட்டி எங்களுடன் தான் இருக்கிறார்.எங்க அம்மா மருமகளாக சரியா இருங்காங்க.
எங்க பாட்டியும் நல்ல மாமியாராகவும் பல நேரம் அவருக்கு தாயாக இருந்திருக்கிறார்.இருவரும் அழகான தோழிகள்.
கணிப்பை விட ஆராய்ந்து காரணத்தை கூறுங்கள் சாமி, உங்களைத் தாண்டி எதுவும் நடக்க போறதில்லை.
மருமகளை விடுங்கள்.
உங்க அக்காவை கேளுங்க சந்தோசமாக இருக்காங்களான்னு .அவங்கள நீங்கள் தான் சிறையாக்கி வைச்சிருக்கீங்க.
அவர்களால் சுதந்திரமாக பேச முடியாது.தன் பிள்ளையோட ஆசை தன்னோடு ஆசைகூட அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அவங்க உங்களை சார்ந்திருக்கிறதால, அவங்களோட தேவைகளைக் கூட சொல்ல தயக்கப்படுவாங்க. இதுவே அவங்க வீடுன்னா அந்த தயக்கம் இருக்காது.
அவர்களுக்கு அரணாக இருக்கேன். நீங்க சிறைப்பிடித்து வைச்சிருக்கீங்க. ஆண்கள் இல்லை என்றாலும் பெண்களால் தனித்து வாழ முடியும்.
ஆனால் விடுறதில்லை இங்கு சில ஆண்வர்கமும் சமூகமும்.
சரி
நேரமாயிடுத்து வருகிறேன்.” என்றவள் தேவ்வை அழைத்தால்.
மூவரும் வந்தனர்
” ஹாய் சக்தி சார்.”என்றே தேவ் வந்தாள்.
” யாருக்கா இந்த மாமா? ” என்றாள் விதா…” அவர் எங்க கூட வேலை பார்க்கிற ஆசிரியர்டா பெயர் சக்தி “
” ஹாய் சக்தி மாமா ” என்றாள் விதா.
” ஹாய் குட்டி உங்க பெயர் என்ன ? ”
” நான் அஸ்விதா, இவன் என் அண்ணா அஸ்வந்த்…” என்றாள்.
” ஒ.கே டா போலாமா .” காயூ கேட்க. தலையாட்டினார்கள்.
” வர்றோம் சாமி” என்று சென்றுவிட்டாள்.
அவன் சென்ற திசையைப் பார்த்து நின்றான் சக்தி.
” டேய் சக்தி போலாமாடா? ” விக்னேஷ் வந்தது கூட தெரியவில்லை அப்படியே நின்றான். ” அடேய் ” என்று உலுப்ப
” என்னடா வேணும் ? “
” உனக்கு என்னடா ஆச்சு ? இங்க தனியாக நிக்குற.” என்றதும் அவனை முறைத்தான் சக்தி.
” என்னை தனியா நிக்கவைச்சதே, நீ தானே டா “
” சரிசரி வா போலாம் ” விக்னேஷ் அவனை அழைத்துச்சென்றான்.
அன்றிரவானது,
சக்திக்கு உறக்கமே இல்லை திரும்பி திரும்பிப் படுத்துக்கொண்டிருந்தான்..
” என்னடா சக்தி, தூங்கலையா நீ ? “
“எனக்கு தூக்கம் வரலை டா “
” ஏன் உனக்கு தூக்கம் வரலை, எப்பையும் சிவான்னு சொல்லி படுக்கிறவன், நாளைக்கு சிவான்னு சொல்லித்தானே எழுதிருப்ப இப்ப என்ன ? “
” அதான் டா எனக்கும் புரியல? “
” சரி இன்னைக்கு பீச்சுல எதாவது பொண்ண பார்த்தீயா ? “
” நான் காயூவ தான்டா பார்த்து பேசினேன். ஏன் கேட்கிற? “
” அப்படியா, அவ வந்தால மச்சி? “
” ஆமாடா வந்தா, அவ தம்பி தங்கச்சிகளோடு. அது இருக்கட்டும் விக்கி, உன் தங்கச்சிய பத்தி என்ன நினைக்கிற ?.” சக்தி கேட்டான்
” என் தங்கச்சியா, அது யாருடா ?”
” அதான்டா காயூ .”
” அவளுக்கென்ன நல்ல பொண்ணுடா நல்ல வகுப்பெடுப்பா, அழகா இருப்பா அழகா சிரிப்பா. யாரையும் தப்பாவோ கஷ்டபடுத்தியோ பேசு மாட்டா. ஏன்டா கேட்குற ?.”
” இன்னைக்கு அவ… ” என்று நடந்ததை கூறினான்.
” அவ இவ்வளவு பேசுவாளாடா ?”
” ஆமாடா அவ்வளவு பேசினாள்…” என்று கண்ணில் உணர்ச்சியோடு சக்தி சொன்னான்.
” என்ன சாமியாரே விழுந்துடிங்களா ?”
” என்னடா சொல்லுற புரியிற மாதிரி சொல்லுடா ? “
” இல்ல லவ்வுல விழுந்திட்டீயா மச்சி? ” என்றான்.
” லவ்வா? ”
” ஆமா, முதல் முறையா தெரியாத ஒரு
பொண்ணப் பத்திப் பேசுற மகனே!இதுவரைக்கும் சிவன் இல்லைனா அம்மா அப்பா குடும்பம்ன்னு தான் பேசுவ. இன்னைக்கு காயூவைப் பத்தில பேசுற அதான் கேட்டேன்..”
” போடா ” என்றவன், போர்வைப் போர்த்திப் படுத்துக்கொண்டாலும் வெகு நேரமானது அவனுறங்க.
அழகான ஞாயிறுகாலை.
யஷ் குட்டிக்குப் பிறந்தநாளை அழகாய் கொண்டாடினார்கள்.
குடும்பமே போட்டோ எடுத்துகொண்டது கேக்கை முகத்தில் அப்பி ஒரு வழி ஆக்கினர்.
கொண்டாட்டம் இனிதாய் முடிந்தது.
வெங்கட் மட்டுமே வரவில்லை மாலதியும் கேசவனும் வந்தனர்.
” காயூ வேலைக்கு போறீயாமே. ” கேசவன் கேட்க, ” ஆமாமா மாமா.”
” நல்லாருக்காடா கல்லூரி ?”
” நல்லாருக்கு மாமா.”
” சரிடா சந்தோசமா இரு.” என்றார்.
” அம்மா, அந்த அம்பூஜம் மாமி பொண்ணு இருக்காள “
” ஆமா, இப்பகூட மாப்பிள்ளையாண்டா இறந்து போனானே. “
” அவ ஸ்கெண்டு மேரெஜ் பண்ணிகிட்டா மா.கணவன் இழந்து ஒருவருசம் கூட ஆகல அதுக்குள்ள பாருங்களேன். ” என்றார் மாலதி.
” மாலதி, அது அவா வாழ்க்கை.
அவ தேர்ந்தெடுக்கிறா. கணவரை இழந்தவங்க கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன? ” கேசவன் கேட்டார்.
” அதுக்காக, இன்னும் அவ கணவன் இறந்து ஒரு வருசம் சரியா கூட முடியல, அதுக்குள்ளவா ” என்று மாலதி கேட்டார்.
” ஏன் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் எதுக்கு வருசம் நாளுன்னு பார்ந்துண்டு..”
” என்னமோ,போங்க, காலம் மாறிபோச்சு ”
” ஆமா மாறிடுச்சு, அதுனால என்ன? அதுக்காக அவ தனியாவே வாழனுமா என்ன? அவளுக்கும் துக்கம் சுகம் இருக்காதா மாலதி ?
ஏன் நம்ம காயூவே எடுத்துக்க இன்னும் மூனுவருசத்துல மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்க தான் போறோம். இதுல என்ன டி தப்பிருக்கு? ” பாட்டி கூறினார்.
” அப்ப, இன்னொரு உயிரை காவுவாங்கப் போறீங்க அப்படிதானே?” என்றார் மாலதி சுற்றும் முற்றும் பார்த்துப் பேசாமல்.
காயூவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
” மாலதி, உன் வாய் அடக்கு ” என்றார்.
” நான் உண்மைய தானே சொன்னேன் தப்பா? ” என்று மாலதி வார்த்தைகள் கொடுக்காய் அனைவரையும் கொட்டியது.