ஒளி 10

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மதிராஜனை இரண்டுநாள் சஸ்பண்டில் போட்டுவிட்டு, சக்தியைப் பார்த்துகொள்ளுமாறு கூறினார் வெங்கட்.

அன்றையக் கல்லூரி பொழுது நன்றாய் முடிந்தது. அனைவரும் தத்தம் வீட்டுக்கு
வந்து சேர்ந்தார்கள்.

” என்ன அண்ணா இவ்வளவு பிரைட்டாஆ இருக்க, என்ன நடந்துச்சு காலேஜ் ல ?”

” குட்டிம்மா அப்படியா இருக்கேன் ?”என்று தன்னை ஆய்வு செய்தான் ஜானி. ” அட!  ஆமாம் உண்மைதான் “

அவள் சிரிபொலி(ளி)
அவன் முகத்தில்
பிரதிபலித்தது.

” அப்படி என்ன அண்ணா நடந்துச்சு?”அவள் கேட்க. அவன்
அனைத்தையும் கூறினான். ” சில ஆசிரியர்கள் இப்படி இருக்கிறதுனால தான் நமக்கு படிக்கவே தோண மாட்டிக்குதுல அண்ணா.
சரி விடு, ஆமா காயூமேம் சிரிச்சதுனால தான் இப்படியா பளிச்சின்னு உன் முகம் இருக்கா ?  “

” ஈ…. அப்படியெல்லாம் இல்ல குட்டிமா  “
” எப்படியெல்லாம் இல்ல  ? “

” என்ன குட்டிமா ? “

” தெரியுதுண்ணா நல்லாவே, நீ வழியிறது…. “

” ஐயோ நிசமாவா? ” என்றதும் அவள் முறைத்தாள்.

” நீ பண்றது சரியில்லை.
காதல் வந்து நின்னா அவ்வளவுதான். அப்பா உன்னை, கைமா தான் சொல்லிடேன்..” என்றாள்.

இதுவரை இல்லை இல்லை என்று பதில்தந்தவனிடத்தில் இன்று மாற்றம் தெரிந்ததுஅவனது பதிலில்.  “அதையும் பாப்போம்  குட்டிமா ” என்றான்.

” என்னாது பாப்போமா ? அண்ணா முதல் இல்லைன்னு சொல்லுவ. இப்ப பாப்போம் சொல்லுற.,” 

அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஐகாவானான்.

இங்கோ அப்பா ஜானி அது சொன்னான் பா இது அது என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் தேவ்.. அவன் செய்ததை சாதனையாக கூறினாள்.

” உண்மையா பெற்றோரோ ஆசிரியரோ பிள்ளைகளை முதல் நம்பனும்..
நம்பாம இருக்கிறதுனால தான் இப்படி ஒரு வார்த்தைச் சொல்லி அவங்க மனச கலைக்கிறாங்க. அதே போல பெற்றோரையும் ஆசிரியரையும் நம்பனும் பிள்ளைகள் அதுபோல அவங்க கொடுத்த சுதந்திரத்த தவறா பயன்படுத்தாம சரியா பயன்படுத்தினும் அப்படி இருந்தா சந்தோசமா அவங்க வாழ்க்கை இருக்கும் டா..” நாராயணன் கூற

”  உண்மைபா.  நீங்க எங்க மேலே வச்ச நம்பிக்கை நாங்க காப்பாத்துவோம். நீங்க எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கீங்க. அத நாங்க,சரியா உபயோகித்து உங்களுக்கு எந்த கெட்ட பெயரையும் நாங்க கொண்டு வர மாட்டோம் பா..” காயூ கூறினாள்.

” இந்த காலத்து இப்படி ஒரு ஐயராத்து பேமிலி இருக்கு யாருமே நம்ப மாட்டாங்க பா.நீங்களும் சரி அம்மாவும் சரி எங்களுக்காக மட்டுமே பார்க்கிறீங்க.ஏன் பாட்டி கூட இந்த மாதிரி இருக்க சான்ஸ்சே இல்லை..மை ஸ்வீட் பாட்டி,..” என்றாள் தேவ்.

” ஹாஹா நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்தவங்க டி. கால மாற்றத்தைப் பார்த்துட்டு தான் இருக்கோம்.ஆனா, எந்த காலமா இருந்தா என்ன பிள்ளைகளை நம்பனும் அவங்கள நல்ல விதமா ஊக்கப்படுத்தனும் அதான்டி மா பாட்டி செய்றேன்  “

” எனக்கு கிடைத்த அத்தைப் போல வேற யாருக்கு கிடைத்திடாது. நான் செய்த பாக்கியம் தான்” நாயகியும் அவரை புகழ்ந்தார்.

” சரி சரி வாங்க சாப்பிட்டு தூங்கலாம்.” என்றார்.

அழகாய் காலை விடிந்தது. நல்லதொரு நாளாக தொடங்க வேண்டும் என்று அனைவரின் காலை வேண்டுதலாக இருந்தது.

இங்கோ கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே பாடொன்றை விசில் அடித்தபடி கிளம்பினான் ஜானி.

” வர வர மிஷ்டர் ஜானி அழகாகிட்டே போறீங்களே! வாட்டிஸ் த மேட்டர்? ”  என்று வாய்விட்டு அவனிடமே அவனே கேட்டான்.

” எஸ் அண்ணா, வாட்ஸ் த மேட்டர் ஐ வாண்ட் டூ நோ தெட்…”

” ஹேய் குட்டிமா! காலேஜ் கிளம்பாம என்ன பண்ற ? ” 

” அண்ணா உங்க காலேஜ்ல, நீ பார்ட் டைமா எதுவும் வேலைக்கு போறீயா..?”

” ஏன்டா? “

” இல்ல, லீவு டேஸ்லையும் காலேஜ்க்கு போறீயே அதான் கேட்டேன்.”

” வாட் லிவா ? ” என்றான்.

” அட ! ஆமா அண்ணா. இன்னைக்கு சனிக்கிழமை  ” 

” நான் படிக்கிற ஆர்வத்துல கிளம்பிடேன் டா ”  

” நீ நடிக்கிற ஆர்வம் தான் தெரியுதே…” அவள் கூற, ”  என்னாது நடிக்கிற ஆர்வமா? ” 

” ஆங்.. இல்லை இல்லை படிக்கிற ஆர்வம் தெரியுதுன்னு சொன்னேன் அண்ணா” 

” ச்சீ… ப்பே  ”  என்று வெளியே வந்தான்.
‘ ஆனாலும் இவ்வளவு ஆர்வம் கூடாது அண்ணா..’  என்றாள்.
தன் காலை வேலையை முடித்துவிட்டு தியாகு வீட்டிற்கு சென்றான்..
தியாகு மட்டுமே  வீட்டெடுத்து ட தனியாக இருக்கிறான். ஹாஸ்ட்டல் அவனுக்கு செட்டாகவில்லை. அவனது அம்மா மட்டும் தான் ஊரில் இருக்கின்றார்.

” ஜானி அங்கே வர, அவன் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தான் ” எங்க மச்சி போற?”

” சைத்தான் கேட்டிருச்சு. இனி போற காரியம் உருப்படுமா ? ”  என்றான் தியாகு.

” நீ விசயத்த சொல்லு, உருப்படுமா இல்லையான்னு நான் சொல்லுறேன்.”

” டேய் கோவிலுக்கு போறேன் டா.. இன்னைக்கு சனி கிழமை .”

” ஆமால மறந்துடேன். வழக்கம் போல ஆஞ்சிநேயர் கோயிலுக்கு தானே ? ” 

” இல்லடா இன்னைலிருந்து மாத்திடேன்.. பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கு போடனுமா அம்மா சொன்னாங்க..”

” டேய் நீ பாட்டுக்கு மாத்திப் போற. அங்கப் பிரசாதம் கிடைக்குமாடா? “

” அடேய் போறது
பெருமாள் கோயில் கண்டிப்பா கிடைக்கும் மச்சீ. அதுவும் பொங்கல் புளியோதரை இரண்டுமே கிடைக்கும்…”

” அப்ப வாடா…”

” நீயும் வர்றீயா ? “

” எஸ், நானும் வருவேன் “

” நீயேன்டா வர்ற, நான்வாங்கிட்டு வர்றேன்.. நீ இரு.. ” தியாகு கூறினான்.

” சாரி மச்சான் மன்னிச்சிரு. இந்த விசயத்துல உன்னை நான் நம்பல.. எனக்கு வேணும் நானும் வருவேன்  ” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கூறினான். ” அடச்சி வா.”
இருவரும் அங்கே போனார்கள்.

அழகாக காட்சியளத்து கொண்டிருந்தார் பிரசன்ன வெங்டாஜலபதி என்ற பெயர் கொண்ட நாராயணன்.

கூட்டம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமை அல்லவா ”  டேய் கூட்டத்தைப் பார்த்தா கிடைக்குமாடா? பொங்கலும் புளியோதரையும்  “

” கிடைக்கும் வாடா.. “

” டேய் பேசாம நீ உள்ள போயி சாமி கும்பிடு. நான் போய் பிரசாதம் வாங்க வரிசையில் நிக்கிறேன்” என்று ஜானி கூறினான்.

” சாமியைப்
பார்த்துட்டு போடா.” என்றான் தியாகு. அங்கு ஆஞ்சிநேயர் சன்னதிக்கு சென்றனர்.அவன் சாமி கும்பிட ஜானி
கோயிலைச் சுற்றிப் பார்த்தான். எங்கும் சிலை அழகாய் வடிவமைத்திருந்தனர்.ஜெய் ஸ்ரீ ராம் என்ற தவம் மந்திரமும் ஒலித்தது.புறாக்களும் அங்காங்கே அமர்ந்திருந்தது.

கையில் சூடத்தட்டை ஏந்தி வந்தார் ஐயர். அவனுக்கு குங்குமம் கொடுத்தார். அதைவாங்கி எங்கே கொட்டலாம் என்று பார்த்தவனுக்கு கூட்டத்தில் ஒருவன் தட்டிவிட அவன் சட்டையிலே
கொட்டியது.கை வைத்து துடைக்கப் போனான்,.

” டேய் சட்டை சிவப்பா தனியா தெரியும். துடைக்காத இரு  ” என்று இருவரும் பேப்பரைத் தேடிக்கொண்டே வந்தனர்..
அவன் அக்குங்குமம் விழாதவாறு பிடித்துக்கொண்டே வந்தான்.சட்டை பை இருக்கும் இடத்தில் தான் கொட்டியது..

அவன் அதையே பார்த்துக்கொண்டு வர எதிரே வந்தவளோடு மோதிக்கொண்டான்.
அவளோ குனிந்துகொண்டே வந்தவள் அவனை மேல் மோத, அந்த குங்குமம் அவள் நெற்றியில் ஒட்டிக்கொண்டது.

மோதிய இருவரும் முகத்தைப் பார்க்க.வேற யாருங்க முட்ட போறா ஜானியும் காயூம் தான்.

” சாரி மேம் சாரி சாரி,,.. ” அவளோ எதுவும்
சொல்லாமல் தன்னுடைய அடிபிரசஷனத்தை மீண்டும் தொடர்ந்தாள்.

” என்னடா ஒன்னுமே சொல்லாம போறாங்க?  ” என்றான் ஜானி.

” டேய் அவங்க வேண்டுதல் நிறைவேத்துறாங்க அதான் அமைதியா போறாங்க  ” என்றான். அப்போதுதான் அவளைப் பார்த்தான். அவள் கணுக்கால் தெரியும் வரைப் புடைவையைத் தூக்கிக்கொண்டு கொலுசற்ற அவள் அழகுபாதம் அடிமேல் அடியெடுத்து வைத்துக்கொண்டிருப்பதை ரசிக்க மறக்கவே இல்லை அவன்.

” டேய் அங்க தேவ் உட்கார்ந்து இருக்கா வாடா போலாம் ” என்று சிலையாய் நின்றவனை இழுத்துச்சென்றான்.

” ஹாய் தேவ்..” தியாகு அழைக்க,

” ஹேய் நீங்க கோயிலுக்கு வருவீங்களா தியாகு ?”

” ம்ம் வருவேன்மா,  அம்மா எப்பையும் கோயிலுக்குப் போகச் சொல்லுவாங்க,.”

“ம்ம், பரவாயில்லை அம்மா பேச்செல்லாம் கேட்கிறீங்க, நல்ல பையன் தான்” அவள் கூற காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான் தியாகு.

” ஆமா, ஜானி எதுக்கு வந்தான்? ” அவள் கேட்க,

” இதுக்குதான் ”  என்று அவளருகில் அமர்ந்து அவள் வாங்கி வைத்திருந்த பொட்டனத்தில் ஒன்றைப்பிரித்து உண்டான். அவள் ஏற்கனவே,  வரிசையில் நின்று நான்குப் பொட்டனத்தை வாங்கி கொண்டு காத்திருந்தாள் காயூக்காக.

” இதுக்குதான் நானும் வந்தேன் ஜானி ”  என்றாள், தியாகு தலை அடித்துக்கொண்டான்.

” இந்தா சாப்பிடு ” என்றான்.

” வேணா ஜானி நீ சாப்பிடு ” என்றவள் தியாகுவிற்கு கொடுக்க அவனும்  உண்டான்.
அப்போது தான் அங்கே காயூவும் அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள்.

” உனக்கு இந்த குங்குமம் அழகா இருக்கு அக்கா  ” என்றாள்.

” என்ன சொல்லுற தேவ் மா?.”

” நெத்தில அக்கா..” ஜானியும் தியாகுவும் அப்போது தான் அவளை
கவனித்தனர். அவனுடைய சட்டையில் உள்ள குங்குமம் அவள் நெற்றில் இடமாறி இருந்தது. அது அழகாய் வகிடில் இட்ட குங்குமமாய்  அவள் முகத்திற்கு அழகாய் பொறுந்தி இருந்தது.

” அக்கா உனக்கு இந்த வகிடுலிருக்கிற
குங்குமம் அழகா இருக்கு. நீ ரொம்ப அழகா இருக்க.. ” ஜானி கூற வந்த வார்த்தைகளை தேவ் கூறினாள். தன்நெற்றியில் கைவைத்துத் தொட்டு பார்க்க குங்குமம் இருந்தது ‘ எப்படி வந்தது? ‘ என்றுயோசித்தவள், ஜானியைக் காண திரு திருவென முழித்தான். தன் சட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.அவளும் அவனேயே பார்த்தாள்.அவன் வாயெடுக்கும் பொழுதே வேகமாக கண்ணாடிப் பார்க்கச் சென்றாள்.

அவள் நெற்றியில் குங்குமம் இருப்பதை கண்டவள், வேகமாக அதை அழித்தாள். அது நன்றாக ஒட்டிக்கொள்ள தண்ணீரை வைத்துத் துடைத்தாள். அழுத்தி துடைத்தாலும் கொஞ்சம் போகாமல் இருந்தது..

இவனோ தான் தான் தவறெதுவும் செய்துவிட்டோம் என்று பயந்து பதற்றமுற்றான் தியாகுவும் தான்.தேவ் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். அவள் அருகில் வந்தவள்
” இப்ப போயிருத்தாடி தேவ் ?” என்று கேட்டவளைக் கொலை வெறியுடன் பார்த்தாள்.

” இப்ப ஏன் நீ அத அழிச்ச? .”

” தேவ் மா, நான் குங்குமம் இட்டுக்க கூடாது நோக்கு தெரியாதா டி..”

” நீ ஒன்னும் குங்குமம் இட்டுகல. இது தெரியாம நடந்தது. அதுக்கு இப்படியா வேகவேகமா ஜலத்த ஊத்தி அலம்பிட்டு வருவ,ஜானி என்ன நினைப்பான்.
? என்னமோ அவனே வைத்த மாதிரி வேகமாக அலம்பிட்டு வர்ற”

” தேவ் ” என்று காயூ கத்த, எப்படியோ குங்குமம் என் நெற்றில வந்தது. அதுக்காக என்னை அப்படியே விட சொல்லுறீயா நெற்றில குங்குமம் இட்டுண்டே என்னால நம்மாத்து போகுமுடியும்மா டி. அவா எல்லாம் பேசமாட்டாளா ? நோக்கு தெரியாதது எதுவுமில்லை தேவ்.”

” நேக்கு எல்லாம் தெரியும் அவா அவா யாரு நமக்கு சொந்தமா? பந்தமா ? அவா பேச்சுக் கேட்டு தான் நம் வாழ்க்கையை வாழனுமா? நோக்குனு வாழதெரியாதா? ” 

” தேவ் மா,கணவனை இழந்த பெண் நெத்தியில எப்படி குங்குமத்த இட்டுக்க முடியும் ? “

” அக்கா இன்னும் பல வருசத்துக்கு முன்னாடி புருசன இழந்த பொம்மனாட்டிகளெல்லாம் உடன்கட்டை ஏறுவாங்களாம். நீயும் ஏற வேண்டியது தான் ” என்று தேவ் கேட்க…

” கோயில் வச்சு என்ன பேசுற தேவ் ?”

” இருங்க தியாகு இவளை விட கூடாது.சொல்லுக்கா உடன் கட்டை ஏறுனாங்க.நாளாடைவில் தன் கணவன் இழந்தாலும் தான் வாழனும் நினைச்ச பெண்களையும்  கட்டாயப் படுத்தி உடன் கட்டை ஏறவிட்டாங்க..’சதி’ என்று சொல்ல படுகிற இந்த உடன்கட்டை ஏறுதல் தடுக்க சட்டமே கொண்டு வந்தாலும் வடக்குமாநில  இது மறைமுக நடந்திட்டுதான் இருக்குது. அது தடை சட்டம் போட்டவங்க இதுக்கு ஏன் போடல தெரியல. அந்த சந்தோஷ் முகம்கூட உனக்கு நியாபகம் இருக்கா அக்கா? இல்லை அவருகூட காதல் அது இது வாழ்ந்தியா?  உன்னால ஒரு மணி நேரம்  அவரோடு செலவழிக்க விட்டாங்களா இல்லை தானே!.

இப்ப அவருமில்லை யாரோ ஒருவருக்காக வாழ்நாள் முழுக்க இப்படி பொட்டிட்டுக்காம பூ வச்சுண்டுக்காம ஒதுங்கி ஒதுங்கி வாழ போறீயா ? ” தேவ் கேட்க அமைதியாக இருந்தாள்.

அவளுடைய இத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை காயூவினால், ” நான் என்ன பண்ணனும் நினைக்கிற தேவ் மா ?”

“அக்கா நோக்கு புரியலையா? நேக்கு என் அக்காவ வேணும். இறந்துபோனவரோட பொண்டாட்டியா இல்லை ”  என்றாள்.

” அதுக்காக பொட்டிட்டு,  பூ , வச்சுண்டு வாழ சொல்லுறீயா ?.”

” ஆமா, அப்படிதான் இருக்க சொல்லுறேன் “

” ஏற்கனவே எல்லாருடைய வாயிலையும் விழுந்துடேன். ராசியில்லாதவன்னு அது இதுன்னு . இப்பையும் என்னால விழுகமுடியாதுடி.
என்னை விட்டுடு நான் இப்படியே இருந்துகிறேன்.. ” அவள் அவ்வாறு பேச, கோபம் கொண்டு தேவ்
சென்றுவிட்டாள்.. ” தேவ் தேவ் ”  கத்த திரும்பவில்லை.

” சாரிங்க என்னால தானே இவ்வளவும் ” ஜானி மன்னிப்பு கோர,
” உங்களால இல்லை. தெரியாம நடந்துக்கு எதுக்கு நீங்க பழிய ஏத்துகிறீங்க?”

” ஆமாங்க அதை தான் நானும் சொல்ல வர்றேன். தெரியாம நடந்த விசயத்துக்கு நீங்க ஏன் பழி ஏத்துகிறீங்க..” அவள் அவனைப் பார்க்க,

” அவரோட ஆயுல் கம்மினு கடவுளால முடிவு செய்து எழுதப்பட்டது. அத நீங்க ஏங்க உங்களாலன்னு பழியை ஏத்துகிறீங்க?

பெரிய மனசுதான் உங்களுக்கு. அதுக்காக கொலைகுற்றப் பழியை எல்லாம் ஏத்துக்காதீங்க.

இங்க யாரும் தேடி போய் யாரும்  வாயிலையும் விழுறது இல்லங்க. நம்ம வாழ்க்கையில நடக்கிற சந்தோசத்தையும்  துக்கத்தையும்  பத்தி பேச திறக்கிற வாயை நாம அடைக்காம விடுறதுனால அவங்க பேசுறாங்க.

இந்த குங்குமம், பொட்டு , பூ.
திருமணத்துக்கு முன்பு நீங்க வைக்கலையா ? இல்லை உங்க இறந்த கணவர் தான் 
உங்களுக்கு முதல்முறையா கொடுத்து வைத்த  விட்டாரா ? அவர் சென்ற பின்னே அதைக் கொடுத்துவீட்டிர்களா அவர் நியாபகமா இருக்ககூடாதுன்னு?”

” அந்த காலத்துல வெள்ளை சேலைதான் அணிவார்களாமே! அப்படி பார்த்தா நீங்களும் வெள்ளை சேலை அணிந்திருக்கனும், அதென்னங்க பாதி மட்டும் பலோவ் பண்றீங்க? கணவனை இழந்தப் பெண்களை வெளியவே வரகூடாதாம் ஆனா, நீங்க வேலைக்கே போறீங்க.

இதுல மட்டும் மாற்றம் வந்துடுத்து குங்குமம் பொட்டிலையும் பூ வைக்கிறதுலையும் மட்டும் ஏன் இன்னும் வர்றல?

உங்களுக்கு வயது ஆறுபதோ எழுபதோ இல்லை இருபது தொடக்கம் தான் இன்னும் ஐம்பதாண்டு வாழ போறீங்க,  இப்பவே உங்கள மாத்திங்கோங்க.
இல்லைனா எழுபதுல வருத்தப்பட்டு பிரோஜம் இல்லை” அவள் எதுவும் பேசாது மௌனமாய் தலைகுனிந்து நின்றாள்.

” நீங்க தலைகுனிய கூடாது. இந்த சமூகம் ,மூடநம்பிக்கை சாஷ்திரம் சம்பிரதாயம் சொல்லி அத கொண்டு வந்தாங்க பாருங்களேன் அவங்க தான் தலைகுனிந்து நிக்கனும்.  நம்மளால ஒரு பெண்ணோட வாழ்க்கை கேள்விகுறியா நிக்கிதேன்னு.

இந்த வாழ்க்கையை ஒருமுறைதான் வாழபோறோம்.நம்ம சந்தோசத்துக்காக தான் வாழனும்.

ரூல்ஸ் போட்டு வாழ இது ஒன்னும் நாம பார்க்கிற வேலை இல்லைங்க.
வாழ்கையை அழகா மாத்திக்கிறது உங்க கையில தான் இருக்கு ”  என்று ஜானி கூற இதையெல்லாம் கேட்டு தேவ் ஜானியிடம் வந்தாள்.

” ஜானி உனக்குள்ள இத்தனை ஆவேசங்களா! ” என்று வந்தாள் தேவ்.

” யாயா… பேஸிக்கலி நான் சமூக நல சிந்தனையாளர்.  இந்த மாதிரி கொடுமைகளைப் பார்த்தால், என் நாடி துடித்து கண்கள் சிவந்து பொங்கி எழுந்திடுவேன் ” என்று வசனம் பேசினான்.

” அப்படியா அப்ப இதே போல இருக்கிற பல பெண்களை வர்ற வைச்சு ஒருமேடைப் போட்டு உன் கொந்தளிப்ப காட்டுவோமா?”

” ஏன்டா நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு புடிக்கலையா? சும்மாவே மதம் சண்டைய கிளப்பிவுட்டு திரியிறானுங்க. இதுல நான் வேற பேசி ஒரு கிருஷ்டின் பையன் இந்து மதத்தை தப்பா பேசுறான்னு சொல்லவா.  ஆள விடுங்கயா, அப்பாவி புள்ள நான். ஏதோ இந்த வாய் கொஞ்சம் இருக்கிறதுனால தப்பிச்சுண்டு இருக்கேன் நோக்கு பொறுக்கலையா” என்று கேட்டவனை கண்டு,இருவரும் வாய்விட்டே சிரிக்க, காயூ மட்டும் குனிந்து சிரித்தாள். அதைப் பார்த்தவனுக்கு மெல்லிதாய் புன்னகையும் வந்தது. இருவரும் கிளம்பிட, தியாகுவும் ஜானியும் வீட்டிற்கு வந்தனர்.

” ஏன்டா உங்க மதத்துல மட்டும் பொட்டுவைக்க கூடாது பூ வைக்க கூடாது சொல்லுறாங்க?” ஜானி கேட்க,

” எங்க மதத்துலன்னு இல்லை எல்லா மதத்தைலையும் பலோப் பண்றாங்கடா. உங்க பாட்டி சரி எங்க அம்மாவும் சரி, பைசல் பாட்டியும் சரி பூ வைக்க மாட்டாங்க இது போலத்தான்டா…!”

” அடேப்பா! இதுல மட்டும் ஒன்னு கூடிருவாங்களே!” 

” ம்ம்…  ஆமா ஜானி, தப்புக்குத்தான்  இந்த சமூகம் ஜால்றா போடும்டா  ” 

” கரேட்டா தியாகு.. என்னவோ போடா மாதவா கணக்கா ஆயிருச்சு ” என்றான். இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

ஜானி அமர்ந்து பேப்பரை புரட்டினான். அதில்********
கவிதைப் போட்டி வைத்திருந்தனர். கடைசி தேதியையும் பரிசு விலையையும் குறிப்பிட்டிருந்தன.

  ‘ ஜானி நீ சேரலாமே! உன் கவிக்கு உயிர்கொடுடா  ‘ என்று தனக்குள்ளிருக்கும் கவிஞரைத் தட்டி எழுப்பினான். தலைப்பு என்னவென்று
ஆராய அதில்,   ” விதவை ”  என்றே வந்திருந்தது.

  ‘ நமக்குள்ள இருக்க தீய அணைக்க விட மாட்டானுங்க போலையே ஜானி ‘   தனக்குள்ளே பேசிக்கொண்டவன்,
  ” டெக் தி வெப்பன்ஸ் அண்ட் சூட் இட். ” என்று சொல்லிக்கொண்டு பேப்பரையும் பேனாவையும் எடுத்தான். விதவை வார்த்தையைச் சுட்டழிக்க எவ்வித வார்த்தைகளைக் கொண்டு  உருவாக்கிட  போகிறானோ!