ஒரு மழை நாளில் -3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
துளி 4
முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்?
நீ மறுபடி ஏன் வந்தாய்?
விழி திறந்ததும் மறுபடி
கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னைத்
துரத்தது நிஜமா நிஜமா?…
வானமகள் நீல ஆடையை விடுத்து கரு நிற ஆடையை அணிந்திருந்தாள். யாவரும் தத்தம் வீடுகளில் உறையத் துவங்கியிருந்தனர். கார்த்திக்கும் கோவையில் தன் வீட்டை அடைந்து தான் இன்று சேகரித்த தகவல்களை அனைத்தையும் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அதில் மதுராவின் தகவல்களும் இருந்தன. மீண்டும் அவள் நினைவுகள். அவளை முதன்முதலில் ‘ஏ ‘ பிளாக்கில் சந்தித்த தருணம் நினைவுக்கு வந்தது.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கு முந்தைய நாள் . கார்த்திக் பல்லூடகத் துறை மாணவன். அவனும் இரண்டாம் வருடம் தான். அட்மிஷன் வொர்க்கில் அவனும் இருந்தான். அன்று அனைவரையும் இருவர் கொண்ட குழுவாகப் பிரித்து, பின் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் அட்மிஷன் நடக்கும் அறைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
மதுராவுக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் இயற்பியல் பிரிவில் வொர்க். அது ‘ஏ ‘ பிளாக் என்பதால் அங்கு சென்று அறையில் உள்ள கணினியைச் சரிபார்க்கும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
அந்த ‘ஏ’ பிளாக் கம்ப்புயூட்டர் இன்சார்ஜ் முகில் மற்றும் கோகுல். அங்கு கணினியில் எதாவது பிரச்சினை, உள்ளீடு செய்வதில் சந்தேகம் என்றால் அவர்களிடம் மற்றவர்கள் கேட்டுக்கொள்ளலாம். அவர்கள் இருவரும் அட்மிஷன் நடக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்று கணினி இயக்கம் சரியாக உள்ளதாக என்று சோதிக்க வேண்டும். அப்படி செல்லும் போது தான் அவளைக் கண்டான். அப்போது எல்லாம் மனதில் எந்த சலனமும் இல்லை.
மாலை இரண்டாம் முறையாக மறுபடியும் கேட்கச் சென்றனர். அவர்கள் அறைக்கும் சென்று எல்லாரிடமும் கேட்டது போல் “கம்ப்யூட்டர் ஏதாவது பிரச்சினை என்றால் ஸ்டாப்ஸ் கேட்டால் என்ன சொல்வீங்க ?” என்று கேட்க , அதிபுத்திசாலி மதுராவோ, உங்க பேரத்தான் சொல்லுவோம் என்று கூறினாள்….என்ன என் பேரை சொல்லுவீங்களா? என் பேரு தெரியுமா? என்று முகில் கேட்டான்.
“ஓ..தெரியுமே..முகில் கார்த்திக்.”( அவர்கள் முதல் முறை வந்த போதே கோகிலா அக்கா அவர்கள் பெயரை தெரிந்து கொண்டு வருமாறு பக்கத்து அறைக்கு அனுப்ப அவளும் கேட்டு வந்திருந்தாள்) .
கார்த்திக் தனது நண்பன் கோகுலை அழைத்து , ” மச்சி ஏதாவதுனா என் பேரை சொல்லுவாங்களாம்டா” என்க .. கோகுல் ” அப்பாடா என் பேரு தெரியாது ” என நிம்மதியாக பெருமூச்சை வெளியிட்டான்.
“உங்க பேரு கோகுல் தானே ? என்று மதுரா கேட்டாள். அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் நிற்க, மதுரா கோகிலா அக்காவிடம் ஏதோ முனுமுனுத்தாள்.
இதைக் கவனித்த கார்த்திக், “என்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்”..என்றான்.
“ஆங்..ஒன்னுமில்லை” என்று மழுப்பினாள்.
இவன் மேலும் கேட்க ,”அனுப்புனா கூண்டோடு கைலாசம்தான். தனித்தனியாக எல்லாம் இல்லை ” என்றாள்.
“ஏதாவது பிரச்சினை என்றால் எங்க பேரை சொல்லக்கூடாது. பிரவீன் சாரிடம் சொல்லனும்”என அவளிடம் சொல்லிவிட்டு கார்த்திக், அடிப்பாவி!! இரு உன்னை பார்த்துக்கிறேன் என மனதில் நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். கோகுலும் கூடவே சென்றான்.
தேர்வு முடிவுகள் பத்து மணிக்கு மேல்தான் வெளியிடப்படும். அதனால் அட்மிஷன் மதியம் தான் தொடங்கும். அதற்கு முன்பே அனைவரும் சாப்பிட்டு விட்டு வர வேண்டும். கார்த்திக் , கோகுல் இருவராலும் , எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும். ஆதலால் சாப்பிட முடியவில்லை. முதல் நாள் அட்மிஷனும் முடிந்தது. மாலையாகியும் இருவரும் சாப்பிட செல்லவில்லை.
இதனை அறிந்த கோகிலா , மதுராவிடமிருந்த பிஸ்கெட் பாக்கெட்டை ( நம்ம பாப்பா பசி தாங்காது, நேரம் தவறாம கொட்டிக்கும், வெளில போன பசிக்கும் என்பதால் தனது கைப்பையில் பிஸ்கெட் , சாக்லெட் எல்லாம் தாயராக இருக்கும். இதனை கோகிலா அறிவாள்) கொண்டு சென்று அவர்களிடம் கொடுக்குமாறு கூறினாள். அவர்களைத் தேடிச் சென்ற மதுராவின் கண்களில் முதலில் கார்த்திக் அகப்பட்டான். அவனிடம் அதை கொடுக்க அவன் மறுத்தான். பின் மதுரா இருக்கும் அறையில் உள்ள பெட்டியில் வைக்கும்படி சொன்னான். இவளும் அதன்படியே செய்துவிட்டாள். அன்றைய நாள், கார்த்திக்கும் கோகுலுக்கும் அதிக வேலை. இரவு 12 மணிக்கு மேலானாதால் ஹோட்டல்கள் இல்லை. இரவு உணவாக அவள் வைத்து சென்ற பிஸ்கட்டை இருவரும் உண்டு விட்டு கல்லுரியில் உறங்கி விட்டனர்.
அடுத்த நாள்..