என்னுயிர் கொல்லி…

” அடியே வெண்டைக்கா! உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்… நீ எந்த ஊர் ராஜ குமாரியா இருக்க இப்ப? ” சந்தியா எழிலியை இடித்து விட்டுக் கேட்டாள்.

“அதுவா, என் ரோமியோ ஹார்ட்ல தான் நான் ராஜா குமாரியா இருக்கேன்…” எதிரே வேலைப்பார்த்துக் கொண்டு இருக்கும் நீரூபனைக் கண்டு கிறங்கிய குரலில் கூறினாள்.

“ம்ம்ம்… நினைப்பு தான், இப்ப பார்க்கிற பொலப்ப கெடுக்குமா? அங்க  என் அக்கா இருக்கா தெரியும்ல”

“உன் அக்கா என்ன தக்காளி தொக்கா? என் ரோமியோ கூட சுத்துனா ஜூலியட் ஆயிடுவாளா? என் ப்ரெயர் தான் சும்மா விடுமா?” என்றதும் வாயைப் பிளந்தவள்.

” அட சகுனி! உன்னால தான் அடிக்கடி அவங்களுக்குல சண்டை வருதா?”

” பின்ன என் வயித்தெரிச்சல் சும்மா விடுமா? இதென்ன காலேஜா? இல்ல பார்க்கா? ஒரு டிஸ்பிலின் வேணாம்” ரூல்ஸ் பேசியவளை ஏறெடுத்தவள்..

” இதுவே நீ அந்த இடத்துல இருந்த நீ காலேஜ்ஜாவா பார்த்துருப்ப?” எனவும்

“ஈஈஈஈ..” என இழிக்க, சந்தியவோ, அவளைத்  துப்பினாள் .

” கண்ட இடத்துல துப்பாதீங்க மிஸ் கத்திரிக்கா! “

” துப்புற  மாதிரி பேசாதீங்க மிஸ் வெண்டிக்கா” என்று இருவரும் பல்லைக் கடித்துக்கொண்டு பேச,

” குட்டச்சிகளா, அங்க என்ன வெட்டிகதைப் பேசிட்டிருக்கீங்க,  இங்க வாங்க? ” என்றழைத்தான் நீரூபன்..

” என்ன சீனியர்? ” பல்லைக் காட்டிக்கொண்டு வந்து நின்றனர் இருவரும்.

” மேடம் ரெண்டு பேரும் வேலைப் பார்க்க வந்திங்களா வேவு பார்க்க வந்திங்களா?” என்றதும் மீண்டும் இழிக்க, கடுப்பானான். ” ஒழுங்கா வேலைப் பார்க்கல, எல்லா வேலையும் உங்க தலையில் கட்டிடுவேன். பார்த்துக்க, இந்தா, நீ போய் அங்க மாட்டு.  நீ இதை மேல மாட்டு”  என வண்ண வண்ண செயற்கை மலர்கள்  நிறைந்த மாலையைத் தோரணமாக மாட்டச் சொன்னான்.

ராமானுஜம் பிறந்தநாளைக் கொண்டாட மேத்ஸ் டிபார்ட்மெண்ட். அந்தச் செமினோர் ஹாலை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தனர்..

அனைத்து பொறுப்பும்  நீரூபனிடம் ஒப்படைக்க, அவனும் தனது டிபார்ட்மெண்ட ஜூனியர்களையும் அழைத்துக்குக் கொண்டு வேலை வாங்கினான்..

இவள் அந்த மாலையை மாட்ட எக்கி கொண்டிருந்தாள்..

” குள்ளமா தான் இருக்கன்னு  நினைச்சா,  மூளையும் இல்லாம இருக்கன்னு இப்பதான் தெரியுது… சேரைப் போட்டு ஏற வேண்டியது தானே .இப்படி எக்குனா சரியா போட முடியுமா? ” என கத்த

“சேர் ஆடுது சீனியர், அதான் இப்படி ட்ரைப் பண்றேன். ” அவளை முறைத்தவன்
சேரைப் போட்டு ஏறச் சொன்னான் அவளும் ஏறினாள்..

” சீனியர் உங்களை நம்பி தான் ஏறி இருக்கேன். பழைய பகையை  நினைச்சு பழி வாங்கிடாதீங்க…” தள்ளாடிக் கொண்டு ஏறினாள்.

அவள் மாட்டிக்கொண்டு இருக்க, சேரில் இருந்தது மெதுவாக தன் கையை எடுத்தான்.உடனே அது ஆட்டம் காண விழுகப் போனவளின்  கையைப் பற்றி பிடித்துக் கொண்டான்..

” சீனியர், விட்டுறாதீங்க… என் உயிரே உங்க கைலதான் இருக்கு” என்றாள்..

“நொய் நொயின்னு பேசாம வேலைய பாரு டி” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

அவளும் அதைச் சரியாக மாட்டியவள், கீழ இறங்கும் போது தடுமாற, அவள் புஜங்களைப் பிடித்து   நிறுத்தியவன், புருவத்தோடு சேர்த்து விழியையும் உயர்த்தி” என்ன” என கேட்க அந்த விழி வீச்சை தாங்க முடியாமல் பெண்ணவள்  தடுமாற, தலைகுனிந்து ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டி விட்டுச் சென்றாள்.

” என்னடி நடக்குது அங்க?” என சந்தியா கேட்க,

” ம்ம் கொலை”

” கொலையா?”

அவன்
கத்திப் பார்வையில்
எத்தனை முறை
வதம்
செய்யப் படுகிறேனோ
அத்தனை முறை
அவன் மேல்
காதல் வயப்படுகிறேன்
என்னுள் விழுந்து
என்னுயிரை
குடிக்கும்
என் உயிர்கொல்லி
அவன்….

” ஆஹா பெண் வைரமுத்தே  பிண்ணிட்டீங்க, உங்க கவிதைக்குப் பரிசா சமோசா வாங்கி தரலாம் இருக்கேன் அதுவும் உங்க காசுல ” அவள் முறைப்பையும் பொருட்படுத்தாமல் இருவரும் கேண்டீனுக்குச் சென்றனர்.