உறவுகள் உறவாகட்டும்  -1

சூரியனின் வரவை எதிர்பார்த்து கீழ்வானம் காத்திருக்கும் நேரம் ஒரு நான்கு மணியை தாண்டியிருந்த அந்த அதிகாலை வேளை.நம் கதையின் நாயகி சரண்யா சனநெருக்கடி மிகுந்த அழகு கொஞ்சும் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் ஓர் தனியறையில் கண்ணயந்திருந்தவள் திடீரென தூக்கம் கலைந்து குளியலறை நோக்கி ஓடியவள் எவ்வளவு நேரம் வாஷ்பேசின் முன் நின்றாளோ தெரியாது குமட்டல் தொடர்ந்து ஒருவாறு வாந்தி எடுத்து ஓய்ந்து வியர்த்து களைத்து வந்து கட்டிலில் அமர்ந்தாள், லேசாக தலை வேறு கிறுகிறுத்தது .ஒரு தேனீர் வைத்து அருந்ததினால் நன்றாக இருக்கும் என நினைத்தவள் அவளது உடல் ஒத்துழைக்க மறுக்கவே போத்தலில் இருந்த தண்ணீரை மடமட என குடித்தவள் ,தலையணயை சரி செய்து வைத்தவள் அதில் சாய்ந்தபடி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள். ஆம் இது கடந்த ஒருமாத காலமாக பழகியது தானே..

      ”ஒழுங்காக எந்த வேலையும்  செய்யவும் முடியிறது இல்லை ஒழுங்க சாப்பிட, தூங்க உடலும் மனசும் ஒத்துழைக்குதில்லை. ஏன் இறைவா இதுவரை நான் பார்காத தனிமையையும் கவலையும் தந்தாய்.இந்த தனிமை எப்ப தீரும் இல்லை இனி என் வாழ்நாளுக்கு இது தொடர்கதையா கடவுளே.என் வயிற்றில் வளர்வது நீ எனக்கு அருளிய வரமா! சாபமா !” என்றெல்லாம் தன் இயலாமையில் புலம்பினாள்.

 “ இல்லை இல்லை இறைவா என் வயிற்றில் வளரும் உயிர்தானே என் தனிமைக்குத் துணை. என் உறவு இது தானே” என்று மறுகணம் எண்ணியவள் வாஞ்சையுடன் வயிற்றை தடவிக் கொண்டாள். “இன்றைக்கு மாலை எப்படியாவது டாக்டர் ஐ பார்த்து வாந்தி ஐ நிப்பாட்ட ஏதும் மருந்து வாங்கின எல்லாம் சரியாகிவிடும்” என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டாலும், தன் விதியை நொந்தவளின் கண்ணோரத்தில் அவளையறியாமலே கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்தாள். அப்படியே அவளது உறவுகளும் நினைவுகளும் மனதோரம் எட்டிப்பார்த்தார்கள்.

மீண்டும் உறவுகள் உறவாகுமா நினைவாகுமா!