அவ(ன்)ள் 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தன் இரு கைகளிலும் தலையை தாங்கி பிடித்தபடி தனது அறையில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா… இருநாட்களாக அவனது முகமே சரியில்லை…. காலை மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து ஏதோ ஒரு நுண்ணுணர்வு அவனை தாக்கியபடி இருக்க… இதழில் எப்போதும் இருக்கும் இளநகை துணி கொண்டு துடைத்தார் போன்று தூரப் போயிருந்தது…
கதவு தட்டும் சத்தம் கேட்டு “எஸ்” என்றான்.
உள்ளே வந்த செவிலியர் “டாக்டர் ரவுண்ட்ஸ்க்கு நேரமாகிடுச்சி” என்று நினைவுப்படுத்தவும் வாட்சை திருப்பி பார்த்து “சரி” என்று கூறிவிட்டு ஸ்டெதஸ்கோப்புடன் இதயநோய் பிரிவிற்குள் நுழைந்து தன் சோதனையை முடித்து வெளி வந்தவன் ஐசியூவிற்குள் நுழைந்தான்.
தூரத்தில் வரும் போதே தன்னிச்சையாக கிருஷ்ணாவின் கண்கள் பிருந்தாவை தேடியது. ஐசியூ வாயிலில் அவள் அமர்ந்திருப்பதை போல தோன்றவும் கண்கள் பளிச்சிட” நர்ஸ் பிருந்தாவோட அம்மா மறுபடி அட்மிட் ஆகி இருக்காங்களா?” என்று வேகமாக நடந்தான்.
“இல்ல டாக்டர்… இரண்டு நாளைக்கு முன்னாடி தானே, அவங்க டிஸ்சார்ஜ் ஆகி போனாங்க… இதோட நெக்ஸ்ட் வீக் செக்கப்க்குதான் வருவாங்க டாக்டர்… இப்போ ஐசியூல இருக்க… பேஷண்ட் ஜென்ஸ்… நேம் சங்கர்…”
என்றதும் சட்டென கிருஷ்ணாவின் நடை தடைபட்டு நின்றிட… “டாக்டர்”… என்ற செவிலியரின் அழைப்பில் தன்னிலை உணர்ந்தவன் “ம் வாங்க” என்றவன் ஐசியுவிற்கு சென்றுவிட்டு அறைக்கு வந்தான்.
கிருஷ்ணாவிற்கு காணும் இடமெல்லாம் பிருந்தா இருப்பதை போன்ற ஒரு பிம்பம் தோன்றவும்
மூச்சை உள்ளிழுத்து வேகமாக வெளியேற்றியவன் தலையை உலுக்கி கொண்டான். தன் கண்களும் மனமும் பிருந்தாவை தேடுகிறது என்ற உண்மை புரிய சிலநாட்களுக்கு முன்பு நண்பர்கள் கேட்ட கேள்வி மூளையை அரித்திட அந்நாள் நினைவில் வந்தது.
“அப்புறம் மச்சன் முகமெல்லாம் பிரகாசமா இருக்கு!!!”… என்று கிரி கிருஷ்ணாவை பார்த்தான்.
“எப்பவும் என் முகம் அப்படித்தானேடா இருக்கும்”. என்று சிரித்தபடி பதிலை அளித்த கிருஷ்ணா காபியை கையில் எடுத்தான்…
“இன்னைக்கு எனக்கு வந்த இன்ஃபர்மேஷன் படி நீ எங்க கிட்ட எதையோ மறைக்குறன்னு நினைக்கிறேன்”… என்றான் பீடிகையுடன்.
“நான் என்னடா உங்ககிட்ட மறைக்க போறேன்….என்று கூறி சற்று யோசித்தவன் “எதுவும் இல்லையே டா” என்றான்.
“இல்லையே மறைச்சா மாதிரில்ல தகவல் கிடைச்சது… அதுவும் பல லட்சங்கள்” என்றதும்
அஞ்சலி கிரியை முறைக்க கிருஷ்ணா அஞ்சலியை பார்த்தான்.. “யாரு எலி சொன்னதா?” என்று கையில் இருந்த காபியை ஒரு மிடறு விழுங்கினான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அது எலியும் இல்லை, பல்லியும் இல்லை… நானா கண்டுபிடிச்சது… சரி இப்ப சொல்லு உன் இதயத்துல ஒரு பூ பூத்திடுச்சி தானே…?” என்று இதயத்தை சுட்டி காட்டி கையை பூ போல விரித்தான்.
‘கடவுளே இவனை பேச சொல்லி நானே எனக்கு ஆப்பை வைச்சிக்கிட்டேன்… நான் பேசியிருந்தாலாவது ஏதாவது சொல்லி இருப்பான் இவன் பூவு காயின்னு ஏதேதோ உளறுறானே’ என்று உள்ளுக்குள் புலம்பினாள் அஞ்சலி.
“டேய் அறிவு நீ ஒரு டாக்டர்டா… இங்க எப்படி டா பூ பூக்கும்” என்று இதயத்தை தொட்டு காட்டியவன்… “எதை கேக்குறதா இருந்தாலும் நேரடியா பேசு ஏதோ பேசனும்னு பேசாத” என்று அவனை வாரிவிட்டு கிருஷ்ணா காபியை அருந்தினான்.
தலையில் அடித்துக்கொண்ட கிரி “சரி நேரடியா விஷயத்துக்கு வர்றேன்… அஞ்சலி பிரெண்ட் பிருந்தா மேல உனக்கு ஒரு இதுவாமே?” என்றான்… இப்போதும் சுற்றி வளைத்து
இதற்கு மேல் பொறுக்கமாட்டாத அஞ்சலி “நீ வாயை மூடு எரும” என்று பல்லை கடித்து துப்பிவிட்டு “நானே கேக்குறேன் கிருஷ்ணா… உனக்கு பிருந்தா மேல பீலிங்ஸ் அதாவது லவ் பண்றியா?” என்றாள்.
“ஏய் என்ன இது? லவ்வூ.. கிவ்வூன்னு… பிருந்தா உனக்கு பிரெண்டு சோ எங்களுக்கும் பிரெண்டு… இன்ஃபேக்ட் உனக்கு பிரெண்டுன்னு தெரியும் முன்னாடியே அவங்க எனக்கு அறிமுகம்… அவங்களுக்கு பிரச்சனை, அதுவுமில்லாம இந்த சிச்வேஷன்ல எல்லாருமே ஹெல்ப் பண்ணுவாங்க தானே இத போய் லவ்வுன்னு சொல்லி அசிங்க படுத்தலாமா?” என்றான் பொறுமையாக அதே நேரம் அழுத்தம் நிறைந்த குரலில்.
“இல்லடா அவ அழுதா நீ கஷ்டப்படுற!!… அவ வருத்தப்பட்ட நீ சங்கடப்படுற!! ஒரு மணி நேரத்துல அவளோட பிரச்சனைய சரிபண்ணிட்ட இதெல்லாம் வைச்சித்தான் நீ அவளை விரும்புறேன்னு நினைச்சேன்” என்றாள் சங்கடம் நிறைந்த குரலில்.
“இதெல்லாம் ஒரு காரணமா அஞ்சலி… நீ இல்ல இவன் ரெண்டு பேரும் கஷ்டத்துல இருந்தா நான் சும்மா இருப்பேனா?… சொல்லு சும்மா இருப்பேனா?”
“இல்லை” என்று அவள் தலையை அசைக்கவும் “தென் இதுல மட்டும் என்ன?? அவங்களும் எனக்கு பிரெண்டு தான் ஓகே…” என்றான் சற்று விளக்கமாகவே
எப்போதும் கிருஷ்ணாவிற்கு யாரையும் மனம் நோகும்படி பேசவோ செய்யவோ வராது எனபதை விட, அவனுமே அதை விரும்ப மாட்டான்…. தன் விருப்பு வெறுப்பை கூட மற்றவர் மனம் நோகாமல் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் தன் கோபத்தை கூட அமைதியாகவே காட்ட பழகிக்கொண்டான். கிரியும் அஞ்சலியும் தான் உதவியதை இவ்வாறு பேசியது சற்று கோபத்தை உண்டாக்கி விட அவர்களுக்கு பொறுமையாகவே விளக்கினான்.
கிருஷ்ணாவின் அழுத்தமான குரலில் அவன் கோபத்தை உணர்ந்த இருவரும் “சாரி க்ருஷ்…. நான் ஏதோ ஒரு டெம்ட்ல கேட்டுடேன் சாரி டா” என்று அஞ்சலி மன்னிப்பை வேண்டிட…
“மச்சா சாரி டா இந்த பிசாசால நானும் நீ லவ் பண்றியோன்னு நினைச்சிட்டேன்” என்றான் கிரி வருத்தமாக…
இருவரின் வருத்தமான முகத்தை பார்த்த கிருஷ்ணா “பச் என்னடா அதுக்குள்ள திருந்திட்டிங்க?? உங்க கிட்ட எவ்வளவோ எதிர்ப்பார்த்தேன் அதுக்குள்ள சரண்டர் ஆகிட்டிங்களே!!” என்று அவர்களை சீண்டினான்.
“டேய் வேண்டாம்… ஏற்கனவே இந்த பிசாசால நொந்து போயிருக்கேன் நீ வேற கடுப்பேதாத மச்சான்” என்றான் கிரி கடுகடுத்த குரலில்.
‘ஏன் அஞ்சலிய திட்டுற.? அவளுக்கு தோனுச்சி கேட்டு தெளிவு பண்ணிக்கிட்டா… இதை இப்படியே விட்டுடுங்க… இது பிருந்தா வரையும் போக வேண்டாம்” என்றவன். நண்பர்களை கலகலப்பாக்கி அதன் பிறகே வீட்டிற்கு சென்றிருத்தான்.
இப்போது அதையெல்லாம் நினைக்கும் போது இதழ்களில் தானாய் ஒரு புன்னகை வந்து அமர்ந்துக்கொண்டது… அவள் கண்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமே இல்லாமல் வருத்தப்பட்டது இதனால் தானோ… அவள் வருத்தப்படும் போது மனம் சஞ்சலப்பட்டது இதன் காரணமாகத்தானோ… என்று அவளை பற்றிய சிந்தனைகள் மனதில் பனிச்சாரலின் குளிர்ச்சி இதயத்தில் பரவிய நொடி வார்த்தைகளுக்கு வலிக்காமல் மெல்ல இதழ் பிரித்து பிருந்தா என்ற பெயரை உச்சரித்தவனின் விழிகளில் காதல் நிறைந்ததிருந்தது.
…..
மகேஷ்வரியின் உடல் நிலையில் முன்னேற்றம் கூடி இருந்தது… மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தவர் பிருந்தா கொடுத்த மாத்திரையை கடனே என்று விழுங்கினார்.…
மகளை பார்க்க பார்க்க அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு… அன்னையின் கண்கள் கலங்குவதை பார்த்த பிருந்தா “இதுக்கு தான்மா நான் வர்றதே இல்லை… ஏன் இப்படி அழுதுக்கிட்டே இருக்கிங்க இப்போதான் ஏதோ உடம்பு கொஞ்சம் தேறி வருது அதையும் கெடுத்துக்குறிங்களே” என்றாள் அலுப்பாக
“எதுக்கு டி என்னை காப்பத்தி உட்கார வைச்சி இருக்க?… நீ இப்படி இருக்கறதை பாக்கவா?…” என்று அவள் உருவத்தை சுட்டி காட்டவும்
“எனக்கென்னம்மா நான் நல்லா தானே இருக்கேன்… அந்த மகராசன் அவ கூட வாழ்ந்தா என்னையும் அவ கூட கூட்டு சேர்ந்து வாழ சொல்றியா?” என்றாள் கடுப்பாக
“நான் எங்கடி அப்படி சொன்னேன்?” என்றவரின் முன் வந்து அமர்ந்தவள்
“அம்மா எனக்கு போராடி போராடி அலுத்துப் போச்சி சரியா தயவு செய்து என்னை நினைச்சி நீ கவலை படாதே எமனோட போறாடி அந்த டாக்டர் உங்களை என் கையில பொக்கிஷமா கொடுத்து இருக்கார்… எதுவும் பேசி மனசை கஷ்ட படுத்திக்காதிங்கம்மா… நீங்க தான் என் பிடிப்பே” என்று தாயின் மனம் நோகமால் கூறியவள் “கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம படுத்து ரெஸ்ட் எடுங்க நான் உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றேன்”. என்று அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அடுப்படியில் தோசையை வார்த்துக்கொண்டு இருந்த தம்பியிடம் இருந்து கரண்டியை வாங்கியவள் “நீ போடா நான் எடுத்துட்டு வறேன்” என்றதும்
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நான் இங்க உட்கார்ந்தே சாப்பிடுறேன் எப்பவும் தனியா சாப்பிட்டு போர் அடிக்குது” என்று அடுப்படி திண்டில் எறி அமர்ந்தான் விஷ்ணு.
தோசை இருந்த தட்டை அவனிடம் கொடுத்தவிட்டு அடுத்த தோசையை ஊத்தி கொண்டிருந்த பிருந்தா… “ஏண்டா நைட் அம்மா உன் கூட சாப்பிட மாட்டாங்களா…?”
“அவங்க என்னைக்கு ஒழுங்க சாப்பிட்டு இருக்காங்க எப்ப பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரியே உட்கார்ந்து இருப்பாங்க”
“அப்பா?”
“அவர் இன்னும் மோசம் அம்மாவும் அப்பாவும் பேசிக்கறதே இல்ல அதுவுமில்லாம அப்பாவும் அதிகமா வீட்டுல இருந்தத நான் பாக்கல” என்றான் சோகமாக
“நீ அம்மாகிட்ட பேசி இருக்கனும் விஷ்ணு”
“என்ன பேச சொல்றக்கா? எதை சொன்னாலும் அழறாங்க… அப்பறம் மூச்சு விடமுடியாம சிரமப்படுவாங்க… அதுக்கே எதுவும் சொல்றதில்லை… அதை விடு நீ என்னைக்கு சென்னை போறக்கா?”
தாய் தந்தையின் நிலையை நினைத்து வருந்தியவள் “நாளைக்கு ஜாயின் பண்ணனும்டா இரண்டு வாரம் தான் லீவு கொடுத்து இருந்தாங்க… ஆனா இப்படி அம்மா இருக்கும் போது எப்படி போறதுன்னு தான் தெரியல”!!
“நானும் அதையே தான்கா நினைச்சிட்டே இருந்தேன்… இப்போ என்ன பண்ண போற?”
“நான் இங்கயே வேலைக்கு டிரை பண்ணலாம்னு இருக்கேன்…. என் ஆபிசோட பிராஞ்ச் ஒன்னு இங்க இருக்கு… அதே போஸ்ட் கிடைக்குமான்னு தெரியல இருந்தாலும் கேட்டு பாக்கனும்” என்றாள் கிடைக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன்.
சட்டென எகிறி கீழே குதித்தவன் “சூப்பர் கா.. கேட்டு பாறேன் நம்ம லக் கிடைச்சாலும் கிடைச்சிடும்” என்றான் சந்தோஷத்துடன்.
அவன் ஆர்வத்தில் இதழ் விரிய சிரித்தவள் “இங்க இருந்து எல்லாரையும் சமாளிக்கலாம் விஷ்ணு… ஆனா அம்மாவையும் பெரியம்மாவையும் சமாளிக்க முடியல டா… அம்மா என்னை பார்த்தா அழறாங்க… பெரியம்மா என்னை பார்த்தா குத்தி குத்தி காட்டுறாங்க இதுக்கே எங்கேயாவது போயிடலாம்மன்னு இருக்கு…” என்றவளுக்கு விரிந்த புன்னகை கசந்த முறுவலனலு.
“நீ ஏன் கா அவங்களுக்கெல்லாம் பயந்து இந்த ஊரை விட்டுபோகனும்னு நினைக்கிற… இது நம்ம ஊரு இந்த வீட்டுல அப்பாவுக்கும் பங்கு இருக்கு நாம அவர் வாரிசுங்க நமக்கு இருக்க உரிமையில்லையா? அந்த அம்மாவை பேச விட்டு பார்த்துனால தான் இப்படி பேசுறாங்க என்னை விட்டு பாருங்க ஒரு வழியாக்கிடுறேன் அவங்கள” என்றான் ஆத்திரமும் கோவமுமாக…
“டேய் பேசமா சாப்பிடு அவங்க வாயில நீ எல்லாம் விழ வேண்டாம் நான் விழுந்து சாகுறது போதும்” என்று அவனை அதட்டி அடக்கி வைத்தாள்.
அக்கா தம்பி இருவரும் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் பரசு… அவருக்கு மகள் பேசியது இதயத்தை வாள் கொண்டு அறுத்தது போன்ற ஒரு வேதனையை கொடுத்தது… ‘என்னால தானேம்மா உன் வாழ்க்கை பழாகிடுச்சி உன்னை நம்பாம அவசர அவசரமா என் அண்ணி பேச்சை கேட்டு அந்த பரதேசிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து பெரிய தப்பு பண்ணிட்டேம்மா… உன் வாழ்க்கையே ஒன்னுமிலலாம ஆக்கிட்டேனே’ என்று கசந்த முகத்தோடு இருக்கையில் அமர்ந்தார்…
அங்கே ஒருவன் காதலில் திளைத்திருக்க., இங்கே அதன் சுவடு கூட தெரியாமல் தன் பிரச்சனைகளில் உழன்று கொண்டிருந்தாள் அவனின் நாயகி…