அவ(ன்)ள் 17

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா…  முகுந்தா…

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா… ‘

“வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா…

பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா…”

என்று டிவியில் பாடல் ஓட முனுமுனுப்பாய் பாடிக்கொண்டிருந்த விஷ்ணு பிருந்தாவின் அரவம் கேட்கவும் கொஞ்சம் சத்தமாகவே கிருஷ்ணாவில் அழுத்தம் கொடுத்து பாடினான்…  

மகேஷ்வரிக்கு மாத்திரையை கொடுக்க வந்தவள் அவன் பாடலை கேட்கவும் “எருமை உனக்கு வேற பாட்டே கிடைக்கலையா?” என்று அவன் முதுகில் ஒன்றை வைத்தாள்.

“இப்போ எதுக்கு கோவப்பட்டு அடிக்கிறக்கா?…” என்று தன்  முதுகை தேய்த்து விட்டுக் கொண்டவன்  “பாட்டு நல்லா இருந்துச்சி.. கூட பாடினா தப்பா…? உனக்கு பிடிக்கலன்னா, யாருமே அந்த பாட்டு கூட பாடக்கூடாதா கா…” என்று அறியா பிள்ளைப்போல் நியாயம் கேட்க  

அவனை முறைத்தபடியே “உன்னை சொல்லி தப்பு இல்லடா… உன் சகவாச தோசம் அப்படி… முதல்ல சேனலை மாத்து… வரவர உன் சேட்டை  ரொம்ப அதிகமாகுது …” என்று அவனை அதட்டியவள் காலை விந்தியபடி அன்னையின் அறைக்குள் நுழைந்தாள்.

“அதான் மனசுல தான் ஒன்னுமில்லையே அப்புறம் எதுக்கு உறுத்துதாம்… இது பாட்டு தானே… கிருஷ்ணான்னா அவர் மட்டும் தானா…. வேற யாருமே இல்லையா…”  என்று அவளுக்கு கேட்கும் படியே சத்தமாக முனுமுனுத்தவன் வேறு சேனலை மாற்றிட அவள் நேரமோ என்னவோ அவளை சோதிக்கவே  

“ராதை மனதில்… ராதை மனதில்… என்ன ரகசியமோ?…

கண் ரெண்டும் தந்தியடிக்க… கண்ணா வா கண்டுப்பிடிக்க…” 

என்று பாடல் ஓடிக்கொண்டிருக்க விஷ்ணுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…   

செண்பகம் பெண் கேட்டு சென்ற இரு தினங்களாக ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி அவனை நியாபகப்படுத்துவது போல ஏதேனும் ஒன்று நிகழ்ந்துக் கொண்டிருக்க  பிருந்தா நொந்து போனாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“விஷ்ணு… ஃபர்ஸ்ட் அந்த பாட்டை நிறுத்து…  இவங்க தூங்கறதா வேண்டாமா?”  என்று உள்ளிருந்து குரல் கொடுக்க இன்னும் டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தினான் விஷ்ணு…

இவர்களின் அக்கப்போரை பார்த்துக் கொண்டிருந்த மகேஷ்வரி “விடுமா அவன் பாட்டு தானே கேட்கறான்.. நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சிதான் தூங்குவேன்| என்றவர் மகளின் பால் வண்ண முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு மாத்திரையை கொடுத்து உறங்க போர்வையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் அவரை பார்க்காமலேயே “என்னம்மா ஏதாவது பேசனுமா?”… என்றாள்.

“அது… வந்து… நீ கோவப்படலன்னா ஒன்னு  சொல்லனும்” என்றார் சற்று தயக்கமாகவே… 

“அப்போ ஏதோ கோவப்படுறா மாதிரி சொல்லப் போறிங்க… ம்…‌பரவாயில்லை  சொல்லுங்க” என்றாள் அங்கிருக்கும் வேலையை பார்த்தபடியே

“முதல்ல இப்படி வந்து உட்காரு பிருந்தா… நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளு…” என்று மகளை தன் பக்கத்தில் இருத்திக் கொண்ட மகேஷ்வரி.  

“எனக்கு பயமா இருக்கு டா… அன்னைக்கு வெளியே நடந்தத கேள்விப்பட்டலிருந்து எனக்கு மனசே சரியில்லை… உன்னை இப்படியே விடவும் என்னால முடியலை… உன்னை வற்புறுத்தறதா நினைக்காத பிருந்தா… அந்த கிருஷ்ணா தம்பிக்கு என்னம்மா குறை ஏன் வேண்டான்னு பிடிவாதமா இருக்க…” என்றார் தவிப்பாக 

பதிலே கூறாது கைவிரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தவளை பார்த்தவர் “சொல்லு பிருந்தா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போற.. முதல் வாழ்க்கை தப்பா போனா இன்னொரு வாழ்க்கை அமைச்சிக்க கூடாதுன்னு யார் சொன்னா… சொல்லு பிருந்தா… யார் சொன்னா…?” என்றார் சற்று காட்டமாகவே ,  

இப்போதும் அமைதியே வடிவாக அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க அவருக்கு ஆத்திரம் கோவம் இயலாமை என அனைத்தும் ஒன்று சேர “என்னை எதுக்கு டி காப்பத்தி உயிரோட  உட்கார வைச்சிருக்க… இந்த கொடுமை எல்லாம் பாக்கவா… அப்படியே விட்டுருந்தா இதை எல்லாம் பாக்காம போய் சேர்ந்திருப்பேன்ல…‌ நீயும்‌ உன் இஷ்டப்படி இருந்திருக்கலாம்”. என்றார் கண்ணீரை முந்தானையில் துடைத்தபடி அவருக்கு மகளின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்குகிறதே என்ற இயலாமையில் கண்ணீர் வந்தது.

அன்னையின் அழுகை அவளை சற்று இளக வைக்க “அம்மா என்னம்மா பேசுறிங்க‌?…” என்றாள் ஆதங்கமாக… 

“வேற எப்படி உன்கிட்ட பேசுறதுன்னு தெரியல பிருந்தா… உனக்குன்னு ஒரு கோட்டை போட்டுக்கிட்டு நீயும் வெளியே வர மாட்டுற‌, யாரையும்‌ உள்ள விடவும் மாட்டுற… என்ன தான்‌டி உன்‌ பிரச்சனை? அந்த தம்பிய பிடிக்கலையா சொல்லு வேற மாப்பிள்ளைய பாக்கலாம்” என்றவரது குரல் கரகரப்பாக வெளிப்பட்டது…

வேறு மாப்பிள்ளை என்று மகேஷ்வரி கூறியதை கேட்டதும் அதை ஒப்பாதவளாய் இதை பத்தி அப்புறம் யோசிக்கலாம்மா எதையும் நினைக்காம படுங்க… நானும்

தூங்கப்போறேன்‌‌” என்று எதிலிருந்தோ தப்பிப்பது போல அறையிலிருந்து வெளியேறியவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

வெளியே இருந்த விஷ்ணுவிற்கும் தந்தைக்கும் தாங்கள் பேசியது கேட்டிருக்கிறது என்பது அவர்கள்‌ முகபாவத்திலேயே தெரிய அவர்களை‌ கண்டுக்கொள்ளாது அறைக்குள்‌ சென்று கதவை அடைத்தாள். 

யோசனையுடன் மெத்தையில் அமர்ந்தவளுக்கு இரண்டு‌ மூன்று மெசேஜ்கள் தொடர்ந்து வரவும் போனை‌ எடுத்து பார்க்க கிருஷ்ணா  தான் அனுப்பி இருந்தான்.  “திங்க் ஆப் டெவில்… அவரை பத்தி யோசிக்கும் போதே கால் பண்றாரு… நாம நினைக்குறது கூட அவருக்கு கேக்குதா” என்று யோசனையில் இருந்தவள் அதை படிக்காமலையே எரிச்சலில் போனை தூக்கி பெட்டில் வீசி எறிந்தாள்.

மேலும் தொடர்ந்து இரண்டு மெசேஜ்கள் வந்ததற்கான ஒலி எழுப்பவும் கோபத்துடன் அதை திறந்து பார்த்தவளுக்கு அவன் அழைப்பைக் கண்டு மயக்கம் வராத குறைதான்…

“ஹாய் ஏஞ்சல் சாப்பிட்டியா இன்னைக்கு நாள் எப்படி போச்சி‌ உன் கால் வலி ஓகே வா?… இப்போ நடக்க முடியுதா?… என்று வரிசையாக குறுந்தகவல்கள் வந்திருந்தது. அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது கோவமாக டைப் செய்தாள்…

“ஏஞ்சலா… ? என்ன நினைச்சி இப்படி பேசிறிங்க”.

“ம் நீ தான் ஏஞ்சல்… உன்னை நினைச்சிதான் பேசிக்கிட்டு இருக்கேன்…”

“ரொம்ப கடுப்பாக்குறிங்க கிருஷ்ணா…”

“அப்படியா!!..  நீ கடுப்பாகுற அளவுக்கு என்ன என்ன பண்ணேன்?…” என்று யோசிக்கும்‌ இமோஜியை அனுப்பிட

“ஒன்னுமே தெரியாது உங்களுக்கு சரி… என்று நக்கலாக ஒரு இதழை சுழிக்கும் இமோஜியை அனுப்பி  இப்போ எதுக்கு மேசேஜ் பண்ணிங்க” என்றாள் வெடுக்கென 

“நான் மேல அனுப்பிச்சது எதையும் நீ பாக்கலையா?…  சரி ‌அப்போ படிக்கலைன்னா என்ன இப்போ‌ படி மறுபடி அனுப்புறேன்‌… நீ சாப்பிட்டியா…? உன் கால் வலி எப்படி இருக்கு??… இன்னைக்கு உன் நாள் எப்படி‌ போச்சி..? என்னை பத்தி ஒரு முறையாவது யோசிச்சியா?…” என்று அவன் சொல்லாததையும் சேர்த்து மறுபடி அனுப்பினான்

“அய்யோ தெரியாம கேட்டுட்டேன்‌” என்று கோவமுகத்தை அனுப்பி “சாப்பிட்டேன்…, கால் வலி பரவாயில்லை… , நாள் தானே உங்க திட்டப்படியே ரொம்ப அமோகமா போச்சி… ஆமா உங்கள பத்தி நான் ஏன் நினைக்கனும்… “என்று குத்தலாக அனுப்பியவள்  “நான் படுக்க போறேன் பை” என்று‌ அவனை கத்தரிப்பதை போன்று மெசேஜை அனுப்பினாள். 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதுக்குள்ள வா?” என்று ஆச்சர்ய இமோஜியை.அனுப்பிட

“இப்போ‌ என்ன‌ பண்ணனும்னு சொல்றிங்க” என்று கோவத்தில் பதிலை அனுப்பினாள். 

“கொஞ்ச நேரம் நம்மை பத்தி பேசலாமே!!”

“நம்மை பத்தி பேச என்ன இருக்கு கிருஷ்ணா”?…

“ஏன் இல்ல?.. நாம பேச ஆயிரம் விஷயம் இருக்கு பிருந்தா…”

“அப்படி இருக்குற மாதிரி  எனக்கு  எதுவும் தெரியல… ” என்று அனுப்பியவள் போனை சுவிச் ஆப் செய்துவிட்டு படுத்தாள்…

பெட்டில் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு  தூக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது… மனம் முழுவதும் குழப்பம் சூழ்ந்திருக்க  என்ன செய்வது என புரியாது சுழலும் பேனையே வெறித்தாள்.

….

“அம்மா சாப்பிடுங்க”

“நான் சாப்பிட்டுக்குறேன் பிருந்தா…நீ வச்சிட்டு போய், உன் வேலைய பாரு” என்றார் மகேஷ்வரி உணவினை கையில் தொடாமல்…

” சாப்பிடுங்கம்மா நேத்தும் நான் வைச்சிட்டு போன சாப்பாடு அப்படியே இருந்தது… மாத்திரை போடுறிங்க சாப்பிடும்னு தெரியாதா உங்களுக்கு” என்று பிருந்தா அவரை கடிந்துக் கொள்ள

“வாழனும்னு ஆசை இருக்கவங்களுக்கு தானே சாப்பாடு மாத்திரை மருந்து எல்லாம் தேவைப்படும்… எனக்கு தான் அந்த ஆசையே இல்லையே… நான் எதுக்கு இதையெல்லாம் எடுத்துக்கனும்” என்று எங்கோ பார்த்து கூறிட

கோபத்துடன் எழுந்தவள் “இப்போ என்ன உண்ணா விரதம் இருக்கிங்களா…?  நீங்க மட்டும் தானா இல்ல குடும்பமே இருக்கா…”  என்று நக்கலாக கேட்டவள் “உங்க எல்லாருக்கும்  நீங்க நினைச்சது நடக்கனும்… அதுக்கு என்னவேணா பண்ணுவிங்க…  இப்போ என்ன நான் இந்த கல்யாணம் பண்ணிக்கனும்… அவ்வளவு தானே… சரி நான் இந்த கல்யாணத்துக்கு  சம்மதிக்கிறேன் போதுமா …” என்றதும் மகேஷ்வரி ஆனந்த அதிர்வுடன் கண்களில் நீர் திரள மகளையே பார்க்க.

  “உங்க இஷ்டப்படியே என்னவேணா செய்யுங்க… நான் எதுவும் கேட்க மாட்டேன்…” என்றவள் தாயின் கைகளில் உணவினை திணித்து விட்டு |சாப்பிடுங்க இதுல மாத்திரை இருக்கு போடுங்க” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேற,

“பிருந்தா…” என்மேல கோவம் என்று மகேஷ்வரி பேச ஆரம்பிக்க “எனக்கு யார்மேலையும் கோவமில்லை  முழு மனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்… அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க” என்று கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள்…

….

ஐந்துஆறு நாட்களாக அவளை காண வேண்டும் என்று தவம் கிடக்கும் கிருஷ்ணாவிற்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.. அவள்  சம்மதம் சொல்லிய நாளிலிருந்து போன் செய்தாலும் எடுக்காமல் மெசேஜிலும் பதில் தராமல் அவனை சுற்றலில் விட்டுக் கொண்டிருந்தாள்.

“டேய் மாச்சன் உன் அக்கா பண்ற சேட்டைய தாங்க முடியலடா சாமி… போனை எடுக்க சொல்லு” என்று கிருஷ்ணா விஷ்ணுவிடம்  புலம்பிய புலம்பலில் அக்காவிடம் வந்து நின்றான் விஷ்ணு.

“என்ன??”

“வெளியே ஒரு வாக் போலாமாக்கா…?”

“இப்போவா?!!?”

“மணி ஒன்பது தானேக்கா… பரவாயில்லை வா… காலுக்கு ஒரு எக்ஸசைஸா இருக்கும்ல…” என்று அவளை வெளியே அழைத்து வந்திருந்தான்.

“அக்கா அங்க பாரு ஐஸ்கிரீம் பார்லர் வாக்கா’  

“வேணா டா..”

“அட வாக்கா… உனக்கு ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும்ல…” என்று அவளை வற்புறுத்தி வாங்கி தர இருவரும் சாப்பிட்டபடியே நடந்தனர்.

“சரி என்னமோ பேசனும்னு டிரை பண்ணி கூப்பிட்டு வந்து இருக்க ம் சொல்லு நீ என்ன பேசப்போற?” என்றாள் ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டே

“நானா??… நான்…நான்… என்ன பேசப்போறேன்… சும்மா ஒரு வாக் அவ்வளவு தான்” என்றான் திக்கி திணறி…

உதட்டை சுழித்து அவனை நக்கலாக பார்த்தவள் |பார்த்தாலே தெரியுது சார்….” என்றபடி ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தவளிடம்  

“சரிக்கா நேரடியாவே கேக்குறேன்… உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் தானே… ஹேண்ட்சம்மை உனக்கு பிடிச்சி தானே அவரை கட்டிக்க சரின்னு சொன்ன?” என்றான் பட்டென

“இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா?| என்றாள் கோபமாக…

“ப்ளீஸ்கா கோவப்படாத… உனக்கு வேண்ம்ணா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்… நீ கஷ்டபட்டு சரின்னு சொல்லனும்னு அவசியம் இல்லை…”  என்றான் சற்று வறுத்தமாகவே…

“ஓ… சார் அவ்வளவு தூரம் யோசிக்கிறிங்களோ….!!  நீங்க தானே சார் உங்க ஹேண்டசம்முக்காக என்கிட்டயே சொம்பு தூக்கிட்டு வந்திங்க”  என்றவள்  நக்கலாக அவனைப் பார்க்க 

“ஆமா… சொன்னேன் அவரை கட்டிக்கிட்டா  நீ சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சி சொன்னேன்… அதுல என்ன தப்பு இருக்கு…  எங்ககிட்ட இவ்வளவு பேசுற நீ, ஏன்கா அவங்க அம்மா சம்மந்தம் பேசும்போது அமைதியா இருந்தா?…  அப்போவே வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல!?!…” என்றான் அவனும் அதே பாணியில்.

“அது… அது…” என்று தடுமாறியவள் “அவங்க அம்மாவை இன்சல்ட்  பண்றா மாதிரி எப்படிடா அங்க  சொல்ல முடியும்?” என்றாள் தடுமாறியபடி…

“அவங்க இன்சல்ட் ஆனா உனக்கென்னக்கா அவங்க யாரோ தானே!!”…

“அவங்க கிருஷ்ணாவோட அம்மா டா” என்றவள் தம்பியின் முயற்சி புரிய “இப்போ என்ன கிருஷ்ணாவை பிடிக்கும்னு என் வாயிலிருந்து வரவைக்கனும் நினைக்கிற அவ்வளவு  தானே… ஆமா டா எனக்கு அவரை பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்… அதான் வேண்டாம்னு சொல்றேன்” என்றாள் சற்று அழுத்தமாக

“அக்கா… “

“என்னால இந்த கால்யாணம்… காதலுக்குள்ள எல்லாம் போக முடியலடா… மனசு ரொம்ப காயப்பட்டு இருக்கு… ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நாம தப்பா இவளை தேர்ந்தெடுத்துட்டோம்னு அவர் நினைச்சாலே  எங்க வாழ்க்கை  அங்க தோத்து  போயிடும்… “

நான் நல்லா இருந்தாலும், என்னோட முதல் வாழ்க்கை ஏதோ ஒரு மூலையில இருந்து என்னை பார்த்து கைகொட்டி சிரிக்கிற மாதிரியே  இதுவரை ஒரு பீல் இருக்கு டா… அவரை கட்டிக்க நான் சம்மதம்னு சொன்னதும், கிருஷ்ணாவுக்கு நான் துரோகம் செய்றேன்னு மனசுல ஒரு குரல் சொல்லிக்கிட்டே இருக்கு விஷ்ணு…” என்றாள்  அவனுடன் நடந்தபடி

இதுவரையிலும் இவர்களின் உரையாடலை கிருஷ்ணாவிற்கு அலைபேசியின் வழியிலாக  தெரியப்படுத்திய விஷ்ணு  பேன்ட்  பாக்கெட்டில் இருந்த போனை அவளுக்கு தெரியாமல் அணைத்தவன் “நீ ஹேண்சமை தப்பா நினைக்கிறியாக்கா?” என்றான்.

“தெரியலடா…பாக்கலாம் யாரையும் என்னால இதுல நம்ப முடியாது…” என்றவள் முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டு  “சரி நீங்க  என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு எப்போ சார் வளந்திங்க?!…  அதுவும் அவரை ஹேண்சம் ஹேண்சம்னு சொல்லிக்கிட்டே இருக்கிங்க?”…. என்று அவனை கிண்டலடிக்க

அக்கா இயல்பாய் இருக்க முயற்சிக்கிறாள் என்பதை அறிந்தவன் “இப்போதான் கா… அவரு உனக்கு நிச்சயம் பண்ண மாப்ள… அதுக்கு முன்னாடியே நாங்க அவரை சைட் அடிச்சி பேரும் வைச்சிட்டோம்ல”  என்றான் காலரை தூக்கி விட்டு

“அடிங்க… நக்கலா காட்டுற…” என்ற அவனை அடிக்க துரத்த பர்வதத்தின் வீட்டில் ஏதோ பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு பிருந்தா சட்டென நின்றாள்.

“என்னக்கா நின்னுட்ட?…”

“டேய் உள்ள என்னவோ உருளுற மாதிரி சத்தம் கேக்குது டா…”

“அந்த வீட்டுல என்ன உருண்டா நமக்கென்ன??   நீ வாக்கா…”

“டேய்… அவங்க யாரும் அங்க இல்லடா…  சாய்ந்தரம் பெரியப்பா வந்து அவங்க பொண்ணு வீட்டுக்கு போறதா சொல்லிட்டு போனாரு… ஒருவேளை அவங்க இல்லன்றதனால திருடன் வந்து இருப்பானோ?…” என்று அவள்  சந்தேகமாக விஷ்ணுவிடம் கூறிட

“என்னது திருடனா?” என்றான் விஷ்ணு அதிர்ச்சியாக

“ஆமா இங்க வந்த திருடன் அப்படியே நம்ம வீட்டுக்குள் வந்துட்டா??…  என்ன பண்றது? அவங்க வேற இல்ல விஷ்ணு” என்று அவனை திகிலடைய செய்து  கலவரமாக அவனை பார்த்தாள்.

சிறிதுநேர யோசனைக்கு பின் விஷ்ணு  “சரிக்கா  நீ மெதுவா பக்கத்து விட்டுல குரலை கொடுத்து எழுப்பு… நான் கதவை உடைக்கிறேன்.. இரெண்டு மூனு பேர் இருந்தா அவங்களை  சமாளிச்சிடலாம்” என்றான் யோசனையுடன்.

அவன் சொன்னதை போல செய்ய கதவை உடைத்து உள்ளே சென்ற விஷ்ணு கை நரம்பை அறுத்த நிலையில் இரத்த வெள்ளமாக கிடந்த தினேஷை காணவும் அதிர்ச்சியில் உறைந்து விட  சூழ்நிலையின் தாக்கத்திலிருந்து  சட்டென சுதாரித்த பிருந்தா “தினேஷ்… தினேஷ்…” என்று அவன் கன்னங்களை தட்டி மயக்கம் தெளிவிக்க முயன்றாள்.

அதிக இரத்த போக்கினால் மயக்க நிலைக்கு சென்றவனுக்கு உணர்வு திரும்பாமல் போக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவனை இருவரும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

“இது அக்ஸிடென்ட் மாதிரி தெரியல… சூசைட் அட்டம்ட்டு மாதிரி தெரியுது” என்று தங்களுக்குள் பேசிக்கொண்ட மருத்துவர்கள் வெளியே நின்றிருந்த பிருந்தாவிடம் “ஹெவி பிளட் லாஸ் ஆகியிருக்கு…எங்க கிட்ட இந்த பிளட் குருப் ஸ்டாக் இல்ல..

 பிளட் பாங்குல இன்பார்ம் பண்ணி இருக்கோம்… ஆனா பேஷண்டுக்கு உடனே பிளட் தேவைப்படுது… உங்கள்ள  யாருக்காவது A1 B+ பிளட் குருப் இருக்கா?” என்று வினவியதும்

“என்னோடது அந்த குருப் தான் டாக்டர் எடுத்துக்கோங்க” என்று தம்பியிடம் கூட கேட்காது முன்னால் வந்தாள் பிருந்தா…

“அக்கா….” என்று அவளை அழைக்க

“விஷ்ணு… இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லை… பெரியப்பாவுக்கு கால் பண்ணி  தினேஷை பத்தி இன்பார்ம் பண்ணிடு…  நான் இப்போ  வந்துடுறேன்… என்று தம்பியிடம் கூறியவள் டாக்டருடன் சென்றிட வாசனுக்கு அழைத்து விஷயத்தை கூறிய விஷ்ணு வெளியில் இருந்த சேரில் சோர்ந்து அமர்ந்தான்.

மருத்துவ மனையிலிருந்து  வீட்டிற்கு செல்ல வெளியே வந்த கிருஷ்ணா ரிசப்ஷனில் சோர்ந்த நிலையில் இருந்த விஷ்ணுவை பார்த்தவுடன் வேகமாக அவன் அருகில் சென்றான் 

“விஷ்ணு…  விஷ்ணு…. நீயும் பிருந்தாவும் வீட்டுக்கு தானே போயிட்டு இருந்திங்க… இங்க எப்படா வந்த… அவ எங்க… அவ அவளுக்கு ஒன்னும் இல்லையே  நீயேன் இப்படி உட்கார்ந்து இருக்க?”… என்று கிருஷ்ணா  சற்று பதட்டதுடன் கேட்கவும்

கிருஷ்ணாவின் பதட்டத்தை பார்த்த விஷ்ணு “அய்யோ மாம்ஸ் அவங்களுக்கு ஒன்னுமில்லை… பெரியப்பா பையன் தினேஷுக்காக தான் ஹாஸ்பிடல் வந்தோம்… அக்காவும் வந்துருக்கா” என்றான். அறிவிப்பாக

“அப்படியா பிருந்தாவும் வந்துருக்காளா?…  எங்கடா?…  என்று சுற்றிலும் பார்வையால் தேட

 “எங்க அக்காவுக்கு முன்னாடி உங்கள சைட் அடிச்சி ஹேண்ட்சம்னு பேரை வைச்சி லவ்ஸ் விட்டது நானு… அதைவிட்டுட்டு எங்க அக்காவை காணும்னு பின்னாடியே வந்து தேடுறிங்க… உங்க கல்யாணத்துக்கு அப்புறம் விட்டோட குடிவந்துடுவேன் பாத்துக்குங்க…” என்று அவனை நக்கலும் நய்யாண்டியுமாக மிரட்டிட

அதில் வாய்விட்டு நகைத்த கிருஷ்ணா… “போதும் டா புலம்பாத ஏற்கனவே உன்னையும் என்னையும் வைச்சி உங்க அக்காவே ஓட்டிட்டு இருக்காங்கடா… கொஞ்சம் அடக்கியே வை… உன் லவ்வ” என்று அவனை வாரியவன்

“பிருந்தா எங்கடா?” என்றான் ஒரு டாக்டராக

“அவங்க பிளெட் கொடுக்க போயிருக்காங்க மாம்ஸ்…”

“ஓ  அந்த அளவுக்கு பிளட் லாசா.. இப்போ எப்படி இருக்காங்க”.. என்று அவன் உடல் நிலையை விசாரிக்க

“ஆமா மாம்ஸ் நிறைய பிளட் போயிடுச்சி… இன்னும் எப்படி இருக்கான்னு தெரியல… ஆனா அக்கா அவனுக்கு பிளட் கொடுக்கறதுல எனக்கு விருப்பமே இல்ல… சொல்ல சொல்ல கேட்காம போயிருக்காங்க” என்றான் வேண்டா வெறுப்பாக

“பச் ” என்று உச்சிக்கொட்டி அவன் தோளில் கையை போட்டுக்கொண்ட கிருஷ்ணா அவனுடன் நடந்தபடியே “கெட்டவனோ நல்லவனோ ரத்தம் கொடுக்கறதை தடுக்க கூடாது விஷ்ணு .. அஸ் எ டாக்டரா நான் பிருந்தாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்…  அவ எடுத்த முடிவு சரியான முடிவு…” என்று அவனை சமாதானம் செய்ய

“அதானே உங்க ஆளை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே!” என்று அவனை வம்பிழுத்த விஷ்ணு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான் 

சிரித்தபடியே  அவன் முதுகில் தட்டி கொடுத்த கிருஷ்ணா பிருந்தா இருக்கும் அறை எண்ணை விசாரித்து அங்கு சென்றான்.

கண்களை மூடி படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் இமை திறக்க எதிரே நின்றிருந்தவனை  பார்த்ததும் மூச்சடைத்ததை போல உணர்ந்தாள். உள்ளுக்குள் ஏதோ பிசைந்து இறுக்க கண்களை மூடிக்கொள்ளளாமா என்று யோசித்தவளின் அருகே வந்து நின்றவன்.  அவளை குறுகுறுப்பாய் பார்க்க

அப்படியே இங்கிருந்து மாயாமாகிவிட மாட்டோமா என்று நினைத்தவளின் எண்ணங்களை படித்தவன் போல

“மேடம் ரொம்ப பிஸி போல.. போன் பண்ணா எடுக்க மாட்டுறிங்க!! மேசேஜ் பண்ணா பாக்கமாட்டுறிங்க!! நேர்ல வரலாம்னா எங்கேயாது மாயமா மறைஞ்சிடுவிங்களோன்னு பயப்பட வேண்டியதா இருக்கு…!!”  என்று வரிசையாய் அவளை போட்டு தாக்கிட பேயைக் கண்டது போல் அரண்டு போயிருந்தாள் பிருந்தா.

அவள் முகத்துக்கு வெகு அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவன் கிசுகிசுப்பான குரலில்  “கண்ணு ரெண்டும் நல்லா கோலி குண்டு மாதிரி பெருசாகுறதுலேயே தெரியுது என்னை இப்போ நீ எதிர்பார்க்கலைன்னு… என்ன செய்யறது எல்லாம் விதி…” என்று நெற்றியில் கை வைத்து இழுத்து காட்டினான்.

இதயம் வெளியே எகிறி குதித்துவிடும் அளவிற்கு படபடப்புடன் இருக்க வார்த்தை என்பதையே மறந்தவளாய் ஆணியடித்தார் போல அவனையே பார்த்திருந்தாள். 

“நீ தான் என்கிட்ட பேச மாட்ட… எதையோ மனசில் வச்சுகிட்டு உன்னை நீயே குழப்பிக்குற.. எனக்கு அந்த குழப்பம்லாம் இல்லைம்மா… நான் எப்போதுமே உன்னை லவ்ஸ் விட்டுகிட்டு தான் இருப்பேன்… 

ரெஸ்ட் எடு டேக் கேர் டாடா…  என்னவன் அவள் காது மடலில் உசியபடி ஐ லவ் யூ ஏஞ்சல் ” என கூலாக கூறி கண்ணடித்து பறக்கும் ஒரு இதழ் முத்தத்தை அவளை நோக்கி வீசிவிட்டு வெளியேறினான்.

அவளுக்குத்தான் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.. வந்தது முதல் அவன் தான் பேசினான்…  ஆனால் அவளுக்கு வியர்த்து, தாகமெடுத்தது. எழ முடியாது படுத்திருந்தவள் மனம் அவன் பறக்கும் இதழ் முத்ததில் வேகமெடுத்து ஓடும் ரயிலை போல தடதடத்துக்  ஓடிக்கொண்டிருந்தது.

‘இவர் என்ன நான் மனசுல நினைக்குறது எல்லாம் பொசுக்கு.. பொசுக்குன்னு… சொல்றாரு!! காதலை சொல்ற வரையும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு நல்லா தானே இருந்தாரு… காதலை சொன்ன பிறகு அவரோட பார்வையும் பேச்சும் டீ ஏஜ்  பசங்களை போலவே இருக்கே… கடவுளே இது நல்லதுக்கா… கெட்டதுக்கா… எப்படி  இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து தப்புவது” என்று சிந்தித்தபடியே அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தாள் பிருந்தா.

தன் அக்கா இருக்கும் அறைக்கு வெளியே அங்கும் இங்கும் நடந்தபடி கைகளை பிசைந்து கொண்டிருந்த விஷ்ணுவின் தோளை ஒரு கரம் பற்ற யார் என திரும்பி பார்த்தவன் அங்கு கிரியை காணவும் ” ஹாய் சார் ” என முழுவதும் தெளியாத முகத்தோடு அரை குறை சிரிப்போடு கூறினான்.

விஷ்ணுவை யோசனையாக பார்த்த கிரி ” ஆமாம் உங்க அக்கா ரத்தம் தானேடா, கொடுத்துட்டு இருக்காங்க, நீ என்னமோ அவங்கள பிரசவத்துக்கு அட்மிட் பண்ணி இருக்குற ரேஞ்சுக்கு டென்ஷனா குறுக்க மறுக்க நடந்துட்டு இருக்க பழைய படம் நிறைய பார்ப்பியோ?!?!”  என்று கிரி வழக்கமான தன் காமெடியில் அவனை வாரவும்

அறையிலிருந்து வெளியே வந்த கிருஷ்ணா ” என்னடா… என் மச்சானை வம்பு பண்ணுறியா ? ” என்றான் கிரியிடம் மிரட்டலாக

“வந்துட்டார் டா மச்சானுக்கு சப்போர்ட் பண்ணுற வள்ளல்…” என கலாய்த்த படியே கிரி நடந்ததை கூறினான்

உள்ளே என்ன நடந்ததோ என்ற தவிப்புடன் இருந்த விஷ்ணு “ஹலோ மாம்ஸ் அவரை விடுங்க அக்கா என்ன சொன்னா ?… உங்கள பாத்து கத்தினாளா??… என்ன ரியாக்ஷன் கொடுத்தா??? ” என பரபரப்போடு கேட்டதும்,.

விஷ்ணுவின் பேச்சில் சட்டென திரும்பிய கிரி “ஏதே என்னை நீயும் மதிக்க மாட்டியா ? ஊகூம் எல்லாம் உன் மச்சான் கொடுக்குற இடம் ” என புலம்ப அவனை கண்டுக்கெள்ளாது

கிருஷ்ணா நடந்ததை விஷ்ணுவிடம் கூறிட அவனது கரம் பற்றி குலுக்கி அவனை அணைத்து கொண்டவன் 

“சூப்பர் மாம்ஸ்.. சூப்பர் அடி தூள்… நீங்க செம்ம ஸ்மார்ட் ஐ லவ் யூ ஹேண்ட்சம் ” என்று சந்தோஷத்தில் குதுகலித்த விஷ்ணுவை  விசித்திரமாக பார்த்த கிரி

 ” டேய் டேய் இங்கே என்ன டா நடக்குது… இவன் என்ன உனக்கு ஐ லவ் யூ சொல்றான்.. ஹேண்ட்சம்ங்குறான்….  நீ அக்காவை தானே லவ் பண்ண ?…  இவன் தங்கச்சியா இருந்தா கூட சரி ஒரு அழகான மச்சினி கிடைச்சிருப்பா ஆனா  இவனை வச்சு நீ …. ” என விஷ்ணுவை ஏற இறங்க பார்த்தவன் ” என்னமோ பண்ணு…. மச்சானோ , மச்சினியோ  அக்கா தம்பி ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணிட்ட” என்றான் கிரி கேலியாக

கிரியின் கேலிப்பேச்சில் முதலில் விழித்த விஷ்ணு பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட கிரியின் முதுகில் ஒன்றை வைத்த கிருஷ்ணா “டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியா…? டாக்டருக்கு படிச்சி இன்னும் மூளை வளராமலேயே இருக்குடா…!! முதல்ல வீட்டுக்கு கிளம்பு இல்ல யாத்ராவுக்கு நானே போன் பண்ணி இங்க நீ வெட்டியா நின்னு ஒரு லேடி டாக்டர் கூட கடலை போடுறன்னு போட்டுக் கொடுத்துடுவேன்” என்று மிரட்டல் விட்டான்

“அய்யோ தெய்வமே  இதோ கிளம்பிட்டே இருக்கேன்… இனி மாமனாச்சி மச்சானாச்சி எக்கேடோ கெட்டு ஒழிங்க கட்டி புடிங்க கன்னத்துல முத்தம் கூட கொடுங்க டா யார் கேக்க போறா!!” என்று அவர்களை கலாய்த்தபடியே  கிருஷ்ணாவின் அடியிலிருந்து தப்பிய கிரி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் வெளியேறினான்.