அவ(ன்)ள் 14

கோபம் எனும் ஆழிப்பேரலையில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்த பிருந்தா , மூச்சை சீராக இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தி வேலையில் ஈடுபட முயன்றாள்..

கிருஷ்ணா தன் காதலை சொல்லி ஒரு வாரம் கடந்திருந்தது…   அவன் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள். இன்னுமே அவன் கூறிய வார்த்தைகளை அவளால் ஜிரணிக்க முடியவில்லை… கிருஷ்ணா போன் செய்தாலும் எடுக்காமல் அவனை தவிர்த்தாள்.. நான் பிரெண்டா தானே பழகினேன்.. நானும் அவனுக்கு அஞ்சலி மாதிரி தானே!! என்கிட்ட எப்படி கல்யாணம் பண்ணிக்க சொல்லி  கேக்கலாம்… என்று அவனை வறு சட்டியில் மட்டும் தான் போடவில்லை மற்றபடி வார்த்தைகளால் வறுத்துக் கொண்டிருந்தாள். 

அன்று கிருஷ்ணா காதலை சொல்லிய தினத்தில் நடந்தது கண் முன் விரிந்தது. அவன் கூறிய வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் உறைந்தவள் இருக்கும் இடம் உணர்ந்து “என்ன சொன்னிங்க?? புரியல!?!”  என்றாள் தன்னை தெளிவித்துக் கொள்ள

“ஓ…‌ புரியலையா!!…  சரி இப்போ தெளிவாகவே கேக்குறேன்… என்னை கல்யாணம் பண்ணிக்க‌ உனக்கு சம்மதமா?” என நிறுத்தி நிதானமாக கேட்டவன் சற்றும் படபடப்பின்றி அவளை பார்த்தான் …

கோபத்தின் உச்சியில் இருந்தவள் கண்களை இறுக்க மூடி முயன்று தன்னை கட்டுபடுத்தி “சாரி கிருஷ்ணா… இதை உங்க கிட்ட‌ இருந்து  நான்‌ எதிர்ப்பார்க்கல!” என்று காட்டமாக உரைத்தவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்… இருந்திருந்தால் அவன் மீது என்னென்ன பறந்திருக்குமோ  அதற்காகவே அங்கிருந்து சென்று விட்டாள்.

இப்போதும் அதை நினைக்க நினைக்க கோபமாய் வந்தது சே… “ஒரு வேலைய கூட உருப்படியை செய்ய முடியல…”. என்று நொந்தவளை யாரோ பார்க்க வந்திருப்பதாக வாட்ச்மேன் உரைத்து சென்றிருக்க ‘யாராக இருக்கும்‌’ என்று எண்ணியபடி ரிசப்ஷனை நோக்கி சென்றாள்.

அங்கு கிருஷ்ணாவை  கண்டதும் பிருந்தாவின் இதயம் பல மடங்கு வேகமாக துடிக்க  ஆரம்பித்து விட்டது. ‘ரொம்ப கூலாக இருக்காரு… லவ்வையும் சொல்லிட்டு எவ்வளவு தைரியம் இருந்தா வேலை செய்ற இடத்துக்கே வந்து நிப்பாரு! ரொம்ப தான்‌ ஓவரா போயிட்டு இருக்காரு…!’ என அவள் மனம் கொந்தளித்தது. 

“ஹேய் இதான் உங்க ஆபிசா… செமையா இருக்கு மா…” என்று சுற்றி பார்த்து கூறிக்கொண்டே வந்தவன் அவள் கோபத்தில் இருப்பதைக் கண்டு “ஓகே…ஓகே… பயங்கர கோபத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்… ஒரு வாரமா‌ போனை‌ எடுக்கல அதான்‌ என்னன்னு  பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…”  என்றான்.

அலுவலகத்தில் வைத்து அவனை திட்டவும் முடியாது சாதரணமாக பேசவும் முடியாது  நிதானத்தை இழுத்து பிடித்தவள் பல்லை கடித்தபடி “வாங்க” என்று கூறி கேண்டினை நோக்கி நடந்தாள். 

“இப்போ எதுக்கு இங்க வந்திங்க?” என்றவள் உதடுகள் கோவத்தில் துடித்தது.

“உன்னை பாக்கத்தான்…. ஆமா  நீ ஏன் போனை அட்டன் பண்ணல?” என்றான் எதுவுமே நடவாதது போல

அழுத்தமாக அவனை பார்த்தவள் “எப்படி இவ்வளவு கூலா எதுவுமே நடக்காத மாதிரி பேசுறிங்க  கிருஷ்ணா…? நீங்க என்ன விதத்தில அன்னைக்கு என்னை கேட்டிங்க?? உங்கிட்ட எப்படி‌ என்னால சாதரணமாக பேச முடியும்!?” என்றாள் காரமாக

“என்னைக்கு… என்ன கேட்டேன்?… என்றான் புரியாமல் 

அவன் பதிலில் ஆழ்ந்து மூச்செடுத்து தன் நிலையை சீராக்கியவள்  “விளையாடதிங்க கிருஷ்ணா… ரெஸ்டாரன்ட்ல வைச்சி என்னை என்ன கேட்டிங்கன்னு ஞாபகம் இல்லையா உங்களுக்கு?” என்று பற்களை கடித்தாள்.

“ஹேய் கூல்.. கூல் பிருந்தா..  எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறமா?…” என்று அவள் அருகில் வர “அங்கயே இருங்க… நான் கேட்டதுக்கு பதில் வேணும்” என்றாள் தீர்கமான பார்வையுடன்

தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு நின்றபடி “நான் உன்னை கேட்ட விஷயம் உனக்கு புரிஞ்சிருந்தது தானே பிருந்தா… அதை உன்கிட்ட எதுக்கு கேட்பாங்க…?” என்றான் இலகுவாகவே அவன் பதிலும் நின்ற தோரணையும் அவளை மேலும் கடுப்பாக்கியது. 

” நீங்களும் எல்லார் போலவும் பழகினதும் என்ன ஏதுன்னு என்னை பத்தி எதுவும் தெரியாமலேயே லவ்வை சொல்லிட்டிங்கல்ல… நீங்களும் ஒரு சராசரி ஆம்பளைதான்னு ப்ரு பண்ணிட்டிங்க கிருஷ்ணா… ஒரு

பொண்ணு சிரிச்சி பேசினா இப்படி தான் பேச தோனும் இல்லையா…??”   என்றாள் அவனை குற்றம் சாட்டும் பார்வையுடன் ‘இப்பவாவது கோவப்படு கிருஷ்ணா… சிரிச்சி கூலா பேசி என்னை வெறுப்பாக்காத’ என்று மனதில் அவனையே அவன்  கரித்துக் கொட்டினாள்.

அவள் பேச பேச மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவளையே இறுக்கமாக பாரத்திருந்தான் கிருஷ்ணா. அவள் எதிர்பார்த்தது போலவே அவள் கூறிய வார்த்தைகள் அவனை சீண்டித்தான் பார்த்தது.

கோவத்திலும் பதட்டத்திலும் உதடுகள் துடிக்க மூக்கு நுனி சிவந்து கண்களில் நீர் இப்பவோ அப்போவோ என விழ காத்திருந்தது அவளுக்கு.

அப்போதும் நிதானத்தை இழக்காத கிருஷ்ணா, “இப்போ என்ன ஆச்சின்னு இவ்வளோ உணர்ச்சிவசப்படுற பிருந்தா… இது நார்மலா எல்லோருக்கும் வர காதல் தானே… எனக்கு உன்னை பார்த்ததும் வந்தது,  கேட்டேன்… இதுல என்ன தப்பு இருக்கு…  உனக்கு இஷ்டமா ஒகே சொல்லு.. இல்லையா, சரி சொல்ல கூட வேணா… ஆனா நீ ஏன் இவ்வளவு ஆக்வேர்டா நடந்துக்குற?” என்று அவளின் கரம் பற்றினான்.

அவன் கையை தட்டி விட்டவள் “தொடாதிங்க” என்று அவனை தூர தள்ளிவிட்டு “நான் யார் தெரியுமா?  என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரியுமா…? முதல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி அது தெரியுமா உங்களுக்கு?…” என்று கேட்டபடியே கண்ணீர் விட அவள் முன்னே நின்றிருந்தவன் “தெரியும்” என்ற ஒற்றை வார்த்தை கொண்டு அவளை அதிர்வடைய வைத்திருந்தான்.

அழுகையில் கரைந்தவள் அதிர்வுடன் அவன் முகம் பார்த்தாள்.

“எனக்கு எல்லாம் தெரியும் பிருந்தா… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்… எனக்கு உன்னை பிடிச்சி இருந்தது பிருந்தா… உன் லைப் தெரியும் முன்னாடியே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்… அது தெரிஞ்ச போது எனக்கு அது பெருசா தெரியல…  இப்போ கூட உன்னை கம்பல் பண்ணல, உனக்கு என்ன தோணுதோ அதை செய்… உன்னை வற்புறுத்த மாட்டேன்… டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… எப்பவும் அதே கிருஷ்ணா வா தான் இருப்பேன்” என்றவன் என் பேச்சு இத்துடன் முடிந்தது என்று அங்கிருந்து கிளம்பி விட்டான்.

போகும் அவனையே‌ விச்சித்திரமாய் பார்த்தாள்… இப்போதும் அவன் மேல் கோபப்பட முடிகிறதே தவிர வெறுக்க முடியவில்லை… இந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை… அவனை சேர்க்கவும் முடியாது விலக்கவும் முடியாது  தவித்துப் போனாள்.

……

கிருஷ்ணா “அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும்  “சொல்லு கிருஷ்ணா?” என்றார் நாதன்.

“சொல்றேன் பா… அம்மாவும் வரட்டுமே” என்றிட “அதோ அவளே வந்துட்டா என்ன விஷயம் சொல்லும் பா” என்றார் 

“அப்பா… அம்மா…‌உங்களுக்கு‌ நான்‌ சொல்ற‌ விஷயம்  ஷாக்காதான் இருக்கும்” என்று கிருஷ்ணா பீடிகையுடன் ஆரம்பித்தான் 

என்ன சொல்ல போகிறானோ என்று செண்பகம் நாதனை கலவரமாக பார்க்க மனைவியை கண்மூடி அமைதி படுத்தினார் நாதன்…

“என்னோட கல்யாண விஷயத்துல நீங்க எவ்வளவு ஆசையா இருக்கிங்கன்னு எனக்கு தெரியும்மா… இருந்தும் உங்க மனசை உடைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க…

“நீங்க எத்தனை பொண்ணுங்களை காமிச்சாலும்‌ என் பதில் நோ தான்… காரணம் என் மனசுல ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கா…” என்றதும் இருக்கையை விட்டு எழுந்த செண்பகம்.

“நினைச்சேன் இப்படித்தான் ஏதாவது வில்லங்கம் இருக்கும்னு… போதும் கிருஷ்ணா இதுக்கு மேல எதுவும் என்னால் கேக்க முடியாது..”. என்று அங்கிருந்து செல்லவிருந்தவரை  “கொஞ்சம் பொறுமையா இரு செண்பா… அவன் என்ன சொல்றான்னு முதல்ல கேட்கலாம்… அப்புறம் நம்ம அபிப்பிராயம் சொல்லலாம்” என்று நாதன் அமைதிப்படுத்தி உட்கார சொல்ல முகத்தை தூக்கியபடி அமர்ந்தார் செண்பகம். 

தாயின் கோவம் அவன் எதிர்ப்பார்த்ததே ஆனால் முழு விஷயமும் தெரிந்தால் இதை எப்படி  எடுத்துக் கொள்வாரோ என்று மறுகியவன் அவர் முன் மண்டியிட்டு அம்மா என்று அவர் கைகளை பற்றி முகத்தில் வைத்துக் கெண்டான்.

முகத்தை திருப்பிக்கொண்டாலும் “மா… ப்ளீஸ் உங்க ஆசையை உடைச்சிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க…” என்றவன் “நான் ஆசைப்பட்டதும் நடக்குமான்னு தெரியல!”.. என்றான் எங்கோ பார்த்தபடி

இப்போது அதிர்வாக செண்பகம் மகனை பார்க்க “அவ என் காதலை ஏத்துக்கலம்மா” என்றான் வறுத்ததுடன்.

செண்பகமோ “உனக்கென்னடா குறை… உன்னை ஏன் அந்த பொண்ணு வேண்டான்னு சொல்றா?…” என்றார் ஆதங்கத்துடன் 

மகன் காதலித்து விட்டானே என்ற கோவத்தை காட்டிலும் அந்த பெண் தன் மகனை வேண்டாம் என்று கூறிவிட்டாளே என்ற ஆதங்கம் அந்த கோவத்தை மழுக்கடித்திருந்தது.

இதை நீங்க எப்படி எடுத்துக்குவிங்கன்னு தெரியலம்மா… ஆனா சொல்ல வேண்டிய காட்டயத்துல இருக்கேன்… பிருந்தா கல்யாணம் ஆகி மூனு மாசத்துல விவாகரத்து ஆனவ…| என்று கூறியதும் அதிர்ச்சியில் மகனை பார்த்தார். நாதனுக்கும் இது அதிர்ச்சியே இருந்தும் மகனின் மனதில் என்ன இருக்கிறது என அறிய நினைத்தார்.

“கிருஷ்ணா நீ என்ன சொல்றன்னு உனக்கு புரியுதா இன்னொருத்தனுக்கு பொண்டிட்டியா இருந்தவளை கட்டிக்க நினைக்கற” என்றார் செண்பகம் ஆற்றமையுடன்.

“மா ப்ளீஸ் அவ வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு கொஞ்சம் கேளுங்கமா… அவ நல்லா வாழ வேண்டிய பொண்ணுமா சுத்தி இருந்தவங்க செய்த முட்டாள் தனத்தால இப்போ இந்த நிலமையில இருக்கா… அவளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு இந்த கல்யாணத்தை பண்ணனும்னு சொல்லலமா….  என் வாழ்க்கையே அவ வந்தாதான் நல்லா இருக்கும்னு நினைக்கறதால சொல்றேன்….  

அப்புறம் உங்க டிஷிசனை சொல்லுங்க” என்றான் மனதாங்களுடன். 

மகன் இவ்வளவு சொல்லவும் “செண்பா கொஞ்சம் அமைதியா இரு… அவன் என்ன சொல்றான்னு கேட்கலாம்… கிருஷ்ணா எப்பவும் தப்பான முடிவை எடுக்க மாட்டான்…” என்றார் நாதன் மகன் மேல் கொண்ட நம்பிக்கையில். நெகிழ்ச்சியுடன் தந்தையை பார்க்க சொல் என்பது போல் தலை அசைக்க பிருந்தாவைப் பற்றி முழுவதும் கூறியிருந்தான்.

அவளை பற்றி அறிந்த  இருவருக்குமே மணம் கணத்தது… நாதன் மகனை அணைத்துக்கொண்டு “உன்னை நெனச்சி நான் பெருமை  படுறேன் கிருஷ்ணா… என் புள்ள ஒரு நல்ல டாக்டர் மட்டும் இல்ல… நல்ல மனுஷனாவும் இருக்கான்…” என்று தன் சம்மதத்தை மறைமுகமாக தெரிவித்துவிட  முகம் தெளியாமல் இருந்தார் செண்பகம்.

“அம்மா” என்று கிருஷ்ணா செண்பகத்தின் அருகே அமர  அவனை ஏறெடுத்து பார்த்தவர் “எனக்கு அந்த பொண்ணை நெனச்சி கஷ்டமா இருக்கு கிருஷ்ணா… மனசை பிசையுது… ஆனா கல்யாணம்னு நினைக்கும் போது கொஞ்சம நெருடலா இருக்கு…

நான் அந்தகாலத்து  மனுஷிடா… எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு… என்னால சட்டுன்னு உங்க அப்பா மாதிரி ஏத்துக்க முடியல… கொஞ்சம் அவகாசம் வேணும் காலப்போக்குல நானே என்னை மாத்திக்கேறேன் டா” என்று வறுத்தத்துடன் கூறிட

“அவளை புரிஞ்சிகிட்டிங்களேம்மா அதுவே போதும்!!. என தாயின் மாடி சாய்ந்திட “கவலைப்படாத கிருஷ்ணா உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை தான் உனக்கு அமையும்” என்றார் நாதன் அவன் தலைகலைத்து 

“ஹோ உங்க அப்பா சொல்லிட்டா போதுமா… நான் பொண்ணை பாக்க வேண்டாமா? முதல்ல  அந்த பொண்ணை நான் பாக்கனும்… அப்புறம் தான் எல்லாம்”  என்று செண்பகம் உரிமைக்கொடி தூக்க

“சரி சரி உங்கள சீக்கிரமே கூட்டிட்டு போறேன் மா” என்றவன் ஒரு பிரச்சனை தீர்ந்த நிம்மதியில் அறைக்கு சென்றான்.