அத்தியாயம் 4

நிஷா ஆதவனுடன் வீடு வந்து சேர்ந்த மித்திரன் வரும் வழியே  தன் வீட்டினர் அனைவரையும் வீட்டில் காத்திருக்க சொல்லி இருந்தான்…

அவர்கள் மூவரும் வீட்டினுள் நுழைய அங்கே அவர்களின் மொத்த குடும்பமும் வரவேற்பறையில் இவர்களுக்காக காத்திருந்தது.

மித்திரன் திருமணத்தைப் பற்றி யமுக்கியமான விஷயத்தை பேச வேண்டும் எனக் கூறி அனைவரையும் வரச் சொல்லி இருந்தான் . அதனால் அங்கே இருந்த அனைவரும் திருமணத்தை நிறுத்த சொல்லி விடுவானோ என்ற பதட்டத்துடன் பார்த்திருக்க அவர்களின் எண்ணத்தை மெய்ப்பிப்பது போல் அனைவரையும் பார்த்தபடி வந்தவன் ” எனக்கும் நிஷாவுக்கும் நடக்க இருக்க  மேரேஜை கேன்சல் பண்ணுங்க.. ” என்று கூற அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்…

நிஷாவின் தாய் விஜயலட்சுமி மித்திரனின் தாய் தெய்வநாயகி இருவரும் மித்திரனிடம் அழுதபடி வந்தனர்.. தெய்வநாயகி ” ஏன் மித்ரா இப்படி திடீருனு எங்க தலைல கல்ல போடுற மாதிரி கல்யாணத்த நிறுத்த  சொல்ற எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு இன்னும் நாலு நாள்ல கல்யாணம்னு இருக்கப்ப நீ இப்படி பண்ணலாமா நிஷா நிலைமைய கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா… ” என்று கண்களில் கண்ணீருடன் கேட்க விஜய லட்சுமியும் ” என் பொண்ணு வாழ்க்கை போச்சே இப்படி கல்யாண வரை வந்து நம்ப வைத்து ஏமாத்துறீங்களே இதெல்லாம் நியாயமா..” என்று மித்திரனை பார்த்து கேட்டவர் தன் தந்தையிடம் திரும்பி ” என்ன பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்க உங்க பேர் என்ன சொல்றான்னு கேட்டீங்களா இல்லையா பேசாமல் நின்று இருந்தா என்ன அர்த்தம் பேசுங்கப்பா என் பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றானு  கேளுங்க..  முடிவு பண்ண கல்யாணத்தை எல்லாம் நிறுத்த முடியாது என் பொண்ணோட கல்யாணம் குறிச்ச முகூர்த்தத்தில நடந்தே ஆகணும் இல்லைனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்… ”  என்று கூறியவர் பக்கத்தில் இருந்த அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்…

அதில் திகைத்து அனைவரும் கதவைத் தட்ட விஜயலட்சுமி திறக்கவில்லை அவர் ஏதும் விபரீதமான முடிவை எடுத்து விட்டாரோ என்று பயந்த மற்றவர்கள் விஜயலட்சுமி கதவை திறக்கச் சொல்லி கெஞ்சி கொண்டிருந்தனர் இப்படி ஆகும் என எதிர்பாராத நிஷாவும் ஆதவனும் தங்களால் தான் எல்லாம் என்று குற்ற உணர்ச்சியுடன் அழுதபடி கதவைத் தட்டிக் கொண்டிருக்க இது எதுவும் தன்னை பாதிக்காதது போல் நின்று இருந்த  மித்திரன் பொறுமையாக அந்த அறைக்கு அருகே வந்தவன் அங்கிருந்து அனைவரையும் விலகச் சொன்னான்..  ” அத்த நீங்க என்ன டிராமா பண்ணாலும் என் முடிவுல இருந்து எந்த மாற்றமும் இல்லை உங்க எனர்ஜி வேஸ்ட் பண்ணாம கதவை திறந்து வெளியே வரலாம்… ” என்று கூற அவனின் இந்த பதிலை எதிர்பாராத விஜயலட்சுமி கதவை திறந்து வெளியே வந்தார்.. 

” உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா இப்படி பேசுற அத்தை என்ற பாசமே இல்ல ..  யார் எக்கேடு  கெட்டு போன உனக்கு என்ன உனக்கு உன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம் எப்படி நீ மத்தவங்க சந்தோஷத்தை நினைப்ப ஏன்னா நீ மத்தவங்க சந்தோஷத்தை கொன்னு போனவளோட வளர்ப்புல அதான் கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லாம பேசுற .. ” என்ற தன் போக்கில் புலம்பி கொண்டிருந்த விஜயலட்சுமியின் பேச்சில் மித்ரனின் கோபம் எல்லையை கடந்தது  ” போதும் நிப்பாட்டுங்க நானும் அத்தைன்னு பாத்துட்டு இருந்தா என்ன ஓவரா பேசிட்டே போறீங்களா அவங்க அப்படி எத்தனை பேரோட சந்தோசத்தை கெடுத்துட்டாங்க நீங்க பாத்தீங்களா சும்மா வாய் இருக்குன்னு பேசக்கூடாது அவங்களுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை ஏற்பாடு பண்ணது உங்க தப்பு அதனால அவங்க போனாங்க..  அதுல எனக்கு எந்த தப்பும் தெரியல அவங்கள பத்தி எத்தன வருஷம் இன்னும் இப்படியே பேசிட்டு இருப்பீங்க கேட்டு கேட்டு அலுத்து போச்சு உங்களுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது புரியறப்ப ரொம்ப வருத்தப்படுவீங்க அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..  இப்ப இந்த கல்யாணம் நிறுத்த காரணம் எங்க அத்தை கிடையாது உங்க பொண்ணு தான்..  அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல நிஷாவும் ஆதவனும் லவ் பண்றாங்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைங்க இந்த காதலயாவது சேர்த்து வையுங்க என்று கூறியவன் தன்னறக்குச் சென்று விட்டான்..

மித்திரன் கூறி விட்டு சென்றதை கேட்ட அனைவரின் கண்களும் இப்போது நிஷாவையும் ஆதவனையும் நோக்கி இருந்தது .. அவர்கள் இருவரும் எதுவும் பேசாது தலை குனிந்து நிற்பதிலேயே அனைவரும் புரிந்து கொண்டனர்.. மித்திரனின் இந்த முடிவிற்கு காரணம் இவர்கள் தான் என்று..

” என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கிங்க ரெண்டுபேரும்.. உங்களுக்கு தெரிஞ்சு தானே இந்த கல்யாண ஏற்பாடு நடந்தது .. ” என்று அந்த வீட்டின் பெரியவரான மகேந்திரன் கேட்க  ,
”  இதை எப்டி சொல்றதுனே எங்க ரெண்டு பேருக்கும் தெரியல இத சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டீங்கன்னு நாங்க ரொம்ப பயந்தோம் என்று ஆதவன் கூற நான் ரொம்ப ட்ரை பண்ணோம் தாத்தா ஆனாலும் முடியல உங்களிடம் சொல்ற அளவு தைரியம் எங்க ரெண்டு பேருக்குமே இல்ல அதனாலதான் மித்திரன் அத்தான் கிட்ட ஹெல்ப் கேட்டோம் என்று நிஷாவும் கூற அவளின் கன்னத்தில் மறைந்திருந்தார் நிஷாவின் தந்தை உனக்கு எல்லாம் வெக்கமா இல்ல அண்ணனுக்கு நிச்சயம் பண்ணி இருக்கப்ப தம்பியை   காதலிக்கிறேன்னு வந்து நிக்கிறியே நீ எல்லாம் என் பொண்ணு தானா உன்ன பாக்கவே வெறுப்பா இருக்கு தயவு செஞ்சு கண்ணு முன்னாடி நிக்காத எங்கேயாவது போயிடு என்ற ஆத்திரத்தில் கத்த விடுப்பா பிரபா மதங்களே ஏற்கனவே பயந்து போய் இருக்குது நீ என் கத்துற இப்ப என்ன ரெண்டு பேரும் ஆசைப்பட்டாங்க சேர்த்து வைத்து விடுவோம் விடுங்க குறிச்ச முகூர்த்தத்தில் இவங்க கல்யாணம் நடக்கட்டும் மித்ரனுக்கு வேற பொண்ணு பொண்ணு பாப்போம் என்று மகேந்திரன் கூற எதுக்கு வேற பொண்ண பார்க்கணும் அதான் இருக்காளே என் பேத்தி என்று விசாலாட்சி தன் கணவனின் அருகே வந்தார்

என்ன விசாலம் பேசுற காவியா ரொம்ப சின்ன பொண்ணு மித்திரனுக்கு  வேற பொண்ணு பாப்போம் பேசாம இரு நான் ஒன்னும் காவியாவை பத்தி சொல்லலைங்க நான் பவித்ரா ஓட பொண்ணு மதிய பத்தி பேசுறேன் என்று விசாலாட்சி கூறியது தான் தாமதம் தெய்வநாயகி என்ன பேசிட்டு இருக்கீங்க அத்தை அந்த ஓடிப்போனவளோட பொண்ணு எனக்கு மருமகளா வராதா அது நான் உயிரோட இருக்க வரைக்கும் நடக்காது நான் நடக்க விட மாட்டேன் என்ற ஆத்திரத்தில் கத்த பிரபாகரனும்  விஜயலட்சுமியும்  நாயகிக்குஆதரவாக இருந்தார்கள். ஆனால்  அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இதே எண்ணம்தான் இந்த திருமணத்தின் மூலமாக பவித்ர லட்சுமியும் அவளின் குடும்பமும் தங்களுடன் சேர இதை ஒரு நல்ல வாய்ப்பாகவே கருதினர்..

அம்மா சொல்றது சரிதான் பா என குணசேகரன் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்… மகேந்திரனுக்கு கூட இதே எண்ணம் தான்.. அவரும் இத்தனை வருடங்களில் தன் தவறை உணர்ந்து இருந்தார். என்ன விசலாட்சி மாதிரி உடனே மகளுடன் பேச அவருக்கு வரவில்லை .. அவரை அப்போது புரிந்துகொள்ளாது தண்டித்து விட்டு இப்போது உறவாட தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நினைத்து தன்னுள் வருந்தி கொண்டிருந்தவருக்கு இது நல்ல வாய்ப்பாக அமைய அவரும் அந்த எண்ணத்திற்கு சம்மதித்தார்..

நாயகி ” எல்லாரும் சுயபுத்தியோட தான்இருக்கிகளா இல்லையா .. நான் என்ன இங்க சொல்லிட்டு இருக்கேனு  நீங்க எல்லாம் என்ன  தனியா முடிவு பண்ணிட்டு இருக்கிங்க.. என் பையனுக்கு யார கல்யாணம்பண்ணி வைக்கனும்னு எனக்கு தெரியும் … அதுல நீங்க யாரும் தலையிட கூடாது .. ” என்று கூற அவரின் கணவர் குணசேகரனோ ” ஓஹோ அப்போ எனக்கும் கூட எந்த உரிமையும் இல்லைனு சொல்ல வரியா .. ” என்று நக்கல் குரலில் கேட்க அந்த கேள்வியில் திகைத்து போய் நின்றார் நாயகி..

” நான் அப்படி சொல்லலைங்க உங்களுக்கு  உரிமை இல்லைனு நான் எப்போ சொன்னேன்.. நீங்க பண்ண நினைக்கிற விஷயம் எனக்கு பிடிக்கல .. “என கூறிக்கொண்டிருக்க தனது உடைமைகள் அடங்கிய பெட்டியுடன் தயாராகி வந்தான்  மித்திரன் ..

மித்திரன்” எனக்கு அர்ஜென்ட் ஒர்க் இருக்கு நான் கிளம்புறேன் .. கல்யாணத்தன்னைக்கு கண்டிப்பா வந்துடுறேன் .. ” என்று கூறிவிட்டு கிளம்ப பார்க்க  , அவனை தடுத்த மகேந்திரன் ” மித்திரா நில்லுபா நாங்க எல்லாம் இங்கே  உன் கல்யாண விஷயத்தை பத்தி தான் பேசிட்டு இருக்கோம் .. நீ பாட்டுக்கு யாரோ மாதிரி கிளம்பி நிக்கிற .. ” என்று கூறினார்..

” வாட் என் கல்யாணத்தை பத்தி பேச இன்னும் என்ன இருக்கு .. நான் தான் சொல்லிட்டேனே என் முடிவ  ..  நிஷாவுக்கும் ஆதவனுக்கும் கல்யாணம்பண்ணி வைங்கனு .. “

” அவுங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டோம் .. “

” ரொம்ப சந்தோஷம்  இப்பாவது நல்ல முடிவா எடுக்குறிங்களே வாழ்த்துக்கள் ..”  என்று கூறியவனை பார்த்த அவனின்  தந்தை குணசேகரன் ” மித்திரன் கொஞ்ச நேரம் பொறுமையா நின்னு தாத்தா என்ன சொல்ல வராறுனு கேளு .. நீ பாட்டுக்கு இடைல புகுந்து பேசிட்டு இருக்க என்று சத்தம் போட ” ஆஹான் சரி நீங்க எல்லாம் பேசுங்க நான் பொறுமையா கேக்குறேன்.. ” என்ற மித்திரன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்…