அடங்காத அதிகாரா 29

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கஅதிகாரம் 29

தன் அண்ணனின் வரவுக்காக தூங்கச் செல்லாமல் மாடியில் இருக்கும் வரவேற்பறையில் காத்திருந்தாள் நேத்ரா.

என்ன தான் அலைபேசியில் பேசியபோது அவன் திட்டமாகவே பதில் தந்திருந்தாலும் நேரில் அவன் முகம் பார்த்து பேசி விடுவது நல்லது என்று அவனுக்காக காத்திருந்தாள்.

நீரூபன் மிகவும் சோர்வுடன் மாடிப்படிகள் ஏறி வந்து கொண்டிருந்தான் அன்று நாகரத்தினம் உறவினர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்க அவனை இரவு உணவு அளிப்பார் அங்கே யாரும் இல்லை.

நேராக சென்று உறக்கத்தை தழுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நீருபனின் பார்வை மாடியில் இருந்த தங்கை மீது விழவே நேராக அவளிடம் செல்ல எண்ணினான். ஆனால் காலை முதல் அங்கும் இங்கும் அலைந்ததால் ஏற்பட்ட கசகசப்பில் குளித்து உடைமாற்றி விட்டு வருவோம் என்று நேரில் தன் அறைக்கு சென்று விட்டான்.

குளித்து இரவு உடைக்கு மாறியவன், நேராக தங்கையிடம் வந்து அமர்ந்தான்.

அவள் அண்ணனை கண்டதும் வேகமாக எழுந்து கொண்டாள். “உட்காரு டா. ஏன் இன்னும் தூங்காம உட்கார்ந்து இருக்க?” என்று அவளை அழைத்து அருகே அமர்ந்தான்.

“ஒன்னும் இல்லண்ணா நீங்க என்ன தான் போன்ல சொன்னாலும் மனசு கேட்கல” என்று தயங்கினாள்.

“நீ ஏன் டா திடீர்னு இப்படி மாறிட்ட. எவ்வளவு போல்டான பொண்ணு நீ! ஏன் இப்படி ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு டென்ஷன் ஆகுற?”

“டென்ஷன் ஆகலண்ணா பெண்களுக்கு எப்பவுமே ஒரு உணர்வு இருக்கும். அந்த உணர்வு வந்து நம்மள சரியான வழியில் கொண்டு போகும். எனக்கு சமீபமா எப்படி இருக்குன்னா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வசிய கல்யாணம் பண்ணிட்டு தனியா போயிடனும்ன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு .அதுக்கு காரணம் என்ன தான் நீ இந்த வீட்ல எனக்கு பாதுகாப்பா இருந்தாலும் யாரோ என்ன பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி ஒரு உணர்வு .சங்கடமான ஒரு குறுகுறுப்பு இருந்துட்டே இருந்தது. இப்ப அது இல்ல ஆனா எனக்கு என்னன்னா நீயும் வசியும் சண்டை போட்டாலோ இல்ல உங்களுக்குள்ள ஒரு மனக்கசப்பு வந்துட்டாலோ வாழ்க்கை முழுக்க நம்ம ஒரு சந்தோஷமான ஒரு மனநிலை இருக்க முடியாது. அதனாலதான் நான் அந்த மாதிரி பயப்படுறேன். மத்தபடி என்னோட ஆபீஸ் வொர்க்லயோ இல்ல என்னோட டிஷிஷன் மேக்கிங்லயோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ, வசீன்னு வரும்போது என்னோட சாஃப்ட்டர் சைடு தான் வெளியில தெரியுது.என்ன பண்றது? ஐ காண்ட் ஹெல்ப் இட்.”என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டு கூறினாள் .

“வசி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எப்போ அவனை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னியோ அப்பவே அவனைப் பத்தி முழுசா விசாரிச்சிட்டேன். அவன் மேல முழு நம்பிக்கை வந்ததுனாலதான் இன்னைக்கு வரைக்கும் உங்க ரெண்டு பேரையும் தனியா சந்திச்சு பழகுறதுல நான் எந்த ஒரு விதிமுறை வைக்காம உங்க போக்கிலேயே விட்டேன். ஏன்னா உங்க ரெண்டு பேர் மேலயுமே எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. நீங்க எந்த எல்லையும் தாண்ட மாட்டீங்க, பண்பாவும் மரியாதையாகவும் நடந்துக்குவீங்க அப்படின்னு உங்க மேல எனக்கு இருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் அடுத்தடுத்து ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் உங்களையும் சேர்த்து வச்சு முடிவு எடுக்க ஆரம்பிச்சேன். இந்த கம்பெனியை முதல்ல உன் கிட்ட தான் கொடுப்பதாக இருந்தேன். ஆனா என்னமோ வசிக்கிட்ட கொடுத்தா நல்லா இருக்கும்னு மனசுக்கு தோணவும் அவன்கிட்ட கொடுத்தேன். அப்பயும் உங்களோட உறவு முறையை நடுவில் வச்சு நான் இதை கொடுக்கல. அவனோட திறமை மேல எனக்கு நம்பிக்கை இருந்ததுனால தான் கொடுத்தேன். இதை நீயும் புரிஞ்சுக்கோ. அவன் ரொம்ப மெச்சூர்டான பையன். நீ கண்டதையும் போட்டு யோசிச்சு உன் மனச கஷ்டப்படுத்திக்காத. உனக்கோ வசிக்கோ எதுனாலும் அண்ணா நான் இருக்கேன்” என்று அவளை தட்டிக் கொடுத்தான்.

அவனுக்கு பேசியதை கேட்டு நெகிழ்ந்தவளாக “உன் மடியில கொஞ்சம் படுத்துக்கவா?” என்று கேட்டாள்.

“என்ன தூக்கம் வரலையா?* என்று சிரித்தபடி அவள் கன்னத்தில் தட்டினான்.

“இல்ல உன் மடியில் படுத்து தூங்கி ரொம்ப நாளாச்சு அதான் கேட்டேன்.”

வாகாக மடியில் தலையணை வைத்து சோபாவின் ஒரு ஓரத்தில் அமர, அவன் மடியில் இருந்த தலையணையில் தலை வைத்து கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள் நேத்ரா.

மென்மையாக அவ்வளவு தலையை வருடிக் கொண்டிருந்தவனுக்கு சிறுவயதில் தன்னிடம் இதே போல ஒவ்வொரு நாளும் மடியில் படுத்துறங்கும் தன் சின்னத் தங்கையின் அழகான முகம் நினைவில் ஆடியது.

பருவ மங்கையான பின் அவள் அதிகம் அவன் மடியில் உறங்கியதில்லை. இன்று நெகிழ்வின் காரணமாக அவள் படுத்து உறங்குவதை அவனும் மனநிறைவுடன் கண்டபடி அமர்ந்திருந்தான்.

அரை மணி நேரத்தில் அவள் நன்றாக உறங்கி விட அவளது அறையில் அவளை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவன் தன்னுடைய அறைக்கு சென்று உறங்க ஆயத்தமானான்.

கைபேசியில் சில குறுஞ்செய்திகள் வந்திருப்பதை அப்பொழுது தான் கவனித்தான்.

அதிலிருந்த பூமிகாவின் குறுஞ்செய்தியை கண்டவுடன் முகத்தில் புன்னகை அரும்ப அதற்கு பதில் அளித்தான்.

மறுநாள் அவளுக்கு ஒரு நடிகரின் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு செல்ல வேண்டி இருப்பதால் காலையில் அவனை சந்திக்க வர முடியாது என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

அதனை பார்த்தவன் அந்த நடிகரின் வீட்டு முகவரியை தனக்கு அனுப்பி விட்டுச் செல்லுமாறும் அங்கிருந்து திரும்பும் போது மறக்காமல் அவனுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றும் அன்புடன் கட்டளையிட்டு விட்டு உறக்கத்தை தழுவியிருந்தான்.


காலையில் வேகமாக கிளம்பி தன் அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தான் நிரூபன்.

ஆனந்த் அவனது கைபேசியில் அழைத்து காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிடவே முழு சூட்டை அணிந்து கொள்ளாமல் சாதாரண கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு ஒரு எளிமையுடன் தயாராகி கீழே வந்தான்.

காலை உணவை முடித்துக் கொண்டு தன்னுடைய ஜீப்பை எடுத்து சாலையில் செலுத்திக் கொண்டிருந்தவன் எண்ணமெல்லாம் இன்னும் பூமிகாவிடமிருந்து பதில் வராமல் இருப்பதே இருந்தது. நேரத்தை கண்டவன் அன்று பண்ணைக்குச் செல்லும் வேலையை தள்ளி வைத்துவிட்டு நேராக பூமிகாவின் வீட்டை நோக்கி தன் ஜிப்பை செலுத்தினான்.

வீட்டின் வெளி வாயிலை கடந்து அவன் உள்ளே செல்லவதற்கும் பூமிகா தயாராகி தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“மாமா என்ன திடீர்னு வீட்டுக்கு வந்துட்டீங்க?” என்று ஆச்சரியத்துடனும் இன்ப அதிர்ச்சியுடனும் வினவினாள்.

“ஏன் நான் உங்க வீட்டுக்கு வர கூடாதா?” என்ற கேள்வியாக கேட்டபடி அங்கிருந்து தூணில் சாய்ந்து நின்றான்.

அவளுடைய உடையின் அழகை அவனுடைய கண்கள் ரசித்து கொண்டிருக்க, அவளோ அவனது சிகை அழகை ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

இருவரும் மௌனமாக சில நிமிடங்களை கடத்தி விட,

“சொல்லுங்க மாமா என்ன விஷயம்?” என்றாள் கொஞ்சலாக.

“நீ ஏன் இன்னைக்கு காலையில என்ன பாக்க வராம கிளம்புற?” என்று அவளைக் கண்டு புருவம் உயர்த்தினான்.

அவளோ அவன் கண்களை பார்க்காமல் தரையை பார்த்தபடி “அதான் சொன்னேன் அந்த ஸ்டார் ஆக்டர் ரித்விக் வர்மா வீட்ல இன்னிக்கி பங்க்ஷன். ஒரு குரூப் டான்ஸ் ஆர்கனைஸ் பண்ணி இருக்காங்க. எங்க டான்ஸ் கம்பெனி தான் பெர்ஃபார்ம் பண்றாங்க. சோ அங்க போறதுக்காக தான் மாமா வர முடியல. நைட் மெசேஜ் அனுப்பி இருந்தேனே!” என்றபடி அவள் தரையை பார்த்து பேசிக் கொண்டிருக்க,

“என்னை நிமிர்ந்து பார்த்து பேசு” என்றான் அழுத்தமாக.

அவள் ஏதும் சொல்லாமல் நிமிர்ந்து அவன் கண்களை நோக்க “பங்ஷன் சாயங்காலம் நாலு மணிக்கு. காலையில போய் என்ன பண்ண போற?” என்றான் அவள் கண்ணோடு கண்ணோக்கியபடி

தவறு செய்து விட்ட குழந்தை போல திருத்திருவென்று விழித்தவள்,” சாரி மாமா நேத்து பேசும்போது இன்னிக்கு காலைல பிரஸ் மீட் இருக்கிறதா ஆனந்த் சொன்னான். சரி உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் மாமா” தயக்கத்துடன் பேசினாள்.

“பிரஸ்மீட்டுக்கும், நீ என்ன மீட் பண்றதுக்கும் என்ன பாப்பா சம்பந்தம்?” என்று அவள் தாடையில் கை வைத்து அவன் கண்களைப் பார்த்தபடி வினவினான்.

“எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா நீங்க பண்றது எல்லாம் நல்லதாகவே இருந்தாலும்..” என்று இழுத்துவிட்டு,

“நீங்க ஏன் அரசியலுக்கு வராம ஒதுங்கி இருக்கீங்க அப்படின்னு எனக்கு நல்லா தெரியும். அஞ்சனா அண்ணி காரணம்னு நீங்க நினைக்கலாம், ஆனா அவங்கள முன்னிறுத்தி நீங்க தப்பிக்கிறதா தான் என் மனசுக்கு படுது. நேத்ரா அண்ணிக்கு ராக்கேஷ் அண்ணா மேல பற்றி உள்ளுணர்வு காரணமா சில விஷயங்கள் தோன்றுதுல, அந்த மாதிரி நான் சொல்லல.

நான் முழுக்க முழுக்க ஃபேக்ட்ஸ வச்சு சொல்றேன். நீங்க அரசியலுக்கு வர்றது தான் உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே நல்லது. என்றாள் அழுத்தமாக.

“எனக்கு புரியலடி ஏன் எல்லாரும் சும்மா என்னை அரசியலுக்கு வா அரசியலுக்கு வான்னு சொல்லிட்டே இருக்கீங்க? அதான் அப்பா இருக்காரு அக்கா இருக்காங்க, இன்னும் நான் வேற வந்து என்னடி பண்ண போறேன்?” என்றான் புரியாமல்.

“உங்க அப்பா என்ன பண்ணிட்டு இருந்தாரு, உங்க அக்கா என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க, அப்படிங்கறது உங்களுக்கு ஒழுங்கா தெரிஞ்சிருச்சு அப்படின்னாலே நீங்க தானா அரசியலுக்கு வந்துருவீங்க” என்றால் எங்கோ பார்த்தபடி.

“பாப்பா என் கண்ண பாத்து சொல்லு என்ன நடக்குது? ஏன் இப்படி சொல்ற?” என்றான் மெல்லிய அழுத்தத்துடன்.

அவளோ “வசீகரன் அண்ணா இப்போ பெரிய மாமாவ ஜெயிக்க வைக்க ஒவ்வொரு விஷயமா செய்ய ஆரம்பித்து இருக்கிறார். பெரிய மாமா ஜெயிச்சாலே பின்னாடியே உங்க அக்கா வருவாங்க. உங்க அக்கா கூட சேர்ந்து உங்க அக்கா வீட்டுக்காரரும் வருவாரு. அவங்க ரெண்டு பேரும் தனித்தனியா என்னெல்லாம் செஞ்சிருக்காங்க அப்படின்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க மாமா.” என்றாள் கைகளை கட்டிக்கொண்டு.

“நான் என்ன தெரிஞ்சுக்கிறது? நீ தான் சொல்லேன்! உனக்கு தெரியுதுல, என்கிட்ட சொல்லு” என்று அவளை பிடிவாதத்துடன் அவன் உலுக்க,

அவளோ “நான் சொன்னா போட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கும். நீங்களா கண்டுபிடிக்கும்போது உங்களுக்கே அதோட சீரியஸ்னஸ் புரியும். இதுதான் மாமா, இப்படி தான் நடந்துச்சு அப்படின்னு கை காமிக்கிறதுக்கு எனக்கு ஒரு செகண்ட் ஆகாது. ஆனா அப்படி செஞ்சிட்டா நாளைக்கு அவங்க பக்கத்துல இருந்து ஒரு விளக்கம் வரும்போது, நீங்க அவசரப்பட்டுட்டோமோ அப்படின்னு நினைப்பீங்க, என் மேல வருத்தம் வருவதையோ,இல்ல என்னால ஒரு பிரச்சனை வருவதையோ நான் விரும்பல. நீங்களும் வசீகரன் அண்ணாவும் சேர்ந்து உங்க அக்கா உங்க அக்கா வீட்டுக்காரர் முக்கியமா பெரிய மாமா மூணு பேரும் இதுவரைக்கும் என்னல்லாம் செஞ்சிருக்காங்க அப்படின்றத ஒரு தரம் திருப்பி பாத்துட்டு இந்த எலக்சன் வேலையா இருந்தாலும் சரி, இல்ல நீங்க அரசியலுக்கு வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க இல்ல, அதுவா இருந்தாலும் சரி ஒரு முடிவு எடுங்க.”என்றவள்,

“எனக்கு நேரம் ஆகுது காலையில எல்லாரையும் ரிகர்சல் பாக்குறதுக்கு டான்ஸ் கிளாஸ் வர சொல்லி இருக்கேன்.நான் போகணும். போகட்டா?”என்று தலை சாய்த்து அவனிடம் வினவினாள்.

இத்தனை நேரம் அவ்வளவு அழுத்தத்துடனும் வேகத்துடனும் பேசிக் கொண்டிருந்தவர்களின் குரல் சிறு குழந்தையின் கொஞ்சலாக மாறி ஒலித்ததும் தலையை உதறிக் கொண்டவன்,

“ஏண்டா பாப்பா இப்படி பனியும் வெயிலுமா மாத்தி மாத்தி அடிக்கிற? உன்னை புரிஞ்சுக்கவே முடியல” என்று அவள் நெற்றியோடு நெற்றி மூட்டினான்.

அவளும் சிரித்தபடி “அவ்ளோ கஷ்டம் எல்லாம் இல்ல மாமா. ஈசிதான். நான் சொல்லி தரேன்” என்று சிரித்து விட்டு வெளியே கிளம்ப அவனும் அவளுடன் அங்கிருந்து கிளம்பினான்.