அடங்காத அதிகாரா 28

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 28

தன்னை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த நேத்ராவை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

பக்கத்தில் இருந்த கோப்பை அவன் மீது தூக்கி எறிந்தவள்,

“லூசா டா நீ? எதுக்கு டா அண்ணாவை அப்பா கூட கோர்த்து விட்ட?” என்று எரிச்சலுடன் வினவினாள்.

“கூல் பேபி. ஒய் டென்ஷன்?” என்று சிரித்து வைக்க அவளோ கடுப்புடன்,

“பேச்சை மாத்தாத ஒழுங்கா சொல்லு” என்று காய்ந்தாள்.

“இங்க பாரு நான் வேணும்னா உங்க அப்பா கிட்ட மாமாவும் மாட்டி விடல நான் உங்க வீட்ல இருந்து யாரையாவது கூப்பிடுங்க நான் சொன்னேன் அவர் மாமாவை கூப்பிட்டா அதுக்கு நான் எப்படி காரணமாவேன்?” என்று சிரித்தான்.

அவன் பதிலில் திருப்தி அடையாத நேத்ரா,”சும்மா புழுகாதடா. நீ சொல்லாம அப்பா ஏன் அண்ணனை கூப்பிட போறாரு. நீ என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா? அண்ணா இந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணது அப்பாவ இந்த தேர்தலில் ஜெயிக்க வைக்க தான். ஆனால் நீ அவரையே உள்ள இழுத்துட்டு இருக்க? அண்ணனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா கோபப்படுவாரு” என்று பயத்துடன் கூறினாள்.

“மாமா இந்த கம்பெனிய என் பேர்ல சும்மா தரலைன்னும் இந்த கம்பெனியோட முழு பொறுப்பையும் நான் எடுத்து பண்ணனும்னும் என்கிட்ட போன்ல பேசும் போதே சொல்லிட்டாரு. அதனால இது சம்பந்தமான முடிவுகளை நான் தாராளமா எடுக்கலாம். என்னோட மனசுக்கு சரின்னு பட்டதையும் எனக்கு எத்திக்ஸ்னு தோன்றதையும் நான் கண்டிப்பா இந்த கம்பெனி விஷயத்தில் செய்வேன்.

அந்த கட்சிக்காரர் உன்னோட அப்பா என்கிறதுக்காகவோ இல்ல அந்த கட்சியில் உங்க அக்கா இருக்கக் கூடாது அப்படின்ற பர்சனலான எந்த ஒரு தாட்டும் எனக்கு இருக்காது. புரியுதா? இல்ல உன் அண்ணன் உள்ள கொண்டு வரணும் என்றதும் என் நோக்கம் இல்லை. பட் நான் செய்யறேன் அப்படின்னா அது என்னோட மாரல் எத்திஸ்காக மட்டும்தான் இருக்கும். இது உனக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல. ஆனா இப்போ கேட்டதனால நான் சொல்றேன்.”என்று பொறுமையாகவே அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.

ஆனால் இப்பொழுதும் மெல்லிய பயத்துடன் நேத்ரா “நீ சொல்றது உனக்கு சரியா இருக்கலாம். ஆனா அண்ணனுக்கு தெரிஞ்சா கோபப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம். அண்ணாவோட சப்போர்ட் வச்சுதான் நம்ம கல்யாணம் பண்ணனும்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். நீ தேவை இல்லாம அண்ணா கூட எந்த பிரச்சனையும் பண்ணிக்காத.” என்று அவள் தங்கள் உறவைக் காக்கவும் எந்த துன்பமும் வந்து விடக்கூடாது என்ற பயத்தினாலும் பேசினாள்.

“இங்க பாரு பிசினஸ் வேற நம்மளோட ரிலேஷன்ஷிப் வேற. இந்த பிசினஸ என் பேர்ல கொடுத்துட்டாரு உன் அண்ணன். சோ நம்ம ரிலேஷன்ஷிப்புக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஒரு இடத்திலும் இந்த பிசினஸ்க்காகவோ இல்ல வேற எதுக்காகவோ நம்ம ரிலேஷன்ஷிப்பை குறுக்க வச்சு நான் எந்த பேச்சும் பேச மாட்டேன். என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும். உன் அண்ணாவுக்கும் கண்டிப்பா நான் என்ன செய்றேங்கிறது சொன்னா புரிஞ்சுக்குவாரு.தயவு செஞ்சு நீ தேவையில்லாம இதுல வந்து டென்ஷனாயிட்டு இருக்காத.” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

ஆனால் அவளோ “எதுக்கும் நான் அண்ணா கிட்ட சொல்லிடுறேன். ஏன்னா நான் நம்மளோட மேரேஜ் விஷயத்துல எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பல.” என்று சொல்லிவிட்டு தன் கைபேசியை எடுத்து நீரூபனை அழைத்தாள்.

அழைத்து நடந்ததை வேகமாக அண்ணனிடம் எடுத்துரைத்தாள் நேத்ரா.

அதை பொறுமையுடன் கேட்ட நீரூபன் “வசி ஒரு விஷயம் செய்யறான்னா யோசிச்சு தான் செய்வான். அந்த கம்பெனியை அவனை பார்த்து சொல்லிக் கொடுத்துட்டேன். அவன் அதை சரியா ஹேண்டில் பண்ணுவான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ அவனை தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ணாத.

ஒரு வேளை அந்த கம்பெனிக்கு நாளைக்கே ஏதாவது பிரச்சனை வந்தால் அதை நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன். கண்டிப்பா வசீகரனை அதுல மாட்டி விடமாட்டேன். நீ அண்ணனை இந்த விஷயத்தில் நம்பலாம்.

உங்க ரிலேஷன்ஷுக்கும் இந்த கம்பெனிய நான் வசீகரனை பாத்துக்க சொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனோட அறிவு கூர்மைய பார்த்துதான் கம்பெனிய அவன்கிட்ட கொடுத்தேனே தவிர அவன் உன்னோட காதலன் என்பதற்காக கொடுக்கல.

அது மட்டும் இல்ல அவன் இந்த விஷயத்துல என்ன உள்ள இழுத்து விடணும்ன்னு நெனச்சு இருந்தாலும் அதுல எந்த தப்பும் இல்லை. அவனை பொறுத்தவரைக்கும் இந்த எலக்சன்ல அந்த கட்சி ஜெயிக்கணும்ங்குறதுக்காக அவன் என்ன செய்யணுமோ அதை தான் செய்கிறான்.

நீ அமைதியா இரு. உங்க கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. நீங்கள் இரண்டு பேரும் எப்போ நாங்க கல்யாணம் பண்ணிக்கத் தயார் அப்படின்னு சொல்றீங்களோ நான் வீட்ல பேசி உங்களுக்கு கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்றேன். புரியுதா? நீ டென்ஷனாக இதுல ஒன்னும் இல்ல. நீ போய் உன்னோட ஆபீஸ் உள்ள வேலைய பாரு. அண்ணாவ நம்பு அதே மாதிரி வசீயயும் நம்பு” என்று கூறி விட்டான்.

அவன் பேசியதை ஸ்பீர்க்கர் போனில் கேட்டுக் கொண்டிருந்த வசீகரனின் கண்கள் பளபளத்தது.

முதல் முறை விளையாட்டாக தன்னை பேச விட்டு வேடிக்கை பார்த்த நீரூபன் அதன் பின்னான ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு அலைபேசி அழைப்புகளிலும் மனதளவில் மிகவும் நெருங்கி வந்திருந்தான்.

அவனுக்கு விளக்கினால் புரிந்து கொள்வான் என்று வசீகரன் எண்ணி இருக்கச் ‘விளக்கவே தேவையில்லை அவனை நான் நம்புகிறேன்’ என்று தனக்காக அவனுடைய தங்கையை சமாதானம் செய்ய வேண்டுமென்றால் அவன் எந்தளவு தன்னை நம்பி இருக்க வேண்டும் என்று எண்ணிய வசீகரனின் கண்களில் கண்ணீரின் ஆதிக்கம்.

நேத்ரா அலைபேசியை வைத்துவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


கோதண்டம் தனது மகன் சந்திரனிடம் நிதானமாக சூழ்நிலையை விளக்கிக் கொண்டிருந்தார்.

“இங்க பாரு இத்தனை வருஷம் வராத நீரூபன் இப்போ அவங்க அப்பா கூப்பிட்டதும் வந்திருக்கான். இதுதான் சரியான நேரம். நீ இனி எது செய்யறதா இருந்தாலும் அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய். அப்ப அவனுக்கு உன் மேல ஒரு மரியாதை வரும். அவன் உன்னையும் கூடவே வச்சுப்பான். புரியுதா? என்று கூறிக் கொண்டிருக்க,

சந்திரனும், “அப்பா ஏதோ ஐடி வேலை கம்ப்யூட்டர்ல ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் பார்த்தா போதும் அப்படின்னு நீங்க சொன்னதுனால தான் நான் அன்னைக்கு நீங்க சொன்ன அந்த கம்பெனில போயி பார்த்துட்டு வந்தேன்.  கம்பெனி நல்லா பெருசா இருக்கு. இந்த எலக்சன்ல ஜெயிக்கிறதுக்கான வேலை எல்லாம் பாத்துட்டு இருக்காங்க. எல்லாம் ஓகே.
ஆனா என்னால யாருக்கும் ஜால்ரா எல்லாம் அடிக்க முடியாது.” என்று எரிச்சலுடன் கூறினான்.

அவனது பேச்சை கேட்ட கோதண்டம் கோபத்துடன் “இங்க பாரு அரசியல்ல மானம் ரோஷம் இதெல்லாம் பார்த்தேனா மேல வர முடியாது. நீ என் பையன் என்கிற ஒரே காரணத்துக்காக அடுத்த எலக்சன்ல உனக்கு யாரும் சீட்டு தரப் போறது இல்ல. அப்படியே தந்து நீ நின்னாலும் அந்த வேலையை எடுத்து செய்ய தொண்டர்கள் எல்லாம் வேணும். அதுக்கு அவங்களுக்கு உன் மூஞ்சி கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். சொல்ற பேச்சைக் கேட்டு ஒழுங்கா போய் கட்சி வேலை எல்லாம் பாரு. இப்ப இருந்தே ஆரம்பிச்சா தான் இன்னொரு 20 வருஷத்துல நீ ஒரு அமைச்சரா வர முடியும்.”என்று மகனுக்கு அரசியல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“சரிப்பா நீங்க சொல்ற படியே வச்சுக்கிட்டாலும் இப்போ கட்சியில் கொடுத்திருக்கிறது யாரோ வசீகரன் அப்படிங்கிற அவரோட பாதை பிரைவேட் லிமிடெட்ல தான் வேலை. ஆனா நீங்க நிரூபன் கிட்ட பேச சொல்றீங்க, இதை நான் எப்படி கனெக்ட் பண்றது?” என்று புரியாமல் அவரை நோக்கினான்.

“அந்த கம்பெனிக்காரன் என்ன சொன்னாலும் ‘அண்ணே இப்படி சொல்றாங்க அப்படியே செஞ்சிடவா இல்ல வேற ஏதாச்சும் மாத்துனா நல்லா இருக்குமா? எதுக்கும் நீங்க பார்த்து சொல்லுங்க’ அப்படின்னு அவங்க கிட்ட பணிவா ஒரு தரம் கேளு நாலு தடவ நீ கேட்டாலே அஞ்சாவது தடவை ‘நீயே பாரு’ அப்படின்னு உன்கிட்ட பொறுப்பை கொடுக்க வாய்ப்பு இருக்கு.

ஆனா நீரூபன் குணம் கொஞ்சம் கரடுமுரடு தான். அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டான். நம்பிட்டானா உயிரை கூட கொடுப்பான். அதனாலதான் எப்படியாவது அவன் நம்பிக்கைக்கு நீ பாத்திரமாகணும்னு ஆசைப்படுறேன்.” என்று மகனிடம் பொறுமையாக எடுத்து கூறினார்.

“ஆமா முதல்ல உங்க தலைவருக்கு பாத்திரமாகணும். அப்புறம் அவர் மகனுக்கு.அப்புறம் சும்மா எல்லாரும் விரட்டிக்கிட்டே சுத்துதே அந்த அம்மா.. பேர் என்ன? ஹான்… அஞ்சனா.. அது உங்க தலைவர் மகத்தான? அதுக்கு பாத்திரமாகணும்.. இன்னும் லிஸ்ட்ல எத்தனை பேர் இருக்காங்க? என்று தன் அதிருப்தியை வெளியிட்டான் சந்திரன்.

“டேய் அவரை வாரிசு அரசியல் பண்றாருன்னு நான் கை காமிச்சா உன்னை எப்படிடா நான் அரசியலுக்குள்ள கொண்டு வர்றது? இதெல்லாம் கண்டும் காணாம இருந்தா தான் நம்ம காரியம் நடக்கும். எப்போ அந்த அஞ்சனாவை கழட்டி விடணும்னு எனக்கு தெரியும். நீரூபன் இப்ப உள்ள வந்திருக்கான். அவன தக்க வச்சிக்க என்ன வழியோ அதை பாக்கணும் .அவன் நேர்மையானவன் அவ்வளவு சீக்கிரம் தப்பு பண்ண மாட்டான். அதே நேரம் இந்த அரசியல் தந்திரமெல்லாம் அவனுக்கு தெரியாது. அவன் மக்கள் கிட்ட நல்ல பெயர் வாங்குற வேலைய பார்ப்பான் நாம நம்ம வளருவத பாப்போம்”என்று கூறிவிட்டு மகனை கவனமாக இருக்கச் சொல்லி தன்னுடைய அலுவல் அறைக்குள் சென்றார்.


பள்ளி சம்பந்தமான கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு நிரூபனும் ஆனந்தும் அவனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தனர்.

“நம்ம விளம்பரம் நல்லா ரீச் ஆயிருக்கு சார். இப்போ நாம இந்த ஸ்கீம் அனௌன்ஸ் பண்ணோம் அப்படின்னா யாரும் நம்மளை எதுவும் கார்னர் பண்ண மாட்டாங்க.” என்று ஆனந்த் கூற,

“புரியுது ஆனா இதனால சில நிறுவனங்கள் பாதிக்கப்படும் அவங்க நம்மள சும்மா விட மாட்டாங்க. கண்டிப்பா சில கேஸ் வரும். கல்வித்துறையில் மனு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு. சோ பள்ளிக்கூடம் திறக்கறதுக்கு முன்னாடியே மூடுறதுக்கான வாய்ப்பு நம்மகிட்ட அதிகமா தெரியுது.” என்று பொறுமையாகவே கூறினான்.

“நாம ஏன் சார் நெகட்டிவா நினைக்கணும் நீங்க யோசிச்சு வச்சிருக்க இந்த பிளான் சரியா வந்தா கண்டிப்பா இதுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பாங்க. என்னதான் சில கல்வி நிறுவனங்களும் சில முதலாளிகளும் இதனால பாதிக்கப்பட்டலும் நிறைய மக்களுக்கு இது நல்லது தான் செய்யும். அதனால யோசிக்காம இது செயல்படுத்துவதற்கான வேலையை பார்க்கலாம் சார்.” என்று அழுத்தமாக கூறினான் ஆனந்த்.

“வேலை வேலைன்னு இப்பல்லாம் நீ உன் பிரண்டை பாக்குறது இல்ல போல இருக்கே!” என்று சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றினான் நீரூபன்.

“அப்படி இல்ல சார் முன்னாடி புரொடியூசர் வீட்டுக்கு போவதும் கதை சொல்றது மட்டும்தான் வேலையா இருந்தது. அவளை கூட்டிட்டு உங்கள பாக்க வருவேன். பெருசா வேற எந்த வேலையும் இல்ல. இப்ப ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. அதனால நான் இதுல கவனமா இருக்கேன். தினமும் அவகூட சாட் பண்ணுவேன். போன்ல பேசுவேன். எல்லாத்தையும் என்கிட்ட முன்னாடி மாதிரி சொல்ல தான் செய்றா. என்ன நேர்ல அதிகம் பார்க்க முடியல. பட் மார்னிங் வரும்போது எப்படி உங்களை தூரத்தில் இருந்து பார்த்துட்டு போறாளோ அதே மாதிரி என்னையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு தான் போவா” என்று சிரித்தான் ஆனந்த்.

“ரொம்ப ஆழமான நட்புல்ல!” இன்று உன்னை பார்த்து புருவம் உயர்த்தினான் நிரூபன்.

“ஆமா சார் என் அம்மாவுக்கு அப்புறம் என் திறமையை நம்புன ஒரே ஒருத்தி என் தோழி பூமிகா மட்டும்தான். அதனால அவளுக்கு என் அம்மாவுக்கு அடுத்த இடத்தை நான் கொடுத்திருக்கேன். என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவங்கல்ல முதலிடத்தில் இருக்கிறது அவ தான்.” ஆத்மார்த்தமாக கூறினான் ஆனந்த்.

“புரியுது” என்ற சிரித்து விட்டு சில கோப்புகளை நகர்த்தி வைத்தான் நீரூபன் .

“சார் ஒரு ஐடியா சொல்லவா?” என்ற தயக்கமாக ஆனந்த் வினவவும்,

“சொல்லுப்பா” என்று ஊக்குவித்தான் நிரூபன்.

“நீங்க ஏன் ஸ்கூல பத்தி ஒரு பிரஸ்மீட் வச்சு பேசக்கூடாது ?” என்று கேட்க,

“பிரஸ்மிட்டா இத பத்தி நான் யோசிச்சதே இல்லையே என்று நேருவின் சிந்திக்க இல்ல சார் இப்பதான் கட்சி போஸ்டர்ல எல்லாம் உங்க பிச்சர்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு இந்த நேரம் நீங்க ஒரு பிரஸ்மீட் வச்சு ஸ்கூல பத்தி பேசும்போது ஆட்டோமேட்டிக்கா கட்சி பத்தியும் கேள்வி வரும். அதுல உங்களோட ஸ்டாண்ட் என்னனு தாராளமா நீங்க சொல்ல முடியும். இதுனால கட்சியில் இருக்கிற ஒருத்தரோட நிறுவனம்ன்னு பெருசா யாரும் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்வர மாட்டாங்க. இது ஜஸ்ட் ஒரு சஜஷன் தான்.” என்று ஆனந்த் கூறியதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினான் நீரூபன்.