அடங்காத அதிகாரா 21

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கட்சி அலுவலகம் உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பால் பரபரப்பாக காட்சி அளித்தது.

காலை ஒன்பது மணிக்கு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவித்ததோடு தேர்தல் விதிமுறைகளையும் அறிவித்திருந்தது.

வார்டு கவுன்சிலராக வேண்டும் என்று எண்ணிய அந்தந்த வார்டின் தொண்டர்கள் எல்லாம் கட்சி தலைமை அலுவலகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு இடையில் நீரூபன் அனுப்பி வைத்த புதிய பி.எம் டபிள்யு. ஐ செவன் கார் அந்த கூட்டத்தின் இடையில் நீந்தி வந்து நிற்க, அதிலிருந்து முழு சூட்டில் இறங்கினான் வசீகரன். அடர் சாம்பல் வண்ண சூட்டும் அவன் கையில் இருந்த லேப்டாப் பேகும், அவன் கண்களில் இருந்த தீட்சண்யமும் அங்கிருந்தோரை ஆராய்ச்சியாக அவன் பார்த்த தோரணையும் அவனுக்கு வழி விட்டு ஒதுங்கி அவர்கள் நிற்க போதுமானதாக இருந்தது.

அதற்குள் அவனைப் பற்றி திருமூர்த்தி கூறியிருந்ததால் அவரது உதவியாளர் சில பவுன்சர்களுடன் அவனை சூழ்ந்து கொண்டார். இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் கவனித்து புகைப்படம் எடுக்க முயல, அவர்கள் அப்படியே ஒதுக்கப்பட்டு வசீகரன் பாதுகாப்பாக இரண்டாம் தளத்தை அடைந்தான்.

அவனை சுற்றி இருந்த பவுன்சர்கள்  விலகியதும், ஊப் என்று காற்றை ஊதிய வசீகரனுக்கு நேத்ராவும் நீரூபனும் அவனை எத்தனை ஆழத்திருக்கு தள்ளி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அவன் சற்று குழப்பமும் தயக்கமுமாய் நின்றிருக்க அவனது கைபேசி அழைத்தது,

“வசீ, ஏர் பாட் எடுத்து காதுல வை. நான் லைன்லயே இருக்கேன். எதுவும் பேச மாட்டேன். ஆனா உன்னோட தான் இருப்பேன். உனக்கு பதில் தெரியாத கேள்வியோ இல்ல பிடிக்காத கேள்வியோ வந்தா லேசா தொண்டையை செருமு நான் பதில் சொல்றேன்.  நீ இங்க பப்பட் இல்ல. கம்பெனி உன்னோடது தான். இது உனக்கு மாமா ஏற்படுத்தி கொடுத்து இருக்குற புது தொழில். அதுனால.. ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டான்ட். கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஃபீல் பண்ணாத பா.” என்று கூறிக்கொண்டிருக்க,

“மாமா நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்கு புரியுதா?  எல்லாரையும் பிங்கர் டிப்ல வச்சிருக்கீங்க. அவங்க உணர்ச்சிகளை இவ்வளவு துல்லியமா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. பிளீஸ் உங்க அக்கா பாசத்தை தூக்கி போட்டுட்டு நீங்க வாங்க, கம்பெனி என்ன உங்க கூடவே நானும் அசிஸ்டன்ட் மாதிரி அரசியலுக்கு வந்துடுறேன். என்ன சொல்றீங்க?” என்று கேட்டவனை எண்ணி அந்த பக்கம் நீரூபன் வாய்விட்டு நகைக்கலானான்.

“சிரிக்காதீங்க மாமா” என்று சொன்னவன்,

“ஆமா ராக்கேஷ் அண்ணனுக்கு இங்க என்ன வேலை. அவர் ஏன் மீட்டிங் ரூமுக்கு வெளில நிக்கிறார்?” என்று வெளியே பார்த்தபடி விசாரித்தான்.

“வேற என்ன ஒற்றர் வேலை செய்ய அவன் பொண்டாட்டி அனுப்பி இருப்பா. இல்ல அவனுக்கு பல நாளா அரசியல் ஆசை இருக்கு. இதான் சமயம்ன்னு வந்திருப்பான்.”நக்கல் வழிந்தது நீரூபனின் குரலில்.

“மாமா இதுக்கு முன்னாடி மரியாதையா பேசின நீங்க.. இப்போ..” என்று இழுத்தான்.

“அவங்கவங்க மரியாதையை தக்க வச்சுக்க மறந்து போனா, நானும் மரியாதையை மறந்து போறதுல தப்பில்ல வசீ. சமீபமா அந்த ஆள் சேர்க்கை, செயல் எதுவும் சரி இல்ல. நீ எதுக்கும் கவனமாகவே இரு.” என்றுரைத்தவன்,

“சரி நான் மியூட் பண்ணிக்கிறேன், தேவைப்பட்டா மட்டும் எடுத்துட்டு பேசுறேன்.”என்றதும் அமைதியானது அவன் பக்கம்.

திருமூர்த்தி,கோதண்டம், சேலம் சேகர் ராஜா, மலைச்சாமி, ஆலந்தூர் ஆறுமுகம் கூடவே ராக்கேஷ் அந்த கான்பிரன்ஸ் அறையின் உள்ளே நுழைந்தனர்.

அவர்களைக் கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து கொள்ள நினைத்த வசீயின் காதில், “எழுந்து வணக்கம் சொல்லாத வசீ, சும்மா ஸ்மைல் மட்டும் பண்ணு. கை கொடுத்தா நீயும் கொடு. ” என்று சொல்லி அமைதியானான் நீரூ.

அவன் சொன்னதை அப்படியே கடைபிடித்த வசீ சின்ன சிரிப்போடு கால் மேல் கால் போட்டு கான்பரன்ஸ் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

“என்ன தலைவரே தம்பிக்கு மரியாதையே தெரியல. இவரு எப்படி நம்மளை ஜெயிக்க வைக்கப் போகுது?” என்ற சேகர் ராஜாவின் கேள்விக்கு அதே சிரிப்புடன்,

“உங்களுக்கு போலி மரியாதை வேணுமா இல்ல உண்மையான உழைப்பு வேணுமா? அதை நீங்க தான் சொல்லணும்.” என்று தன் லேப்டாப்பை எடுத்து டேபிளில் வைத்து அதனை கனெக்ட் செய்ய புரோஜெக்டர் எங்கே என்று அவன் தேட,

“என்னப்பா தேடுற?”

‘புரோஜெக்டர் எங்கன்னு..” என்று இழுத்தவன்,

“சார் முதல்ல ஆபிஸ் அப்கிரேட் பண்ணுங்க. கான்பரன்ஸ் ரூம்ல புரோஜெக்டர், ஆடியோ சிஸ்டம் இல்ல ஒரு டிஜிட்டல் போர்ட் கூட இல்ல. ” என்றவன் லேப்டாப்பை அவர்கள் பக்கம் திருப்பினான்.

அவர்களது திட்டங்களை அவன் எடுத்துக் கூற,

“தொண்டர்களை அப்படி எல்லாம் கட்டுப்படுத்த முடியாது தம்பி” என்று குறுக்கிட்டார் மலைச்சாமி.

“உங்க கட்சி கொள்கை பிடிச்சு உன் பின்னாடி வந்தவங்க தான் உங்க தொண்டர்கள். அப்படி இருக்கும்போது உங்க பேச்சை கேட்க மாட்டாங்கன்னா எப்படி சார்? நாம அவங்களை எதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லல, சிலதை கட்டும் கட்டுப்படுத்த சொல்றோம். இதையே செய்யலன்னா நாளைக்கு ஆட்சிக்கு நீங்க வந்த பின்னாடி எப்படி கட்டுபடுத்தி ஆட்சி செய்வீங்க?” என்று கொஞ்சமும் தயங்காமல் கேட்டு விட்டான் வசீகரன்.

“சபாஷ் வசீ” என்று காதில் நீரூ கூறியதும் வசீகரன் முகத்தில் மகிழ்ச்சி மின்னி மறைந்தது.

இதை அங்கிருந்த ஒரு ஜோடி கண்கள் கண்டு காரணம் புரியாமல் விழித்தது.

அடுத்த சில திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் வசீகரன் உரைத்ததும் கோதண்டம் கண்களில் நம்பிக்கை தெரிந்தது.

மலைச்சாமி, சேகர், ஆறுமுகம் மூவரும் இரண்டும் கெட்டான் நிலையில் வசீகரனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ராக்கேஷ் அவனது திட்டங்களை தெளிவில்லாதவை என்று நேரடியாகவே குறிப்பிட்டான்.

வசீகரனுக்கு லேசாக கோபம் முளைக்க, “வசீ காம் டவுன். அவன் உன்னை சீண்ட நினைக்கிறான்.  அவன் வலையில் விழாத. ஒரே வரில அவனை ஆஃப் பண்ணு பார்ப்போம்.” என்று நீரூ கூறியதும்,

“அது தெளிவா தெரிய கொஞ்சமாவது அரசியல் அறிவு இருக்கணும் ராக்கேஷ் சார்” என்று சொன்னதும் ராக்கேஷ் முகம் இறுகியது.

திருமூர்த்தி அதுவரையில் அமைதியாக இருந்தவர், “நீங்க சொன்ன எல்லாமே ஓகே தம்பி. ஆனா உங்க ஆபிஸ்ல எல்லா வேலையிலும் மேற்பார்வை பார்க்க இவங்க நாலு பேர்ல ரெண்டு பேரு உங்க கூட இருப்பாங்க.”  என்று கூறினார்.

வசீகரன் வேகமாக,”இல்ல சார். முடியாது. எங்க ஆபிஸ் ஸ்பேஸ் எங்க பிரைவசி. உங்க ஆளுங்களை உள்ள விட முடியாது. நாங்க யாரும் உங்க கட்சி ஆபிஸ்ல டேரா போடலையே! எங்க வேலையை எங்களுக்கு செய்ய தெரியும். ஒருவேளை அதை உங்களுக்கு கோ-ஆர்டினேட் பண்ணி சொல்ல ஒருத்தர் வேணும்ன்னா  எங்க கூட டச்ல இருக்கலாம். கொஞ்சம் யங் அண்ட் எனர்ஜெடிக்.” என்று தைரியமாக பேசினான்.

அழைப்பில் இணைந்திருந்த நீரூ வசீகரனை மெச்சிக் கொண்டான்.

கோதண்டம் சிந்தனையுடன் அவனைப் பார்க்க, “ராக்கேஷ் நான் கோ-ஆர்டினேட் பண்றேன்” என்று கூறியதும், சிரித்த வசீ,

“உங்க மாமனார் இடத்தை பிடிக்க இவ்வளவு அவசரமா மிஸ்டர் ராக்கேஷ்? இப்போதைக்கு தலைவர் அவர் தான். அவரோட முடிவு தான் எனக்கு வேணும். அவரோட உறவுன்ற காரணத்துக்காக நீங்க சொல்றத என்னால கேட்க முடியாது.” என்று முகத்தில் அறைந்தது போல பேசினான்.

“மாமா இவன் எப்படி பேசுறான் பாருங்க. இதெல்லாம் வேண்டாம் நாம எப்பவும் போலவே இந்த தேர்தலை சமாளிக்கலாம்.” என்று ராக்கேஷ் கூக்குரலிட்டு கத்த,

“வெல்டன் வசீ, அவனை கத்த வச்சுட்ட, கண்டிப்பா மத்த எல்லாரும் இப்ப உன் பக்கம் வந்துடுவாங்க பாரு!” என்று காதில் நீரூபனின் குரல் கேட்க,

அதுவே தான் அங்கே அரங்கேறியது.

“தலைவரே தம்பியோட திட்டங்கள் தெளிவா இருக்கு. என்ன நம்ம தொண்டர்கள் கொஞ்சம் பேர் அதிருப்தி காட்டுவாங்க. ஆனா அதெல்லாம் சமாளிச்சிடலாம்.”  என்று ஆறுமுகம் கூற,

“அண்ணன் சொல்றது சரிதான் தலைவரே. நம்ம ஊர் பசங்க சொன்னா கேட்பாங்க. இல்லன்னா யார் சொன்னா கேட்பாங்களோ அவங்களை வச்சு பேசுவோம்.* என்று சேகரும் ஆமோதிக்க,

“ஏன் தலைவரே தம்பி சொல்றது போல கட்சி ஆபிசுக்கும் கார்பரேட் ஆபிசுக்கும் பாலமா நம்ம சந்திரனை போடலாம்ல! தம்பி கேட்டது போல சின்ன வயசு, இவங்க சொல்றது நமக்கு புரியலன்னாலும் அவனுக்கு உள்ள இளவயசு மூளை அதை புரிஞ்சு நமக்கும் சொல்லிடும். என்ன சொல்றீங்க தலைவரே! சந்திரனை வர சொல்லவா இல்ல இளைஞர் அணி செயலாளர் ஒரு பையன்..” என்று இழுக்க,

“இந்த கார்பரேட் விவகாரம் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்யா. அதுனால சந்திரனை வர சொல்லிடு. தம்பி சொல்றபடி கேட்டுக்க சொல்லு.” என்ற திருமூர்த்தி,

“தம்பி நீங்க வேலையை ஆரம்பிக்கலாம். இன்னிக்கு தான் தேர்தல் தேதி அறிவிச்சு இருக்காங்க. நாளைக்கு பிரஸ் மீட் இருக்கு.” என்றதும்,

“கொஞ்சம் அவசரம் காட்டாம இருங்க. நீங்க சொன்ன மிஸ்டர் சந்திரனை இன்னிக்கு சரியா நாலு மணிக்கு எங்க ஆபிஸ் வர சொல்லுங்க. பஞ்சுவலா இருக்கணும். லேப்டாப் கொண்டு வர சொல்லுங்க. உங்க வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு குழு கிட்ட முதல் லிஸ்ட் வாங்கி எனக்கு அனுப்பி வைங்க. பிரஸ் மீட் நாளை மறுநாள் வச்சுக்கோங்க. அதுக்குள்ள மெட்டீரியல் எல்லாம் ரெடி பண்ணி இதை பத்தி சோஷியல் மீடியால ஒரு சின்ன எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வைக்கிறோம். அப்பறம் சோஷியல் மீடியால உங்க ஆளுங்க எந்த இடத்துலயும் தகாத வார்த்தை பயன்படுத்த கூடாது. அதை கண்டுபிடிக்க நாங்க சாப்ட்வேர் வச்சிருக்கோம். ஆள் ஐடி பார்த்து பிடிச்சா நாங்களே ஏதாவது கேஸ் வாங்க வச்சு உள்ள அனுப்பிடுவோம். அப்பறம் கட்சிக்காரன் ஜாதிக்காரன்னு யாரும் எங்க கிட்ட வரக்கூடாது.

எங்க மோட்டோ உங்களை ஜெயிக்க வைக்கிறது. அதுக்கு தான் உழைப்போம். அதுக்கு உங்க ஆட்கள் தடையா வந்தா தூக்கி போட தயங்க மாட்டோம். இதை தெளிவா சொல்லிடுங்க. அப்பறம் என்கிட்ட வருத்தப்பட கூடாது..” என்று கூறிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

“சூப்பர் வசீ. கடைசில வச்ச பாரு அதான் பெர்பெக்ட் ஷாட்.” என்று காதில் நிரூபன் வாழ்த்த,

“தேங்க்ஸ் மாமா. நேத்து வரை நேத்ரா சொன்னதை மட்டும் தான் செய்தேன். இனிமே நானும் இதுல இன்வால்வ் ஆகுறேன் மாமா” என்று கூறி விடைபெற்று அழைப்பை துண்டித்தான்.

வசீகரன் தன்னை அவமானப்படுத்தி விட்டுச் செல்வதும் மாமனார் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவரது அதிகார அடிமைகள் அவருக்கு சலாம் போட்டதோடு அந்த பொடியன் சொன்னதற்கு இணங்கி அவர்களும் தன்னை அவமதித்ததை தாங்க இயலாமல் வெறியோடு நின்றான் ராக்கேஷ்.

‘எப்படி நீ எல்லாத்தையும் செய்யறன்னு பார்ப்போம் டா” என்று மனதில் அவன் சவால் விட, பாவம் அவனுக்கு தெரியவில்லை, இந்த தேர்தலின் முடிவில் அவன் அடையப்போகும் பேரதிர்ச்சியை !


நீரூபன் யோசனையாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் பின் ஏதோ முடிவு செய்துகொண்டான் வேகமாக தன் காரில் ஏறி கிளம்பி விட்டான். போகும் அவனைப் பார்த்த ஆனந்த்,

‘எங்க போறேன்னு சொல்லாம போறாரு, வர்ற வரைக்கும் நாம தான் சமாளிக்கணுமா? அந்த மணீஷ் சாருக்கு கோவில் கட்டித்தான் கும்பிடணும்.’ என்று எண்ணிக்கொண்டான்.

காரை ஒரு முக்கிய சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன் கைக்கடிகாரத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டு சாலையை கவனித்துக் கொண்டிருந்தான்.

வேகமாக குறுக்கே சென்று அவன் கைகாட்டி நிறுத்த ஓட்டுநர் பயத்தில் சடன் பிரேக் போட்டு நிறுத்தினார்.

என்னவென்று பின் இருக்கையில் இருந்து எட்டிப்பார்த்த அந்த மனிதர் வேறு யாருமில்லை பாலரமணி.

அந்த சாலையில் நெரிசல் குறைவாகவே இருக்க அவன் எதிர்பார்த்த காரும் வந்தது

அவரைக் கண்டு முகம் கொள்ளாப் புன்னகையுடன்,

“மாமா” என்று ஜன்னல் அருகே சென்று நீரூபன் நிற்க, புரியாது விழித்தாலும். பின்னால் சாலையில் நெரிசல் அதிகமாவதை உணர்ந்து,

“உள்ள ஏறு’ என்று தள்ளி அமர்ந்தார்.

ஏறிக்கொண்ட நீரூபன் அடுத்த நொடி அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டு,

“என் அம்மா கூட இதே போல வாசனையோட, முக சாயல்ல தானே இருந்திருப்பாங்க. எனக்கு அது எதுவுமே தெரியாது மாமா.” என்று அவரது கையைப் பற்றிக்கொண்டான்.

அவருக்கு உள்ளே நெகிழ்ந்திருந்தது. ஆனாலும் இத்தனை வருடம் வராதவன் இன்று ஏன் வரவேண்டும் என்று திகைப்புடன் அவர் நோக்க,

“உங்க கிட்ட பேச எனக்கும் ஆசை தான். ஆனா ஏற்கனவே அம்மா இறப்பை ஏத்துக்க முடியாம இருந்த உங்களுக்கு என் முகத்தை காட்டி அவங்க நினைப்பை தூண்டக் கூடாதுன்னு தான் மாமா ஒதுங்கி இருந்தேன்.” என்று அவர் மனதைப் படித்தவன் போல உரைக்க,

“சொல்லு நீரூபா என்ன விஷயம்? சும்மா என்னைப் பார்க்க வந்திருக்க மாட்ட!” என்று அவன் குணமறிந்தவர் போல வினவ,

இம்முறை தயங்காது அவரும் அவனை மென்மையாக அணைத்தார்.

“இத்தனை வருஷம் வராதவன் வந்திருக்குன்னா வேற என்ன மாமா காரணம் இருக்க முடியும்? எல்லாம் காதல் தான். நான் பூமியை லவ் பண்றேன். அவ கிட்ட சொல்லல. ஆனா உங்க கிட்ட கேட்கணும்ல! தெரியாம கூட உங்களுக்கு எந்த வலியையும் கொடுக்க நான் விரும்பல. நீங்க யோசிச்சு சொல்லுங்க. அப்ப தான் நான் பூமி கிட்ட பேச முடியும். இப்போவே கல்யாணம் எல்லாம் கிடையாது. ரெண்டு வருஷம் ஆகும். சோ யோசிச்சு சொல்லுங்க.”என்றவன், “டிரைவர் லெஃப்ட்ல ஓரமா நிறுத்துங்க” என்று இறங்கிக் கொண்டான். “மாமா அவசரப்பட்டு எதுவும் சொல்ல வேண்டாம் பிளீஸ். நல்லா யோசிங்க. அத்தை கிட்ட என் நம்பர் இருக்கு. கேட்டு கால் பண்ணுங்க. பை மாமா”என்று நடக்க ஆரம்பிக்க இவர் அவன் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அமர்ந்திருந்தார்.