💘கண்மணி 25💘
சாந்திவனம்… காலையிலேயே வானதியும் பாகீரதியும் குளித்துச் சீக்கிரமாக தயாராயினர். அன்றைய தினம் ஜெகத்ரட்சகனின் பிறந்தநாள். அருண் அஞ்சனாவிலாசத்தில் தந்தையின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தான். முந்தைய தினம் அவன் போனில் அழைத்து வானதியையும் பாகீரதியையும் மறுநாள் தங்களது இல்லத்துக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டான். எனவே வானதி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்திருந்தாள். பாகீரதி உடை மாற்றிவிட்டுப் போனுடன் ஹாலுக்கு வந்தவள் காலையிலேயே ஈஸ்வரிடம் இருந்து அழைப்பு வர சற்றும் யோசிக்காது அழைப்பைத் துண்டித்துவிட்டாள். சில நாட்களாக அவனது அழைப்பை வேண்டுமென்றே […]