💘கண்மணி 28💘
விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்… சாந்திவனம்… காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி. பேபி பிங்க் வண்ண டாப்புடன் வெண்ணிற லெகின்ஸ் அணிந்து கூந்தலை பக்கவாட்டில் பின்னலாய் போட்டவள் தனது பால் நெற்றியில் அரக்குநிற பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். டிரஸ்சிங் டேபிள் கண்ணாடி முன்னே அமர்ந்து அலங்கரித்துக் கொண்டவளின் பார்வை இன்னும் துயில் கலையாமல் சோர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரைத் தழுவியது. தலைக்காயத்திற்கு போட்ட மாத்திரைகளின் விளைவால் இன்னும் உறக்கம் கலையவில்லை […]