☔ மழை 41 ☔

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு வழங்குகின்றனர்.

                             -By Taha Zahoor on July 5, 2018 in religionunplugged.com

உறக்கம் கலைந்து சோம்பல் முறிக்க கைகளை உயர்த்திய யசோதரா அவளது கரம் உயரே எழும்பாதபடி இறுக்கமாக அணைத்து உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தின் ஸ்பரிசத்தில் கண்களைத் திறந்தாள்.

அவள் அசைந்ததால் அவனது துயிலும் கலைந்துவிட தன்னை நோக்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தபடி “குட்மானிங் யசோ” என்று முனங்கிவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதிக்க வந்தான் சித்தார்த்.

யசோதராவோ இரவு நடந்த நிகழ்வின் நினைவுகள் எழும்ப வேகமாக அவனைத் தடுத்தவள் “என் கிட்ட வந்தேனா உன்னைக் கொன்னுடுவேன்டா” என்று எச்சரிக்க

“அஹான்! நைட் முழுக்க நான் உன் கிட்ட தானே இருந்தேன்… அப்போ இந்தக் கோவம் எங்க போச்சு?” என்று கொஞ்சலாக கேட்டபடி அவள் நாசியை நிமிண்டியவன் நிதானமாக எழுந்து அமர்ந்தான்.

யசோதரா என்ன பதிலளிப்பது என புரியாது விழித்தவள் தன் அசட்டுத்தனத்தை எண்ணி மனதிற்குள் நொந்துகொண்டாள்.

சித்தார்த் அவளை மையலாய் நோக்கியவன் “ஏன் இவ்ளோ யோசிக்கிற யசோ? நடந்தது ஒரு ஆக்சிடெண்ட்னு நினைச்சுக்கோ” என்று கூற அவள் அதிர்ந்து போனாள்.

அவளது அதிர்ச்சியைக் கவனித்தவன் “பட் இது ஒரு ஸ்வீட் ஆக்சிடெண்ட்… இதுக்காக நான் வருத்தப்படமாட்டேன்… ஏன்னா நான் இன்னும் யசோதராவோட புருசன் தான்… எனக்கு அவ கிட்ட எல்லா உரிமையும் இருக்கு” என்று நமட்டுச்சிரிப்புடன் கூறி கண் சிமிட்டிவிட்டு நிற்க

“நான் சொன்னதை எனக்கே திருப்பிச் சொல்லிக் காட்டுறல்ல… எல்லாத்துக்கும் காரணம் இந்த ப்ளடி ரெயின் தான்” என்றபடி பற்களைக் கடித்தாள் யசோதரா.

“ஏய் மழைய திட்டாதடி… தமிழ்நாட்டு விவசாயிங்களோட வாழ்க்கைல விளக்கேத்தி வைக்கிற தெய்வமே மழை தான்” என்றான் சித்தார்த்.

“அஹான்! சாருக்கு ஏன் திடீர்னு மழை மேலயும் விவசாயிங்க மேலயும் லவ் பொங்குது? அடுத்த மூவில ஃபார்மரா நடிக்கப் போறீயா?” குத்தலாக வினவியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் யசோதரா. அவளுக்கு ஏதாவது செய்து பேச்சை நேற்றைய இரவு சம்பவத்திலிருந்து திசை திருப்பி ஆக வேண்டிய கட்டாயம்!

அதைப் புரிந்துகொண்டவனாய் சித்தார்த்தும் அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தாமல் மீண்டும் விவசாய ஆர்வலனாகப் பேச ஆரம்பித்தான்.

“ஏன் சினிமால நடிக்கணும்னா மட்டும் தான் விவசாயம் பத்தி பேசணுமா?”

“மத்தவங்க பேசுனா அதுக்கு நியாயமான காரணம் இருக்கும்… ஆனா சினி இண்டஸ்ட்ரில இருக்குறவங்க பேசுனா அடுத்து எந்த மூவில விவசாயம் கான்செப்டை அடிச்சுத் துவைக்கப் போறிங்களோனு சலிப்பு தான் தட்டுது… நீ இப்போ பேசுனப்ப கூட அடுத்த மூவில உன்னை ஏர்க்கலப்பையோட பாக்கலாம்னு தான் நான் நினைச்சேன்”

உதட்டைச் சுழித்து உரைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் அவள்.

சித்தார்த் புன்சிரிப்புடன் சோம்பல் முறித்தவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

அவன் திரும்பி வந்த போது நேற்றைய உடைக்கு மாறியிருந்தாள் யசோதரா. அவன் வந்து நின்றதும் ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டவள் “நான் கிளம்புறேன் சித்து… டைம் ஆச்சு… நீயும் வீட்டுக்கு கிளம்பு” என்றபடி அவனைத் தாண்டி செல்ல முயல

“ஐ வோண்ட் ஃபர்கெட் எனிதிங்… முக்கியமா நேத்தைய ஸ்வீட் ஆக்சிடெண்ட்” என்று கண்களில் குறும்பு மின்ன சித்தார்த் கூற யசோதரா கண்களை இறுக மூடி தன்னைச் சமாளித்துக் கொண்டவள் “குட் பை” என்று மட்டும் உரைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவன் அங்கேயே நின்றவன் அவளது கார் கிளம்பும் ஓசையைக் கேட்டுவிட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றான். மனதில் இருந்த கிலேசங்கள் அகன்றதால் மனம் இறகைப் போல இலேசாய் மாறியதைப் போல உணர்ந்தான்.

அந்நேரம் பார்த்து மாதவன் வேறு மொபைலில் அழைக்க எடுத்துப் பேசியவனின் குரலில் இருந்த உற்சாகம் அவனது நண்பனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. கடந்த சில மாதங்களாக விரக்தியும் அசட்டையுமாகப் பேசுபவனின் குரலில் போன சந்தோசம் திரும்பி வந்ததில் மாதவனுக்குப் பெருத்த நிம்மதி.

“என்னவோ போடா மாதவா! நடக்குற எல்லாம் நமக்கு சாதகமாவே நடக்குது… அப்பிடியே டிவோர்சுக்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வச்சிட்டேன்னா என் வாழ்க்கை தப்பிச்சிக்கும்… ஆனா யசோ மனசு வைக்கணுமே” பெருமூச்சுடன் பேசியவனிடம் நம்பிக்கையாய் வார்த்தைகளை உதிர்த்தான் மாதவன்.

“மய்யூ ஆல்ரெடி ரிப்போர்ட்டர் கிட்ட பேசி புரியவைக்க ட்ரை பண்ணிட்டிருக்கா சித்து… ஹேமாவும் கிடைக்கிற கேப்ல அட்வைஸ் பண்ணுறாங்கனு கௌதம் சொன்னான்… எல்லாமா சேர்ந்து கண்டிப்பா டிவோர்சை இல்லாம பண்ணிடும்… நீ பழையபடி உன் பொண்டாட்டி குழந்தையோட ஹேப்பியான குடும்பஸ்தனா மாறி சிக்கி சின்னாபின்னமாகுறது கன்ஃபார்ம்”

மாதவனிடம் பேசியதும் பீச் ஹவுசிலிருந்து வீட்டிற்கு கிளம்பிய சித்தார்த் அதன் பின்னர் தினசரி வேலைகளில் மூழ்கிவிட யசோதராவோ லோட்டஸ் ரெசிடென்சியில் நிலைகொள்ளாத மனதுடன் உழன்று கொண்டிருந்தாள்.

முந்தைய தினம் காலையில் அலுவலகம் சென்ற அன்னை இரவில் வீடு திரும்பாது போனதால் ஹேமலதாவுடன் தங்கிய சர்மிஷ்டா வீட்டிற்கு வந்ததிலிருந்து யோசனைவயப்பட்டவளாய் இருந்தவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

ஹேமலதா இருவருக்கும் காலையுணவை எடுத்து வந்திருந்தவள் “யசோ சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிட வாடி… சர்மிக்கு நான் குடுத்துடுறேன்… நீ இன்னைக்கு ஆபிசுக்கு லேட்டா போனா போதுமா?” என்று வினாக்களைத் தொடுக்கவும் சிந்தனை கலைந்து சோபாவிலிருந்து எழுந்தாள் அவள்.

சர்மிஷ்டாவை புன்சிரிப்புடன் நெருங்கி அணைத்துக்கொண்டவள் “மம்மி கூட ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுறீயா சர்மிகுட்டி?” என்று கொஞ்சியபடி அவளை உணவுமேஜையை நோக்கி இழுத்துச் சென்றாள்.

அங்கே தனக்கும் மகளுக்குமாய் பரிமாறிக்கொண்டவளை கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹேமலதா மெதுவாய் நேற்று இரவு ஏன் வீட்டிற்கு வரவில்லை என வினவ யசோதரா தோசையின் விள்ளலை வாயில் திணித்தபடியே “பீச் ஹவுஸ்ல தங்கிட்டேன் ஹேமா” என்றாள்.

அவள் குரலில் இருந்த சங்கடம் ஹேமலதாவுக்குத் திகைப்பைக் கொடுத்தது. யசோதராவின் தோளைத் தட்டிக்கொடுத்தவள் “அதுக்கு ஏன் எம்பாரசிங்கா ஃபீல் பண்ணுறடி?” என்று கேட்க

“ப்ச்… எல்லா விசயமும் ரொம்ப வேகமா நடந்துடுச்சு ஹேமா… ஒரு பக்கம் அம்மா அப்பா, இன்னொரு பக்கம் இன்லாஸ்… இது எல்லாத்துக்கும் மேல சர்மியோட ஃபியூச்சர்னு ஏகப்பட்ட பிரச்சனை கண் முன்னாடி இருக்குறப்ப நான் எப்பிடி இவ்ளோ வீக்கா இருந்தேன்னு ஆச்சரியா இருக்குது” என்றாள் யசோதரா தவிப்புடன்.

அவளது விழிகள் சர்மிஷ்டாவை பரிதவிப்புடன் நோக்குவதையும் அவள் சொன்ன வார்த்தைகளின் மறைபொருளையும் கண்டுகொண்ட ஹேமலதாவோ அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள்.

“எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடிக்கிற சக்தி காதலுக்கு இருக்கு யசோ… நமக்காகவே யோசிச்சு நமக்காகவே வாழ்ற ஒருத்தர் பக்கத்துல இருக்குறப்ப எப்பேர்ப்பட்ட பிரச்சனையா இருந்தாலும் இன்விசிபிள் மோடுக்குப் போயிடும்… நேத்து அம்மணியோட சிந்தை மயங்குனதுல தப்பு ஒன்னுமில்ல… சோ தேவையில்லாம யோசிக்காத… நடந்து முடிஞ்சது பிரச்சனை எல்லாமே அவசரகதில முடிஞ்சிருக்கலாம்… ஆனா இனி நடக்கப் போறதை உன்னால தீர்மானிக்க முடியும்… கொஞ்சம் யோசி… நீ சொன்ன எல்லாரோட சந்தோசமும் நீயும் சித்துவும் ஒன்னு சேர்ந்தா தான் திரும்ப கிடைக்கும்டி… உன் கிட்ட அடிக்கடி சொல்லுற விசயம் தான், ப்ளீஸ் ரீ-கன்சிடர் யுவர் டிசிசன்… உனக்கு இன்னும் டைம் இருக்கு”

யசோதரா தோசையை விழுங்கியபடி அவளது பேச்சையும் மனதில் பதியவைத்துக் கொண்டாள். வெளிப்பார்வைக்கு வெறுமெனே தலையாட்டி வைத்தவள் என்ன நினைக்கிறாள் என்பது வழக்கம் போல ஹேமலதாவுக்குப் புரியவில்லை.

அதே நேரம் அவளது தங்கை முக்தி ஃபவுண்டேசனில் ருத்ராஜியின் வசிப்பிடத்தின் வெளியே நின்று கொண்டிருந்தாள். அவள் வந்த வேலைகள் இரண்டும் முடிவடைந்துவிட்டது. நியாயப்படி அவள் திருப்தியான மனநிலையுடன் தான் இருக்கவேண்டும். ஆனால் நேற்றைய இரவில் ரவீந்திரனின் பேச்சு அவளைக் குழப்பமுற செய்துவிட்டது.

அதனால் தான் ருத்ராஜி அழைப்பதாக உதவியாளர் வந்து கூறியபோது முன்பு போல உற்சாகத்துடன் அவள் வரவில்லை. அழைத்துவிட்டார், போய் பார்ப்போம் என்ற மனநிலையுடன் வந்தவள் புல்வெளியில் கிடந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவளைப் போலவே ரகுவும் இந்திரஜித்தும் அழைத்து வரப்படவும் சாருலதாவுக்குக் கொஞ்சம் ஜெர்க் ஆனது. அவளருகே கிடந்த இருக்கையில் அமர்ந்த இந்திரஜித்திடம் தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

“எதுக்கு ஜித்து நம்ம மூனு பேரையும் ஒரே நேரத்துல கூப்பிட்டிருக்கார்? ஒருவேளை நம்ம மேல சந்தேகம் வந்திருக்குமோ? டேய் அந்த பில்டிங் ஏரியால இருந்த சிசிடிவில நம்ம வந்தது, போனதுலாம் ரெக்கார்ட் ஆகிருக்கும்ல… அடக்கடவுளே! நான் எப்பிடி இதை யோசிக்காம விட்டேன்? ஜித்து நீ தான அங்க இங்க சுத்துவ, இந்த ஆசிரமத்துல யாருக்கும் தெரியாம தப்பிச்சு ஓட எதாவது ரூட் கண்டுபிடிச்சி வச்சிருக்கியா?”

இவ்வளவு நீண்ட விசாரணைக்கு இந்திரஜித் வாயைத் திறவாது கைக்குட்டையை மட்டும் எடுத்து நீட்டவே சாருலதா கோபத்தில் மூக்கைச் சுருக்கிக் கொண்டாள்.

“யாருக்கு வேணும் உன் கர்சீப்? அதை நீயே வச்சுக்கோ எருமை… நானே நம்மளை கண்டுபிடிச்சிட்டாங்களோனு திகிலடைஞ்சு போயிருக்கேன்… ஆறுதலுக்காச்சும் எனக்கு ரகசியவழி தெரியும்னு சொன்னா நீ ஒரு நல்ல ஃப்ரெண்ட்”

அவளது புலம்பலில் ரகுவின் தைரியமும் கரைந்து காணாமல் போய்விடும் போல! இந்திரஜித்துடன் வரும் போது இருந்த துடிப்பு இப்போது இல்லை! அவன் முகத்தில் கலவரம் சூழ்ந்துகொண்டது. இந்திரஜித் இதற்கெல்லாம் மூலகாரணியான சாருலதாவை முறைத்தான்.

“இந்த லொடலொடா ஸ்பீச்சை நிறுத்திட்டு கொஞ்சம் அமைதியா இருடி… உன்னை மாதிரி தானே எங்களையும் உக்கார வச்சிருக்காங்க… எதுவா இருந்தாலும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்” என்று தைரியமூட்டிய இந்திரஜித்தை பரிதாபமாகப் பார்த்து வைத்தனர் ரகுவும் சாருலதாவும்.

இவர்களின் உரையாடல் மிகவும் மெதுவான குரலில் நடந்ததால் அவ்வபோது அங்கே வந்து சென்ற யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.

ஒரு வழியாக சர்வ ருத்ரானந்தா வந்துவிட மூவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர்.

“சிட் டவுன் ப்ளீஸ் யங் பீபிள்! விட்டா நீங்களே என்னை வயசானவனா ஃபீல் பண்ண வச்சிடுவிங்க போலயே”

வழக்கமான இலகு பேச்சுடன் அவர்களுக்குச் சமமாக தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தவர் முக்தி ஃபவுண்டேசனில் அவர்கள் கழித்த நாட்களின் சுவாரசியத்தைப் பற்றி வினவ மூவரும் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தனர்.

சாருலதா தனது போட்டோஷூட்டின் போது முக்தியின் முக்கிய நபர்கள் அனைவரையும் சந்தித்ததைப் பற்றி பேச இந்திரஜித்தோ தனது சூரியகிரியை அனுபவங்களை விலாவரியாக விளக்கினான்

மிச்சமிருந்த ரகுவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. ஆனால் எதையாவது சொல்லியாக வேண்டுமே!

“டெய்லி மானிங் குடுக்குற வெஜிடபிள் சாலட் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு ருத்ராஜி… அதுக்கு யூஸ் பண்ணுற காய்கறி எல்லாம் முக்தியோட தோட்டத்துல வளந்ததுனு கேள்விப்பட்டேன்… சிட்டி சைட் இந்த மாதிரி ஃப்ரெஷ் வெஜிடபிள்ஸ் கிடைக்கிறது ரொம்ப ரேரா இருக்கு”

இதற்கு மேல் விட்டால் அவன் முக்தியின் ஒவ்வொரு செங்கல்லைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுவான் என்பதால் இந்திரஜித் அவனது தொடையில் தனது கரத்தை அழுத்த ரகுவின் பேச்சு நின்றது.

“அண்ணாக்கு குழந்தை மனசு ருத்ராஜி… அதான் எப்போவும் சாப்பாடு நினைப்பு… இல்லண்ணா” என்று அவனைப் பார்த்து கண் சிமிட்ட ரகுவும் சமாளிப்பு சிரிப்பொன்றை உதிர்த்தான்.

ருத்ராஜி புன்னகைத்தவர் “ரவீந்திரன்” என்று குரல் கொடுக்கவும் மூவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ஒருவேளை ரவீந்திரன் தங்களைப் பற்றி போட்டுக் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் அவர்களுக்குள் உதயமானது.

ரவீந்திரன் வழக்கம் போல உணர்ச்சிகளைக் காட்டாத முகத்துடன் வந்தவர் கூடவே கையில் கேமிராவுடன் மற்றொருவரையும் அழைத்து வந்திருக்க மூவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களைப் பார்த்தபடியே “இவர் தான் முக்தியோட சோஷியல் மீடியா சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தையும் பாத்துக்கிறார்… இங்க வர்ற ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் எல்லாருமே ருத்ராஜியோட சேர்ந்து போட்டோ எடுத்து தங்களோட அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிற போஸ்டை நாங்க எங்களோட அபிஷியல் சோஷியல் மீடியா பேஜ்ல ஷேர் பண்ணுவோம்… அதுக்காக போட்டோஸ் அண்ட் வீடியோ எடுக்கத் தான் இவர் வந்திருக்கார்” என்றார் ரவீந்திரன்.

இப்போது தான் மூவருக்கும் சீராக மூச்சு வந்தது. புன்னகையை முயன்று முகத்தில் ஒட்டவைத்தவர்கள் ருத்ராஜியுடன் விதவிதமாய் போஸ் கொடுக்க அதை அந்நபர் புகைப்படமாய் கிளிக்கினார். மறக்காது ரவீந்திரனையும் தங்களுடன் சேர்த்துக் கொண்ட மூவரும் முக்தியில் தங்களது அனுபவங்களை ருத்ராஜியுடன் கலந்துரையாடுவது போல பேச ஆரம்பிக்க அம்மனிதர் அதை வீடியோவாக்கினார்.

வீடியோ எடுத்து முடித்ததும் மூவருக்கும் முக்தியின் முத்திரை பொறித்த ருத்திராட்சமாலையை அன்பளிப்பாக வழங்கினார் சர்வ ருத்ரானந்தா.

அனைத்தும் முடிந்து இன்னும் சில மணி நேரங்களில் கிளம்ப வேண்டுமென கூறிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்றனர் மூவரும். செல்லும் வழியில் யாருமறியாவண்ணம் ரவீந்திரன் அவர்களைச் சந்திக்க இந்திரஜித் திகைத்தான்.

“சார் நீங்க அடிக்கடி எங்களோட தனியா பேசுறத யாராச்சும் கவனிச்சிட்டா வீணா உங்களுக்குத் தான் பிரச்சனை வரும்”

“அதை நான் பாத்துக்கிறேன் சார்… உங்களுக்கு சில டாக்குமெண்ட் போட்டோ அனுப்பிருக்கேன்… அதை பாத்துடுங்க… அதுல டாக்ஸ் எவேசனுக்கான எவிடென்ஸ், அன் ஆதரைஸ்ட் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் பத்தின எவிடென்ஸ் எல்லாமே இருக்கு… உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்”

சாருலதாவிற்கு இம்முறை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! அவள் மிகவும் மதித்த ருத்ராஜி என்ற மாமனிதரின் புனித பிம்பம் சுக்கு நூறாக உடைவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

வரி ஏய்ப்புக்கான புகார் இம்மாதிரி தொண்டு நிறுவனங்களுடன் கூடிய இயக்கங்களின் மீது அளிக்கப்படுவது வாடிக்கையே! ஆனால் முக்தி மீது கொண்ட கண்மூடித்தனமான அபிமானத்தால் அவர்கள் அம்மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கை தான் அவளை இங்கே வரவழைத்து யசோதராவுக்காக வேலை பார்க்கவும் வைத்தது.

முடிவில் முக்தியின் உண்மைத்தன்மையை யசோதராவுக்கு நிரூபிப்பதற்காக வந்த சாருலதா முக்தி என்ற யோகா மற்றும் ஆன்மீக மையத்தின் சுயரூபத்தைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.

ஆனால் ரகுவும் இந்திரஜித்தும் இதையெல்லாம் தெரிந்து தானே வந்திருந்தனர். அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி ரவீந்திரனின் மனமாற்றம் தான்!

“சார் நீங்க செய்யுற உதவிக்கு தேங்க்ஸ்… ஆனா அது உங்களுக்கு ஆபத்தா முடிஞ்சுதுனா நாங்க நிம்மதியா வேலைய கண்டினியூ பண்ண முடியாது… எங்களோட இந்த ஸ்டிங் ஆபரேசனால யாரோட உயிருக்கும் ஆபத்து வந்துடக்கூடாதுங்கிறதுல நாங்க இது வரைக்கும் ரொம்ப கவனமா இருக்கோம்… நாங்க இங்க இருந்து கிளம்புனதுக்கு அப்புறமா நீங்க எங்களை காண்டாக்ட் பண்ணுறதுக்கு டிரை பண்ணாதீங்க… போதும் போதுங்கிற அளவுக்கு ஆதாரத்தை கலெக்ட் பண்ணிட்டோம்… கண்டிப்பா உங்க பையன் முகுந்தோட சாவுக்கு நியாயம் கிடைக்கும்… சீக்கிரமே இங்க நடக்குற தப்பு எல்லாத்துக்கும் ஃபுல்ஸ்டாப்ப அந்த சதாசிவனே வச்சிடுவார்” என ரவீந்திரன் மீதிருந்த அக்கறையில் கூறினான் ரகு.

அவரும் அனைத்தையும் கேட்டுவிட்டு கைகூப்பி மூவரிடமிருந்தும் விடைபெற்றார். அவர் முதுகு மறையும் வரை பார்த்தபடி நின்றவர்கள் பின்னர் தங்களது உடமைகளை எடுத்து வைக்க அவரவர் வசிப்பிடமான ரிசார்ட்களை நோக்கி சென்றனர்.

சாருலதா தன்னுடன் தனது நண்பர்கள் குழாமை அழைத்துக்கொண்டு கிளம்ப அதன் பின்னர் சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு இந்திரஜித்தும் ரகுவும் ரவீந்திரனிடம் சொல்லிக்கொண்டு முக்தி ஃபவுண்டேசனை விட்டு வெளியேறினர்.

அங்கிருந்து கார் கிளம்பிய போது கார் கண்ணாடிக்குப் பின்னே மறைந்த மேகமலை சிகரங்கள் தங்களை வழியனுப்பி வைப்பதை போல உணர்ந்தனர் ரகுவும் இந்திரஜித்தும்.

மழை வரும்☔☔☔