உன்னுள் வசமானேன் …

           ⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.

- legal team, ezhilanbunovels.com

அத்தியாயம் -3

“ஹேய் அட்ரஸ் கிடைச்சுதா…?

சார்வியின் ஆர்வத்திற்கு சன்னமாக சிரித்தாள் ஆர்டிஓ ஆபிஸில் நின்றிருந்த அனுஷா.

“கமான் சாரு, பணத்தை உள்ளே தள்ளியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைச்சுடும். அதன் பிறகு நீ அந்த ஹண்ட்ஸம் மச்சானை வைச்சி செய்யலாம். பீ ரிலாக்ஸ், நாம எப்பவும் போற இடத்துக்கு வந்துடு…”

அனுஷா சொல்லி கைபேசியை அணைக்கவும், அதுவரை இருந்த டென்ஷன் குறைய ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து சிரத்தையாக மேக்கப் போட ஆரம்பித்தாள்.வேலையின் நடுவே அவளை அழைத்தார் தந்தை ஷரத் சந்திரன்.

மேக்கப்பின் நடுவில் தந்தையின் அழைப்பு எரிச்சலை கிளப்பியது.

“யா டாட், ஐல் கம்…”

நிதானமாக தன் வேலையை முடித்துக்கொண்டு கைப்பையோடு கீழே இறங்கி வர, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஷரத் மகளை அழைத்தார்.

“சொல்லுங்க டாட்…”என்றபடி அவரின் எதிரில் அமர, பணியாள் அவளுக்கு டிபனை பரிமாற எத்தனிக்க கையமர்த்தி தடுத்தாள்.

“ப்ரேக்பாஸ்ட வேண்டாம், ஆரஞ் ஜூஸ் போதும் …”என்று பணியாளை அனுப்பிவிட்டு தந்தையிடம் திரும்பினாள்.

“சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு வெளியில் போகணும்…” என்று படபடக்க மூத்தவரோ ஒரு நெடிய பெருமூச்சை எடுத்தார்.

“இல்லைடா கண்ணா, உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். பிடிச்சிருக்கான்னு பார்…”

WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.

கையில் இருந்த மாப்பிள்ளை போட்டோவை மகளிடம் கொடுக்க, அவளோ அதை சீண்ட கூட இல்லை. கோபத்தோடு தந்தையை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“உனக்கும் திருமண வயசு வந்துடுச்சி கண்ணா . உன் அம்மா இருந்திருந்தா இந்நேரத்திற்கு உன் திருமணத்தையே முடிச்சிருப்பா. இனியும் நான் சும்மா இருக்க முடியாதே. மாப்பிள்ளையை பிடிச்சிருந்தா சொல்லு, இல்லைன்னா வேறு வரன் பார்க்கலாம். பையன் வெளிநாட்டில் படிச்சிட்டு அவன் அப்பாவோட தொழிலை பார்த்துக்கிறான். நல்ல வசதி. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சு. நீ என்னம்மா சொல்றே…? என்றார் கனிவாக.

தந்தையின் திருமண பேச்சு சார்விக்கு எட்டிக்காயாக கசந்தது. அவள் இதுவரை திருமணம், குடும்பம், குழந்தை என்ற விதத்தில் யோசித்ததே இல்லை. சுதந்திர பறவையாக மனம் போன போக்கில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது தான் அவளுடைய வாழ்க்கை லட்சியமாக இருந்தது.

பணியாள் ஜூஸை கொண்டு வந்து கொடுக்க, அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டு எழுந்து பேகை தோளில் மாட்டினாள்.

“சாரி டாட், இந்த கல்யாணம், குடும்பம், குழந்தை ஓ நோ சான்ஸே இல்லை. நான் இப்படியே இருந்துட்டு போறேன். என்னால் யாரிடமும் அடங்கி வாழ முடியாது. ஓகே நேரமாச்சு, பை …”

தந்தையின் பதிலை கூட எதிர்பாராமல் ஹைஹீல்ஸ் ஸப்திக்க நடந்துசெல்ல ஷரத் சந்திரன் ஆயாசமாக தலையை குலுக்கினார்.

மெரீனா பீச்…

காரை நிறுத்திவிட்டு அனுஷாவின் வருகைக்காக காத்திருந்த சார்விக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக சென்றுக்கொண்டிருந்தது. அவள் பொறுமையை இழந்து கைபேசியை எடுத்து அனுஷாவுக்கு அழைக்கும் முன் கார் கதவு மெலிதாக தட்டப்பட்டது. யார் தொல்லை செய்வது என்ற கோபத்தில் நிமிர்ந்தவள் தோழிகளை கண்டதும் அவசரமாக கதவை திறந்தாள்.

“ஹேய் அட்ரஸ் கிடைச்சுதா, அவன் பெயரென்ன, எங்கே இருக்கான்…”என்று படபடக்க, புன்னகையுடன் அவளை அமைதிப்படுத்தினாள் அனுஷா.

“முதலில் வண்டியை எடு சொல்றேன்…”என்றவள் சார்வியின் பக்கத்தில் அமர, நீதுவும் பின்சீட்டில் ஏற, வண்டி பீச் ரோட்டில் சீறி பாய்ந்தது.

“ஹ்ம்ம் சொல்லு…”என்று பரபரத்தவளுக்கு தான் சேகரித்த தகவல்களை கூற சார்வியின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.

“ஓ அந்த திமிர் பிடிச்சவன் பெயர் தனீஷா, ஹ்ம்ம் டாக்டர். அதான் ஓவர் திமிரா பேசினானா என்னிடம். அவனை சும்மா விடக்கூடாதுடி. எவ்வளவு திமிர் இருந்தால் என்னை அலட்சியம் செய்தது மட்டுமில்லாமல் அப்பா பெயர் தெரியாதவள் என்று கேவலப்படுத்துவான். அதையெல்லாம் கூட மன்னிச்சிடுவேன், ஆனால் கிளம்பும்பொழுது ஒரு கேவலமான லுக் விட்டான் பாரு அதை தான் என்னால் ஜீர்ணிச்சிக்க முடியலை…”

தோழியின் கோபம் மற்ற தோழிகளுக்கும் புரிந்தது.

“சரிடி இப்போ என்ன செய்யப்போறே…”

“அவன் நமக்கு கிடைச்ச ஆடுடி. அவனை ஒரேடியா அறுக்க கூடாது, கொஞ்ச கொஞ்சமா வைச்சி அறுக்கணும். அப்போ தான் புரியும் இந்த சார்வி யாருன்னு. என்னிடமே வாலாட்டறானா, அந்த வாலை ஓட்ட நறுக்கறேன்…”

“எல்லாம் சரி, இப்போ எங்கே போறே…?

“என்ன கேள்வி இது நீது, டாக்டர் வீட்டுக்கு தான். அங்கே போய் நம்ம கைவரிசையை காட்ட வேண்டாமா…?

“என்ன வீட்டுக்கா, அதெல்லாம் வேண்டாம். அவனை வெளியில் வைச்சி ஒருவழி செய்யலாம். வீட்டுக்கு போனால் பிரச்சினையாயிடும்…” என்று பதறினார்கள் இரு பெண்களும்.

“அதையும் பார்த்துடலாம்…”என்றவளின் கையில் கார் காற்றாய் பறந்தது.

மஹாபலிபுரம் ரெஸ்ட்டாரெண்ட்…

“கமான் தனீஷ், டூ யூ மேரி மீ…”

லாராவின் உசுப்பலில் சட்டென்று தன் இன்ப அதிர்ச்சி சிறகுகளை உதிர்த்து அவளின் தோள்களை பிடித்து எழுப்பினான். லாராவின் கையிலிருந்த மோதிரத்தை வாங்கி காதலியின் வெண்டை விரலில் அணிவித்து அதில் இதழ்களை பதித்தான் அதீத காதலுடன்.

“எஸ் மை டியர் …”என்றவன் லாராவை தன்னோடு அணைத்துக்கொள்ள ரெஸ்ட்டாரெண்ட் மீண்டுமொரு முறை கைத்தட்டலில் அதிர்ந்தது.

இருவரும் வெட்கத்துடன் விலகினார்கள். எல்லோரும் வாழ்த்துச் சொல்ல, அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியில் வர தனீஷ் காதலியின் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“தேங்க்ஸ் லாரா, சூப்பர் சர்ப்ரைஸ். நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படியொரு பர்த்டே கிஃப்ட் கிடைக்கும்ன்னு. ரீலி ஐ ம் ஹாப்பி. சோ அந்த கவிதை எனக்காக தான் இல்லையா…?

காதலனின் பேச்சையும், அருகாமையையும், ஸ்பரிஸத்தையும் ஏகாந்தமாக ரசித்துக்கொண்டிருந்தவள் தனீஷின் கேள்வியில் செல்லமாக முறைத்தாள்.

“சரியான புத்துடா நீ, அதை படிக்கும் பொழுதே உனக்கு புரியலையா. ஹ்ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி எப்படி தான் குடும்பம் குழந்தைன்னு வாழ போறேனோ…”

சிரித்தபடி அவனை சீண்ட, காதலியின் பேச்சில் ஆண்மகனின் நரம்புகள் சுகமாக முறுக்கேற நடு ரோடு என்றும் பாராமல் அவளை இழுத்து தன்னோடு அணைத்தான்.

“அதெல்லாம் அசத்திடுவேன் …” என்று லாராவின் காதில் தாபத்துடன் கிசுகிசுக்க, பெண்மையின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“ஹேய் விடுடா, எல்லோரும் பார்க்கிறாங்க பார்…”என்று காதலனின் அணைப்பிலிருந்து விலக, அவளின் இடுப்பில் கைப்போட்டு அணைத்தபடி காரை நோக்கி நடந்தான்.

இருவரும் காரில் அமர்ந்து பார்க்கிங்கிலிருந்து உருவி அதை கையாண்டவனின் முகம் சந்தோஷத்தில் தோய்ந்து கிடந்தது. சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் லாரா காதலனின் தோளில் சாய்ந்துக்கொள்ள அவளின் உச்சந்தலையில் மென்மையாக இதழ் பதித்தான்.

“வீட்டில் நம் திருமணத்தை பற்றி பேசிடலாமா லாரா…?

விழி மூடி காதலனுடன் இனிமையாக டூயட் பாடிக்கொண்டிருந்தவள் அவனின் கேள்வியில் வேகமாக எழுந்தாள்.

“ப்ச் இப்போ வேண்டாம்டா, அலுக்க சலிக்க காதலிச்சிட்டு அப்புறம் கல்யாணம் செய்துக்கலாம்; இப்போவே திருமணம் செய்துக்கிட்டா ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகமாயிடும்டா. ப்ளீஸ்…” என்றாள் கொஞ்சலாக அவன் தோளில் மீண்டும் சாய்ந்துக்கொண்டு.

“ஹேய் அவ்வளவு தானே, அதுக்கேன் ப்ளீஸ் போடறே. திருமணத்திற்கு பிறகு நீதான் என்னை ப்ளீஸ் செய்யணும்…”என்று கண்சிமிட்ட லாரா வெட்கத்துடன் சிரித்தாள் நாட்டி மென் என.

@@@@@@

சார்வியின் வண்டி அனுஷா கொடுத்த முகவரியில் நிற்க, மூன்று பெண்களும் குழம்பினார்கள் ஒரே மாதிரி இரண்டு வீட்டை கண்டதும்.

“ஹேய் என்னடி இது, ட்வின் ஹௌஸ் மாதிரி இருக்கு, இதில் திமிர்பிடிச்சவன் வீடு எது…?

“வெயிட் சார்வி, கூர்க்காவிடம் கேட்டால் சொல்லிட போறான். நீ இங்கேயே இரு, நான் கேட்டுட்டு வர்றேன்…”என்று நிதன்யா கூர்க்காவை நோக்கி செல்ல சார்வியின் விழிகள் இரண்டு வீட்டையும் அலசிக்கொண்டிருந்தது.

“ஹேய் சார்வி, இந்த வீடுகளின் பெயர்களை பாரேன், ரொம்ப வித்யாசமா இருக்கு. இதுவரைக்கும் இப்படியொரு பெயர்களை கேள்விப்பட்டதே இல்லை. அதென்ன சன்யமிட் ஸ்வர்க், அனுராக் நிவாஸ். ஒருவேளை வீட்டு உரிமையாளர்கள் பெயரோ. அதுவும் பாரேன் என்னவோ ஸெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு. ஆனால் பார்க்க நல்லா இருக்கு…”

அனுஷாவின் பேச்சிற்கு யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த சார்வி எரிச்சலுடன் உச்சு கொட்டினாள்.

“சன்யமிட் ஸ்வர்க் என்றால் டிசிபிளிண்ட் ஹெவென், அனுராக் நிவாஸ் என்றால் ப்ளேஸ்ஸ்ட் டவெல்லிங். ப்ச் அதை விடு, இந்த வீடுகளை பார்த்தால் அண்ணனும், தம்பியும் ஒரே மாதிரி கட்டிக்கிட்ட மாதிரி இருக்கு…”

“ஹேய் சார்வி இந்த சன்யமிட் ஸ்வர்க் தான் தனீஷ் வீடாம், அவன் இப்போ வீட்டில் இல்லையாம், ஹாஸ்பிடலிலும் இல்லையாம். அவன் கேர்ள் ப்ரெண்ட் கூட வெளியில் போயிருக்கானாம். என்ன செய்யலாம்…?

“என்ன கேர்ள் ப்ரெண்டா, ஓ சாருக்கு லவ்வர் இருக்காளா. அதான் அவ்வளவு மெதப்பு. அவனை விட்டுட கூடாதுடி…”

“சரி இப்போ தான் அவன் வீட்டில் இல்லையே, எப்படியும் நாளைக்கு ஹாஸ்பிடல் வந்து தானே ஆகணும். அங்கே வைச்சி ஒரு வழி செய்யலாம். இப்போ கிளம்பலாம் சார்வி …”

உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கினாலும் தனீஷ் இல்லாத வீட்டில் போய் பேசி என்ன ஆக போகுது, நாளை அவன் வேலை செய்கிற இடத்திலேயே போய் கலாய்ச்சிட வேண்டியது தான் என்று முடிவு செய்தவளாக வண்டியை எடுத்தாள்.

“ஹேய் நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன், உன் முகமே சரியில்லையே. என்னாச்சுடி உன் டாடி கூட ஏதேனும் சண்டையா…?

நீதுவின் கேள்விக்கு எரிச்சலுடன் உச்சு கொட்டினாள்.

“சொல்லு சார்வி, என்னாச்சு அங்கிள் திட்டிட்டாரா. நீ இந்த மாதிரி இருக்க மாட்டியே…”

“ப்ச் அதெல்லாம் இல்லை, என்னை ஜெயிலில் தள்ள முயற்சி பண்றார்…”என்றதுமே மற்ற இரு பெண்களும் ஏக காலத்தில் பதறினார்கள்.

“ஹேய் நீங்க வேற, எனக்கு கல்யாணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கிறார். எவனோ ஒருத்தன் கையால் தாலி வாங்கி, அவனுக்காக வாழ்ந்து குழந்தைகளை பெத்து, அதுங்களுக்காக என் சந்தோஷங்களை தியாகம் செய்து, ஒ நோ நினைச்சி பார்க்கவே பயங்கரமா இருக்கு. எனக்கு இதெல்லாம் செட்டாகாது. எப்படி தான் இந்த பொண்ணுங்க கல்யாணம் செய்துட்டு தாலி கட்டியவன் சொல்றதை கேட்டுட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்களோ. இட்ஸ் ஹாரிபிள்…”என்று உடலை சிலிர்த்துக்கொள்ள தோழிகள் இருவரும் மனம் விட்டு சிரித்தார்கள்.

“ஏண்டி கல்யாணம் செய்யாமல் கடைசி வரை இப்படியே இருந்துட முடியுமா? ஜாலியா வாழ்க்கையை அனுபவிச்சிட்டு கல்யாணம் செய்துட்டு செட்டில் ஆயிட வேண்டியது தான். நம்ம செட்டில் ஷெர்லிக்கு திருமணம் முடிவாயிடிச்சி. நீது வீட்டில் கூட மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அநேகமா என் அக்கா திருமணம் முடிஞ்சதும் எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் நீ மட்டும் மொரட்டு சிங்கிளா இருப்பியா…? என்றாள் கேலியாக.

“கல்யாணம் பண்றதுக்கு பதிலா சிங்கிளா இருந்துடலாம், யாரும் என்னை விரல் நீட்டி கேள்வி கேட்கமாட்டாங்க. கல்யாணம், சடங்கு, ப்ரெக்னென்ஸி, குழந்தைங்க, மாமனார், மாமியார் கட்டுப்பாடுகள் ஷ்ஷ்ஷ்ப்ப்ப்பா முடியலை. நீங்க வேணா கல்யாணத்தை பண்ணிக்கிட்டு புருஷனுக்கு அடங்கி நடங்க. எனக்கு அது செட்டே ஆகாது…” என அலட்சியமாக கூற நீது கேலியாக சிரித்தாள்.

“சாரு இந்த பசங்க நம்மை பார்க்கிறதும், நாம பசங்களை சைட் அடிக்கிறதும், காதலிக்கிறதும் எல்லாமே இளமை இருக்கும் வரை தான். நாம கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு முந்தி நம்ம அம்மாவை நினைச்சி பார்க்கணும். ஒரு வயசுக்கு மேலே நம்ம இளமை போய், முடி நரைச்சி, சதை போட்டு பார்க்க ஆன்ட்டி மாதிரி ஆயிட்டா நம்மை எவனும் திரும்பி பார்க்க மாட்டானுங்க. ஒரு காலத்தில் தனிமை உன்னை கொல்லும், அப்போ கணவன், குழந்தை, குடும்பம்ன்னு மனம் ஏங்கும். ஆனால் அப்போ யாரும் நம்மை திரும்பி கூட பார்க்க மாட்டானுங்க. திருமணம் என்பது அந்தந்த வயசில் நடந்தால் தான் மரியாதை…”

பேசிக்கொண்டிருந்தவளை எரிச்சலுடன் கையமர்த்தினாள் சார்வி.

“இப்போ என்ன சொல்ல வர்றே, இளமை இருந்தால் தான் பசங்க திரும்பி பார்ப்பானுங்களா. ஹேய் முட்டாள் மாதிரி பேசாதே. இப்போ இருக்கிற பசங்க எல்லாம் ஆன்ட்டி ஹீரோவா இருக்கானுங்க. பொம்மைக்கு புடவை கட்டினாலும் ஜொள்ளு வடிக்கிற இந்த ஆண் சமூகம் அழகா பணத்தோடு இருக்கிற பெண்ணை எந்த வயசிலும் கல்யாணம் செய்துக்குவானுங்க…”என்றாள் காட்டமாக.

தோழி பேசுகிற முறையே சரியில்லை என்று தோன்ற, அனுஷா நீதுவிடம் டாபிக்கை மாற்றும்படி ஜாடை காட்டினாள். நீத்துவுக்கும் அது புரிய பேச்சை மாற்றினாள்.