உன்னுள் வசமானேன் …
⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.
- legal team, ezhilanbunovels.com
அத்தியாயம் -26
“சொல்லுங்க தனீஷ்…” குரல் குழைந்து வந்தது.
“எப்படி இருக்கே பேபி…?
தனீஷின் கேள்விக்கு கலகலவென்று சிரித்தாள்.
“கொஞ்ச நேரம் முந்தி தானே பேசிட்டு போனீங்க, அதற்குள் விசாரிக்கறீங்க. ஓகே பைன் அப்பா வீட்டில் பேச சொன்னாரே, என்னாச்சு…?
“ஹ்ம்ம் அதை சொல்ல தான் போன் செய்தேன். வந்ததுமே இரண்டு பேரிடமும் பேசிட்டேன். நாளை மறுநாள் நாள் நல்லா இருக்காம். சோ அன்றைக்கு அபிஷியலா உன்னை பெண் பார்க்க போகலாமுன்னு சொல்லிட்டாங்க. சோ ஸ்வீட்டி கெட் ரெடி. இனிமே நோ மோர் வைட்டிங்…”
“ஓ சூப்பர் தனீஷ், நான் அப்பாவிடம் சொல்லிடறேன்…”
“ஹேய் அதெல்லாம் உன் வருங்கால மாமியார், மாமனார் என் வருங்கால மாமனாரிடம் பேசிக்குவாங்க. நாம் ஜஸ்ட் நம்ம திருமண கொண்டாட்டத்தை என்ஜாய் செய்தால் போதும்…”
“ஓ ! ஓகே ஓகே அப்புறம் தனீஷ் ப்ரெண்ட்ஸ் ட்ரீட் கேட்டாங்க. நீங்க வர்றீங்களா…?
“இதென்ன கேள்வி, நான் இல்லாமலா. பீச் ரெசார்ட்டுக்கு போகலாமா இல்லை ஹோட்டலில் வைச்சிக்கலாமா…?
“ஹோட்டலில் வைச்சிக்கலாம். ஷெர்லி , அவ பியான்ஸி, நிதன்யா, அவ பியான்ஸி, அப்புறம் அனுஷா எல்லோரும் வர்றதினால் ஹோட்டல் தான் ரைட் சாய்ஸ். எந்த ஹோட்டல்ன்னு மட்டும் சொல்லுங்க, டேபிள் ரிசர்வ் செய்துடலாம்…”
“ஷியூர், நான் பார்த்துட்டு உனக்கு சொல்றேன். எல்லோரையும் இன்வைட் செய்திடு…”
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
சில நொடிகள் காதலியிடம் ஸ்வீட் நத்திங்ஸ் பேசிவிட்டு இணைப்பை துண்டிக்க சார்வி சந்தோஷத்தில் வானத்தில் பறந்தாள். சில நிமிடங்களிலேயே தனீஷ் ஹோட்டலை முடிவு செய்து டேபிளை ரிசர்வ் செய்துவிட்டு காதலியிடம் தெரிவிக்க, அவனுக்கு நன்றியோடு முத்தத்தையும் கைபேசி வழியாக அனுப்பியவள் தோழிகளிடம் போன் செய்து அழைப்பு விடுத்தாள்.
மாறி மாறி இரவு முழுக்க தோழிகளிடம் கடலை போட்டுவிட்டு விடியற்காலையில் கண்ணயர்ந்தாள். ஒரு சில மணித்துளிகளே உறங்கினாலும் சோர்வு சற்றும் அவளை தாக்கவில்லை. இதழில் உறைந்த புன்னகையோடு குளித்து ரெடியாகி வழக்கம் போல ஆபிஸ் புறப்பட தயாராக, ஷரத் மகளை தடுத்தார்.
“நீ இன்று ஆபிஸ் வரவேண்டாம் கண்ணா, நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வர்றாங்களாம். நீ ரெஸ்ட் எடு…”என தந்தை சொன்ன செய்தியில் சார்வியின் கன்னங்கள் குப்பென்று சிவந்தது.
மகளின் வெட்க முகம் பெரியவருக்கு சந்தோஷத்தை கொடுக்க,”சரிடா நான் ஆபிஸ் கிளம்பறேன், மதியம் லஞ்சுக்கு வர்றேன்…”என்று கிளம்ப எத்தனித்தவரை நிறுத்தினாள்.
“டாட் இன்று ஈவ்னிங் ப்ரெண்ட்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கிறோம் நானும் தனீஷும். போகலாமா …”
“அதனால் என்னடா சந்தோஷமாக ட்ரீட் கொடு. ஆபிஸ் ப்ரெஷர் இன்றைக்கு வேண்டாம். மற்றபடி மாப்பிளையோடு வெளியில் போறதில் ஒரு சிக்கலும் இல்லை. ஓகே டா பை…”
மகளுக்கு கையாட்டிவிட்டு வெளியில் சென்று காரில் ஏற, சார்வி புன்னகையுடன் சமயலறைக்கு சென்றாள். தந்தைக்கு பிடித்த மாதிரி இன்று தானே சமைத்து போட வேண்டும் என்ற ஆசை எழ, சமையல்காரனின் உதவியோடு மதிய உணவை தயாரித்து, ஒரு குட்டி குளியல் போட்டு தந்தையின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தாள். தந்தை வந்ததும் அவரை அமரவைத்து உணவை பரிமாற, ஷரத்திற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தன் செல்ல பெண்ணா சமைத்தாள் என்று பலமுறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டவருக்கு விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.
“ஹையோ டாட் என்னாச்சு, ஏன் சாப்பாடு காரமா இருக்கா…? என்று அவசரமாக மக்கிலிருந்து தண்ணீரை தம்பளரில் சரித்து அவரிடம் நீட்ட அதை வாங்கி கீழே வைத்தார்.
“இல்லைடா செல்லம், என் பொண்ணு இந்தளவு மாறினதே நான் செய்த பாக்கியம்ன்னு நினைச்சிருந்தேன். இப்போ எனக்காக என் செல்லம் சமைச்சி வைச்சிருக்கா என்றதும் என்னால் என்னை கண்ட்ரோல் செய்துக்க முடியலை…” என்று குரல் தழு தழுக்க கூற சார்விக்குமே தந்தையின் மனநிலை புரிந்து கண்ணீர் பூக்கள் மலர்ந்தது.
“ஐ ம் சாரி டாட், உங்களை ரொம்ப நோகடிச்சிருக்கேன்னு நல்லாவே புரியுது. சாரி அகைன்…”என்று அவரின் கையை பிடித்து மன்னிப்பு கோர, ஷரத்திற்கு மனது கனிந்தது.
சில நொடிகள் அந்த இடம் இறுக்கமான உணர்வுகளின் பிடியில் சிக்கிவிட, சட்டென்று தன்னை சுதாரித்தார் பெரியவர்.
“திருமணமாகிட்டா மாப்பிள்ளைக்கு சமைச்சி போடணும்ன்னு இப்போவே ட்ரைனிங் எடுக்கறியாடா கண்ணா. அதுக்கு சோதனை எலி நான் தானா…” என்று கேலி செய்ய, அதுவரை இறுக்கமாக இருந்தவள் தந்தையின் கேலியில் வெட்கத்துடன் சிரித்தாள்.
“போங்க டாடி, அதெல்லாம் இல்லை…”என்று சிணுங்க மனம் நிறைந்து சிரித்தார் வாயில் உணவுடன்.
“உண்மையிலே ரொம்ப நல்லாயிருக்குடா, முதல் முறை சமைக்கிற மாதிரியே இல்லை. எப்படிடா எதை செய்தாலும் ரொம்ப பெர்பெக்ட்டா செய்யறே. உன் திருமண வாழ்க்கையை நினைச்சி கொஞ்சம் கவலை இருந்தது. இப்போ அந்த கவலை பறந்தே போய்டிச்சி. நீ மாப்பிள்ளையோடு எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா வாழ்ந்து இந்த கிழவன் கொஞ்ச பிள்ளைகுட்டிகளை பெத்து கொடு. அந்த சந்தோஷத்திலே என் நாட்களை நகர்த்திடுவேன்…”
தந்தையின் பேச்சிற்கு நாணத்துடன் புன்னகைக்க, மகளுடன் பேசிவிட்டு ஆபிஸ் கிளம்பி சென்றார். சார்வியும் தன்னறைக்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு குளித்து ரெடியாகி புடவை கட்டலாமா, சுரிதார் அணியலாமா என்று குழப்பத்துடன் வார்டரோபை குடைந்துக்கொண்டிருக்க தனீஷின் அழைப்பு அவளை மீட்டது.
“சொல்லுங்க தனீஷ்…” என்றாள் வார்டரோபை அலசியபடி.
“மேடம் என்ன செய்யறீங்க, நான் ரெடியாயிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து உன்னை பிக்கப் செய்துக்கிறேன்…”
“ப்ச் நானும் ரெடியாயிட்டு தான் இருக்கேன், ஆனால் டிரஸ் கோட் தெரியலை…”
“ஓ இதானா, என் ஸ்வீட்டீ புடவை கட்டினா, அப்படியே இந்திரலோகத்திலிருந்து இறங்கி வந்த மாதிரி இருக்கும். சோ புடவை தான் என் சாய்ஸ். வாட் டு யூ சே மேம்…”
அவனின் ஆசைக்கு மெலிதாக புன்னகைத்து,”டன் …”என வாய்விட்டு சிரித்தான்.
“ஓகேடா கெட் ரெடி, இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடுவேன்…”என்று கைபேசியை அணைக்க, சார்வி தோழிகளின் வாட்ஸாப் குரூப்பில் டிரஸ் கோட் சாரீ என்று மெஸேஜ் வைத்துவிட்டு புடவை அணிய ஆரம்பித்தாள்.
சொன்ன மாதிரியே தனீஷ் வந்துவிட தந்தைக்கு தெரிவித்துவிட்டு அவன் காரில் ஏற, அவளை ஏற இறங்க நோக்கியவன் வார்ரே வா என்று விசிலடித்தான்.
“வாவ் மைண்ட் ப்ளோயிங் சார்வி, தினமும் சாரீ போடறே, ஆனால் இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கு. வாட்ஸ் தி சீகரட்…”
“கமான் தனீஷ், ஒரு ஸ்பெஷலும் இல்லை. உங்க கண்ணு தான் புதுசா இருக்கு…”என்று சிரிக்க அவளின் கன்னத்தில் மென்மையாக தட்டிவிட்டு காரை எடுத்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இருவரும் புக் செய்திருந்த ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த த லீலா பேலஸ்க்கு விரைந்தார்கள். உள்ளே சென்று சீ சைடில் போடப்பட்டிருந்த டேபிள் சேரில் அமர, சற்று நேரத்திலேயே மூன்று தோழிகளும் அவரவர் பியான்சியோடு வந்தார்கள். எல்லோரையும் வரவேற்று தோழிகளின் பியான்ஸிகளை தனிஷ்க்கு அறிமுகம் செய்து வைக்க சற்று நேரத்திலேயே கச்சேரி களை கட்டியது.
பேரரிடம் அவரவர்க்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்ய, முதலில் வெல்கம் ட்ரிங்க் வந்தது.
“தனீஷ் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, எங்க செட்டிலேயே முதலில் ஷெர்லிக்கு தான் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. அப்போ ஷெர்லியை போட்டு செமையா கலாய்ச்சோம். அப்போ இவளிடம் திருமணத்தை பற்றி கேட்டபொழுது இந்த கல்யாணம், பிள்ளை குட்டியெல்லாம் எனக்கு ஒத்தே வராதுன்னு சொன்னவ இப்போ எல்லோருக்கும் முந்தி திருமணம் செய்துக்க போறா…”என்று சொல்லி முடிக்க மற்றவர்களின் சிரிப்பில் ஹோட்டலே அதிர சார்விக்கு வெட்கம் பிடிங்கி தின்றது.
தனீஷ் அவளை காதல் பார்வையால் குளிப்பாட்ட, அதற்கும் ஓவென்று கூச்சல் எழ நாணத்தில் சார்வி தலைகுனிய அவளை தோளோடு அணைத்தான். அவர்களின் நிலையை பார்த்து ஷெர்லி தன் பியான்சி பக்கம் பார்வையை திருப்ப அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். மற்ற ஜோடிகளை பார்த்த நிதன்யாவும் தன் பியான்சியை நோக்க, அனுஷா வெடித்து சிரித்தாள்.
அனுஷாவின் சிரிப்பில் மற்ற ஜோடிகள் சுதாரிக்க,”இதுக்கு தான் லவ் பண்றவங்க கூட வெளியில் வர கூடாது. எல்லோரும் லவ் பண்றீங்க, நான் பேன்னு உட்கார்ந்திருக்கேன். இதெல்லாம் அநியாயமா இல்லை…” என எல்லோருமே சிரித்தார்கள்.
எல்லோரின் திருமண விழா எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசிக்கொண்டிருக்க,”எக்ஸ்கியூஸ் மீ …”என்ற குரலுக்கு எல்லோருமே ஒரு சேர திரும்பினார்கள்.
லாராவை கண்டதும் சார்வி மற்றும் தோழிகளின் பியான்ஸிகள் தவிர மற்ற எல்லோருமே முகத்தை சுளித்தார்கள்.
“சாரி டு டிஸ்டர்ப், ஹாய் சார்வி எப்படி இருக்கீங்க…?
லாராவை கண்டதும் எரிச்சல் தாளாமல்,”சார்வி நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்துடறேன்…”
தனீஷ் சட்டென்று எழுந்துச் சென்றுவிட, லாராவின் விழிகள் அவனை ஏக்கமாக பின்தொடர்ந்தது. அவளின் பார்வையை கண்டு அணு, ஷெர்லி, நீத்து மூவரும் பல்லை கடிக்க, இது அறியாத சார்வி அவளிடம் பேசலானாள்.
“ஹ்ம்ம் பைன், நீங்க எங்கே …?
“என் பியான்ஸியோடு ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே இங்கே வந்தோம். கேன் வி ஜாயின் வித் யூர்ஸ்…?
அவள் கேட்டு சார்வி பதில் சொல்லுமுன்னரே அனுஷா வேகமாக இடையிட்டாள்.
“சாரி லாரா, நாங்க இங்கே எங்க ஏழு பேருக்கு தான் டேபிள் ரிசர்வ் செய்திருக்கோம். தப்பா நினைச்சிக்காதீங்க. அப்படியே அட்ஜஸ்ட் செய்தாலும் ஒருத்தருக்கு தான் இடம் இருக்கு. நீங்க உங்க பியான்சியோடு வந்திருக்கீங்க. புதுசா திருமணமாக போறே ஜோடி. உங்களுக்கு பெர்சனலா பேசிக்க நிறைய இருக்கும். பிரைவசி தேவைப்படும். எங்களால் உங்களுக்கு அந்த ப்ரைவசியை கொடுக்க முடியாது. சோ ப்ளீஸ் …”என லாராவின் முகம் சுண்டி போனது.
ஆனால் லாராவின் பியான்சி அதை பற்றி பெரிதாக எண்ணாமல் அனுஷாவின் பேச்சிற்கு சிரித்து நன்றி சொல்லிவிட்டு எதிர்கால மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல, தனீஷ் மீண்டும் வந்து அமர்ந்தான்.
“ஹேய் ஏண்டி அவங்க முகத்தில் அடித்தார் மாதிரி இடம் இல்லைன்னு சொன்னே. பாவம் லாரா…” என தனீஷே ஆயாசமாக தலையை குலுக்கினான்.
“லுக் சாரு நீ நினைக்கிற மாதிரி அவள் நல்லவளில்லை. முதலில் அவள் மீது உனக்கிருக்கிற சாஃப்ட் கார்னரை தூக்கி போடு. அவளுக்கு பாவம் பார்த்தால் உனக்கே நீ குழி தோண்டிக்கிற மாதிரி…”என்றாள் அனுஷா கடுப்புடன்.
“என்ன நீத்து பேசறா இவள்…? என்று மற்ற தோழியை துணைக்கழைக்க சார்வியை கையமர்த்தினாள்.
“அனு சரியா தான் பேசறாள். நீ கவனிச்சியா இல்லையான்னு தெரியலை தனீஷை அவள் பார்த்த பார்வையே சரியில்லை. சரியான விஷ பாட்டில். அவளை நம்பாதே…”
“நீத்து நீயுமா…”என்ற சார்வியின் பேச்சில் குறுக்கிட்டான் தனீஷ்.
“எஸ் ஷீ இஸ் கரெக்ட் சார்வி, அவள் நல்லவளில்லைன்னு உனக்கே தெரியும். அப்புறமும் ஏண்டா அவளுக்கு பாவம் பார்க்கிறே. எந்த காலத்திலும் அவள் திருந்த மாட்டாள். அவள் நல்லபாம்பு மாதிரி. கரம் வைச்சி கொத்துவாள். பீ கேர்புல்…” என்று அறிவுறுத்த, விஷயம் புரியாத மற்ற இரு ஆண்களும் என்னவென்று கேட்டு விசாரித்து தெரிந்துக்கொண்டார்கள் தத்தம் வருங்கால மனைவியிடம்.
“என்ன இருந்தாலும் லாரா உங்க அத்தை பெண், நல்லவளோ கெட்டவளோ ஜஸ்ட் இரண்டு வார்த்தை பேசறதில் என்ன ஆயிட போகுது தனீஷ். அவள் வெளியாளாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உங்க குடும்பத்தை சேர்ந்தவ, நீங்க இப்படி செய்தால் உங்க அத்தை, மாமா, எல்லோரும் கஷ்டப்படுவாங்க…” என தோழிகள் மூவரும் அலுத்துக்கொண்டனர்.
“தனீஷ் நீங்க செய்யறது சரி தான், இவ எப்பவும் அப்படி தான், ஓவரா பாவம் பார்ப்பா. லாரா சரியான விஷ பாம்புன்னு இவளுக்கு புரிய வையுங்க…” என்றாள் அனு.
“ஓகே ஓகே நாம சந்தோஷமா இருக்கிற இந்த நேரத்தில் அவளைப்பற்றிய பேச்சேதெற்க்கு. நாம வைப் செய்யுவோம்…”என்ற தனீஷின் பேச்சு எல்லோருக்கும் சரியாக பட அதன் பிறகு லாராவின் பேச்சு அங்கு எழவில்லை.
உள்ளே சென்று ஒரு நல்ல இடத்தை செலெக்ட் செய்து லாராவும், அவளின் பியான்ஸியும் அமர, அவளின் முகம் கடுகடுவென்றிருந்தது.
‘என்னையாடி அசிங்கப்படுத்தறீங்க, உங்க எல்லோருக்கும் வைக்கிறேன் வேட்டு…’
“ஹேய் வாட்ஸாப், என்னாச்சு ஏன் ரொம்ப மூடியா இருக்கே, பீல் செரிஷ் லாரா …”என லாரா தன் வன்மத்தை மறைத்து புன்னகைத்தாள்.
