உன்னுள் வசமானேன்….
⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.
- legal team, ezhilanbunovels.com
அத்தியாயம் -24
“வாம்மா, நீ தான் சார்வியா. தனீஷ் உன்னை பற்றி நிறைய சொல்லியிருக்கான்…” என்று கரண் அவர் பங்குக்கு வரவேற்க, சார்வி மரியாதை நிமித்தம் கரம் குவித்தாள்.
“சிட் டௌன் சார்வி …”என்றபடி அவளை அமர்த்தி அவளின் அருகில் அமர்ந்தான் தனீஷ்.
“அப்புறம் உங்க பிசினஸ் எப்படி போகுது, உன் பாதர் எப்படி இருக்கார். அப்புறம் என்ன திடீர் விசிட் இந்த பக்கம்…?
விஷயத்தை நேரடியாக கேட்க தயங்கி சுற்றி வளைத்து கேட்ட மனைவியை மனதுக்குள் மெச்சிக்கொண்டார் கணவர். தாயின் கேள்விக்கு தனீஷ் மந்தஹாசமாக புன்னகைக்க, சார்வியோ சற்று மிரட்சியுடன் காதலனை நோக்கினாள்.
“மாம் வீ லவ் ஈச் அதர், அதான் உங்க மருமகளை அறிமுகம் செய்து வைக்கலாம்ன்னு அழைச்சிட்டு வந்தேன். சார்வி ரொம்பவே பயந்தா நீங்க என்ன சொல்வீங்களோ, லாரா என்ன சொல்வாளோன்னு. ஐ டோன்ட் கேர் அபௌட் தட் பர்சன். ஆனால் என் மனதுக்கு பிடித்தவளை உங்களுக்கு காட்டணுமே. அதற்காக தான் அழைச்சிட்டு வந்தேன். எனி இஷ்யூஸ்…?
தனீஷின் தேங்காய் உடைத்த தினுசு பேச்சை கேட்டு சார்வியின் இதயம் பயத்தில் தடதடத்தது பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என. ஆனால் அவர்களோ சற்றும் புன்னகை முகம் மாறாமல் இருக்கவும் அவளே கொஞ்சம் குழம்பி போனாள். ஒரு வேளை புயலுக்கு முன் அமைதியோ என.
“எங்களுக்கு என்ன இஷ்யூஸ் இருக்க போகுது தனீஷ். நீ எங்க பிள்ளை. உனக்கு பிடித்தவள் ஆபிவியஸ்லி எங்க மருமக. சொல்ல போனால் நீயும் திருமணத்திற்கு ரெடியாயிட்டே என்று நினைக்கும் பொழுது மனதுக்கு சந்தோஷமா இருக்கு. வெல்கம் ஹோம் சார்வி …” என்ற ஸ்மிரிதி, எதிர்கால மருமகளின் கையை பிடித்து எழுப்பி தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.
“தேங்க்ஸ்ம்மா, நடந்த கசப்பான விஷயத்தில் எங்கே இவன் பிரம்மச்சாரியாக இருந்துடுவானோன்னு பயந்தோம். இப்போ தான் மனசு குளிர்ந்திருக்கு. அப்புறம் லாராவை பற்றி நீ ஏன் பயப்படணும். நீ ஏதும் செய்யவே இல்லையே. அவளாகவே உன்னை தப்பா போர்ட்ரைட் செய்தாள், என் மகனிடம் சண்டை போட்டாள். அவன் இதெல்லாம் சரிவராதென்று விலகிட்டான். இப்போ அவளுக்கும் திருமணம் நிச்சயமாயிடிச்சி. இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம். இதில் நீ டென்ஷானாகவோ, அவள் உன் மீது கோபப்படவோ எவ்வித முகாந்திரமும் இல்லை. பீ பிரீ …” என்று அவளின் கையை பிடித்தழுத்த சார்விக்கு மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கிய தினுசில் இருந்தது.
“தேங்க்ஸ் ஆன்ட்டி, என்னை புரிஞ்சிக்கிட்டதற்கு. ஆனாலும் பக்கத்து பக்கத்து வீடு. என்ன தான் திருமணம் நடந்தாலும் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் நிச்சயம் கோபம் வரத்தானே செய்யும். அந்த பயம் தான்…”என்று இழுக்க, கரண் சிரித்தார்.
“இல்லைம்மா லாரா திருமணம் முடிந்த கையோடு அவள் கணவருடன் ஆஸ்திரேலியா கிளம்பிடுவா. அதனால் உனக்கு அந்த பயமே வேண்டாம். சரி சார்வி எப்பொழுது உங்க திருமணத்தை பிளான் பண்ணலாம்ன்னு இருக்கீங்க…?
வருங்கால மாமனார் கேட்டதுமே அவளின் விழிகள் காதலனை நோக்கி சிறு வெட்கத்தோடு பாய, அவனோ தலையை கோதியபடி சிரித்தான்.
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
“இந்த முறை நான் திருமணத்தை தள்ளி போட மாட்டேன் டாட் . ஒரு வகையில் நான் லாரா விஷயத்தில் வெகேஷன் போக முடிவு செய்தது சரி தான். அதனால் தான் அவளின் சுயரூபம் எனக்கு தெரிய வந்தது. ஆனால் இம்முறை என்னால் அதிக நாள் சார்வியை பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு தோணுது. சோ சார்வி டாட் சம்மதம் கொடுத்தவுடன் திருமண ஏற்பாடுகளை ஆரம்பிச்சிடணும் …”
மகனின் பேச்சில் பெரியவர்கள் இருவரும் திருப்தியோடு பார்வை பரிமாற்றம் செய்துக்கொள்ள, காதலியின் வெட்க பார்வைக்கு சட்டென்று கண்ணடித்தான் ஆடவன்.
“சரி பேசிட்டிருங்க, நான் காஃபீ கொண்டு வர்றேன்…”என்று எழுந்து செல்ல, சார்வியும் அவருடன் செல்ல தனீஷ் திருப்தியாக புன்னகைத்தான்.
இரு பெண்களும் சென்றதும் மகனின் அருகில் அமர்ந்தார் கரண்.
“தனீஷ் நீயும் சார்வியும் லவ் பண்றது ஓகே, இதை சார்வி பாதர் ஏத்துக்குவாரா. பிகாஸ் நீ ஆல்ரெடி ஒரு பெண்ணை விரும்பி பிரேக் அப் ஆகியிருக்கு என்று தெரிந்தால் எந்த தந்தை தான் ஒத்துக்குவார். அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு…”
“நோ டாட், அப்படி எதுவும் ஆகாது. ஷரத் அங்கிள் நைஸ் ஜென்டில்மேன். அவரால் என் சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியும். அதுமட்டுமில்லை. அவருடைய பெண் மீது உயிரையே வைச்சிருக்கார். அவர் பெண்ணின் வாழ்க்கையில் விளையாட மாட்டார். நீங்க பயப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்…”
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சந்தோஷம் தா…”என்றவரின் பேச்சு வாசலில் நிழலாடிய உருவத்தை கண்டு நின்றது.
“வா…வாம்மா லாவண்யா, திருமண வேலையெல்லாம் எந்த அளவில் இருக்கு…?
“ஹ்ம்ம் அது நடக்குதுண்ணா, என்னாச்சு தனீஷ் இந்த நேரத்தில் வீட்டில் காட்சி கொடுக்கிறே. டூட்டி முடிஞ்சிடுச்சா…? என்றபடி எதிர் சோபாவில் அமர்ந்தார்.
“எஸ் ஆன்ட்டி, அப்புறம் நீங்க, அங்கிள் எப்படி இருக்கீங்க. திருமண வேலைகள் ஏதாவது செய்யணும்ன்னா சொல்லுங்க, வந்து செய்யறேன்…” என அவரின் முகம் கூம்பியது.
“உனக்கு பெரிய மனசுப்பா, ப்ச் ஆனால் எல்லாம் வேலையும் அல்மோஸ்ட் முடிஞ்சி போச்சு. நீ திருமணத்திற்கு வந்தால் சந்தோஷப்படுவோம் நானும், உன் மாமாவும். வருவியா தனீஷ்…? என்றார் சிறு ஏக்கத்துடன்.
“இதில் என்ன இருக்கு ஆன்ட்டி, டோன்ட் ஒர்ரி கண்டிப்பா வர்றேன் உங்களுக்காக…” என்றான் சற்றும் தயங்காமல்.
“இஸ் இட் …”என்று சந்தோஷப்பட, கரண்க்குமே சந்தோஷமாக இருந்தது மகனின் கோபம் குறைந்ததில்.
உள்ளிருந்து காஃபி ட்ரேயுடன் சார்வியும், ஸ்மிரிதியும் வர, சந்தோஷத்துடன் அண்ணியுடன் பேச உள்ளே செல்ல எழுந்தவர் அண்ணியுடன் வந்த புது பெண்ணை கண்டு குழம்பி நின்றார்.
“யார் அண்ணி இந்த பெண், பார்க்க லட்சணமா இருக்கா…? என்றவருக்கு சார்வி காஃபி ட்ரேயை நீட்டி எடுத்துக்க சொல்ல, மறுப்பு சொல்லாமல் புன்னகையுடன் நன்றி சொல்லி எடுத்துக்கொண்டார்.
எல்லோரிடமும் காஃபியை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு வருங்கால மாமியாரின் பக்கத்தில் அமர்ந்துக்கொள்ள, கரண்க்கு தங்கை இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று பயமாக இருந்தது. ஆனால் தனீஷுக்கும், ஸ்மிரிதிக்கும் பயமோ தயக்கமோ உண்டாகவில்லை. அத்தையின் கேள்விக்கு முந்திக்கொண்டு பதில் சொல்ல முயன்ற மகனை பார்வையாலே அடக்கினார் தாய்.
“நான் உன் அத்தையிடம் பேசிக்கிறேன் தனீஷ்…”என்றவர் சாரவியிடம் திரும்பினார்.
“இவர் பெயர் லாவண்யா, தனீஷோட அத்தை…”என்றதும் அழகாக கரம் குவித்து வணக்கம் என, லாவண்யாவும் அவளின் வணக்கத்தில் மயங்கி பதில் வணக்கம் கூறினார்.
“லாராவோட அம்மா…”என்றதும் அதுவரை மலர்ந்திருந்த சார்வியின் முகம் பயத்தில் வெளிற, லாவண்யாவுக்கு கரணம் புரியவில்லை.
“என்னாச்சும்மா ஏன் லாராவின் பெயரை சொன்னதும் உன் முகம் மாறுது, ஆமாம் உன் பெயர் என்னம்மா…?
சார்வி பயப்படுகிறாள் என்றதும் தனீஷ் அவளின் அருகில் அமர்ந்து, சார்வியின் கையோடு கையை கோர்த்துக்கொண்டான் ஆறுதலாக.
“ஆன்ட்டி இவள் சார்வி ஷரத். நாங்க இரண்டு பேரும் திருமணம் செய்துக்க போறோம்…” என்று விஷயத்தை போட்டுடைக்க அப்பொழுதும் லாவண்யாவுக்கு சார்வியின் பயம் புரிய மறுத்தது.
“நல்ல விஷயம் தானே தனீஷ், அதுக்கேன் என்னை பார்த்து, இல்லையில்லை லாராவின் பெயரை…”என்று பேசிக்கொண்டு வந்தவர் சட்டென்று ஏதோ நெருட பேச்சை நிறுத்தி சார்வியை பார்வையால் அளந்தார்.
“என்ன சொன்னே சார்வியா, லாரா சொன்ன பார்மா கம்பெனி சேர்மன் சார்வி ஷரத்…”என ஸ்மிரிதிக்கு பயம் இல்லையென்றாலும் ஏதும் ரசாபாசம் நிகழந்துவிட கூடாதே என்று சற்று கலக்கமாக தான் இருந்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சாரி லாவண் தப்பா நினைச்சிக்காதே. கடவுள் யார் யாருக்கு முடிச்சி போட்டு வைச்சிருக்கானோ அது தான் நடக்கும். லாராவுக்கு ஆஸ்திரேலியா மாப்பிள்ளையை தான் ஆண்டவன் முடிச்சி போட்டு வைச்சிருக்கான்…”என்றவரின் அவசர விளக்கத்தை கையமர்த்தி நிறுத்தினார்.
“இப்போ எதுக்கு அண்ணி இந்த விளக்கம், நான் ஒன்றுமே சொல்லலையே. தனிஷ்க்கு யாரை பிடிச்சிருக்கோ அந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்க முடியும். என் பெண்ணை பற்றியும் தெரியும், தனீஷ் பற்றியும் தெரியும். அதுக்காக நான் ஏன் சார்வி மேல் கோபப்படணும். எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோஷம் தான். தனிஷ்க்கு சார்வி மாதிரி அமைதியான பெண் தான் ஏற்றவள். ஓ ! அண்ணா நான் வந்ததும் நீ தடுமாறி பேசியது இதனால் தானா. அட போங்கண்ணா இது தான் நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டதா…” என்று பிணங்கினார்.
லாவண்யாவின் பேச்சில் அங்கிருந்த நால்வரும் நிம்மதி பெருமூச்சை எடுத்தார்கள்.
“லுக் சார்வி நீ எங்க வீட்டு பிள்ளை தனீஷை திருமணம் செய்துக்கிறதில் எங்க எல்லோருக்கும் பரிபூரண சம்மதம். நீயும் என் பெண் மாதிரி தான். லாராவை பற்றியெல்லாம் யோசித்து பயப்படாதே. இன்னும் கொஞ்ச நாளில் அவள் வெளிநாடு போய்டுவா. அப்புறம் நீ தான் எங்களுடன் இருக்க போறே. என்னை உன் அம்மாவா ஏத்துக்குவியா …? என சார்வியின் விழிகள் கலங்கியது அவரின் வெள்ளேந்தியான பேச்சில்.
“ஷியூர் ஆன்ட்டி …”என்றவளை தடுத்து அம்மா என்று அழைக்க சொல்ல, சட்டென்று அவரின் பாதங்களில் பணிந்தாள்.
சார்வியின் இந்த எதிர்பாராத செயலால் லாவண்யா இனிதாக திகைத்து அவளை எழுப்பி அன்போடு அணைத்து முத்தமிட்டார்.
“நல்லாயிருக்கணும்டா நீ, நீண்ட காலம் தனீஷோடு வாழ்ந்து எல்லா வளங்களும் பெறணும்…”என்று அவளின் தலையில் கையை வைத்து ஆசிர்வதிக்க மூவருமே புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ் லாவண்யா, நீ இந்த விஷயத்தை ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணிட்டே. நான் கூட ரொம்ப பயந்துட்டேன். எனி வே எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு…”
“ஆமாம் லாவண், உன் அண்ணன் சொன்னபடி எனக்குள்ளேயும் சிறு பயம் தான். ஆனாலும் நடப்பதை தவிர்க்க முடியாதே. பாவம் சார்வி ரொம்ப பயந்துட்டா லாராவை நினைச்சி…”
“அட என்ன, இரண்டு பேரும் என்னையும் லாரா மாதிரி நினைச்சிட்டீங்களா. ஹ்ம்ம் ஒரே பெண்ணென்று செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம். ப்ச் விடுங்க அண்ணி அவளை பற்றி பேசினாலே டென்க்ஷன் தான் எகிறுது…”என்று சொல்லி முடிப்பதற்குள் பேச்சின் நாயகியே வந்து நிற்க தனீஷ் தவிர மற்ற நால்வரும் அதிர்ந்து நோக்கினார்கள்.
“ம்கூம் சாத்தானை நினை, உடனே வந்து நிற்கும்ன்னு சொல்வாங்க. ஆன்ட்டி சாத்தான் பெயரை சொன்னதும் உடனே வந்து நிற்குது …”
மகனின் முணுமுணுப்பை கேட்டு,”ச்சு, அமைதியா இரு தனீஷ், அவளுக்கு கேட்டுட போகுது …”என்று எச்சரித்தார் கரண்.
அலுப்புடன் உச்சு கொட்டிவிட்டு எழுந்து,”கம் சார்வி, நான் சார்வியை அவள் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்துடறேன்…”என்று பொதுவாக சொல்லிவிட்டு சார்வியின் கையை பிடித்தபடி வெளியேற எத்தனிக்க, ஒரு நிமிஷம் என்று நிறுத்தினாள் லாரா.
லாரா இருவரையும் நிறுத்தியதுமே லாவண்யா கோபத்தோடு எழுந்தார்.
“இப்போ எதுக்கு அவங்களை தடுத்து நிறுத்தறே, என்ன சண்டை போட போறியா. நீ திருந்தவே மாட்டியா. தனீஷ் நீ சார்வியை அழைச்சிட்டு கிளம்பு. அவ கிடக்கிறா…”
தனீஷின் விழிகள் லாராவை ஏளனமாக நோக்கிவிட்டு சார்வியை தோளோடு அணைத்தபடி செல்ல முற்பட கையை நீட்டி அவர்களின் வழியை மறித்தாள்.
லாராவின் செயலால் சார்வியின் விழிகள் பயத்துடன் தனீஷை நோக்கி மலர, அணைத்திருந்த தோளில் லேசாக அழுத்தம் கொடுத்தான் தைரியமாக இருக்கும்படி. தன் காதலி லாராவால் பயப்படுகிறாள் என்றதும் தனீஷின் தாடை கோபத்தில் இறுகியது. அவளின் செயலுக்கு பதிலடி கொடுத்துவிடும் நோக்கத்தில் திரும்பி பேச முற்படுமுன், அவனை கையை தூக்கி தடுத்து நிறுத்தினாள் லாரா.
